டிசம்பர் 6-தொடரும் பார்ப்பன பாசிசம்

dec6_copy

மசூதி இடிக்கப்பட்டது
முசுலீம்களின் மண்டைகளோடு…

அம்பேத்கர் நினைவு நாள்
புதைக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோரின்
உரிமைகளோடு சேர்த்து……

பூத்து குலுங்கும் மாபெரும்
சனநாயகம் வாழ்க இந்தியா
ஜெய் ஹிந்த்.

Advertisements

குறிச்சொற்கள்: , ,

ஒரு பதில் to “டிசம்பர் 6-தொடரும் பார்ப்பன பாசிசம்”

  1. செங்கொடி Says:

    டிசம்பர்6

    புத்தரின் தாமரையை
    பிடுங்கியதைப்போல்
    டிசம்பர்6ஐ தெரிவுசெய்து
    அம்பேத்கர் நினைவை
    மறைத்தன காவிகள்.
    தாமரை என்றால் பிஜேபி
    டிசம்பர்6 என்றால் பாபரி.
    பல சமயத்தவர் நாடிது
    உன் சமயத்தை மெச்சேல்
    ஹுமாயுனுக்கு பாபரின் உயிலிது
    பள்ளி கட்ட பாபர்
    கோவிலை இடித்தார்
    வானரங்களின் அண்டப்புழுகிது.
    மசூதியின் இடிபாடுகளில் சிக்கி
    மரித்துப்போனது மனிதம்.
    ஆண்டுக்கு ஆண்டு
    புதிது புதிதாய் போராட்டங்கள்
    பள்ளியை மீண்டெழுப்ப‌
    வேண்டியதோ
    உணர்வுகளின் மீட்டெழுப்பல்.
    எதற்காக போராட்டம்?
    யாருக்கு எதிராய்?
    இங்கே இடிபட்டவை
    பாபரி மஸ்ஜித் மட்டுமல்ல.
    அத்தனை கோவில்களின் கீழும்
    புத்த விகாரைகளின் நொருங்கல்கள்
    கருவறை தோறும்
    நந்தனின், வள்ளலாரின் பிணங்கள்
    வரலாற்றின் பக்கங்களில்
    இன்னும் உலராமல்
    கழுவேற்றிய ரத்தம்
    ப‌ள்ளிவாச‌லை இடித்த‌து
    நிக‌ழ்வ‌ல்ல‌
    தொட‌ர்ச்சி
    ர‌த்த வ‌ர‌லாற்றின் தொட‌ர்ச்சி
    இது
    பாப‌ரியில் தொட‌ங்கிய‌துமில்லை
    ர‌யில் ம‌றிய‌லால் முடிவ‌துமில்லை
    க‌ட்டிட‌ம் க‌ட்டுவ‌தா
    உங்க‌ள் நோக்க‌ம்?
    இடிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.
    பார்ப்ப‌னீய‌த்தின்
    அத்த‌னை செங்க‌ல்க‌ளும்
    நொருக்க‌ப்ப‌ட‌வேண்டும்.
    அத‌ன் வ‌டிவ‌ங்க‌ள்
    தீய்க்க‌ப்ப‌ட‌வேண்டும்.
    முஸ்லீம் பிர‌த‌ம‌ரானால்
    ப‌ள்ளிவாச‌ல் எழுமா?
    நீதிம‌ன்ற‌ங்க‌ள் தான்
    பாப‌ரை ஆத‌ரிக்குமா?
    அங்கிங்கெனாத‌ப‌டி
    நீண்டிருக்கும் ந‌ச்சும‌ர‌த்தை
    இலை கிள்ளி
    சாய்த்திட‌ இய‌லாது.
    வேர்க‌ளை பொசுக்குவோம்
    வாருங்க‌ள்
    இஸ்லாமாக‌ ம‌ட்டும‌ல்ல‌
    பாட்டாளியாக‌வும்.

    நேசங்களுடன்,
    செங்கொடி
    http://www.senkodi.multiply.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: