திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

திரு  நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

கிராமப்புரங்கள் முதல் கல்லூரி வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ  பயன் படுத்த்ப்படும் முக்கியச் சொல் “பொட்டை,  அலி , ஒம்போது” பலருக்கு இந்த கருத்து உண்டு.” இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான”. ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. முசுலீம் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம்  பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது.

உண்மையில் திரு நங்கைகள் யார் ?  மனித செல்லில் உள்ள 23 குரோமோசோம் இணையில் கடைசி 23 23-வது இணையே ஆணா பெண்ணா என தீர்மானிகின்றது. XX என்ற குரோமோசோம் ஆணாகவும், YY
என்ற குரோமோசோம்  பென்னாகவும் பிறக்கின்றது. ஒரு X(or)Y  குரோமோசோம்  அதிகமாகிவிட்டால்
அவர் திரு நங்கையாகிறார். ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள்  சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர்.அவவயதில் தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.

மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக  கூறப்படுகிறது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்
திரு நங்கை நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி யென அழைக்கப்படுகிறனர்..மேற்படியுள்ள அரவாணி யென்ற பெயரே தவறானது.அப்பெயர் திரு நங்கைகள் உருவாக்கப்பட்டதே பாலியல் தேவையின் கடைசி முயற்சி எனக் கூறுகின்றது.பாஞ்சாலியை 5 மணக்க ஐவரும் தலா ஒரு வருடம் என பாஞ்சாலியை பங்கு போட்டுக்கொள்கின்றனர்.மீதி 4 பேரும் பாஞ்சாலியை மீதி 4 பேரும் பார்க்கக்கூடாது.மீறி பார்த்த அர்ச்சுணன் யாத்திரைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒரு பெண் (தாழ்த்தப்பட்டவர்)மூலமாக குழந்தை பிறக்கின்றது அது தான் அரவாண்.

பாரத யுத்தத்தில்  கிருஷ்ணன் ஒருவரை பலி கேட்க அது அரவாண் என முடிவு செய்யப்படுகின்றது.அப்போது அரவாண் தான் இல்லற சுகத்தை அனுபவிக்க வில்லை   அனுபவிக்க  வேண்டும் எனக்கூற கிருஷ்ணன் பெண் உருவில் வந்து  அனுபவிக்க வைத்தார்.இது பார்ப்பன புரூடா கதை.

ஆணாதிக்க இந்து மதத்தில் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல  திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவரை பொட்டை ஒம்போது அலி போன்ற வார்த்தைகள் எதற்காக சுட்டப்படுகிறது.இவன் ஆண்மையில்லாதாவன்.ஒரு பெண்ணுடன் (அ) ஆணுடன் இல்லறத்தில் ஈடு பட லாயக்கற்றவர்.இந்த சமுதாயத்தில் ஆண்,பெண்,விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை  திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை..

ஆங்கிலத்தில் he she it, தமிழில் அவன் அவள் அது  திரு நங்கைக்கு இங்கு இடம் இல்லை.அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது வேண்டுமானால் நாயோடு சேர்ந்துகொள்.கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில்  பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது ஆணாதிக்கம்.

———————————————————————————————————————————————

பலரும் சொல்கின்றார்கள் “அவங்களை யார் பாலியல் தொழில் செய்யச்சொன்னாங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு உழச்சு முன்னேற வேண்டியது தானே”   இது “சும்மா கத விடாதீங்க அவன் வாயில மூத்திரம் இருக்கின்ற வர இவன் என்னா பண்ணிணான்” என்ற சாதிவெறியனுக்கு ஒப்பானது.யாரையும் கட்டி போட்டு இழுத்து வந்து பாலியல் தொழில் செய்ய சொல்ல வில்லை. இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள்,பெண்களின்  கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாது  இருக்க முடிகிறதா.

இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் ரீதியிலான கடு  நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு  பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும்செய்கின்றனர் .பாலியல் தொழிலாளியை  ஆணாதிக்கம் உருவாக்கியதோ அப்படித்தான் திரு நங்கைகளை பாலியல் தொழிலாளி ஆக்கியது.தாழ்த்த்ப்பட்ட ஒருவரை எங்கணம் அடையாலம் காட்ட முடியும்.அவரின் சுற்றுபுறத்தை தவிர  .  ஆனால் திருநங்கைகளுக்கு ?

———————————————————————————————————————————————

திருநங்கைகள் பலரும் சொல்லும் வார்த்தை இது.” நாங்கள் கடவுளிலிருந்து வந்தவர்கள்.வட நாட்டில் எல்லா விழாவுக்கும் எங்களுக்குத்தான் மரியாதை” திருநங்கைகள்  தங்களை கடவுளின் வாரிசாக்கி அதன் மூலம் கேலிப்பொருளுமாக்கிவிட்ட பார்ப்பனீய இந்து மதத்தை முதலில் எதிர்க்காது தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும்.நியமன உறுப்பினர் போன்ற கோரிகைகள் எல்லாம்  இனி பயனற்றதாகி போய் விட்டது.இந்த மறுகாலனியாக்க,பார்பபன மதவெறி சூழலில்  தனியாய் போராடினால் கிடைக்கது வெற்றி.உழைக்கும் மக்களுக்காக அவர்களுக்காக களத்திலிறங்குவோம்.இழந்த,வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை பெறுவோம்.இனியும்தாலியறுத்து ஒப்பாரி வைத்து கொண்டிருந்தால்  ஒப்பாரி வைக்க வைத்தவனை
எப்போது தான்  ஒப்பாரி வைக்கப் போகின்றோம்.

———————————————————————————————————————————————

மாபெரும் சோசலிச புரட்சி நடந்த சில நாட்களில்  நிகழ்ந்த சம்பவம் இது.ரசியாவில் ஒரு பாலியல் தொழிலாளி பனிப்பொழிவில் நனைந்து கொண்டிருந்தார்.அங்கு வந்த செம்படை வீரர் சொன்னார்.”தோழர் உள்ளே போங்க” முதன் முதலாய் ”தோழர் “வார்த்தை அவரின் கண்ணில் நீரை கொண்டு வந்தது,ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிசமே பெற்றுத்தரும்.
போலி சன நாயகப் பாதை அல்ல.

aravaanipsd2

குறிச்சொற்கள்: ,

7 பதில்கள் to “திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்”

  1. செந்தழல் ரவி Says:

    ///மாபெரும் சோசலிச புரட்சி நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சம்பவம் இது.ரசியாவில் ஒரு பாலியல் தொழிலாளி பனிப்பொழிவில் நனைந்து கொண்டிருந்தார்.அங்கு வந்த செம்படை வீரர் சொன்னார்.”தோழர் உள்ளே போங்க” முதன் முதலாய் ”தோழர் “வார்த்தை அவரின் கண்ணில் நீரை கொண்டு வந்தது,ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிசமே பெற்றுத்தரும்.
    போலி சன நாயகப் பாதை அல்ல.///

    வெறும் வார்த்தைகள் மட்டுமே போதுமா ??

  2. புருனோ Says:

    //என்ற குரோமோசோம் பென்னாகவும் பிறக்கின்றது. ஒரு X(or)Y குரோமோசோம் அதிகமாகிவிட்டால்
    அவர் திரு நங்கையாகிறார்.//

    அப்படியெல்லாம் இல்லை. இதில் பல விஷயங்கள் இருக்கின்றன
    http://www.payanangal.in/2008/07/1_25.html

  3. devan Says:

    Ivargalum Manitharhal rhann

    anaivarukkum samathuvam peruga vendum

  4. karthik Says:

    gouhgkjoivjtlklk

  5. raji priya Says:

    வந்தால் தான் தெரியும் வலியும் வேதனையும்… திருநங்கைகள் மனிதர்கள் தான்.

  6. rajaramasamy Says:

    xx is female xy is male xxy is transgender. in transgender there are transmales and transfemale.

  7. Eraniya pandees Says:

    Ulagil pala duraigalil sathikkinrana >THIRU NANGAI<

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: