கவிதைகள்

பத்து மாதம் மூச்சு
முட்டபால் குடித்து
பின்அம்மார்பகத்தையே
பேனாவில்வடிக்கிறான் –
நம்புங்கள் இவன் கவிஞன்………

தட்சனைக்கு
அதிகமாய்மணியடிப்பவனை
விடபோதையூட்டி
தருகின்றான்அது தமிழ்ப்போதை………

தாயிடம் , தமக்கையிடம்வாங்கிய
முத்தங்கள்சாயம்பூசி
விற்கின்றான்கள்ளக்காதலிகளின்
லிப்டிக்குகளோடு…..

கவியரசு,கவிபேரரசு,
வித்தகக்கவி,என
பட்டங்கள்தேடி வரும் –
விபச்சார பேனாவுக்கு
சரக்குஎங்கிருந்து
தன் வீட்டைத் தவிர…….

கழுத்திலே கத்தியைவைத்தாலும்கூட
மக்களுக்காகஎழுதாது-
உழைக்காதபேனா
உழைப்போரின்விதியை
எழுதிடுமாயென்ன?

தினம் விடி காலை
எழுந்துஉழைத்து ஓடாய்
தேய்ந்துஎங்கள் விவசாயியின்
வாழ்க்கை தான் – கவிதை…….

சவுக்கடியும்,
சாணிப்பாலையும்மறக்காத ,
பாடாதபாடல் தான்
எப்படத்திலும்வராத சோகப்பாடல்….

எப்போதும்
எங்கள்கவிதை
வறுமையாகவும்,பாடல்
சோகமாய்மட்டுமிருக்கப்போவதில்லை…

களத்தில் நிற்கும்எங்கள்
போராளிக்குஎதுகை
மோனை தெரியாது,
செந்தமிழில் பாடல் புனையத்தெரியாது……

ஆனால் வறுமையின்
வலிதெரியும்,ரத்ததின்
வெப்பம்புரியும்.,அவர்கள்
மக்களை படித்தவர்கள்
மக்களோடு வழ்ந்து
மக்களுக்காக இறப்பவர்கள்-ஆம்
அவர்கள் தான் மக்களின் கவிஞர்கள்.

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: