சீமான் – மணி கைது

seeman-copyசீமான் –  மணி  கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும்  வீடணர்கள்

நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி  ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட  விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும்  உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும்  இந்தியா தமிழகத்தில்  தன்னை அம்பலப்படுத்தும்  நபர்களை  தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே  உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம்  சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.

யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே  தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில்  நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக  கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.

இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை  தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும்  சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.

 

பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு  இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்  யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.

 

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி  காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து  காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம்  வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.

வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம்  சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின்  அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக  சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு   அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ்  ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை  பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா  காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.

இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை  நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.

குறிச்சொற்கள்: , , , , ,

6 பதில்கள் to “சீமான் – மணி கைது”

 1. தாமிரபரணி Says:

  தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்,
  //***ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்***//
  இத படிக்கும் போது மெய்யாலுமே சிரிப்புதான் வருது
  ஆனா இதமாதிரி காமெடி எல்லாம் காங்கிரசால் மட்டும்தான் முடியும், மொழிவெறி, மதவெறி பிடிச்ச இந்திய அரசு அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் அவனுடைய ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று துன்புறித்தியது, இன்று ஈழமக்களுக்காக பேச கூடாது என்று துன்புறுத்துகிறது, நாம் இந்திய அரசால் நம் இன மக்களையும் நம் மொழியையும் இழந்து கொண்டுவருகிறோம், இந்திய அரசும் இலங்கை அரசும் கைகோர்த்துகொண்டு ஒரு இனத்தை கருவறுக்க முயற்சிக்கிறது
  இதை ஏன் கேட்டால் சட்டம் பாய்கிறது, தமிழக மக்களே விழித்துகொள்ளுங்கள் இந்த இந்திய அரசுக்கு தமிழன் மிது துளி அக்கரைகூட கிடையாது அவர்களுக்கு தேவை தமிழகம் மட்டும்தான் இங்கு வாழும் மக்கள் மிதோ அந்த மக்களின் மொழிமிதோ அல்ல, சுதந்திர தினத்தையும், குடிஅரசு தினத்தையும் புறக்கணிப்போம் அன்று அந்த இந்திய அரசின் கொடியை தூக்கி எறிந்துவிட்டு கருப்பு கொடியை எற்றுவோம் எங்கும் வெடிக்கட்டும் புரட்சி, இந்த ஈத்தர இந்திய அரசு நம் ஈழமக்களுக்கு செய்யும் அவநம்பிக்கைக்கு ஏதிராக நாம் கிளச்சியில் ஈடுபடவேண்டும்,
  இந்த இந்திய அரசின் மொழியான ஹிந்தியை தார்புசியும், தீயிட்டு கொளித்தியும் போராடுவோம், நாம் பதிவு போட்டுகிட்டு இருப்பதனாலோ, கருத்தை சொல்லிகொண்டு இருப்பதனாலோ பெரிய அளவில் மாற்றங்கள் நிகழபோவதில்லை, அப்படி எதாவது குழுக்கள் அல்லது சங்கங்கள் கட்சிகள் இருந்தால் சொல்லுங்கள் பங்கேற்க ஆயத்தமாக உள்ளோம், முடிந்தால் இந்த இந்திய அரசு நம்மை எல்லோரையும் கைது செய்யட்டும் காங்கிரசு மட்டும் ஆட்சி செய்யட்டும், ஆண்மையே இல்லாத இந்திய அரசுக்கு எல்லாம் ஒரு இறையாண்மை

 2. senkodi Says:

  இம் என்றால் சிறைவாசம் என்று வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியை பற்றி கூறும் தேசபக்தர்கள், இப்போது சட்டம், தேசவிரோதம், தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
  இவர்கள் யாரென சாயம் வெளுக்கச்செய்திருக்கிறது உங்கள் சவுக்குச் சொடுக்கல்கள்.
  உங்கள் சாட்டையை கீழே வைத்துவிட வேண்டாம்.

  தோழமையுடன்
  செங்கொடி

 3. குமரன் Says:

  சீமான், அமீர்,வைகோ போன்றோரை கைது செய்த கலைஞர் திருமாவளவனை கைது செய்யாத மர்மத்தை நீங்கள் ஏன் சொல்ல வில்லை…??? கலைஞர் போன்றே உங்களுக்கும் திராணியில்லையா..?? துப்பு இல்லையா..?? துணிவு இல்லையா..???
  போங்கயா நீங்களும் உங்க சனநாயகமும்…புரட்சியும்…புடலங்காயும்..

 4. தேவன் Says:

  திரு குமரன் அவர்களே

  திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை என்பதை பற்றி இங்கு விவாதம் நடத்தவில்லை.

  கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகளையும், கைதுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.

  அந்த வகையில் திருமாவளவனை கைது செய்தால் எதிர்த்து போராட வேண்டும்.

  மற்றபடி உம்முடைய கருத்தில் ஜாதி வெறி தான் வெளிப்படுகிறது.

  மதுரை தேவன்

 5. விடுதலை Says:

  விடுதலை
  கருணாநிதியின் ரெண்டுகெட்டாத்தனமும், இரட்டை நாக்கும் அம்பலபட்டு நாறுகிறது.

  வெறும் வாய் பேச்சு மட்டும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 6. குமரன் Says:

  தேவன்,
  முதலில் திருமாவளவனை மட்டும் கைது செய்யாமல் சட்டமும், கலைஞரும் சோரம் போனதை எதிர்த்து.. சட்டத்தை பொதுவாய் மாற்ற முயல்வோம்..பிறகு கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகளையும், கைதுகளையும் எதிர்த்து பொதுவில் நின்று போராடுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: