பரப்பிரம்மம்

பரப்பிரம்மம்
saami-copyஓம் மார்க்சிஸ்ட்டாய நமக
ஓம் பாஸிஸ்டாய  நமக
ஓம்  பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக

அவனின்றி அணுவும் அசையாது
சிபிஎம் இன்றி அவனும் அசைய
மாட்டான்,அசைவுகள் காத்து
கிடக்கின்றன பொலீட்பீரோவின்
பதில்களுக்காக……….

ஊணக்கண்ணுக்கு தான் நான்முகம்
ஞானக்கண்ணுக்கோ நான்காயிர
முகங்கள்,முகங்கள்
அதிகரிக்கலாம் வரத்துகளின்
எண்ணிக்கைக்கு ஏற்ப…

நாயையும் முதல்வராகும்
பேயையும் பிரதமராக்கும்
சூட்சுமம்  தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…

அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….

காந்தியிசம் டாங்கேயிசம்
ரணதிவேயிசம்  கல்யாணிசம்
சோதியிசம் புத்ததேவிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும் இசஙள்
வந்தாலும் பரம்பிரம்மம்
ஒன்றே……

ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
சீபீஎம் உறுப்பினர் சீடு….

வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
யாரையும் வளைக்கும் திறனுண்டு
அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில்  யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….

சாதுகடவுளென நினைத்தயோ
அற்பனே நக்சல் பரி
நந்திகிராம்,காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு
சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
பூசாரி வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன் அதுதான்
சீபீஎம்.

குறிச்சொற்கள்:

ஒரு பதில் to “பரப்பிரம்மம்”

  1. சூப்பர் ஐயர் Says:

    சூப்பரான கவிதை!

    ஆமா இத்து போன விடுதலை (போலி), சந்திப்பு, சிபிஎம் காரன் எவனும் வர்லீயா?

    ஏண்டா குடிகார விடுதலை இங்க மட்டும் ஏண்டா வர மாட்டிக்கிற?!!!!!!

    பயமா இக்குதா?????

    சூப்பர் ஐயர் & கோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: