கவிதைகள்-அழகு

அழகென்றால்
எதுவென்று விடை
தேடி புறப்பட்டேன்…..

உச்சி முதல் உள்ளங்கால்
வரைஒவ்வொன்றும்
வரிசையாய் வந்தன,
நீ நான் என போட்டி
போட்டுக்கொண்டு……

சிறும் பல், பெரும் பல்
தெத்து பல் பலவும்
பல்லளித்து பறைசாற்றின
பற்களெல்லாம் அழகெனில்
ஊத்தைவாயன் சங்கரனின்
பல்லும் அழகா ? …

ஒல்லி குச்சிகால்கள்
கேட்வாக்கில்
ஒய்யாரமாய்
நடை போட்டு நடந்தன
நடப்பதோ சுடுகாட்டை
நோக்கி இதில் நாய்
நடையே நடந்தாலும்
கேட்க ஆளில்லை…..

உடைகள் மேலே
ஏற ஏற
அழகுகள்
கூடிக்கொண்டே போகின்றன……
 
இது தான் அழகா
யில்லை யில்லை
அழகென்றால் எது
வென்று செப்புகின்றேன்
கேளிர்
பண்பட்ட நிலமழகு
கூரொடிந்த ஏரழகு
உழைப்பாளியின்
வியர்வையழகு தொழிலாளியின்
அசதியழகு,அழகு அழகு
ஆயிரமழகு புரட்சி
அதனினும் அழகு
மக்கட்படை…

அன்று புரியவைப்போம்
நீங்கள் அழகுகள் அல்ல
இன்னாட்டின் அசிங்கங்கள் என்று.

குறிச்சொற்கள்:

3 பதில்கள் to “கவிதைகள்-அழகு”

  1. ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள் « கலகம் Says:

    […] உன் அம்மணப்பேனாவுக்கு நோபல் பரிசுகூட கிடைக்கலாம் விவசாயம் நொடிந்து விசம் குடித்து செத்த பிணங்கள் அம்மணமாய் பிணவறையில் பளபளக்கும் ஆடையோடு விரைந்து செல் நிர்வாணக்கவிதைகள் எழுது ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள் உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்     1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை! 2.கவிதைகள்-அழகு […]

  2. ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள் « கலகம் Says:

    […] உன் அம்மணப்பேனாவுக்கு நோபல் பரிசுகூட கிடைக்கலாம் விவசாயம் நொடிந்து விசம் குடித்து செத்த பிணங்கள் அம்மணமாய் பிணவறையில் பளபளக்கும் ஆடையோடு விரைந்து செல் நிர்வாணக்கவிதைகள் எழுது ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள் உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்     1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை! 2.கவிதைகள்-அழகு […]

  3. கலகம்-கவிதை « சிவப்பு மல்லி Says:

    […] கவிதைகள்-அழகு […]

பின்னூட்டமொன்றை இடுக