சன நாயக தேவதை

azhagiri-copy

சன நாயக தேவதை
முண்டச்சியாய் மூலையில்
நிற்க கைம்பெண் ஆனது
பெண்னெனில் பரவாயில்லை
தேவதையே தாலியறுத்தால்
தாங்குமா நெஞ்சு
கண்டிப்பாய் தாங்காது இது
நெஞ்சுக்கு நீதியின் ஐந்தாம் பாகம்……………

கதை எழுதி கவிதை
படைத்து வசனம் சொல்லி
போரடித்து விட புதியதாய்
கலைஞர் எடுத்தார்
அவதாரம் அது இயக்குனர்
அவதாரம்
சிகரம்,இமயம்
என எல்லாம் ஒரே நாளில்
தூள் தூளாய் போனது
ரிலீஸ் ஆன முதல் நாளே
பிய்த்துக்கொண்டு போக
கலை உலகமே கயிற்றில்
தொங்கப்போகிறது
பட்டம் வைக்க பேர் கிடைக்காமல்……….

கத்தியும் அறுவாளும்
காவியம் படைக்க
சன நாயக தேவதைக்கு
செய்து  வைக்கப்
பார்த்தார்கள் மறு கல்யாணம்.

நானா நீயா என
போட்டிகளோ எராளம்
பிச்சுவாளும் கம்பும்
மட்டும் சீதனமாய் கொடுத்தால்
வந்திடுமா தேவதை
அது மயங்கும்
ஒரே மருந்து காந்தி……..

எல்லோரும் மருந்து கொண்டுவர
தேவதையோ சொல்லிவிட்டாள்
யாரிடம் அதிக காந்தியோ
அவர்களுக்கு தான் நானென்று
போனமுறை எதிர்க்கட்சியாய்
வீற்றிருந்தபோது
செங்கோல்  தப்பாமல்
செய்ததை அப்படியே பிசகாமல்
செய்தார்
கண்டிப்பாய் பிசகியிருக்கும்
தனயனை தனியாய்
விட்டிருந்தால் – கருங்கற்களை
பெற்றிருந்தால் தானே
தனியாய் விட, பெற்றதோ
அங்குசம்
சதிராடும் யானையை அடக்க
ஒரே வழியாய் அதுவே கடைசி
ஆயுதமாய் எடுத்து விட…….

அங்குசமோ அணுகுண்டாய் மாறாது
அகிம்சையாய் போய்விழ
பதிந்த சுவடுகளெல்லாம்
காந்தியின் நிழல்கள்
ஓட்டுயந்திரத்தின் எல்லா
பொத்தான்களிலும்
காந்தியின் புன்னகை
ஒன்றில் 1000 காந்தி
இன்னொன்றில் 2000 காந்தி
இன்னொன்றில் 5000 காந்தி………..

திமுக அதிமுக
தேமுதிக சமக
மார்க்சிஸ்டு முமூக
இப்படி எல்லாம் காந்திராஜ்யாமாய்
மாறிப்போனதினால்
திகைத்து போன மக்களோ
யாருக்கு அமுக்கினாலும்
காந்திக்கு போவதினால் மொத்தமாய்
காந்திக்கு வாழ்க்கைப்பட்டார்கள்
காந்தியோ தேவதைக்கு
வாழ்க்கை கொடுத்தார்
முண்டச்சி மகாலட்சுமியாய்
மாற
தயா நிதி வந்து சுபம்
போட
படம் முடிந்து விட்டதாம்
யாரும் எழவில்லை
ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
எங்க தொகுதியில
எப்ப இடைத்தேர்தல் வரும்?

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

4 பதில்கள் to “சன நாயக தேவதை”

  1. purachi Says:

    Good one

  2. அர டிக்கெட்டு ! Says:

    அபாரம், அட்டகாசம்,

    காந்திக்கு வாழ்க்கைப்ட்ட கதை…அட்டா

    வெகுநாளைக்கு பிறகு ருசித்த, ரசித்த கவிதை…

  3. அர டிக்கெட்டு ! Says:

    ஒரு ஆலோசனை…

    படித்து, உணர்ந்து பின் பின்னூட்டம் போட
    அவகாசம் தேவையென்பதால்
    நீளத்தை சற்றே சுருக்கியிருக்கலாம்…!!!

  4. porattamtn Says:

    அருமையான கவிதை.

    பி.கு: வரிகளை மடித்து எழுதுவதில் சற்று கவனம் எடுக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: