ஜெயமோகன் என்ற தரகன்

ஜெயமோகன்  என்ற தரகன்
படைப்பாளிகளின் பெயரில் உலாவும் மாமாப்பயல்கள்

மாண்பு மிகு இலக்கிய மேதை,சுந்தர ராமசாமிக்கு ப்றகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே நபர் என வர்ணிக்கப்பட்டும்,அவாளோட புத்தகத்து சைஸ்-ஐ வைச்சே அறிவ தெரிஞ்சுக்கலாம் என பார்ப்பன அம்பிகள் புளங்காகிதமடையும் நபர் திருவாளர் ஜெயமோகன் அவர்கள்.
ஜெயமோகன் உயிர்மை நவம்பர் 2008 இதழில் ஊமை செந்நாய் எனும் கிளுகிளுப் பூட்டும் ஏ சர்டிபிகேட்டுக்கு தகுத்யான நெடுங்கதையை எழுதியிருக்கின்றார்.ஆபாசப்படம் எடுக்கத்திட்டமிடும் தயாரிப்பளர்கள் நேரே அண்ணாரிடம் சென்றால் போதும் ஷகிலா என்ன அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலக்கியத்தோடு பாலீஷ் போட்டுத்தருவார்.அதை யூ சர்டிபிகேட் என்று வெளியிட்டு காசு சம்பாதிக்கலாம்.அழகியலின் ரசனைக்குள் புகுந்து ரசிக்கும் ரசிக சிகாமணிகள்  இதை ரசித்து  ரசித்து மெய்மறந்து கிடப்பார்கள்.

இது வரை பல தரகுவேலை கதைகள் வெளிவந்திருக்கின்றன. “நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு “என ஜெயமோகன்  அறிவித்துஇருக்கின்றார்.பிரம்ம சிறீ ஆபாசானந்தா ஜெயமோகன்  அவர்களின் லேட்டஸ்ட் ரிலீஸ் “ஊமை செந் நாய்”(இலக்கிய முலாம் பூசப்பட்டு இருப்பதால் குடும்பத்தோடு படிக்கலாம்).ஒரு வெள்ளைக்கார துரைக்கு வேலை செய்யும் வேட்டைதுணைவனின் கதை இது.அறிமுக வரியை படித்தவுடனே ஆகா ஒரு சேவகனின் வாழ்க்கையை அவனின் அவமானங்கள்,வேலைப்பளு,இளக்கார பார்வைகளை இலக்கிய வாசத்தோடு ஜெயமோகன் எப்படி எடுத்துரைக்கப் போகின்றார் என்று நினைத்தால்  ஒரு வேட்டைத்துணைவனின் வாழ்வை ஒரு மாமாப்பயலின் கடைவிழிப்பார்வையில் கணகச்சிதமாக  எடுத்துக்காட்டி படிப்போரை விரசத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றார்.

 வில்சன் துரையை பற்றி  “அவன் வாயில் சுருட்டை பற்ற வைத்தான் அது கரிய ஆண் குறி போலிருந்தது”ஆரம்பிக்கிறார்.ஒரு விபச்சார புரோக்கர் பேருந்து நிலையத்திலும்,பொது இடங்களிலும்  கிராக்கியை மசியவைக்க  எப்படி  பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பானோ அதை விட சற்று தூக்கலாக ஒவ்வொரு சந்திலும்  அள்ளித் தெளிக்கின்றார். துரையின் தேவைக்கு பெண்களை கூட்டி வருவது முதல்  அவரின் வர்ணிப்பு இருக்கின்றதே  அதை படிக்கும் இலக்கிய மணிகள் “ஆகா இதை கூட எப்படி ரசிச்சு எழுதியிருக்கா பார்த்தேளா இங்கதான் நம்மாளு நிக்கிறா,ஒரு படைப்பாளி எதை கொடுத்தாலும்  இலக்கியப்படுத்தவேண்டும் இலக்கிய உலகம் நமக்கு சொல்லித்தருகின்றது.இதை விமர்சிப்போர் அறிவிலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

ஒரு படைப்பாளி எந்த விசயத்தை வேண்டுமானாலும் எழுதலாம்,எப்படியும் எழுதலாம்,அதிலும் பெண்களை பற்றி எழுழ்தும் போது அவரின் உறுப்புக்களை  வர்ணிக்கலம்.ஒரு படத்தின் வசூலுக்கு ஏற்ப படுக்கயறை காட்சிகள் நீளுவது போல,ஒரு படைப்பாளி நீட்டிக்கலாம் எங்கேயும் புகுந்து கொண்டு.பதில் இப்படியும் வரும்”ஒரு படைப்பாளிக்கு ஆபாசம் விரசம் எதுவும் கிடையாது,எல்லாமே உங்கள் பார்வையில் தான் இருக்கின்றது.படைப்பாளியின் நோக்கம் எடுத்துக்கொண்டவிசயத்தை எப்படி உருவகம்,உவமையோடு எழுதுகின்றான் என்பதை பாருங்கள்,இலக்கியப்பார்வை இல்லாதவர்கள்  என்ன சொன்னாலும்  அதை பற்றி விவாதிக்க தேவையில்லை.

முதலில் படைப்பாளி என்பவன் யார்? தன்னுடைய கதை,கவிதை,ஓவியதிறமைகளை படைப்பவன்.அவன் மக்களிடமிருந்து கற்றவன், மக்களிடமிருந்து சென்றவன்.தன்னுடைய படைப்புக்களை மக்களுக்காக படைப்பவன்.ஒரு படைப்பாளியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?அது அவன் மக்களுக்காக எப்படிப்பட்ட படைப்புக்களை என்பதை பொறுத்தது.புரட்சிகவி முதல் பல புரட்சிகர கவிஞர்கள் படைத்தார்கள் தங்கள் படைப்புக்களை மக்களுக்காக  ,அவர்களுக்கு தன் மான,தேச விடுதலை உணர்வூட்டினார்கள்.குறிப்பாக பாரதிதாசன் தன் படைப்புகள் மூலம் பார்ப்பன ஆதிக்கத்துக்கெதிராக போராடினார்.இறந்த பின்னும் 
அவரின் படைப்புகள் அப்பணியயை செய்து வருகின்றன. நமக்கு தெரிந்த இன்னொருவரும் இருக்கின்றார் அவன் பெயர் வாலி தன் பாடல்கள் மூலம் “ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி” வேறு வகையான உணர்வூட்டும் வேலையில் இருக்கின்றார்.பாரதிதாசனையும் வாலியையும் படைப்பாளி என்ற ஒரே தராசில் வைக்கமுடியுமா?

படைப்பாளியின் வெற்றி பார்க்கும் படிக்கும் கேட்பவரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது தான்.அத்தாக்கம் மக்களின் வாழ்க்கை த்தரதை உயர்த்துவதாய் இருத்தல் வேண்டும்.மக்களுக்கெதிராக,அவர்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் எதுவும் படைப்பாகாதுதைனியும் சிலர் கேட்கலாம்.” ஒரு படைப்பாளியை இதைத்தான் இப்படித்தான் சிந்திக்கவேண்டுமென கூற முடியாதே”.கண்டிப்பாய் கூறமுடியாது.ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் “இப்படி,இவர்களுக்காகத்தான்னென சிந்திக்கின்றார்கள்.ஜெயமாகனைப் போல பலரும் தனது சொறிபிடித்த கருத்தை பொது கருத்தாக்க முனைகின்றனர்.அதில் வெற்றியும் பெற்று தனக்கு ஒரு கூட்டத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

நாம் மீண்டும் அந்த மாமாபயலின் கதைக்குள் செல்லத்தேவையில்லை,அதனுள் சென்றால் அவரின் “கீழ்த்த்ரமான உவமைகளை ” நாமும் பதிய வேண்டி இருக்கும்.
————————————————————————————————————-

அடிக்கடி எழும்பூரில்  ஓவியக் கண் காட்சி நடை பெறுவதுண்டு, அங்கு பல பெண்களின் அரை,முழு நிர்வாண ஓவியங்களை பார்க்கலாம்.அழகியலை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதல்ல,எதற்காக இதனால் எப்படிப்பட்ட தாக்கம் எற்படப்போகின்றது
என்பதுதான் தேவை.இந்த ஆபாச ஒவியங்களை பார்க்க ரசிக்க இளைஞர் பட்டாளங்கள் வருவதும் உண்டு.ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம்  உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.

 
mok_copy

குறிச்சொற்கள்: , ,

10 பதில்கள் to “ஜெயமோகன் என்ற தரகன்”

  1. குமரன் Says:

    கலகம்,
    மும்பை பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இலக்கிய விமர்சனம் செய்யும் உங்களது செயல் நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வை நினைவு கொள்ளச் செய்கிறது. தவறான குறிக்கோள், நோக்கம் கொண்டவர்களை “மாமாப்பயல்கள்” என்கிறோம். எவ்விதமான குறிக்கோள், நோக்கம் இல்லாமல் ஏதாவது பதிவு வெளியிட எண்ணும் நீங்கள் யார் என்பதை தெளிவு படுத்தவும்.

  2. ஆட்காட்டி Says:

    /மும்பை பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இலக்கிய விமர்சனம் செய்யும் உங்களது செயல் நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வை நினைவு கொள்ளச் செய்கிறது./
    இந்தியாவில ஒருவருமே சாப்பிடேலயாமே? அப்பிடியா?

  3. ஸ்டாலின் Says:

    வணக்கம் தோழரே.

    உங்கள் இந்த பதிவில் ஜெயமோகனுடைய இலக்கியம் என்கிற அற்பத்தினூடாக பயணிக்கும் அரசியலற்ற எழுத்தின்‌ வர்க்க நலன் யாருக்கானது என்பது விலக்கிக்காட்டப்பட்டிருக்க வேண்டும்,ஆனால் அது இங்கு நடைபெற‌வில்லை என்று கருதுகிறேன்.மாறாக ஜெயமோகனை மாமாப்பயல் என்று அர்த்தமற்று சாடுவது தேவையற்றது என்று கருதுகிறேன்,ஏனெனில் ஜெயமோகனும் அவரது அடிபொடிகளும் இது ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு நமது கருத்தை நிராகரித்துவிடுவார்கள்,இதற்கு முன்பு அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டுமிருக்கிறார்கள்.நான் இந்த ஒரு விசயத்திற்கு மட்டும் இதை கூறவில்லை.எந்த விசயத்தை விளக்கினாலும் அதை எதிரில் நிற்பவர்களை ஏற்க வைக்கும் பொருட்டு வாதிட வேண்டும் என்று [எனக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்] கருதுகிறேன்.தோழர் வினவு தனது பதிவுகளில் அவ்வாறான முறைகளில் தான் விவாதிக்கிறார்.அவர் காட்டும் நிதானதமும்,தெளிவும் தான் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.அவர் ஜெயமோகனுக்கு எழுதிய பதிவிற்கு ஜெயமோகனிடமிருந்து என்றைக்குமே பதில் வராது என்று நம்பலாம்.மாறாக நாம் இது போன்று வசைபாடுவது ஜெயமோகனுக்கு சார்பாகத்தான் போய் முடியும்

  4. தேவன் Says:

    ஜெயமோகனை பற்றி தாங்கள் எழுதியுள்ள கருத்துக்கள்
    சமுதாயதின் மேல் உள்ள பற்றின் வெளிப்படு ஆகும்.

    அதே போல ஸ்டாலின் எழுதியுள்ள விமர்சனங்களை
    தாங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

    மற்றபடி குப்பை குமரன்களுக்கெல்லாம் பதில் தேவையில்லை.
    இந்தியவில் தினமும் மக்கள் விரோத செயல்கள் நடந்து கொண்டுதான்
    இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக மற்ற விஷயங்களை
    ஒதுக்கி தள்ளி விட முடியாது.

    இவ்வளவு மோசமன கதை இந்தியவில் ஒரு பத்திரிக்கையில்
    வெளி வந்துள்ளது என்றால் இது ஒரு ஜனனாயக நாடா !

    இவ்வளவு மோசமன கதையை எழுதியுள்ள காம வெறியனயும்
    அவனுக்கு சப்போர்ட் பண்றவனயும் முச்சந்தியில் சவுக்கால்
    அடிக்க வேணும்.

    தேவன்

  5. குமரன் Says:

    தேவன்,
    ” குப்பை குமரன்களுக்கெல்லாம் பதில் தேவையில்லை” என்று சொல்லி..குப்பைக்கும் முக்கியத்துவம் வழங்கி உள்ளீர்கள். குப்பைகளையும் உற்று நோக்கும் நீங்கள் ஏன் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட மனிதர்களைப்பற்றி பேச மறுக்க வேண்டும்?? அவர்கள் பணம் படைத்தவர்கள், உயர் நிலை!!!!! கொண்டவர்கள் என்கிற போதும்.. மனிதர்கள் தானே…அல்லது விளிம்பு நிலை மக்களின் கவலையை மட்டும் தான் கருத்தில் கொள்ள வேண்டுமென்று விருப்பமாக இருந்தால்..ரயில் குண்டுத் தாக்குதலில் இறந்து போன விளிம்பு நிலை மக்களின் கவலையை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக மற்ற விஷயங்களை
    ஒதுக்கி தள்ளி விட வேண்டாம். ஆனால் ஜெயமோகன் பற்றி கவலைப்பட இது தகுந்த நேரம் இல்லை என்பது எனது கருத்து. நிர்வாண படம் வரையும் ஓவியர்களின் மீதும் உங்கள் சவுக்கு பாயுமா என்பது என் கேள்வி ??…

  6. godzilla Says:

    நிர்வாண படம் வரையும் ஓவியர்களின் மீதும் உங்கள் சவுக்கு பாயுமா என்பது என் கேள்வி ??…

    அது ஆளைப் பொறுத்து மாறும்.பிடிக்காதவர்கள் செய்தால் அது
    தவறு. அதையே அதாவது நிர்வாணப் படம் வரைதல், ஹீசைன் செய்தால் அது கருத்து சுதந்திரம்.சந்திரமோகன் அப்படி
    வரைந்தாலும் சரிதான்.இந்துக்களின் நம்பிக்கைகளை யார் அவமானப்படுத்தினாலும் தவறுதான் என்றெல்லாம் கலகம்.
    வினவு கும்பல் எழுதாது.இவர்களுக்கு இந்து மதம் ஒழிய
    வேண்டும், இந்தியா அழிய வேண்டும்.
    ‘ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம் உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.’
    இதையே சற்று மாற்றி
    ‘எழுதுபவனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் வாசகர்களிடம் உண்டா என அவர்கள் தான் சொல்ல வேண்டும்”
    என்று ஜெயமோகன் ரசிகர்கள் சொல்ல முடியும்.

  7. kalagam Says:

    எப்போதும் போல கோட்சிலா தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்ளவே முயல்கிறார்.ஆனால்தனது லூசு தனத்தால் அம்பலப்பட்டு போகிறார்.
    இந்த கட்டுரையில் நிர்வாண ஒவியர்களுக்கு யாரும் ஆதர்வு தர வில்லை.எப்படி பெண்களை ஆபாசமாக எழுதுபவன் தரகனோ ஆதே போல் வரைபவனும் தரகன் தான்.எதாவது பேசவேண்டும் என்பதற்காக இப்படி புலம்பக்கூடாது.அக்கட்டுரையில்

    “அடிக்கடி எழும்பூரில் ஓவியக் கண் காட்சி நடை பெறுவதுண்டு, அங்கு பல பெண்களின் அரை,முழு நிர்வாண ஓவியங்களை பார்க்கலாம்.அழகியலை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதல்ல,எதற்காக இதனால் எப்படிப்பட்ட தாக்கம் எற்படப்போகின்றது
    என்பதுதான் தேவை.இந்த ஆபாச ஒவியங்களை பார்க்க ரசிக்க இளைஞர் பட்டாளங்கள் வருவதும் உண்டு.ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம் உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.”

    இதில் எங்கு ஆபாச ஒவியர்களின் சார்பு உள்ளது?.மந்திரம் போடும் நேரம் போக மற்ற நேரத்தில் இப்படி உளறிக்கொண்டு இருந்தால் பைத்தியம் முத்தி போச்சு என்று தான் அர்த்தம்.

  8. RV Says:

    I have read this story. It is hard for me believe that reading this story would arouse one sexually, but I guess I cannot reliably predict how others would react. I thought it was a wonderful piece of writing on how every layer of humanity tends to cruelly treat the next layer – very similar to how the previously suppressed backward castes, tend to still suppress the dalits.

    Writing about sexual acts doesn’t make it a “saroja devi” story. Then Mauppasant, Marquez, DH Lawrence, Nabokov, G. Nagarajan, etc. won’t be available for us!

    I hope Pudhumaippitthan’s famous story “Ponnagaram” is not considered as an incentive to prostitution! Or All Quite on the Western Front as warmongering!

  9. godzilla Says:

    கலகம் முதலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படியுங்கள்.
    தமிழ் உங்களுக்கு புரியாத மொழியாக இருந்தால் அது உங்கள் பிரச்சினை, அதை தீர்க்க நான் வகுப்பு எடுக்க முடியாது.

  10. ஜோர்பாதிபுத்தா Says:

    உங்களின் பதிவை படித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு படைப்பின் வாசக சாத்தியங்கள் எவ்வளவு தூரம் செல்லக் கூடும் என்பதற்க்கு நீங்களே சாட்சி. அந்த கதையில் நீங்கள் காமத்தை மட்டும் கண்டிருப்பது வியப்பு. ஒரு சிறந்த வாசிப்பனுபத்தை தவற விட்டீர்கள். உங்களைப் பார்த்து பரிதாபமே படுகிறேன்.

    உலகை உங்களின் விருப்பத்திற்கேற்ப வளைத்து விடலாம் என்ற நினைப்பு. உங்களின் பார்வையில் சமுதாயம் ஒரு நேர் கோட்டில் நிறுத்தப் பட வைப்பதில் உங்களின் ஆர்வம் தெரிகிறது.

    அடிப்படையில் நீங்கள் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி என்ன என்பதில் தெளிவாக இருங்கள். உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: