சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்
நேற்று காலை சுமார் 11 மணியளவில் முத்துக்குமார் எனும் இளைஞர் தன் உடலில் தானே தீயை வைத்துகொண்டார்.ஈழத்திலே கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது தன்னால் மட்டும் எப்படி இவ்வுயிரை கையில் வைத்திருக்க முடியும் என்ற படி செத்து விட்டார் அவ்விளைஞர், அவர் நமக்கு கோடிட்டு காட்டிய செய்தி ஈழத்தமிழர் தினமும் சிங்கள ஓநாய்களால் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ,செம்மணி புதையல் போல பல புதையல் கள் வெளிவர இருக்கின்றன என்பது மட்டுமல்ல,வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது.”ஆமா இலங்கையில குண்டு போட்டுட்டாங்க என்ன பணறது நேரமாச்சு \கோலங்கள் வையுடா” என பூச்சாண்டிகள் பலருக்கும் தான் செத்தாலாவது மானம் வருமா என உயிரை விட்டார் முத்துக்குமார், ஆனால் மானம் வந்த பாடில்லை.
ஒரு மனிதன் தனது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக,தமிழர்களுக்கு சொரணை கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறான்.உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன,இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன .டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும்,தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை.தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
செத்துப்போன முத்துக்குமார் மட்டுமல்ல தாளமுத்து நடராசன் போன்றோரும் சும்மா சாகவில்லை,சும்மா தான் செத்துப்போனதாக இன்றைய பொடுசுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன, முத்துக்குமாரின் மரண வாக்கு மூலத்தை படித்துப்பாருங்கள்.எவ்வளவு சிந்திருத்திருந்தால் அப்படி ஒரு கடிததை எழுத முடியும்.பலரு சொல்வதுண்டு தற்கொலை ஒரு முட்டாள் தனம் .
ஆனால் ஒரு தற்கொலை ஒட்டு மொத்த தமிழகத்தை அவமானத்தால் கூனிகுறுக வைத்திருக்கிறது,அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு 10,20 என நன்கொடை வழங்கிவிட்டு நானும் ஈழத்தமிழனின் துக்கத்தில் பங்கு கொண்டேன் என கண்ணை கசக்குவதால் கிடைத்திடுமா விடுதலை,ஈழத்தமிழனின் சாவுச்செய்திகளோடு நடிகையின் படுக்க்யறை செய்திகளைகலந்து தந்த பத்திரிக்கைகள் எவ்வித இடையூருமிலாமல் தனது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டே போகின்றன . ஈழத்தமிழன் இப்போது பிணமாகிவிட்டான் அவன் விற்பனைக்கு ஒரு நாளுக்கு மேல் உதவமாட்டான்.தனது தன் மானத்தை இழந்து வாழும் மானங்கெட்ட தமிழர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க.
செங்கல் பட்டு சட்டகலூரி,சேலம் சட்டகல்லூரி மாணவர்கள் என சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மாணவர்களோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்,ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழரை காப்பாற்று என முழங்கியாயிற்று..ஆனால் இது ஏன் நடைமுறைக்கு வரவில்லை? இலங்கைக்கு சென்ற பிரணாபோ தனது முழு ஆதரவை தெரிவித்து விட்டார்.கருணவோ முதுகுவலி என்று குப்புறக்கிடக்கிறார்,மத்திய அரசோ மிக வருத்தத்துடன் கவனிக்கிறது,னம் செஇதிகளை வருத்ததுடன் கவனிக்கும் அதே கண்கள் தான் சிங்கள வெறியன் ஈழத்தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் போதும் ரசிக்கின்றன.
இந்த நிலையில் நம்முடைய போராட்டங்கள் எப்படி இருக்கின்றன.இன்னும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் அதுவும் “இந்திய அரசே தலையிடு”. வெங்கட்ராமன் செத்துப்போனதற்கு ஒரு வாரம் துக்கம் கொண்ட மத்திய அரசு கொத்து கொத்தாய் கொல்லப்படும் தமிழர்களின் பிணங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்கிறது.நமது போராட்டங்கள் பலனளிக்காததற்கு காரணமே ஈழப்போரின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தாதே..இந்திய அர்சு ஈழத்தில் தலையிட்டு போரினை நடத்திக்கொண்டிருப்பதால் தால் சிங்களன் கொலைவெறியாட்டம் போட முடிகிறது.
இந்திய அரசை எதிர்க்காத நமது போராட்டங்கள் ஈழத்தமிழனுக்கு வாய்க்கரிசியாகவே மாறும்.
எந்த ஓட்டு கட்சியும் இந்தியத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் தான் இந்த அரசை தூக்கி தாங்கி பிடிப்பவர்கள்,
முன்னரே சொன்னது போல முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.
ஆம் போர்
தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி அப்படிப்பட்ட கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?
குறிச்சொற்கள்: இந்தி, ஈழம், கலகம், கிளர்ச்சி, தமிழ், தற்கொலை, பு மா இ மு, பெரியர், போர், ம க இ க, மாணவர்கள், முத்துக்குமார்
1:16 பிப இல் ஜனவரி 30, 2009 |
அருமையான பதிவு, உணர்ச்சிகளின் கொந்தளிப்பு.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தான் உண்டு, தன் உழல் உண்டு, என நிருபித்து கொள்கிறார்கள். தமிழனாக நான் பிறந்ததை விட, என் தாய் என்னை கருவிலே கொன்று இருந்தால் இருந்தால் நல்லது என தோன்றுகிறது.
6:49 முப இல் ஜனவரி 31, 2009 |
கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
பெரியார்? கன்னடம்
“தமிழ்”நாட்டில் (தெலுங்கு நாட்டில்?) வெறுக்கப்படும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!
சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!
தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.
வந்ததா? இல்லை.
இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.
அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.
“தமிழ்” தலைவர்களின் தெலுங்கு அடையாளம் தலைத்தூக்குகிறது….
http://lemuriyan.blogspot.com/2008/03/blog-post_24.html ஆசிரியர் தமிழனா?
http://copymannan.blogspot.com/2007/02/blog-post_7088.html ஆசிரியர் தமிழனா?
http://poarmurasu.blogspot.com/2008/01/blog-post_6097.html ஆசிரியர் தமிழனா?
http://karuppupaiyan.wordpress.com ஆசிரியர் தமிழனா?
http://thamilislam.wordpress.com/2008/03/06/பார்பன-கைக்கூலியான-எழிலு ஆசிரியர் தமிழனா?
http://anjjaappu.blogspot.com/2007/03/blog-post_31.html ஆசிரியர் தமிழனா?
இவர்கள் தெலுங்கு பேசும் இந்தி அடியாட்கள் போல் உள்ளது …
4:33 பிப இல் பிப்ரவரி 1, 2009 |
தந்தை பெரியார் ஒருமுறை சொன்னார் சொரணையில்லாதவனை வெல்லமுடியாது என்று.
கிரிக்கெட் விளையாட்டையும், திரைப்படங்களையும். தொலைக்காட்சித்தொடர்களையும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகவும், சமூகப்பிரச்சனைகளை தமக்குத்தேவையில்லாத ஒன்றாகவும் நினைக்கும் சொரணைகெட்ட ஜென்மங்களை முத்துக்குமாரின் மரணம் கொஞ்சமாவது சுடாமல் போனால் அவர் வெந்துபோனதற்கு பலனின்றிப்போகும்.
அதை நம்மால் சம்மதிக்க முடியாது.
தோழமையுடன்
செங்கொடி
6:13 பிப இல் பிப்ரவரி 2, 2009 |
கலகம்!
உணர்ச்சி அறிவை மீறும் பொழுது, கொந்தளிப்பாய் மாறுகிறது. நீங்கள் கொந்தளித்திருக்கிறீர்கள்.
ரசியாவில், புரட்சிக்கு பிறகு, இலக்கிய துறைக்கு தன் இறுதி நாள் வரை தலைவராக இருந்த எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி தன் வாழ்நாளில் இரண்டோ அல்லது மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
ஏன்?
கோழிக்கால் உடைந்தற்காக பக்கத்துவீட்டுகாரனுடன் சண்டை. குழம்பு கெட்டு போனதற்காக வருத்தம்.
இப்படி, மக்கள் சின்ன சின்ன விசயங்களுக்காக தனது நேரத்தையும், செயலையும் செலவிடுகிறார்களே என்ற வருத்தத்தில் நொந்து போய் தான்.
ஆனால், அப்படி இருந்த மக்கள் தான், தெருக்களில் இறங்கி போராடி, உயிர் கொடுத்து புரட்சியைச் சாதித்தார்கள்.
சமூக மாற்றம் என்பது எளிதான விசயமல்ல! அது நீண்டதொரு போராட்டம்.
10:05 முப இல் பிப்ரவரி 9, 2010 |
[…] 6.போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை 7.சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும் 8.தோட்டத்தில் மேயப்போன […]