என்ன பண்றது?-கவிதைகள்

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….

தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

குறிச்சொற்கள்: ,

3 பதில்கள் to “என்ன பண்றது?-கவிதைகள்”

 1. தேவன் Says:

  புரட்சி பண்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 2. கிராமத்தான் Says:

  இன்னும் நிறய எழுதுங்கள்.

 3. போராட்டம் Says:

  முன்குறிப்பு:
  சரியான திசையை நோக்கி பயணிக்கும் முயற்சி.
  வாழ்த்துக்கள்.
  கீழ்க்கண்டவாறு எடிட் செய்யலாமெனத் தோன்றுகிறது எனக்கு.

  >>>

  என்ன பண்றது?
  ஒவ்வொரு முறையிலும்
  பதில்களுக்காய் என் கேள்விகள்
  ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
  பதில்களாய்……

  வறுமையில் உழலும் விவசாயி
  வேலையிழ்ந்த தொழிலாளி
  பாலின் சுரப்பை நிறுத்திய
  மார்பகங்கள் அரைக்க
  மறந்த இரைப்பைகள்
  அடங்கிப்போன கூக்
  குரல்கள் எல்லாவற்றுக்கும்
  ரெடிமேடாய்
  பதில் சொல்கிறாய்
  “அதுக்கு
  என்னபண்றது?”

  தரகர்களின் சூறையாடலில்
  சிக்கி திணறுகின்றது உன்
  தேவைகள்
  நாளை கூட
  நாளையென்ன நாளை
  இக்கணமே கூட நீ
  எறியப்படலாம் சக்கையாய்……

  அப்பொழுது
  நீ சொல்வாய்…
  “இப்போ நான் என்ன பண்றது?”

  சொல்லும்,
  உணர்ச்சியும்
  மட்டுமல்ல,
  வாழ்க்கையும்,
  வர்க்க நலனும் கூட
  அப்பொழுது
  மாறுபட்டு ஒலிக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: