தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

இது ஏற்கனவே கேட்டது ,படித்தது போலத்தெரியலாம்,பழைய விசயங்களை புதிய விசயமாக்குவது காலமே தீர்மானிக்கிறது.அப்படித்தான் தில்லைக்கோயிலில் தமிழை நுழைக்கவும் அதை அரசின் கட்டுக்குள் கொண்டுவரவும் போராடிய புரட்சிகர அமைப்புக்களின் பணி இன்னும் பலமடங்கு கூடியுள்ளது.வெற்றி என்பது ஒரு காரியம் நிகழ்த்தப்பட்டதால் மட்டுமல்ல தொடர்ந்து அதை தக்க வைப்பதிலேயே இருக்கிறது.மீண்டும் பல நிகழ்வுகளை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தில் எதிரிகளும் துரோகிகளும் நம்மை தள்ளியிருக்கிறார்கள்.
கடந்த 2000-ம் ஆண்டு திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாட முனைந்த சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சித ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்டார்.அதற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மக இக,புஜதொமு,புமாஇமு,விவிமு மற்றும் உள்ளூர் சனனாயக சக்திகளுடன் இணைந்து போராடியது
தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிராக உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களால் தில்லையே பரபரப்புக்குள்ளாகியது.
உள்ளூர் சனனாய சக்திகள் முக்கியமாக முன்னாள் அமைச்சர் விவி சாமிநாதன் மற்றும் வி.எம்.எஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.தீட்சிதர்களின் சில்லுவண்டித்தனமெல்லாம் சிதம்பரம் முழுக்க நாறிக்கிடந்தது.
அவ்வூர் வழியாக பயணம் செய்ய நேர்ந்தது.அப்போது சிதம்பரத்தில் ஏறிய பயணியிடம் தீட்சிதர்களின் அட்டூழியத்தினை சொன்னேன்.அவர் பொறுமையாய் சொன்னார்” எங்களுக்கு அது நடக்குறது எப்பவோ தெரியுமே”.மக இ க வின் பிரச்சாரத்துக்கு முன் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் தீட்சித ரவுடிகளை யாராலும் அடக்க முடியாது.
கோயிலில் அசைவ உணவுகளை தின்பது,கோயிலில் நகைகளை கொள்ளையடிப்பது ,கோயிலிலே விபச்சாரத்தனத்தில் ஈடுபடுவது எல்லாம் பட்டவர்த்தனமாகியிருந்தது,யாரும் முன் வரவில்லை காரணம் எல்லாம் கடவுளின் பெயரால் நடைபெற்றதும் முக்கிய காரணம்.
இப்போது வரும் சனியன்று நடக்கப்போகின்றதே அந்த பெரியார் சிலை அருகில் தான் முதல் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் பேசிய திரு.வி எம்.எஸ்.தனக்கு சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார்,அதில் தீட்சிதர்களி அயோக்கியத்தனம் குறித்து எழுதப்பட்டிருந்தது.அக்கூட்டத்தில் பேசிய CPM மாவட்ட செயலாளர் சொன்னார்” உரிமைக்காக “இந்தியா முழுவதும் மார்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடும் அதில் வெற்றியும் பெறும் என வீராப்பாய் பேசினார்.
அடுத்த வாரமே பார்ப்பனர் என்ற சொல்லால் பிராமணர் உரிமை அவமதிக்கப்படுவதாக கூறி வெளியேறினர்.பிறகு தனியாய் போராடுவதாய் கூறி பார்ப்னீயத்திற்கெதிரான போராட்டத்தை தங்கள் தலைமி போலவே சிதைக்க முயற்சி செய்தனர்.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியும் அதன் வெக்கங்கெட்டராமனும் வெளிப்படையாகவே தீட்சித்ர்க்கு ஆதரவாய் திரிந்தனர். சேக்கிழார் விழாவில் தீட்சிதரை அருளாசி வழங்க அழைத்தனர்.அவ்விழாவில் ம.க.இ.க இந்த புரட்டல் வாதிகளை அம்பலப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டது.பின்னர் அரசியல் விபச்சாரி நெடுமாறனை கூட்டிவந்து கூட்டம் போடார்கள் .அதில் ஒப்புக்குகூட பார்ப்பனர் எனும் வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை.ஆனால் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த புரட்சிகர அமைப்புக்களை கிண்டலடித்தார்கள் . ஆனால் இந்த நாய்களின் ஊளையை சற்றும் மதிக்காது மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தொடர்ந்து போராடியது.
தில்லையில் அதன் தோழர்கள் குருதி சிந்தி தமிழை கொண்டு சென்றார்கள்.தமிழை நீச பாசை எனகூறி ஒதுக்கிய தீட்சிதக்கும்பலால் ம க இ க தோழர்கள் நுழைந்த போது வாய் மூடி மவுனம் சாதிக்கவே முடிந்தது. அப்போது நடந்த சம்பவங்களோ கொடுமையிலும் கொடுமை பல ஊடகங்கள் மக இ க -இன் பெயரை திட்டமிட்டே மறைத்தன.
அரசியல் மாமா கட்சியான சீபீஎம் தனது போராட்டத்தாலே தமிழ் நுழைந்தாக போஸ்ட்டர் ஒட்டியது.அப்போராட்டத்தையே சிதைக்க முயன்ற நாய்கள் வாய் கூசாது பல்லைகாட்டின,சொந்தம் கொண்டாடின.
சென்னையில் பல இடங்களில் போஸ்ட்டர் ஒட்டிய த மு எ ச தமிழக அரசுக்கு நன்றி சொன்னது.
அக்கோயிலை அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கோரி அரசு நடத்தாமல் கிடந்த வழக்கினை ஆறுமுகசாமி பெயரில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனுத்தாக்கல் செய்தது.இத்தனை ஆண்டுகளாக தூங்க வைக்கப்பட்ட வழக்கினை தட்டி எழுப்பி அரசின் வழக்கு மன்றத்தின் மூலம் கோயிலை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வரும் உத்த்ரவு பெறப்பட்டது,வழக்கம் போல திகவோ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறது,மற்ற கட்சிகளோ பத்திரிக்கை மற்றும் ஊடகங்களோ திட்டமிட்டு மக இ க புஜதொமு பு.ம.இ.மு,விவிமு ஆகிய அமைப்புக்களின் பெரும் பங்கினை மறைத்தன.
சென்ற ஆண்டு நடந்த வெற்றி விழ பொதுக்கூடத்தில் பேசிய வேல் முருகன் கூட ம க இ க தான் இவ்வெற்றிக்கு காரணம் என தெளிவாக கூறினார்,ஆனால் திக ஏன் பல அமைப்புக்கள் புரட்சிகர அமைப்புக்களின் பெயரை திட்ட மிட்டு மறைக்கின்றன.
ஆனால் தில்லை மக்கள் தெரிந்து கொண்டார்கள் ம க இ க வும் அதன் தோழமை அமைப்புகளாலேயே இவ்வெற்றி ஈட்டப்பட்டதென்பதை ஆம் அன்று முதல் வரும் சனி வரை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான நிதியை மக்கள் தான் வழங்குகின்றனர்.நெருப்பை பொட்டலம் கட்டி வைக்க முடியாது அப்படித்தான் போராட்டத்தையோ அதன் வெற்றியையோ அதிக நாள் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
பார்ப்பன பாசிஸ்டுகள் ஓரணி
கோயிலோ கையை விட்டு போய்விட்டது அதை மீட்டே தீருவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்,பார்ப்பன மீடியாக்களோ அதற்கு ஒத்து ஊதி அதன் ஊது குழலாய் செயல் படுகின்றன. கடந்த வாரம் “ஈஸ்வர ரக்சது” எனும் பெயரில் தலையங்கம் தீட்டிய பார்ப்பன மணி கோயிலை அரசு எடுத்துக்கொண்டது இது வரை இருந்த கோயில் புனஸ்காரங்களும் தடையாகும் என்பதாக சித்தரிக்கிறது,இது வரை யோக்கியமாக இருந்ததாகவும் தற்போது அரசியல் வாதிகள் கெடுத்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கிறது,அதற்கு கருத்து சொல்லுகிறார் பார்ப்பன கொழுந்து”அண்ணாவோட போட்டோவை மாட்டுறாங்க ஆனா அரங்கனுடைய போட்டோவ மாட்டுறான்க இதுக்கு என்ன காரணம் திருச்சி ரெங்க நாதன் அரசுவசமிருப்பதே,ஆனாலும் நாம் பொறுமையாயிருப்போம்” என்னவோ தமிழக கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தன் சொந் உழைப்பால் கட்டியதைப்போலவும் அது பார்ப்பனர்களி பரம்பரை சொத்து அது அரசு தட்டி பறிக்க முயல்வதாக பார்ப்பன மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.
என்னுடைய உழைக்கும் மக்கள் ரத்தத்தில் நிமிர்ந்த கோயில்கள் அம்மக்களுக்கு திறப்பதில்லை,அன்று பார்ப்பன ஆதிக்கத்தில் கேள்வி கேட்ட உழைக்கும் மக்கள் எரிக்கப்பட்டு நாயன்மாராக்கப்பட்டனர்.என் மக்களால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு நீ என்ன காவலிருப்பது என் சாமியை வழிபட என் மொழியில் அழைக்க கூடாது அப்படி செய்தால் தீட்டு படுமெனில் அதற்கு அந்த சிவ்னும் உடந்தையெனில் அவனும் தண்டனையை பெறவேண்டும்.ஆனால் ஊடகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பற்றியோ,சிதம்பரம் போலீசு தீட்சிதன்களுக்கு வாலாட்டுவதை பற்றியோ,பங்கு பிரிக்கும் போது கொல்லப்பட்ட மூர்த்தி தீட்சிதனைப்பற்றியோ வாய்திறப்பதில்லை,பாவம் அவர்கள் எங்கெ போவார்கள் ? என கேள்வி எழுப்புகிறது ?
காடுகள் அழிகிறது என்ற பொய்யாக குற்றச்சாட்டு கூறி ஆடு மேய்ச்சல் தடைசெய்யப்பட்டிருக்கிறதே அதை நம்பி வாழ்ந்த மக்களைபற்றியோ,தினசரி செத்துக்கொண்டிருக்கும் விவசாயி பற்றியோ,கங்கை கொண்டான் நீர் மக்களுக்கின்றி கோலா கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, சீனப்பட்டால் தூக்கில் தொங்கும் கைத்தறி பற்றியோ வாய்திறவாத திறந்தாலும் என்ன செய்யறது எனக்கூறிய பத்திரிக்கைகள் தற்போது தீர்ப்பே கூறுகின்றன”அரசு ஏற்றது தவறு என்று”
அவர்களுக்கு தேவை எல்லாம் சொர்ண மால்யாக்கள் அவிழ்த்துப்போட்டு ஆட வேண்டும் .அதுவும் தில்லையில் புனிதமாக கருதப்பவேண்டும் கோயிலில் பார்ப்பனன் வாய்வைத்தவுடன் பீரும் பான்பராக்கும் புனிதமாகிவிடுகின்றன.
கள்ளக்காதலை பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் பார்ப்பன மீடியாக்கள் தில்லை தீட்சிதன்கள் படுத்து எந்திரிக்கும் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான் கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் . இனியும் பார்ப்பனனின் காலைக்கழுவி குடிப்பதற்கு வரிசையில் நிற்கப்போகிறோமா அடிமை பக்தர்களாக இல்லை, என் கடவுளை வழிபட நீயார் அந்த உரிமையை தடுக்க நீ யார் என கேள்வி கேட்கப்போகிறோமா?
திரள்வோம்
தில்லையில் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்.
ஆர்.எஸ்.எஸ் ,பிஜேபி பார்ப்பன கும்பலை களத்தில் முறியடிப்போம்.
பிப்ரவரி 21.மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ,
பேரணி துவங்கும் இடம் அயோக்கியன் காந்திசிலை
பொதுக்கூட்ட இடம் : பகுத்தறிவு சூரியன் பெரியார் சிலை அருகில்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
குறிச்சொற்கள்: ஆர்.எஸ்.எஸ், சிதம்பரம், தில்லை, பிஜேபி, பெரியார், பேரணி மற்றும் பொதுக்கூட்டம், மக இ க, HRPC, NDLF, PALA
This entry was posted on பிப்ரவரி 17, 2009 at 12:30 பிப and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
1:26 பிப இல் பிப்ரவரி 17, 2009 |
படம் அட்டகாசமாக இருக்கிறது !
9:21 பிப இல் பிப்ரவரி 17, 2009 |
//படம் அட்டகாசமாக இருக்கிறது !//
படம் ஓகே.
இந்த படத்திற்கு பதிலாக, தில்லை கோவிலில் வரும் பணத்தை கணக்கு வழக்கில்லாமல் அமுக்கிய தொந்தி வளர்த்துள்ள ஒரு தீட்சிதர் படம் இருந்தால், இன்னும் சூப்பராய் இருந்திருக்கும்.
3:04 பிப இல் பிப்ரவரி 19, 2009 |
“Poraattamey Magizhchi ” – endra marx in kootru meippikka pattadhu!
feb 21 nigazhchigalukku en vaazhthukkal!
4:52 பிப இல் பிப்ரவரி 19, 2009 |
கட்டுரை மிக எழுச்சிகரமாக இருக்கிறது. ஆனால் எழுத்துப் பிழை மிக மோசமாக உள்ளது. புள்ளி, அரைப் புள்ளி, கமா, ஒற்று முதலானவற்றை உடனடியாக சரி செய்து கட்டுரையை மறு பிரசூரம் செய்யுங்கள். நல்லதொரு கட்டுரை வீணே போய் விடக் கூடாது.
நண்பன்
11:11 முப இல் பிப்ரவரி 20, 2009 |
தொடரும் தொடரும்…
நந்தன் சுவர் தூளாகும் வரை ஓயாது.
மக்கள் முன்னே நாம் நிற்கிறோம்.
அவர்களுக்குத்தெரியும்
தில்லை என்பது அண்மை இலக்கு என்பது
தொடரும் தொடரும்…
தோழமையுடன்
செங்கொடி
1:13 பிப இல் பிப்ரவரி 23, 2009 |
முன்பெல்லாம் கோயில் ,கடவுள் ,ஆன்மிகம் இதை பற்றி பேசினாலே ஆவேசம் வந்து வார்த்தைகளால் வறுத்தெடுத்த என் சித்தாந்த செல்வர்கள் தற்ப்போது ஆலயம் பற்றி பேசுகிறார்கள்.ஆலய பிரவேசம் செய்கிறார்கள்.மார்க்ஸ் இருந்தால் தற்கொலை செய்திருப்பார்.நல்ல வேலை
8:20 பிப இல் பிப்ரவரி 24, 2009 |
Kollai Adikira Roedy Kootam onnu thillai Kovilil poonthururukku. Athukku thalaivar Sivanadiyar.
2:49 பிப இல் பிப்ரவரி 26, 2009 |
Veliyil neengal seivathai maraika kovilil nadappathaga koorum kollai kootamey ,kutram ulla nenju kurkurukiratho.