முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

ndlfmeet2

சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?

உலகமயமாக்கலினால்  தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு  கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள்  ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது  எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும்  பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி  தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
——————————————————————————————————————-

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

————————————————————————————————————————————————————————————————-

முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

———————————————————————————-

இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்

கலகம்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 பதில்கள் to “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு”

  1. SUPERLINKS Says:

    தோழர் வணக்கம் உங்கள் வடிவமைப்புகள் அருமையாக இருக்கின்றன. மு. ப.எ மாநாட்டு டிசைனை பயன்படுத்தியுள்ளேன்.

  2. சுனா பானா Says:

    >> ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது
    புஜதொமு-வின் வெற்றிகள் தொடரட்டும்!
    தொழிலாளிகள் உண்மையான தொழிற்சங்கத்தில் அணி திரளட்டும்!

  3. senkodi Says:

    புரட்சிகர தொழிற்சங்கம் கட்டியமைத்து வீறுகொண்டு நிற்பது அல்லது அடங்கி ஒடுங்கி அடிமையாய் மொத்தத்தையும் வயிற்றுக்குள் குறுக்கிக்கொண்டு வாழ்வது. இது தான் இன்று ஐடி அறிவாளிகளின் முன்னுள்ள வாய்ப்பு. கலந்து கொண்டவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.

    தோழமையுடன்
    செங்கொடி

  4. Sudeshkumar Says:

    நல்ல பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: