கட்டுரை தேவை : சாதிக்கெதிராய் கலகம்

தேவை : சாதிக்கெதிராய் கலகம்
“காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்ல
நடந்துக்கிறானுங்க”,பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள
அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு” இதெல்லாம்
  நேற்று  சென்னை சட்டக்கல்லூரியில்  நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள்
பேசிக்கொண்டு ஏன் எதற்காக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது  என்பதை அறியவோ
தீர்வை சொல்லவோ அவசியமின்றி திரிகிறர்கள்.

இன்று காலை தினமலர் தவிர ஏறக்குறைய அனைத்து தினசரிகளிலும் தொலைக்காட்சி
களிலும் சட்டக்கல்லூரி தான் முதல் தலைப்பு செய்தி.ஒரு திரைப்படத்தை எப்படி
வர்ணிப்பார்களோ அதை விட சற்று தூக்கலாக வர்ணித்திருந்தர்கள்.ஏதாவது ஒரு
சம்பவம் நடந்தால் தனது நாய் மூக்கினால் மோப்பம் பிடித்து “உண்மையை” வெளி கொணரும்
எந்த ஒரு செயலையும்  செய்யாது யார் கதா நாயகன் யார் வில்லன் என்று மட்டும் சரியாய்
அடையளம் காட்டின.அதாவது தற்போது அடித்த தலித்துகள் வில்லன்ளாகவும்
செய்த வினைக்கு எதிர் வினை வாங்கிய ஆதிக்க சாதி வெறியன்கள் தான்
 காதாநாயகன்களாகவும் காட்டப்படுகிறனர்.

சென்னைக்கு வெளியெ இருக்கும் பலருக்கும் ஒரு வகையன சிந்தனை இருக்கிறது
“சென்னையில தலித்துங்க அதிகம் நம்மாளு வாய் திறந்து பேசவே பயப்படுவாங்க ”
சென்னையில் தலித் ரவுடிகள் இருக்கிறர்கள் என்பது உண்மை தான். ஆனால் ஆதிக்க சாதி  வெறிஅர்கள்
போல சாதிக்கு வாழ்ந்து சாவதில்லை.சேத்து பட்டு ரவுடி தங்கையா போல பலம்,பணதிற்காக
யாராயிருந்தாலும்  அவர்களிடம் தன் வேலையை  காட்டுகின்றர்கள்.(பாதிக்கப்படுபவர்
தலித்தாக இருப்பினும்).ஆதிக்க சாதி வெறியர்கள் செய்வது
போல் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களின் பெண்களை மட்டும் பாலியல் ரீதியிலானகொடுமைகள்
நடப்பதில்லை. இ£ங்கு சாதி என்பதை விடபணமே முக்கியம்.தனது அதிகாரமே முக்கியம்.அதை நிரூபிக்க தலித்தாக இருப்பினும் எந்த சாதியாக இருந்தாலும் தாக்கப்படுகின்றனர்.

சென்னை சட்ட கல்லுரி சம்பவம் என்பது வினைக்கு எதிர் வினை.இதனை நாம் ஆதரிக்கவில்லை என்றாலும்ஊடகங்களின் பார்பனிய தன்மையை அம்பலப்படுதியே தீரவேண்டும் என்பது தான் நோக்கம். சட்டக்கல்லூரியில்தேவர் சாதி வெறியர்கள் ஏதாவது விழாவெனில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்பதற்கு பதில்வெறும் சென்னை சட்டக்கல்லுரி  என்று  போடுவது,தொடர்ச்சியாக தீண்டாமையை  மேற்கொள்வது  போன்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு மாதமாகவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்க  தலித் மாணவர்கள் காயம்பட்டிருக்கின்ரார்கள்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் விதமாக பரிட்சை முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சிலர் எதிர் தாக்குதல் தொடுக்க முடிவெடுத்திருக்கின்றார்கள்
இது தெரிந்தும் அந்த தேவர் சாதி வெறியர்களும் கையில் கத்தியோடு வந்திருக்கின்றனர்.முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டிய விசயம் .நாம்  ஊடகங்களில் பார்த்ததது போல் கத்தியோடு வந்தவன் தாழ்த்தப்பட்ட மாணவர் தரப்பினை
குத்தியவுடன் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரையும்  வெறி கொண்டு தாக்கினார்கள்.

என் நண்பர் சொன்னர் ” என்னால்  அதை பார்க்கமுடியவில்லை,அவன் சாதி வெறியனாகவே
இருக்கட்டுங்க அவன் எப்படி கதறுனான் பார்க்கவே சகிக்க முடியலிங்க”

ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.
ஆனால் சாதி வறிக்கெதிராக போராடும் மக்களின் ஒரு முக மற்றும் நேர் படுத்த படாத அரசியல் செயல் பாடுகள் சாதி வெறியர்களின் வளர்ச்சிக்கு துணை போகின்றன.
அதற்காக நாம் கண்டிப்பக வருந்தத்தான் வேண்டும்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.நான் கல்லூரில் படித்து கொண்டிருக்கும் போது தான் எஸ்.பி.பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் சென்னை சட்ட கல்லுரியினுள் புகுந்து தாக்கினர்.அது குறித்து நான் பேசிக்கொண்டு இருந்த்தேன்.அப்போது
பேருந்து நண்பர் (வயது 40) சொன்னர்.அவனுங்க எல்லாம் பறைப்பசங்க  தப்பு செய்யாம போலிஸ் அடிப்பானா ? எனக் கேட்டார்.

இப்போது வரை அதைப் போன்ற வன்மம் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரப்பப்படுகின்றது.எந்த இடத்தில் எல்லாம் ஒடுக்க்ப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினாலும் அவர்களுக்கெதிராக ஊடகங்கள் தான் முதல் கொள்ளியை வைக்கின்றன.
ஏன் திண்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த போது கூட ராமசாமி  பறை  அடிச்சு பனத்த் கேக்காம இருந்திருந்தா
அவன் எதற்கு அப்ப்புடி பண்ணப்போறான் என்ற ரீதியில் தான் ஊடகங்கள் எழுதின. உத்த புரத்துல கூட செவுரு இருந்தா என்ன இப்போ?
என்ற சாதி வெறியன் நேரடியாய் சொன்னால் அதையே  ஊடகங்கள் மறைமுகமாய் சொல்கின்றன.

ஒரு கிராமத்தில் சாதிபிரச்சனை  என்ற உடன் “ஊர்க்காரர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும்” என்று தான்கொட்டை
எழுத்தில் போட்டு தன் பார்ப்பனீய அடிவருடி த்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.இந்த கல்லூரி பிரச்சனையை கண்டித்து தேவர் சாதி வெறியர்கள் சென்னையில் மீட்டிங்  போட்டு கண்டனம் தெரிவிக்கின்றன.ஓட்டு பொறுக்கிகளோ
சாக்கு கிடத்தால் போது மென சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கின்றன.

இவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே நடைபெற வில்லை நடத்தப்படுகின்றன.உண்மையில்  இப்போது நடந்தது
சம்பவம் சாதிக்கு எதிராக வினை.இவ்வினை  ஏற்புடையது அல்ல .
சண்டைகள் மட்டும் தீர்வு தராது.அது எதிரிகள் வளரவே உதவும்.
மக்களை திரட்டி சாதிக்கு எதிராக கலகம் புரிவோம்.அதில் கண்டிப்பாய் பார்ப்பனீயம் உயித் தெழாது.

Advertisements

குறிச்சொற்கள்:

10 பதில்கள் to “கட்டுரை தேவை : சாதிக்கெதிராய் கலகம்”

 1. Maayoan Says:

  நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

  தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

  யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே…

  இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது…

  மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..

  இதற்கு யார் காரணம்…?

  ஜாதி யா?

  தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

  பெயரில் இல்லை … ஆனால்..

  ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..

  வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..

  வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்…

  என்ன செய்வது…

  ௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

  ௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

  ௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் …

  ௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்…

  ௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, “ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் ” … “அடங்க மறு ” என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

  ௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் …

  இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்…

  ஆனால்…கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ….

  மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..

  பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..

  அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை…

  இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..

  நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

  தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

 2. gramatthan Says:

  paarppaniya saathikku ethiraaga pooraavendiya tharunam enpathuthaan entha sambavatthil naam unavara vendiyavai.

 3. கோட்ஸிலா Says:

  ஐயா, இப்படி வன்முறையில் இறங்கினால் சாதியை ஒழிக்க முடியுமா.
  தலித் மாணவரை கத்தியால் தாக்கியவனை நாங்கள் மிருக வெறி கொண்டு அடிப்போம் என்றால், அடித்தவர்களை கொல்வோம் என்று
  அடிபட்டவர் சார்பாக 10 பேர் கிளம்புவார்கள்.இப்படியே மாறி மாறி வன்முறையில் ஈடுபடுவதால் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது.
  தனி நபர்கள்,குடும்பங்கள்,ஊர்கள் என்று இது பரவுமே.இது தேவையில்லை, தடுக்கப்பட வேண்டும், வன்முறை வேண்டாம்
  என்று எடுத்துச் சொல்லி நிலைமை மோசமாவதை தடுக்க வேண்டும்.
  உங்களுடைய எழுத்து அப்படி இல்லையே, ஐயா.ஏன்?.

 4. கோட்ஸிலா Says:

  ”ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.”
  ஐயா, எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது.என்னதான் சாதி
  வெறியன் என்றாலும் அவரை திருத்த முயல வேண்டும்.ஒரு நபர்
  கொலை செய்யப்பட்டால் சாதி வெறி மறைந்து விடுமா?.

 5. கோட்ஸிலா Says:

  ‘எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் விதமாக பரிட்சை முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சிலர் எதிர் தாக்குதல் தொடுக்க முடிவெடுத்திருக்கின்றார்கள்.’

  கல்லூரியில் இப்படி வன்முறையை அரங்கேற்றுவது எந்தவகையில்
  நியாயம்.

 6. குமரன் Says:

  நான் ..மேலவளவு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். படுகொலை நாளில் அங்கே இருந்து வருத்தமும் கோவமும் கொண்ட சமாதான தேவன்..!! சென்னையிலும் தலித் நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி ஒரே தட்டில் சாப்பிட்டு வந்தவன். ஆனால் உங்களின் வினவு,கலகம் பதிவுகள் என் மனதில் மாற்றத்தை விதைத்து இருக்கிறது. ஜாதியை விதைப்பதற்கு பயன்பட்டு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்…இன்னும் சமத்துவம் சகோதரத்துவம் பேசும் தேவர்களையும் மற்றும் பல பிற்படுத்தப்பட்ட மக்களையும் படிக்கச் சொல்கிறேன்..தொடர்ந்து எழுதுங்கள்.. ஜாதியை விதைக்க உதவுங்கள்.

 7. kalagam Says:

  குமரன்,
  சென்னை சட்டக்கல்லூடி மாணவர் பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து அங்கே தேவர் சாதிவெறியர் களின் கொட்டத்தினால் தான் பிரச்சனை வந்தது என்றாலே தேவர் சாதி வெறியர்களுக்கு கோபம் வருகின்றது.சாதிவெறீ ஆதிக்க சாதியினரிடமோ ஒடுக்கப்பட்டவரிடமோ எங்கே இருந்தாலு தவறு என் கிறோம். பொதுவாய் சாதி வெறி மக்களை பிரிக்கும் ஒடுக்கப்பட்டவரிடமிருக்கும் சாதி வெறியும் பார்ப்பனீயத்துக்கு
  சேவை செய்யௌம்.

  பிரச்சனையை இவ்வாறு ஜனநாயக முறையில் முன் வைத்ததையும் குமரன்மார்களுக்கு
  (தேவர் மார்களுக்கு) நெஞு வலிக்குது எனில் அது தான் உண்மையான சாதியின் வெளிப்பாடு.அவரை போன்றோர் மனதில் மூடிவைத்து விட்டு வெளியே ஜனநாயகவாதி வேசம் போட்டோரின் உண்மை முகம்.

  மெலவளவு படுகொலையின் போது வருத்தமும் கோவமும் கொண்ட சமாதான தேவனாம்
  சமாதான தேவன?சமாதான தேவரா? உங்களால் வருத்தமும் கோவமும் தவிர என்ன செய்ய முடிந்தது
  தாழ்த்தப்பட்ட நண்பர்களுடன் ஒரெ தட்டில் சோறு சாப்பிட்டது ஒரெ அறையில் தங்கியது எல்லாம் வேண்டாம். சாதி எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் ஒரு முறையாவது நின்றிருகின்றீகளா?

  இப்படி உங்களுக்குள் ஒளிந்திருந்த உண்மையான சாதிவெறியை மனதினை கீறி வினவு,கலகம் போன்றோரிடம் வெளியே எடுத்து நீங்களே காட்டியிருக்கின்றீர்கள்.நாங்கள் எழுதியது சாதியை விதைக்கவில்லை.உங்களின் சாதி வெறியை அடையாளம் காட்டியிருக்கின்றது.

  இந்து மத வெறி பாசிச் பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பி.வி.எச்.பி போன்றோரி கொடும் பாதக செயல்களை கண்டு பார்வையாளாராக இருந்து வருத்தப்படு மனது யாருக்கு வேண்டும்.இந்துக்களின் மவுனம் மத வெறிக்கு சம்மதம் என்பது தான்..உங்களின் கோபம் உண்மையாயிருப்பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயபட்டால் மட்டும் தான் உங்களை ஜனநாயகவாதியாய் ஏற்கமுடியும் .அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் வருத்தப்பட்டு கோபப்பட்டு பார்பனீயத்துக்கெதிராய் கலகம் செய்தல் வேண்டும்.அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இப்பரீட்சையில் தன்னை சோதிக்க வேண்டும்.இது தான் வரலாற்று தேவை.உண்மையை உணர்ந்து சாதிக்கெதிரை கலகம் புரிவோம். சாதியை வெரருப்போம்.

 8. குமரன் Says:

  “ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.”…இது போன்ற உங்களின் அன்பான வார்த்தை..நீங்கள் மனிதம் மட்டுமல்ல புனிதமும் மிக அதிகம்..கொண்டவராக வெளிப்படுத்தும் வகையில் அமைகிறது. படுகொலை நடந்தபோது குறைந்த பட்சம் நான் வருத்தமும் கோவமும் கொண்டேன். ஆனால் நீங்கள் சட்டக்கல்லூரி தாக்குதலுக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பது உங்களின் வார்த்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது…நாங்கள் “கோரமுகத்தை முகமூடி அணிந்து மறைத்திருக்கிறோம் ” என்று நீங்கள் சொல்வீர்களானால்…கண்ணாடி முன் நின்று பாருங்கள் “உங்களின் கொடுரமனம் இதழ்களின் வழியே
  திராவகமாய் வழிவதை “…..!!!. ” தாழ்த்தப்பட்ட நண்பர்களுடன் ஒரெ தட்டில் சோறு சாப்பிட்டது ஒரெ அறையில் தங்கியது எல்லாம் வேண்டாம் ” என்கிறீர்கள். இப்படியான சமத்துவம் நிகழ்வது அமைதிக்கு வழிவகுக்கும் என்று பயமாக இருக்கிறது உங்களுக்கு..பயப்பட வேண்டாம் 2000க்கு பிறகு ஆங்காங்கே நிகழ்ந்த அப்படி பட்ட நிகழ்வு தற்போது தகர்ந்து வருகிறது..சட்டக்கல்லூரி போன்ற நிகழ்வுக்கு தொடர்ந்து மகிழ்வு அடையுங்கள்…கொடூர முகம் கொண்டவர்களையும் ஆதரிக்க அன்னிபெசன்ட் போன்றோர் பிறந்து கொண்டே இருப்பர்கள். ஆனால் கலகம் செய்து, “மரண ஓலத்தை பார்த்து” மகிழ்ச்சி அடையும் கோரமுகம் கொண்டவர்கள் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் இணைந்துவாழ சமுதாயம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை..

 9. tamil Says:

  மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.

  தங்களின் பதிவுகளை பதிவு செய்யும் பெரும்பாலானோர் சட்டக்கல்லூரியில் தலித் மாணவர்கள் ஒரு உயர்சாதி இந்து வை தாக்கியது தவறு என்ற கண்ணோட்டத்திலேயே பதிந்திருக்கிறார்கள்.

  எனக்கென்னவோ இதில் பல நபர்களுடைய சுயசாதி (திமிர் – தாழ்த்தப்பட்டவன் எப்படி டா அடிக்கலாம்) உணர்வால் தான் இவ்வாறு எழுதிகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.
  .
  மேலும் சிலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட அந்த காட்சிகளை பார்த்து மிகவும் கொதிக்கிறார்கள்.
  .
  இதற்கு எதிராக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்றைய தினம் உசிலம்பட்டியில் நான்கு பேருந்துகளை அடித்து நாசம் பண்ணி இருக்காங்க.
  படிக்கிற காலத்துலயே இப்படி வீரமா நடந்துகிட்ட அந்த மாணவர்களை பற்றி இங்கு பெரியார் முகமூடி போட்டு திரியும் நண்பர்கள் பேச மறுக்குறாங்க. (தன் சாதி வீரம் வெளியில வெளுக்குமேன்னு பயப்படராங்க போல)
  .
  உத்தபுரத்துல சாதிக்கலவரம் தலித்துகளுக்கும் பிள்ளைமார்களுக்கும் (பிள்ளைமார்களுக்கு ஆதரவாக தேவர் சாதியினர்) நடந்துட்டிருக்கு போன வாரம் துப்பாக்கி சூட்ட்ல 25 வயதே உள்ள தலித் இளைஞன் போலிசால் சுட்டு கொல்லப்படுறான். அதை கூட டி.வி க்களில் போட்டு காட்டினான் பேப்பர்ல வந்ததது அதை பார்த்த ஒருத்தருக்கு கூட மனசு வலிக்கல. பாவம் அந்த சின்ன பையன எப்படி சுட்டாங்க. அவன் குடும்பம் என்ன ஆகும். எப்படி அவ்வளவு கூட்டதுலையும் ஒரு தலித் இளைஞன தான் சுடனும் ந்னு அந்த தோட்டா குறிபார்க்க விரும்புதுன்னு யாரும் கவலப்படல . ஏன்னா குண்டுபட்டு செத்தவன் ஒரு தலித்.
  .
  போலிசு சுட்டு தூக்கிக்கொண்டு போகிற படத்தை பாருங்கள்….

 10. குமரன், Says:

  தமிழ்,
  தலித் இளைஞன் போலிசால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் , சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்படும்போதும் ஒரேவிதமான அணுகுமுறையை யாராலும் கடைபிடிக்க முடியவில்லை. குறைந்த பட்சம் ஒரேவிதமான கவலையை கூட வெளிப்படுத்த முடியவில்லை. மனித உரிமைகள் பேசுவோர் , ஜனநாயகத்தை போதிக்கும் சமாதானத்தூதுவர்கள், தலித் அமைப்புகள் , கலகம் செய்து ஜாதியை ஒழிக்க அறைகூவல் விடுப்பவர் என எல்லாருமே “சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதலை” எதிர்வினை எனக்கூறி மகிழ்வது மோடி சொன்ன ” எதிர்வினையை ” ஆதரிப்பது போன்றது. தலித்துக்கள் இன்று பெற்றிருக்கும் விடுதலைக்கு ( 70 பேர் சேர்ந்து 4 பேரை பொலிஸார் முன்னிலையில் தாக்கும் அளவுக்கு ) அவர்கள் மட்டுமே காரணமல்ல. அவர்களோடு சேர்ந்து பொதுவாழ்வில் போராடிய பிறஜாதியினரும் தான்.அவர்களை இழந்து விடாதீர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: