சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

நேற்று  முன்தினம் நடந்த சென்னை சட்டகல்லுரி மாணவர்கள் “மோதல்” தான் இரு ணாட்களாக  பரபரப்பாக  பேசப்படுகின்றது.தமிழகமெங்கும் சட்டகல்லுரி  தேர்வுகள் ரத்து, காலவரையின்றி  மூடல் .அக்கல்லூரியின் முதல்வர் இட நீக்கம்,போலீசார் சிலர் இடை மற்றும் பணி மாற்றம் என தமிழக அரசு அறிவிதாலும் ஓட்டு பொறுக்கிகள் வழக்கம் போல ஆதிக்க சாதி  வெறிக்கு  துதி பாடுகின்றன.சிலர் நினைக்கலாம்  நடந்து
முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறர்கள் என்று.ஆனால் நேற்று தமிழகம் முழுவதும் தேவர்  சாதி வெறியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.மேலும்
தக்க பதிலடி கொடுக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றார்கள்.வழக்கம் போல வைகோ,விஜயகாந்த்,சரத்,போன்றோர் அரசை பதவி விலக சொல்கின்றனர்.எதிரிகள் ஆரம்பிப்பதாலேயே நாமும் தொடங்கியிருக்கிறோம்.

மோதலின் வேர்கள்
இம்மோதலுக்கு காரணத்தை நாம் தோண்டியெடுக்க சில ஆண்டுகள் பின்னோக்கி
பார்க்க வேண்டும்.தென்,வடமாவட்டங்களில் நடந்த சாதி கலவரமே இதன் வேர்.கொடியங்குளம்,ஊஞ்சனை,மேவளவு,போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட
மக்களி¢ன் பயமாய், கோபமாய், இன்னும் ஆறாமல் இருக்கின்றது.மீண்டுமொரு தாக்குதலுக்கு தருணம் பார்த்து ஆதிக்க சாதி  வெறியர்களும் காத்து கொண்டிருக்கின்றார்கள்.பலரும் சொல்வதை போல் என்ன தான் “இருந்தாலும் அந்த
பையனை விட்டிருக்கலாம்”இவர்கள் விடாததற்கு காரணம் இருக்கின்றது.தன் ரத்த
சொந்தங்கள் எல்லாம் தூங்கும் போது  கழுத்தறுப்பட்டும்,இதை விட இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாக கெஞ்சி   கதறிய போதும்  கொலை செய்யப்பட்டார்களே அது தான்
அந்த காரணம்.தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளிரண்டாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன.1.தாழ்த்தப்பட்ட மானவர் விதி  2.மற்ற  சாதி  மாணவர்களின் விடுதி. தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலும் மிக ஏழை பிரிவை சேர்ந்தவர்கள்.
எப்படி மூத்திர மற்றும் சாக்கடை நாற்றத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலை துளியும்
மாறாது தாழ்த்தப்பட்ட மாணவர் விதிகளில் வாழ்கின்றனர்.இது முற்றிலும் உண்மை
ஒருமுறை தாழ்த்தப்பட்ட மாணவர் விதிக்கு சென்றிருந்தேன். அறைக்கு வெளியில்
சோறு இறைந்து கிடந்தது.ஒரு மாணவனிடம் இது குறித்து கேட்டேன்.அவர் பதிலேதும்
பேசாது ஒரு தட்டில் சோற்றை போட்டு தந்தார்.அப்போது தான் தெரிந்தது  தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு சோறு  தாழ்ந்த நிலையில் தான் படுகின்றது இந்த சமத்துவ அரசால் என்று.

தமிழகத்தில் எந்த கல்லூரியில் தான் சாதி பார்ப்பதில்லை ? ஒரு விடுதியில் (அ) கல்லூரியில்
சேர்ந்தவுடனே பேரை கேட்ட சில நிமிடத்திலேயே  சாதிகேட்கபடுகிறதா இல்லையா?
இதற்கு இப்போ யாரு சாதி  பார்க்குறா என்பவர்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்.
நாங்க எல்லாம் பங்காளிங்க என்று கும்பலாக சுற்றுவது நடக்கிறதா இல்லையா? அரசு கல்லூரிகளில் தான் ஆதிக்கசாதி மானவர்களுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மாணவர் களும் படிக்கின்றனர்.எல்லா  கல்லூரிகளிலும் சாதி ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது.சென்னை மட்டுமல்ல் கோவை,  நெல்லை,மதுரை,சேலம்,உள்ளிட்ட இடங்களில்
சட்ட கல்லூரியில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மோதல் தொடரதான் செய்கின்றது.மற்ற கல்லூரிகளில் அரசியல் பேச வாய்ப்பு இல்லலை என்றாலும் இவர்களுக்கு அரசியல் தான்
பாடமாக  உள்ளது.சட்ட கல்லூரியில் படிக்கும்  சுமார்  20% தவிர மீதி  பலரும் அரசியல் அங்கீகாரத்துக்கோ, பிற் கால சாதி அரசியல் கட்சியில் சட்ட ஆலோசகர்  பதவிக்காக
தான் சேர்கின்றனர்.வேறு எங்கேயும் விட இங்கு தான் சாதி பிரச்சனை உள்ளிட்ட எதுவும்
வெடிக்கும்.இது தான் நியதி.ஆதிக்க சாதியின் வாரிசுகளும் அடக்கப்பட்ட சாதியின்வாரிசுகளும் கல்லூரியில் சந்திக்கின்ற்¡ர்கள். தன் வீட்டு எடுப்ப்பு வேலை செய்த பசங்க என்ற எண்ணத்தில் சாதி வெறியர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களின் வாரிசுசுகளோதன் பாட்டன் பூட்டன் அப்பன் வரை அடிமையாய் இருந்தது போதும் தானிருக்கவேண்டியதில்லை என எதிர்த்து போராடுகின்றான். ஆதிக்க சாதி வெறி யர்களடிக்கும்போது திருப்பி அடிக்கின்றனர்.இவர்களை சாதி வெறியர்களாக பார்க்கமுடியுமா?¢கண்டிப்பாய்  முடியாது.ஒரு எடுத்துகாட்டு.ஒரு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வேகமாய் ஒரு லாரி சர்ரென்று வருகின்றது.ஓட்டுனரின் அறிவால் அனைவரும் தப்பிக்கின்றனர்.பயணி ஒருவர் அந்த லாரி ஓட்டுனரை அடிக்கிறார்.இதை தவறு என சொல்லமுடியுமா ? ஏன் விபத்து நடந்த இடத்தில் உள்ள மக்கள் ஓட்டுனரை அடிப்பது வழக்கமானது தான்.-னியாமான கோபத்தை எப்படி வெளிபடுத்துவது?இங்கே முக்கிய விசயம் என்னவெனில் பத்திரிக்கைகள் சொல்வது போல தாக்கவந்தவர்கள் கட்டைகளோடும்,தாக்கபட்டவன் கையில் கத்தியோடும் வந்திருக்கின்றான்.அவனை அடித்ததற்கு பதில் எதுவெனில் மேற்கூறிய எடுத்துகாட்டு தான்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு  சட்ட கல்லூரியில் நடந்தசம்பவம் இது .ஸ்காலர்ஷிப் வாங்க சென்ற தலித்  மாணவர்களை பார்த்து ஒரு சாதிவெறியன் சொன்னான்”  ஸ்காலர்ஷிப்  வேண்டும்னா
வந்து…………………………………….. “. தலித்  மாணவர்கள் இது குறித்து தந்த எந்த புகாருக்கும் இது நடவடிக்கை எடுக்கவில்லை.  வன்முறை  தான் தீர்வா என கூத்தாடும் பார்ப்பன கோட்சில்லாவே(அடிக்கடி வினவிலும்,ஒரெ ஒருமுறை கலகத்திலும் கெள்வி கேட்ட) பதில் சொல்.அந்த வெறியனை தலித்  மாணவர்கள் மண்டையை பிளந்திருந்தால்   கண்டிப்பாய்  அதுவும் தலைப்பு செய்தியாய் மிளிந்திருக்கும்.

————————————————————————————————————————————————————-

சட்டகல்லுரி குறித்து வினவு எழுதியிந்தமைக்கு  சிலர் இப்படிதான் மறு மொழிந்திருக்கின்றார்கள்.
“பாவபட்ட தேவர்கள் ஒன்று படுவோம்.””இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன்”.இங்கு பாவப்பட்ட என்பதற்கு அர்த்தம் ” நம்ம ஊருல தொடுப்பு வேல செய்யரவனுங்க  நாம அடிச்ச திருப்பி அடிக்கற அளவுக்கு ஆயிட்டாங்களா?.அவர்கள் இப்போது மாறவில்லை,எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கின்றார்கள்.
—————————————————————————————————————————————————————

எரிகின்ற தீயில் எண்ணை

எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுகின்ற வே¨ யைத்தான் இந்த அரசியல் கட்சிகளும் சாதிவெறியர்களும்
செஇகின்றன.¢ செயா எப்போதும் அறிக்கை விடும் ஜெயக்குமாரை விட்டு   விட்டு பன்னீர் செல்வத்தை விட்டு சாதி வெறியை கக்குகின்றார்.சன் டிவியோ மனம் பகீனமானவர்கள் வீடியோவை பார்க்கவேண்டாம் என இரு நாட்களாக ஒளிபரப்பியது.இந்த ஊடகங்கள் தாழ்த்தபட்ட மக்கள்
மீதான வன்முறையை மறந்தும் கூட சொன்னது இல்லை.ஒரு நாளாவது வாயில் மலம் திணிக்கபட்ட
ராமசாமியின் பேட்டியை ஒளிபரப்பியிருக்குமா?.இந்த ஊடகங்கள் முதல் ஓட்டு பொறுக்கி  அரசியல்வாதி,சாதிவெறியர்ளின் தேவையெல்லாம் ரத்தம்.ஒடுக்கப்பட்ட,உழைக்கின்ற மக்களின்
ரத்தம். ஆம் அதை குடித்தால் தான் அதிகாரம் கிட்டுமென்று  பார்ப்பனீயமும் பாசிசமும் சொல்லிதந்திருக்கின்றது.
————————————————————————————————————————————————————-
” சாதி கேக்கறது பாவம்  என உதார் விடும் R.S.S,இந்து முன்னணி காலிகள்
பதில் சொல்லட்டும்.இப்படி ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்கும் போது என்னசெய்ய வேண்டும் என்று.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் இது போல சம்பவங்கள் நடைபெறாது இருக்க
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.
ஆதிக்கசாதி வெறி கிளை வேர் எனில் பார்ப்பனீயம் தான் ஆணி வேர் அதை பிடுங்கி எறியாது
இது பெரியார் பிறந்த மண் எனச் சொல்லி கொள்வதில் பலன் இல்லை.

குறிச்சொற்கள்:

4 பதில்கள் to “சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2”

 1. kalagam Says:

  குமரன்,
  சென்னை சட்டக்கல்லூடி மாணவர் பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து அங்கே தேவர் சாதிவெறியர் களின் கொட்டத்தினால் தான் பிரச்சனை வந்தது என்றாலே தேவர் சாதி வெறியர்களுக்கு கோபம் வருகின்றது.சாதிவெறீ ஆதிக்க சாதியினரிடமோ ஒடுக்கப்பட்டவரிடமோ எங்கே இருந்தாலு தவறு என் கிறோம். பொதுவாய் சாதி வெறி மக்களை பிரிக்கும் ஒடுக்கப்பட்டவரிடமிருக்கும் சாதி வெறியும் பார்ப்பனீயத்துக்கு
  சேவை செய்யௌம்.

  பிரச்சனையை இவ்வாறு ஜனநாயக முறையில் முன் வைத்ததையும் குமரன்மார்களுக்கு
  (தேவர் மார்களுக்கு) நெஞு வலிக்குது எனில் அது தான் உண்மையான சாதியின் வெளிப்பாடு.அவரை போன்றோர் மனதில் மூடிவைத்து விட்டு வெளியே ஜனநாயகவாதி வேசம் போட்டோரின் உண்மை முகம்.

  மெலவளவு படுகொலையின் போது வருத்தமும் கோவமும் கொண்ட சமாதான தேவனாம்
  சமாதான தேவன?சமாதான தேவரா? உங்களால் வருத்தமும் கோவமும் தவிர என்ன செய்ய முடிந்தது
  தாழ்த்தப்பட்ட நண்பர்களுடன் ஒரெ தட்டில் சோறு சாப்பிட்டது ஒரெ அறையில் தங்கியது எல்லாம் வேண்டாம். சாதி எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் ஒரு முறையாவது நின்றிருகின்றீகளா?

  இப்படி உங்களுக்குள் ஒளிந்திருந்த உண்மையான சாதிவெறியை மனதினை கீறி வினவு,கலகம் போன்றோரிடம் வெளியே எடுத்து நீங்களே காட்டியிருக்கின்றீர்கள்.நாங்கள் எழுதியது சாதியை விதைக்கவில்லை.உங்களின் சாதி வெறியை அடையாளம் காட்டியிருக்கின்றது.

  இந்து மத வெறி பாசிச் பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பி.வி.எச்.பி போன்றோரி கொடும் பாதக செயல்களை கண்டு பார்வையாளாராக இருந்து வருத்தப்படு மனது யாருக்கு வேண்டும்.இந்துக்களின் மவுனம் மத வெறிக்கு சம்மதம் என்பது தான்..உங்களின் கோபம் உண்மையாயிருப்பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயபட்டால் மட்டும் தான் உங்களை ஜனநாயகவாதியாய் ஏற்கமுடியும் .அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் வருத்தப்பட்டு கோபப்பட்டு பார்பனீயத்துக்கெதிராய் கலகம் செய்தல் வேண்டும்.அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இப்பரீட்சையில் தன்னை சோதிக்க வேண்டும்.இது தான் வரலாற்று தேவை.உண்மையை உணர்ந்து சாதிக்கெதிரை கலகம் புரிவோம். சாதியை வெரருப்போம்.

 2. கோட்ஸிலா Says:

  ‘அந்த வெறியனை தலித் மாணவர்கள் மண்டையை பிளந்திருந்தால் கண்டிப்பாய் அதுவும் தலைப்பு செய்தியாய் மிளிந்திருக்கும்.’

  மண்டையை பிளந்து சாதி வெறியை ஒழித்திடமுடியுமா.நிர்வாகம்
  சாதி வெறியைக் காட்ட அனுமதிக்கக் கூடாது.மாணவர்களிடையே
  உள்ள சாதி வெறி அல்லது பகை உணர்வுகளை நீக்க நடவடிக்கை
  எடுக்க வேண்டும்.ஒருவன் திமிர் பிடித்து பேசினால், பதிலுக்கு
  மண்டையை உடைப்பதால் எல்லாம் சரியாகி விடுமா? இல்லை
  நீங்கள் தரும் உதாரணத்தில் உள்ளது போல் ஒட்டுனரை அடித்தால்
  எதிர்காலத்தில் விபத்தே நிகழாதா. ஒட்டுனரை அடிப்பது எளிது.
  அது லாரி ஒட்டுனர்கள் அவருக்கு ஆதரவாக களத்தில்
  குதித்து போக்குவரத்தை பாதிப்பதில், அடிதடியில் முடியும்.
  காவல்துறை புகுந்து இரு தரப்பையும் தாக்கும், அப்புறம்
  தொடரும் கைதுகள், போராட்டங்கள்,நீதிமன்ற அலைக்கழிப்புகள்.
  ஒருவரை கண்டித்து புத்திமதி சொல்வதை விடுத்து அடிப்பது
  சரி என்று எழுதுகிறீர்களே?., மனங்களை மாற்றுவது குறித்து யோசிக்கவே மாட்டீர்களா.
  ஒரு சூழலில் சாதி வெறியில் வளர்ந்தவர்கள் வேறு சூழலில்
  அதைக் காட்டும் போது பதிலுக்கு வன்முறைதான் தீர்வா.அம்பேத்கர்
  கத்தியை, உருட்டுக்கட்டையை எடுத்துக் கொண்டு பதிலுக்கு
  வன்முறைதான் தீர்வு என்று எங்காவது போராடினாரா.

 3. rudhran Says:

  the time to talk sense will be right only when the emotional boiling has subsided. it just happened that a dalit anger is videographed..now is not the time to talk about how to show love. this is the time to tell atleast the neutral public that casteism is still an issue in this place.

 4. hari hara krishnan Says:

  இங்கு உங்கள் பதிவு பார்ப்பதற்கு ஜாதியயை எதிர்ப்பது போல் இருந்தாலும் கத்தி எடுத்துக்கொண்டு ஒருவன் வந்ததால் மற்றவர்கள் தங்களை காத்து கொள்வதற்க்காக அவனை அடித்ததை எழுதி இருந்தீர்கள் அதற்கு முன்னர் ஒரு மாணவனை அவர்கள் அடிப்பதை தடுத்து நிறுத்தவே அவர்கள் கத்தி ஏந்திய மாணவனால் விரட்டபட்டார்கள். அதை தாங்கள் சொல்லவே இல்லை. ஏன்?

  தலித், தேவர், நாடார், கவுண்டர், செட்டியார், முதலியார்,பார்ப்பனியர், வேறு யாராக இருந்தாலும் அன்று நடந்தது தவறு.

  போலீஸ், டீ.வி. சேனல் எல்லாம் வந்து பார்த்து ரெடியாகி ஸ்டார்ட் கேமரா என்பது போல் வருமளவுக்கு இருந்தது நம் அரசின் கையலகதனம் அல்ல.

  நடவடிக்கை எடுத்தால் இவன் வோட்டு போய்விடும் எடுக்காவிட்டால் அவன் வோட்டு போய்விடும் என்று சும்மா இருக்க சொல்லி அரசாங்கம் இருந்தது மிக பெரிய தவறு. அதற்க்கு மக்கள் தகுந்த தண்டனை வரும் தேர்தலில் வழங்குவார்கள்.

  எந்த ஜாதிக்காரன் மோதினாலும் பார்ப்பான் தான் வந்து இவர்கள் மீது சண்டயயை துவக்கி வைத்த மாதிரி பேசுகிறீர்கள்.
  என்றைக்காவது பார்ப்பான் யாராவது ரோட்டில் இப்படி வன்முறையாக நடந்ததாக ஒரு செய்தி (ஜாதி ரீதியாக) இருந்தால் காட்டுங்கள்.
  தங்கள் பதிவு மூலம், ஒரு ஐந்தாறு பேராவது ஜாதி வெறி பிடித்ததை தான் பார்க்கமுடிந்தது.
  தாங்கள் வன்முறைக்கு எதிராக எழுதியதை விட மேல் ஜாதி இனர் தான் தவறு செய்கிறார்கள் என்பது போல் ஒரு தோற்றதை உண்டுபன்னுகிறீர்கள்.
  நம் நாட்டில் சட்டம் கடுமையாக நடந்து கொள்ளாததால் வந்த வினை.

  போலீஸ் சட்ட கல்லூரிக்குள் நுழைவதற்கு ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும்?
  மந்திரிகளோ(முதல்) அல்லது வேறு யாருமோ சொல்லாமல் அவர்கள் அங்கு
  நடவடிக்கை எடுக்காமல் இருக்கமாட்டார்கள்.
  அதிகாரம் கையில் இல்லாதவர்கள் சொன்னால் போலீஸ் கேட்காது என்பது குழந்தைக்கு குட தெரியும்.
  தங்கள் பதிவில் வுள்ள பல செய்திகள் ஒரு பகுதி மக்களுக்கு உதவுவது போல் நடை உள்ளது நடுநிலையாக இல்லை இது என் கருத்து.,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: