ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!
eezham-3-copy

சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று  துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.

 

பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன. 

கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி  கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை  போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான  இந்தியாவை கண்டித்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில  இங்கே ,கண்டிப்பாக  பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.

 

முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு  இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான்  தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம்  தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட  தேசியத்தை அச்சம்பவத்தை   நேரில் கண்டவர் என்ற முறையில்  பெருமையோடு   பதிக்கிறோம்.

சனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும்  ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி  காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில்  வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.

ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு  பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு  வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும்  தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்

 

அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில்  வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.
“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.
கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள்  இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட  பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”
ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு  புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”

இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,

அம்முழக்கங்களால்  எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள்  உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர்  செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.

 

போராட்டவீடியோ காட்சிகள்

நன்றி : வினவு

http://vinavu.wordpress.com/2009/01/29/eelam12/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!”

  1. BARANI Says:

    விடுதலை புலிகள் எனபவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்பதை அனைவரும் உணர வேண்டும், புலிகள் உருவானதற்கு காரணமே இலங்கைதான். இலங்கை அரசு தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
    மேலும் இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமுற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், முதல் உதவிகூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுக செத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார், இதை உறுதிபடுத்தும் விதமாக இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதை சொன்னதற்காக, இலங்கையின் `சண்டே லீடர்’ ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்சே ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.இது போக விடுதலைபுலிகள் மக்களை கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று வதந்தியை பரப்பி விட்டுயிருக்கிறார் நாதாரி ராசபக்சே அதை சிறிதும் யோசிக்காமல் வழிமொழிகிறார்கள் நம் மானங்கட்ட காங்கிரசும், ஆதிமுகாவும், அடிமையாக இருப்பதுற்கு போராட்டம் தேவையில்லை, ஆனால் தமிழ் ஈழமக்கள் அதை விரும்பவில்லை அவர்கள் தங்கள் உரிமைக்காக புலிகளுடன் சேர்ந்து போராடிகொண்டிருக்கிறார்கள் என்பதே நிசம்
    இது சம்மந்தமாக பல முறை இந்திய அரசிடம் நம் போராட்டம் முலமாகவும், உண்ணாவிரதம் முலமாகவும் சொல்லியாச்சி ஆனால் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் சாவை பற்றி துளி கூட கவலையில்லை இதுமட்டுமா தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்ததற்கு, இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?
    இப்படியே விட்டால் இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும், நம்மை பற்றிய கவலையில்லாத இந்திய நாட்டில் தமிழகம் அங்கம் வகித்தால் என்ன வகிக்காவிட்டால் என்ன? தமிழக மக்களின் சதிகார கட்சியான காங்கிரசும், ஆதிமுகாவும் தேர்தலில் புறக்கணிக்கபட வேண்டும். தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கண்டிப்பாக தனி நாடு வேண்டும் என்கின்ற அவசியத்தையே நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் குறிபிடுகின்றன

  2. porattamtn Says:

    நன்று தோழரே. நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுகிறது.

    //பனகல் பார்க்//
    பனகல் பார்க்கல்ல, பனகல் மாளிகை! அது ஒரு மாநில அரசு அலுவலகம்.

    //பாண்டி கம்பெனி//
    நல்ல பெயர்தான்!

    பாராக்கள் நீளமாக உள்ளன. சற்று மாற்றியமைக்கவும்.

  3. மதுரை சங்கர், மக இக Says:

    முதலில் மக இக வில் இருக்கும் பார்ப்பனர்களை களையெடுத்தால் மக இக மக்களுக்குப் பிடித்த இயக்கமாக மாறும்.

  4. அறிவுக்கொழுந்து Says:

    ஏப்பா,
    சங்கரு நீ இப்ப என்னா பண்ணுற ம க இ க வு ல பார்ப்பனீயத்தோட
    யார் வாழறாங்கன்னு சொல்லுற.இல்லேனா உங்கப்பன் சீபீஎம் வண்டவாளத்த நான் எடுத்து விட்டுடுவேன் சரியா? நீ யோக்கியமான சீபீஎம் மாமான்னா உண்மய சொல்லிடுமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: