B.P.O. அடிமை. co.in

B.P.O. அடிமை. co.in

வெளியே போய் விட்டு வந்த களைப்பில்  சாப்பிடக்கூட முடியவில்லை.உடம்பெல்லாம் ஒரே அடித்து போட்ட மாதிரி இருந்தது..பஸ் ஸ்டாப் லிருந்து  ரூமிற்கு தத்தி தத்தி நடை போட்டேன்.கதவை திறந்து ஷ¤ வை கழட்டிவிட்டு முகம் கூட கழுவவில்லை அப்படியே ஒரு வாரமாக பெருக்காமலிருந்த அறையில் குப்பையோடு குப்பையாய் படுத்தேன். நல்ல தூக்கம். செல் போன் சத்தம் தூக்கத்தை கலைத்தது.ஆன் செய்வதற்குள் ரிங்  நின்று விட்டது.மொத்தம் 5 மிஸ்டு கால்கள்.ஒன்று வீட்டிலிருந்து
மற்ற   நான்கும் சரவணனனிடமிருந்து .சரவணன்  ஏர் டெல்லில்      FM  ஆக இருக்கிறார்.அதற்கு என்னவோ அவர் விளக்கம் சொன்னாலும்  நாங்கள் fraud manager என்று தான் சொல்லுவோம்.   நானும் சரவணனும் அண்ணாமலையில் பி.எஸ்.சி படித்து கொண்டிருக்கின்றோம். தினமும் இரவு அடிக்கடி போன் பேசுவோம்.கடந்த சில வாரமாக  அவரும் போன் செய்யவில்லை.வேலைப்பளு காரணமாக நானும் போன் செய்யவில்லை.அப்படியெ வீட்டிற்கு பேசினாலும் பஸ்-ல் போகும் போது தான் பேச வேண்டும். அலுவலகத்தில் போன் பேச அனுமதியில்லை.யோசித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டு சரவணன் போன் ஆன் செஇதேன்.வணக்கங்க நல்லாயிருகீங்களா என ஆரம்பித்து  சுமார் 20 நிமிடங்கள் பேசியிருப்போம். நாளை காலை கிண்டி ரயில்வே ஸ்டேசனில்  8.30-8.45 க்குள் சந்திப்பதென முடிவானது.மீண்டும் தூங்க முயற்சித்தேன் பசி வயிற்றை கிள்ளியது.லுங்கியை மாற்றி விட்டு ஹோட்டலுக்கு போனேன்.எப்போதும் சாப்பிடும் கையேந்தி பவனில் பாத்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தார்கள்.இந்த ஏரியாவில் எல்லா இடத்திலும் விலை ரொம்ப அதிகம்.இங்கு தான் விலை குறைவு. பாக்கெட்டை தடவினேன் 90 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 3-ம் தேதி 7-ம் தேதி தான் சம்பளம்.தெரிந்த எல்லார்கிட்டேயும் கையை நீட்டியாச்சு.யோசித்தேன் ரெண்டு வாழைப்பழங்களை  தின்று விட்டு படுத்தேன்.பசி அடங்கவில்லை.தண்ணீர் கேனும் தீர்ந்து விட்டது.அதற்கு வேற முப்பது ரூபா தரவேண்டும். கவிழ்ந்து படுத்தேன்.

செல்லில்  அலாரம் அடித்து மணி 6 என்றது.கண்ணெல்லாம் தகதக வென எரிந்தது. பத்து நிமிசம் என்றவாறே மீண்டு படுத்தேன். ஏதோ திடீரென எழுந்தேன். மணியோ 7.30 தலையிலடித்துக்கொண்டே எழுந்து ஓடினேன்.குளித்தால் கண்டிப்பாய் நேரமாகும்.மகத்தை கழுவிக்கொண்டு முந்தா  நாள் போட்ட டிரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பினேன் அவசராவசரமாக. நான் படுத்துகிடந்தனிடத்தில் பாயும்,போர்வையும் சுருண்டு கிடந்தன.ரெண்டு வாரமாக இப்படித்தான் சுருண்டு கிடக்கிம்றன.அவைகள் என்ன செய்யும் B.P.O -ல் வேலை செய்யும் என்னை போன்ற பிச்சைகாரனுக்கு வாழ்க்கை  பட்டதால்   குப்பையோடு குப்பையாக இருக்கின்றன்.
பஸ் ஸ்டாப்-ல் நின்றேன்.மணி இங்கேயே 8.00 மேலும் 15 நிமிடங்கள் நின்றேன்.இன்னேரத்தில் 4 ஷேர் ஆட்டோக்களும்,2 வெள்ளை பரதேசியும்(அதாங்க DELUXE)  மேலும் 5 நிமிடம் போனது.இனியும் காத்திருந்தால் கட்டாது.ஒரு வெள்ளையில்  ஏறினேன்.டிக்கெட் வாங்காம இருக்கலாமா? யோசிப்பதற்குள் நடத்துனர் வந்தார்.50 ரூபாயை நீட்டினேன்.எல்லாரும் 50,100ன்னு கொடுத்தா எஙக போறது என கத்த பதிலுக்கு நானும் கத்தினேன்.என்ன் செய்வது.அவர் அரசிடம் பணிபுரியும் அடிமை. நான் வெள்ளைக்காரனுக்கு சேவகம் புரியும் அடிமை. நேற்று ஒரு நடத்துனரிடம் பேசியது ஞாபகம் வந்தது.” எங்களுக்கெல்லாம் 8 மணி நேர டியூட்டி இல்லை.இதனை தடவை ஒட்டணும்.தினமும் 2 மணி 1மணிக்குதான் வீட்டுக்கு போறாம்”.மீண்டும்  நடத்துனர்  ஒரு பயணியை திட்டிக்கொண்டு வந்தார்.என்ன  செய்வது நாங்கள் அடிமைகள் எங்களின் வேலை பளுவை ஏமாந்தவனிடம் தானே காட்ட முடியும். நல்ல டிராபிக் என் காதில் சங்கூதுவது போல இருந்தது.சூளை மேட்டில் இறங்கி ஒடினேன் தாம்பரம் ரயிலில் செம கூட்டம் கூட்டத்தோடு நானும் ஐக்கியமானேன்.மணி 8.40 சரவணன் வேற காத்திருப்பார்.
நானும் சரவணனும் சுமார் டிப்ளமோ படித்து 7 வருடம் கழித்து தான் பி.எஸ்.சி. சேர்ந்திருந்தோம். ரெண்டு பேருக்கும் அலுவலகத்தில் டிகிரி மேல் பதவி உயர்வுக்கு தேவைபட்டது,சரவணன்  குரோம் பேட்டையிலிருக்கிறார்..அங்கிருந்து டிரெயின் பின் பஸ்-ல் சாந்தோம் போக வேண்டும்.சரவணனிடமிருந்து போன் 5 நிமிடத்தில வரங்க பொய் சொல்லிவிட்டு .15 நிமிடத்தில் கிண்டியிலிறங்கினேன்.அதிகம் தேடவில்லை  டிக்கெட் கவுண்டர் அருகில்  நின்றிருந்தார். நான் கேட்டேன் “என்னங்க உடம்பு இளைச்சுடுச்சு, வேலையிலெ பெண்டு நிமித்தறாங்க.ஆமா பைனல் இயர்க்கு இன்னும் கிளாஸ் ஆரம்பிக்கவேயில்லை.போன் பண்ணி கேட்டாலும் அடுத்த வாரம் வாரம் கத வுடறானுங்க.போன வருசமே பரிட்சாஇக்கும் பத்து நாள் முந்தி தானே பரதேசி நாய்ங்க கொடுத்தாங்க” ” பணம் கட்டலைன்னா” முடிப்பதற்குள் ரயிலின் சத்தம் கேட்டது . அவ்ர் பஸ்க்காக  பறந்தார்.ரயில் வந்தது.. நான் ஏறிய கேபினில் 10 பேர் தான் இருந்தார்கள் . பக்கதில் பேபரை கடன் வாங்கி அதி பார்வயை செலுத்தினேன். மனமோ பணத்துக்காக ஏங்கியது.மீதி 70 ரூ இருக்கு .அப்பட சீசன் டிக்கெட் 7-தேதி வரை இருக்கு..கணக்கு முடியவில்லை .அதற்குள் நானிறங்க வேண்ட்ய இடம் வந்தது.மணி 9.54.  10 மணிக்கு  அலுவலகம் ஓடினேன் யாரு என்னை பார்க்கவில்லை.அவர்களும் ஓடிகொண்டுதானிருக்கிறார்கள் .
செக்யூரிடியிடம் செல்லை சைலண்ட்-ல் வைத்து விட்டு ஒப்படைத்தேன். டோக்கனை மிக கவனமாக உள்ளே வைத்தேன்.ஏற்கனவே டோக்கனை தொலைத்ததற்காக எத்தனை நாய்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருந்தது. என்ன்மோ இழக்ககூடாததை இழந்தது போல கேள்வி  கேட்டார்கள்.கழுத்தில் சங்கிலியை மாட்டிகொண்டு ( ID CARD) ஸ்வைப்பிங் மிசினில் காட்டினேன் . சிவப்பு விளக்கையே  காட்டியது.. இந்த சனியன் இப்படித்தான் பத்து முறை காட்டினாதான் பச்சை விளக்கை காட்டும்.இப்படி இருந்தே மாசத்தில் 7 நாள் வரவில்லை என்று கணக்கு காட்டும்..
போரடி கிரீன் வாங்கி உள்ளே போனேன்.எங்கள் அலுவலகத்தில் என் டீம் மிகச் சிறியது  மொத்த்ம் 5 பேர் தான்.நான் சேரும் போது 500 பேர் இருந்தார்கள் . இப்போது மொத்தம் 100 தான்.போன 3 மாசதில் அமெரிக்கா புண்ணியத்தில் 400 பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இன்றும் நான் தான் முதல் ஆள்.பக்கத்து டீம் லீடர் முறைத்தார்.பெருமிதமாக சேரில் உட்கார்ந்தேன்.சக டீம் ஊழியர்கள்  வரிசையை வழக்கம் போல பஸ் கிடைக்க லேட். என்றார்கள்..எங்கள் டீம் லீடர் 1 என்ன 3 மணி நேரம் கூட லேட்டாய் வருவார்.யாரும் கேட்க முடியாது. காரணத்தை விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.இரவு ஷிப்ட் முடிந்து  பகல் ஷிப்ட் வரும் போது இயல்பாக பகலில் வேலை செஇது இரவில் தூங்குவதால் ரொம்ப  பகல் ஷிப்டை எதிர்பார்போம்.அவர்கள் தேவைக்கு எற்ற படி நாங்கள் இரவு ஷிப்ட்-ல் இருக்கவைக்கப்படு வோம். நாங்கள் இன்னாட்டுக்காகவா உழைக்கிறோம்.
அமெரிக்கனுக்கு உழைக்கும் போது  அவன் முழிக்கும் போது  நாங்களும் முழிக்க வேண்டியிருந்தது, உண்மையை சொன்னால் அமெரிக்க வணிகர்கள் எங்களை மனிதராக கூட மதிப்பதில்லை.ஒரு ஜாப் செய்யச்சொல்வார்கள் சிலர் சரியான தகவல்கள் தரமாட்டார்கள்.கேட்டால் இது கூடவா புரியாது என்பார்கள். நாங்களாவது பரவாயில்லை கால் செண்டரில் வேலை செஇவோருக்கு இங்கிலீசில் “ஆயா,அம்மா” என எத்து விழாத குறை தான்.

காலையில் வேலை ஒன்றும் இல்லை இங்கு மாலை 6 மணி தான் அமெரிக்காவில்  காலை 9 மணி .சனிக்கிழ்மை செய்யாமல் விட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தோம். A\Cமிக அதிகமாக இருந்தது. மெக்கானிக்  அளவு குறைக்ககூடாது இது  HR  ஆர்டர் என்றார்.  என் டீம் நபருக்கு காயிச்சல் அதிகமாகிக்கொண்டே போனதுHR இடம் சொன்னோம்.அவர் “மெக்கானிக்க வர்ச்சொல்லுங்க  ” A\C ரூம் டெம்ப்க்கு ஈக்வலா வையுங்க ” அப்படி தான் மேடம் இருக்கு”.எங்களிடம் திரும்பி  சொன்னார்”ரூம் டெம்ப்க்கு கீழ குறைக்கமுடியாது கம்ப்யூட்டர் ஹேங் ஆயிடும்”.

 கம்ப்யூட்டரை பற்றி ஒரு வெங்காயமும் தெரியாத  HR கேட்டு நான் கடுப்பாகிபோனேன்.வேகமாக வேலை செய்ய A\Cயை விட பிராசசர் தான் முக்கியம். வெப்பத்தில் தான் கம்ப்யூட்டர் வேலை செய்யும் எனில் எங்களை அடுப்பில் கூட  உட்கார வைப்பார்கள் நாய்கள். வேலை செய்யாதவனுக்கு அதிக சம்பளமும், வேலை செஇகிறவனுக்கு குறைவான சம்பளமும் தருவார்கள் . இது தான் B.P.O.-n  நியதி மணி 6.30 பிரேக்கிற்கு போன டீம் லீடர் வரவில்லை.எங்களுக்கு தலா 15  நிமிடம்  டீம் லீடர் அப்படி யில்லை  போனால் 2 மணி நேரம்.எங்களுடைய work ஐ பார்த்து அவர் தான்  ok செய்ய வேண்டும்.clients corrections என உயிரை எடுக்க அதற்கு சரியான விளக்கம் தராது டீம் லீடர்  உயிரை எடுப்பார்.கடைசியாஇ 8 மணிக்குவந்தார்.சொல்லிவிட்டு கிளம்பினேன் செல்லை வாங்கி பார்த்தால் 4 மிஸ்டு கால்.ரயில்வே ஸ்டேசனுக்கு ஓட்டமும் நடயுமாஇ அல்ல சோர்ந்து போய்  மெதுவாய் நடந்தேன்.ரயில் வந்தவுடன் அதில் உட்கார்ந்தவுடன் அப்பா போன் செய்தார். “ஏண்ட போன் பண்ணினா திருப்பி செய்ய மாட்டியா ?”” இல்லப்ப இப்பத்தான் வெலையை விட்டு வந்தேன் என்ற பொய்யை சொன்னேன்.காசில்லை என சொல்லவில்லை.

ரொம்ப அவமானமாக இருந்தது போன் செய்ய இருந்தது.மதியம் சாப்பாட்டுக்கு 25, டீக்கு 10 என மொத்தம் 35 ரூ காலியாகியிருக்க மீதி 25 இருந்தது.முதலாய் வேலைக்கு சேரும் போது பல பேர் போல நானும் கனவில் மிதந்தேன்” நல்ல பெரிய கம்பெனி,எவ்வளவு செலவு செய்தாலும் 5000 மாவது சேமிக்கலாம்.கம்ப்யூட்ட்ர், பைக்  என. நம்மை கனவு காண சொன்ன அப்துல் கலாம்கள் தான் ஏகாதிபத்திய கைகூலிகள் என்று.ஒரு வழியில் பணத்தை கொடுத்து பலவழிகளில் பிடுஙி கொள்கிறார்கள்.தினம் உணவுக்கு,போக்குவரத்து,வீட்டு வாடகை என எங்கள் பணம் ப்றிக்கப்பட்டு கொண்டே வருகிறது..மீண்டும் அதே வெள்ளை பரதேசியில் ஏறினேன்.”யார் கேட்டாங்க இவனுங்களை இந்த பஸ்.சாதா பஸ் ஐ எல்லாம் தூக்கிட்டு
டீலக்ஸ் ஆக்கிட்டாங்க ” அறைக்கு வரும் போதே ரெண்டு பரோட்டாவைவாங்கி கொண்டு வந்தேன். வாட்சை கழட்டிவைத்தேன் மணி 9.30.வீட்டுக்காரம்மா வந்தார் “அடுத்த மாசத்தில இருந்து 1000 ரூபா அதிகமாமா” பிறகு அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. புரோட்டாவை பிரிக்காமல்  முறைத்து பார்த்தேன்.இப்பவே ஆளுக்கு 1800ரூபா.வேற இடத்துல போனா 10 மாசம் அட்வான்ஸ் கேப்பானுங்களே”
 நினைக்கும் போதே தலை சுற்றியது.ஒரு உண்மை மட்டும் புலப்பட்டது இந்த IT BPO-ன் நோக்கம் இந்தியாவை வல்லரசாக்கி எங்களை பிச்சைக்காரராக்குவதற்கானதென்று.

குறிச்சொற்கள்: ,

6 பதில்கள் to “B.P.O. அடிமை. co.in”

 1. செந்தழல் ரவி Says:

  :((((((((((((

 2. K.Ravishanakar Says:

  படிக்க கஷ்டமாக இருந்தது.
  மனசு வலித்தது. வயிற்று பிழைப்பு.
  cyber coolies என்பது சரியே.

  ஒரு வேண்டுகோள். சின்ன சின்ன பாரா பிரித்து எழுதுங்கள். அலுப்பு தட்டாமல் படிக்கலாம். படிப்பில் continuity கெடாமல் இருக்கும். ஒரு சிறு
  கதையாக்க் கூட எழுதியிருக்கலாம்.

 3. Kuppan_yahoo Says:

  பதிவு ஓகே, ஆனால் பாத்து (10) வருடங்களுக்கு முன் நிலைமை இன்னும் மோசம். ஒரு தயாரிப்பு / வாகன தொழிற்சாலையில் காலை 8 மணி முதல் (அம்பத்தூர், பாடி) இரவு 11 மணி வரை உழைக்க வேண்டும்.

  வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் ஆண்டிற்கு ஒரு முறைதான் சம்பளம் ஏறும், அதுவும் எல்லாருக்கும் பொதுவாக 3% கூடும்.

  அங்கு நீங்கள் manager ai சார், ஐயா என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் புதிதாக சேர்ந்தால் அனுபவம் மிக்க எட்டாம் வகுப்பு படித்தா சக ooziyarin ராகிங், அலுவலக அரசியல் சொல்லி மாளாது.

  குப்பன்_யாஹூ

 4. RKW Says:

  Ok, then why don’t you come up with a nation-wide job opportunity programme so that the educated youths of this country are given employment?

  Oh you cannot, as the politicians are already looting this country and they have made you an “incapable person to think”.

  Be happy that the BPO industry is providing employment to the people of this country.

  உருப்படியா ஏதானும் பண்ணனும். அதை விட்டுட்டு இது நொட்டை அது நொள்ளைனு சொல்றது எப்படி?

 5. surya Says:

  வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது..

 6. கிராமத்தான் Says:

  மறுக்கமுடியாத உண்மை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: