காங்கிரஸ் என்றொரு கட்சி

congகாங்கிரஸ் என்றொரு கட்சி
கருமாதி இழவுக்கு காலம் தான் வருமா?

1991,மே மாதம் 22-ம் தேதி காலை 6 மணி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓட்டினேன் கையில் பாத்திரத்தோடு. பாலை ஊற்றிய படியே  பால் காரர் பக்கத்துவீட்டுக்கார அம்மாவிடம்  சொன்னார் “ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்”.எனக்கு ஒரே சந்தோசம் ராஜீவ் செத்ததை எங்கள் வீட்டில் யாரும்  பொருட் படுத்தவே இல்லை.எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது காலையிலிருந்து மாலை வரை அப்படி ஒரு ஆட்டம் எனக்கு தேவையெல்லாம் ஒரு நாள் விடுமறை. அப்போது நான் சிறுவன்.டிடியில் பாத்திமா பாபு கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் யாரும் அழுததாய் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் தான் தெரிந்தது “ராஜீவிற்காக இந்தியாவே அழுதது” என்று. அப்படி அழுததாய் எங்களுக்கும் ஞாபகம் இல்லை.

கடந்த வாரம் சீமான்,கொளத்தூர் மணி,மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு,காங்கிரசோ வரவேற்பு “திருமாவளவனையும் கைது செய்”என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து விடுதலை சிறுத்தைகளிடம் செருப்படி வாங்கி  பிளிறிக்கொண்டிருக்கின்றார்கள்.பார்ப்பன ,சூத்திர பத்திரிக்கைகளோ “சத்திய மூர்த்தி பவன் போலீசார் கண்முன்னே தாக்கப்பட்டது” “காங்கிரசார் தாக்கப்பட்டனர்”.”தங்க்க”பாலுவோ புனிதமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை எந்த காங்கிரஸ் காரனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்” பேரரசர் சொல்லுவதற்கு முன்னேயே ம்ற்ற அரசர்கள் சீமான்,திருமாவின் பொம்மைகளை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்க இல்லேன்னா திமுக ஆட்சியே இல்லை தெரியுமா? என தமிழக சாலைகளில் சீன் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.சாலைகளில் மறியல் செய்த  வெள்ளை வேட்டிகள் தனது பின்புறத்தில் அழுக்கு படிய வைத்து விட்டர்களே  என்ற கோபத்தில் உளறுகின்றன.இளங்கோவன் பாலுவும்  சொல்வதை போல சத்திய மூர்த்தி பவன் புனிதமான இடமா,அங்கே நடந்த தாக்குதல் வரலாற்றுப்பிழையா?

சத்தியமூர்த்தி பவன் என்பது துரோகத்தின் கலங்கரை விளக்கம். மகாத்மாகாந்தி முதல் செத்துப்போன ராஜீவ் காந்தி வரை ஏன் தற்போது குட்டிகுட்டி தலைவர்களாக பரிணமிக்கும் எல்லோரும்  துரோக கம்பெனியின் பங்கு தாரர்கள்.இந்த துரோக கம்பெனியின் தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்திபவனுக்கு விழுந்த செருப்படிகளும் அர்ச்சனைகளும் கணக்கிலடங்காது.இந்திய நாட்டை எப்படி தொடர்ந்து தம் காட்டுப்பாட்டில் வைப்பது என்ற பிரிட்டிசாரின் கவலைக்கு மருந்தாய் வந்தவர் தான் மஹாத்மா. நீங்கள் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கல் எப்போதும் உங்கள் அடிமைதான் என  உறுமியவர்தான்மஹாத்மா.மாவீரன் பகத்சிங்கை தூக்கில் எப்போது போடுவது என வெள்ளையர்கள் கேட்டபோது,லாகூர் மானாட்டுக்கு முன்னே போடுங்க என்று தன் தேச பக்தியை உலகறியச்செய்தார்.ஒவ்வொரு முறையும்  போராட்டத்தை ஆரம்பித்து விட்டு அது மக்களின் கைக்கு சென்ற வுடனே உடனே வாபஸ் வாங்கி ” ,வெள்ளையன் அடித்தால் வாங்க வேண்டும் திருப்பி அடித்த மக்களை (சவுரி சவுரா) காட்டுமிராண்டிகளென்று கண்டித்தார் இந்தப் “பீ”தா.அந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மஹாத்மா செய்த மாபெரும் துரோகம் தான் அவர் கண்டு பிடித்த அரிசன்.உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை தே…….மகன்களாக்கியது தான் தேசத்தந்தையின் செயல்.ராமராஜ்யமும் பசுகொல்லாமையும் இரு கண்கள் என்ற மஹாத்மா மாபெரும் பித்தலாட்ட பேர்வழி. எதற்கெடுத்தாலும் ராம ராஜ்யம் தான் என் கனவு சொல்லிக்கொண்டிருந்தார்.உடனே மாபெரும் பகுத்தறிவாளர் குத்தூசியார் அவர்கள் ராமனின் லீலைகளை அவிழ்த்து விட அந்த ராமன் வேற நான் மனசிலே  நினைச்ச ராமன் வேற என்றார்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் மஹாத்மாவும் அவரது சத்தியசோதனையும் உணமையென்று ஏனென்றால் அவர் தேசப்பிதா.

மகாஆத்மாவுக்கு பிறகு ரெண்டு காந்திகள் மக்களின் உயிரை எடுத்தார்கள் அம்மாளும் பையனும் சோடியாக.அம்மாளுக்கு பஞ்சாப்,பையனுக்கோ ஈழம்.இருவரின் கையிலும் பஞ்சாபும் ஈழமும் பிழியப்பட்டன.1983-ல் பொற்கோயிலுக்குள் புகுந்த ராணுவம்சாமி கும்பிடவந்த சீக்கியர்களையெல்லாம்  சொர்க்கம் அனுப்பியது.பஞ்சாபின் இனப்போராட்டம் துப்பாக்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்காண சீக்கியர்கள்  வரன் முறையின்றி கொல்லப்பட்டனர்.எல்லாவற்றுக்கும் இப்போது போலவே இந்திரா பதில் சொன்னார் கச்சிதமாய் “அவர்கள் தீவிரவாதிகள்”இந்திரா காந்தி கொலைக்கு பின்னோ  ராஜீவ் சீக்கியர்களின்மேல் அளவற்ற தாக்குதல் தொடுத்தார்.அரச கலவரங்களை ஏற்படுத்தி சீக்கியர்களை கொன்று விட்டு மவுனமாய் பதில் சொன்னார்”ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும்”.ஒரு இந்திரா  ஆலமரம் செத்துப்போன மக்கள் எல்லாம் அதிர்வுகளா?

தன் கட்டுக்குள்  கொண்டுவர போராளிக்குழுக்களை முறைகேடாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்திய ராஜீவ்.இலங்கை மண்டியிட்ட வுடனே IPKF என்ற அமைதிப்படை இலங்கை அனுப்பினார்.ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு எதிராக லட்சக்கணக்காண இந்திய ராணுவம் தனது முப்படைகளோடு முகாமிட்டது.சிங்கள மற்றும் தமிழ்மக்களை கொன்று குவித்தது.தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.அதற்குதான் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.அதுவே ரா குல் காந்தி வரை பிரதமர் அதிகாரத்திற்கு வருவதற்கான தகுதியாகிவிட்டது.

இப்போது அலறுகிறார்களே அய்யோ எங்கள் தலைவன்  எங்கள் தலைவன், சத்திய மூர்த்திபவனை தாக்கிய தேசத்துரோகிகள் என்று என்று.செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டை  அரிவாளோடு  மண்டையை பிளந்தார்களே,மூப்பனார் தமாகா ஆரம்பித்த போது அம்மணமாக்கி துரத்திவிட்டார்களே அப்போதெல்லாம் எங்கே போனது இந்த முழக்கம்.கர்னாடகா,கேரளா,ஆந்திராவில் காங்கிரசு அரசுகள் இருக்கும் போது ஏன் தன்ணீர்பிரச்சினையின் போது சொன்னார்கள்”3 மாநிலம் மட்டும் போதாது இந்த தமிழகமும் எப்போது காங் வசம் வருகிறதோ அப்போது தான் காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சினை தீரும்”
.இப்படி எந்த ஒரு தமிழகப்பிரச்சினைக்கும்  “அவர் நல்ல முடிவைஎடுப்பார் என நம்பிக்கை இருக்கின்றது” எனும் பெருச்சாளிகள்.இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் எனில் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவு தரவேண்டுமெனில் அது கண்டிப்பாய் அமைதிப்படையை அனுப்பியது சரியா தவறா என்ற விவாதத்தில் தான் முடியும் .அந்த முடிவில் ராஜீவ் கொல்லப்பட்டது சாதாரணமாகிப்போகும்.பிறகு யார் பேரை சொல்லி ஆட்சியைப்பிடிப்பது.மீண்டும் யாராவது செத்தால் தான் ஆட்சியை பிடிக்கக் முடியும். .அது தான் ஒரு முத்திரை அதன் மேலேயே கைவைத்த்தால் நோகாமலா இருக்கும்.
தங்க பாலு சொல்கிறார்” பாஜக கூட இப்படி செய்ததில்லை”எப்படி செய்வார்கள் காங் காட் ஒப்பந்தம் அமுல் படுத்திய போடு தான் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.ஏன் தற்போது நாட்டை அடிமையாக்கும் அணு சக்தி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது ராமர் பால பிரச்சினையை கையிலெடுத்தார்கள்.இரண்டு பெயரும் தான் வேறே தவிர உள்ளே இருப்பது அதே பார்ப்பன பாசிசமும் அமெரிக்க அடிமைப்புத்தியும் தான்.
ராஜீவ் என்ற அந்த முத்திரை சிதைக்கப்படவேண்டும்  துரோகத்தின் வரலாறான காங்கிரஸ்  விரட்டப்படவேண்டும்.காங்கிரஸ் குட்டிதலைவர்களுக்கு விழுந்த செருப்படி  காங்கிரசுக்கும் விழவேண்டும்.செத்துப்போனவன் என்பதால் ஹிட்லர் யோக்கியனாகிவிடுவானா?ஒரு பாசிஸ்ட் செத்தப்பின்னும்  உயிர்த்தெழுகிறான் அவனை அம்பலப்படுத்தாத வரை.அதனால் தான் காந்தி தேசப்பிதாவாகவும் பஜாரி அம்மாவாகவும்  நீட்டிக்க முடிகிறது.அதற்கான முயற்சியை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகஇக வின் பாடல்”காங்கிரஸ் என்றொரு கட்சி அதன் கருமாதி இழவுக்கு காலம் வந்தாச்சு” அமைதியாய் இருந்தால் மக்களுக்கு அவர்கள் கருமாதி வைத்து விடுவார்கள்.

15 பதில்கள் to “காங்கிரஸ் என்றொரு கட்சி”

 1. RV Says:

  Kalagam,

  You are an unusual person. My perception of the aftermath of Rajiv’s death is markedly different. I lived in Bombay during that time, and that section of India was stunned and grieving. When I came to TN, I felt the same sense of grief again. And ADMK came to power in those elections because of the Rajiv wave. You are only the second person I know of who felt differently about this.

  Is it your stand that Satyamoorthy Bhavan is not a sacred place, hence it can be attacked? My house is not a sacred place, so it is ok for you to attack it? I don’t think your house is sacred either, so I am free to attack it and you would feel okay about it?

  I absolutely agree with you that Indira Gandhi was the root cause of the Punjab problem. I differ about the Rajiv-Jeyawardane agreement – I think it is a bad move for India, but the best possible move for the Sri Lankan govt and a good thing for Sri Lankan Tamils. LTTE sabotaged it because they didn’t think it is good for them. I have mixed feelings about IPKF. I am sure that there were atrocities. But I am not sure any war in an alien land can be fought without its share of atrocities. Regrettable, but I think that is the reality. I think IPKF was restrained compared to many other armies fighting in other lands.

  What I don’t get is this – so Prabhakaran can pass a death judgement on Rajiv, but the Indian govt cannot pass a death judgement to Prabhakaran? If one is valid, then the other has to be valid too. Whether Rajiv is a saint or a sinner – how is it relevant? If Rajiv is characterized as a terrorist, how should the murderer of Sri Sabarathnam, Amirthalingam, Padmanabha should be characterized? If you were a Sri Lankan, would he be justified in feeling that Prabhakaran ia s a terrorist who murdered Premadasa, Atulathmudhali and scores of others, and the Sri Lankan govt should never ever make peace with him? That the Sri Lankan govt should pass a death sentence on him?

  As usual, there is a mention of “Parppana” fascism. I guess I shall try for a last time – what is “parppana” about fascism? What exactly are you talking about?

  Do see my post on questions that you have raised in a differnet context at
  http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ/

 2. சுக்ரன் என்பவன் குரு Says:

  ///
  Do see my post on questions that you have raised in a differnet context at
  http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ
  ///
  r.v from kalagam blog

  உங்கள் பதிவை நான் படித்தேன் ஆனால் அதெல்லாம் இருக்கட்டும் R.V சார் முதலில் கீழ் கொடுக்கபட்டுள்ள வினவு காடுரையின் வரிகளுக்கு பதில் சொல்லுங்கள்.நீங்கள் சாதி பார்க்காதது பற்றிய உங்களுடைய‌ மற்ற விளக்கங்களுக்கெல்லாம் பிறகு போகலாம்,அதற்கு முன்னால் நான் சாதி பார்ப்பதில்லை என்பதை நீங்களே சொல்லிக்கொள்ள முடியாது என்பதோடு வேறு யாரும் கூட அப்படி தனக்கு தானே யோக்கியன் பட்டம் வழங்கிக்கொள்ளவும் முடியாது ஏனென்றால் இங்கு மதிப்பிற்குறியது அழகான வார்த்தைகள் அல்ல சாதியத்திற்கெதிரான‌ நடை முறை அதில் அவர் என்ன செய்தார் என்பது தான் இங்கே முக்கியம்.

  பின்குறிப்பு:
  நீங்கள் மட்டும் தான் பார்ப்பனரா என்ன ?
  அப்படியே இருந்தாலும் என்ன அது பெரிய உலக‌ அதிசயமா,அதை எதற்கு சொல்ல வேண்டும்,அதுவும் நான் பார்க்க நிங்கள் பலமுறை இதை சொல்லிவிட்டீர்கள். அந்த இடத்திலிருந்து கொண்டு சாதி பற்றிய உங்கள் கருணை பார்வையை ஒடுக்கப்பட்டவர்கள் மீது பொழிவது மேலும் அவமானம் செய்வதாகும்.
  நான் இங்கே என்ன சாதி என்பதை உங்களை போல சொல்லிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை,வெட்கமாய் இருக்கிறது.

  //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  “என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

  நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

  ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

  அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?”

  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

 3. madhukumar Says:

  காங்கிரஸ் என்பது இப்பொது கட்சியே அல்ல.. குறிப்பாக தமிழகத்தில் .. அது பல கோவனத்துன்டுகளாக கிழிந்து தொங்கும் ஒரு வேட்டி.. அவ்வளவே..

 4. குமரன் Says:

  கலகம்,
  விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் பின்னூட்டத்தை தணிக்கை செய்து வெளியிடாமல் செய்வது தான் உங்கள் கருத்துச்சுதந்திரமா..??
  கோழைகள் ஒருபோதும் மாற்றங்களை நிகழ்த்த முடியாது..நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்..இனிமேல் கலகத்தின் உள்ளே நுழைய மாட்டேன்..வெற்றியோடு விடை பெறுகிறேன்..நன்றி

 5. RV Says:

  sukran enpavan guru,

  How many times are you going to publish the same feedback? Copy, paste I guess. 🙂

 6. சுக்ரன் Says:

  R.V சார் நான் கேட்கிற‌ ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் உங்கள் இக்ஷ்ட்டப்படி எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகலாம் அது தான் இங்கு அனைவரும் கடைபிடிக்கும் தந்திர‌ம். நீங்கள் அது போல ஒருமுறை சொன்னீர்களா ஒன்பது முறை சொன்னீர்களா என்பதல்ல மையமான பிரச்சனை,மேலும் நான் போய் அதை இப்போது எண்ணிக்கொண்டிருக்கவும் முடியாது,அது இந்த விவாதத்திற்கு தேவையுமற்றது இன்னும் புரியும்படி சொன்னால் எத்தனை முறை சொன்னால என்ன அது தவறு தான், நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தது அதை அல்ல‌ உண்மையை,தூய உண்மையை ஆனால் அது உங்களிடம் இல்லை போலும்.இணைய உலகில் இந்திய ஜனநாயகம் எப்பேர்பட்டது என்பதை நன்றாகவே தரிசிக்க முடிகிறது.
  நல்லது நான் இத்துடன் இதை முடித்துக்கொள்கிறேன்

 7. kalagam Says:

  குமரனுடைய
  ஆபாசம் ததும்பும் மறு மொழியை வெளியிட விரும்பவில்லை,ஆனால் தான் யோக்கியனென்று காட்டுவதற்காக “சனனாயகத்தை பற்றி எழுதுகிறார்.
  இதோ அவரின் மறுமொழி

  “ரொம்ப நல்லா இருக்குது நியாயம்….
  தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பது உங்களுடைய உரிமை, கொள்கை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரசார் உரிமை, கொள்கை. ஆனால் அதற்காக கல்லால் அடிப்பது, செருப்பால் அடிப்பது, அதை ஆதரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது…ஒரு வீட்டில் மகனும் அம்மாவும் கூட கொள்கையில் ஒன்றி இருக்க முடியாது. அதற்காக அம்மாவை கல்லால் அடிக்க முடியுமா..???

  மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பினும் சில வேற்றுமைகளும் உள்ளன..
  1) எதிரியே இறந்தாலும் ரெண்டு சொட்டு கண்ணீர் வடிப்பது ..முடியா விட்டாலும் மகிழ்வு கொள்ளாமல் இருப்பது
  2)காமத்தை அம்மா, சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது

  ராஜீவ் இறப்பில் மகிழ்வு கொண்ட நீங்கள் காமத்தை பகிர்ந்து கொள்ள எந்த இலக்கணமும் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  பாசிஸ்ட் பற்றி பதிவு வெளியிடும் முன் நீங்கள் மனிதன் என்ற வரையறைக்குள் வருகிறீர்களா என்று சுய பரிசோதனை செய்யுங்கள்….”

 8. SUPERLINKS Says:

  கும‌ரன் என்கிற தூய தமிழ் பெயரில் ச‌மீப காலமாக நம‌து தளங்களில் உலாவரும் இந்த நபர் ஒரு RSS காரர் என்பதை நான் முன்பு சொல்லியிருந்தேன். தனது பார்ப்பன மனப்புகைச்சலை தாங்கிக்கொள்ள முடியாமல் வெறியை கொட்டித்தீர்க்க தோழர்களின் சி‌ல பதிவுகளில் மட்டும் போய் ஆதரித்து பேசுவது போல‌ கமெண்ட்ஸ் போடுவதன் மூலம் தன்னை நடு நிலையானவனை போல காட்டிக்கொள்ளும் இது கேடுகெட்ட RSS யுக்தி.
  இந்த யோக்கியருக்கு உலக மகா யோக்கியர் Bமுரளி அய்யா அவர்கள் பிரெண்டு 🙂

 9. SUPERLINKS Says:

  இதோ அவர் பார்ப்பன நரித்தனத்தோடு வினவு தளத்தில் போட்டுள்ள பின்னூட்டம்.இதை அங்கே ஒருவர் அம்பலமாக்கியுள்ளார்.

  /////////
  குமரன், மேல் டிசம்பர் 22nd, 2008 இல் 16:43 சொன்னார்:

  அருமையான பதிவு….
  இந்த கதர் வேட்டி நரிகள் ஓட்டுக்காக வாரி வழங்கியுள்ள சலுகைகைகளும், சட்டபூர்வமான பாதுகாப்பும், இட ஒதுக்கீடும்…தான் இது போன்ற பதிவு வெளியிட , சத்யமூர்த்திபவனில் கல்லெறிய, சோனியா காந்தியை உத்தரப் பிரதேசத்தில் நுழைய விடாமல் தடுக்க என எல்லாவற்றுக்கும் மூலகாரணம்..தொடர்ந்து சொரணை வரும் வரை கல்லால், சொல்லால் அடியுங்கள்…நரிகள் சொரணை பெறட்டும்..எல்லாவற்றையும் திரும்பபெறட்டும்..
  /////////

 10. vanathy Says:

  MR.RV
  I don’t care about your caste , But you have no right to comment about the political solution to eelam tamils.you said that the pact that was done between RajivG and sinhala Jayawardana was the right cause of action.It was wrong from the start.The problem was between eelam tamils and the sinhala govt.the pact should have been done between these two sides.ie eelam tamil representatives and srilankan govt.What happened was not done with the full consent of eelam tamils,it was done under duress.we know sinhala governments better than you people.
  not just the tigers ,most of the eelam tamils were not satisfied with this pact.It was done without any proper safe guards in the constitution.
  Anyway what happened to the pact?After 20 years ,Rajapakse govt has split the northeast province and every thing has gone into the rubbish bin.
  It should be the eelam tamils who should decide how they should be governed,not others.Isn’t it the basis of democracy?
  AS for the atrocities against eelam tamils by Indian army,you might excuse it as some inevitable happenings,but unfortunately for the people who suffered from the atrocities it was more than that and left deep scars.The way you dismissed these atrocities shows the callous and chauvinistic attitude people like you have towards eelam tamils.
  every time ,you approach the eelam tamil issue as LTTE problem.LTTE is only articulating the tamil liberation struggle at this point that’s all.Tamils were fighting for their political rights even before Prapakaran was born.
  As they say ,if the srilankan govt and it’s army manages to wipe out and annihilate tigers from the face of the earth ,do you think every thing will be fine and tamils will live happily ever after,of course not.,unless the proper political solution was found between the tamils and sinhalese either in the form of confederation or in the form of a separate state .
  You and others must refrain from bringing the tiger bogeyman and Rajiv whenever eelam tamil issue is discussed .
  yes it was wrong Rajiv was assassinated,but how can you justify indian army’s atrocities ,killing about 10,000 innocent tamil civilians and raping 1000 tamil women.
  Do you think the whole eelam tamil nation should be destroyed as a punishment for rajiv’s killing?Is that what you ,congress people,Jayalalitha,Hindu Ram ,cho,thinamalr editor and others want?
  It looks you all will get your satisfaction only when there is total silence in tamil eelam,I am not talking about the silence by ending the war,I am talking about the silence by wiping out all the tamils in srilanka.when there is total destruction of a nation there won’t anyone left to make any noises.

 11. குமரன் Says:

  சூப்பர்லிங்க்ஸ்,
  நான் ஆர்எஸ்எஸ் காரனும் இல்லை..எனக்கு பார்ப்பன மனப்புகைச்சலும் இல்லை..இன்னும் சொல்லப்போனால் பார்ப்பன மேலாதிக்கவெறியை தினமும் அலுவலகத்தில் அனுபவிப்பவன். எனவே ஒரு சில பார்ப்பனவெறியர்களுக்காக என்னுடன் சேர்ந்து கறிக்குழம்பு சாப்பிடும் பார்ப்பன நண்பனின் மீது செருப்பு வீச வேண்டுமா..???

  என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் நம்முடைய கருத்துக்கு எதிர்கருத்து கொண்டவர்கள் எல்லோரையும் செருப்பால் அடிக்கவேண்டும், கல்லால் அடிக்கவேண்டும், பீதா..பஜாரி என்றுதான் அழைக்கவேண்டும் என்பதும் பாசிசத்தின் ஒருவித வடிவம் தான்…

  நரேந்திர மோடி, ஹிட்லர் போன்றோரிடம் அதிகாரம் இருந்தது..அதனால் அவர்கள் கருத்துக்கு முரண்பாடு கொண்டவர்களை கொன்று குவித்தார்கள்…உங்களிடம் அதிகாரம் இல்லை அதனால் கல்லால் அடிக்கிறீர்கள்…அதனால் பாசிசம் மற்றும் மேலாதிக்கவெறியை பற்றி பேச உங்கள் எல்லோருக்கும் அருகதை இல்லை என்கிறேன். இதில் என்ன தவறு..??

 12. senkodi Says:

  நரேந்திர மோடி, ஹிட்லர் போன்றோரிடம் அதிகாரம் இருந்தது..அதனால் அவர்கள் கருத்துக்கு முரண்பாடு கொண்டவர்களை கொன்று குவித்தார்கள்…உங்களிடம் அதிகாரம் இல்லை அதனால் கல்லால் அடிக்கிறீர்கள்

  சரிதான் நாங்கள் கல்லால் அடிப்பது போதாதுதான்.

  கல்லால் அடிப்பதை பாஸிசம் என்று கூறுபவர்கள் இது கருத்து முரண்பாடுதானா என்பதை ஏன் சிந்திக்கவில்லை? வினை எதிர்வினை என்பவைகள் குறித்து உங்கள் கருத்தென்ன? ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்ய காரணமாக இருந்தவன் செத்தபோது ஏன் மகிழக்கூடாது? அப்படி மகிழாதவனைத்தான் மனிதனாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டவேண்டும்.

  நீங்களெல்லாம் கோவிலாக கும்பிடும் நீதிமன்றங்களே தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப்பேசுவது தவறில்லை என தீர்ப்பளித்துள்ளதே. அதன் படி நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தியதை எதிர்ப்பவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ளவேண்டும் என்று பின்னூட்டமெழுத தயாரா நீங்கள்?

  போய் வேறு முகமூடி போட்டுக்கொண்டு வாருங்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 13. குமரன் Says:

  செங்கொடி,
  உங்களுடைய முகமூடி கிழிந்து நார் நாராய் தொங்குகிறது.
  நீங்கள் இந்தியாவையும், ஜனநாயகத்தையும், நீதிமன்றங்களையும் என்று ஏற்றுக்கொண்டீர்கள்…இப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு பற்றி பேசுவதற்கு. தவறான கொள்கையை கூட நெஞ்சை நிமிர்த்தி எப்போதுமே ஒரே நிறத்தில் உரக்கச்சொல்லுங்கள். பச்சை ஓணான் போன்று பல நிறத்தில் பல் இளிக்காதீர்கள்.

  சீமானும், மணியரசனும், மணியும் பிணைக்கான மனுவில் தாங்கள் பேசியதை முற்றிலும் மறுத்து நீதிமன்றத்தின் காலில் விழுந்ததை நிச்சயமாய் நீங்கள் அறிவீர்கள்…

  இதே போன்றுதான் புரட்சி எல்லா இடங்களிலும் வெடிக்காமல் புஸ்வானம் ஆகி விடுகிறது தனக்கு பாதிப்புவரும் போது..

 14. RV Says:

  Vanathi,

  A truly genuine and decent reply – it is a pleasure to read you!

  I don’t believe that we have lot of disagreeement – though there are a few points I don’t agree with.

  It is truly great to hear you say that you don’t give a damn about my caste. I think several people feel like you, but you are the one of the very few to say it explicitly. I wish many more would say it!

  I saw too many replies that simply assumed the poster is a brahmin and attacked the caste of the poster instead of answering his/her points. I decided to declare my caste right in the beginning after that to spare these people the trouble of reading my replies. The one time I forgot to do this in Dr. Rudhran’s blog, he promptly came back speculating on my genotype. Left a very bad taste in my mouth!

  I still maintain that the Rajiv-Jeyawardane agreement was good for the Tamils. However, you are absolutely right in saying that an identity not directly involved in the conflict has no right to sign an agreement for another identity, however good the intentions are. Rajiv made a really stupid decision with very bad repercussions for India and the Sri Lankan Tamils. However, I think it would be proper to acknowledge that he had good intentions, and the agreement itself would have improved the Tamil’s situation, if it had been really implemented.

  You must be joking when you complain that the agreement hasn’t been implemented and the NorthEast has been split. The agreement was sabotaged 20 years back.

  I absolutely agree with you that the atrocities of IPKF, whether it is one or one million, need to be condemned. I assure you that I am not callous about it – I realize that if my family had been victims, all my analysis of wars and injustices of war would be markedly different.

  See my post on LTTE and Sri Lankan Tamils – http://koottanchoru.wordpress.com/2008/11/23/இலங்கை-தமிழர்கள்-புலிகள/

  I wish I knew an answer. I would welcome an equitable federal setup, but I don’t think it will happen. My second choice would be separate Eelam, but I shudder at the prospect of LTTE led state.

  What are your views? What do you think is ideal?

 15. செங்கொடி Says:

  எங்கள் கொள்கைகளை பேசுவதற்கும், செயல்படுவதற்கும் என்றும் நாங்கள் பின்வாங்கியதும் இல்லை, நிறம் மாற்றிக்கொள்வதுமில்லை.

  என்னுடைய கேள்வியே, நீங்கள் மதிக்கும் நீதிமன்றங்களே அவற்றை குற்றமில்லை என்று கூறியிருப்பதால் உங்களின் மறுமொழி என்ன? என்பது தான். உங்கள் பின்னூட்டம் சொல்வதென்ன? நீதிமன்றகள் தான் உங்களுக்கு ஏற்பில்லையே நீங்கள் ஏன் நீதிமன்றங்களை பற்றி பேசுகிறீர்கள்? என்பது.
  இதைத்தான் ஆர்எஸ்எஸ் பொறுக்கிகளும் கேட்கிறார்கள். நீங்கள் தான் கடவுள் நம்பிக்கையற்றவர்களாயிற்றே பின் ஏன் கோவிலை பற்றி கவலைப்படுகிறீர்கள்? என்று. இப்போது தெரிகிறதா உங்கள் கேள்விக்கான அடிப்படை எங்கிருக்கிறதென்பது.

  சீமானும் மணியும் நீதிமன்றங்களின் காலில் விழுந்தார்கள் என்றால் அது அவர்களின் தோல்வியல்ல. இப்படி பேசுவது தவறு என நிரூபிக்க முடியாத நீங்கள் செய்யும் அதிகார அடக்குமுறையால் ஏற்படும் நிகழ்வு. இது உங்கள் தோல்வி, இதை மறைக்கத்தான் ஜனநாயக வேடம் போடுகிறீர்கள். ஜனநாயகம் என்ற சொல்லின் மெய்யான பொருள் தெரிந்தால், இந்த நிகழ்வுக்கு விளக்கம் சொல்லுங்கள் உங்களால் முடிந்தால்?

  முதலில் உங்கள் முகமூடிகளை சரிசெய்துகொண்டு வாருங்கள், புரட்சியைப்பற்றி பின்னர் பேசலாம்.

  தோழமையுடன்
  செங்கொடி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: