கடைசி ஆஸ்கர்

கடைசி ஆஸ்கர்

arrah-copy

ஆகா நாம் என்ன புண்ணியம் செய்தோம்
இது வரைக்கும் உலக வரலாற்றிலேயே
அதுவும் முதல் முறையா  எப்படி
சொல்லுறது
பத்திரிக்கைகள் திண்டாடுகின்றன
டிவிக்களோ கொண்டாடுகின்றன…..

இப்போது மட்டுமல்ல
எப்போதும் இப்படித்தான்
கொழும்பில் நடந்த டெஸ்ட் தொடரை
இந்தியா கைப்பற்றியது
பங்கு சந்தை கொஞ்சம்
ஏறிவிட்டது
நாட்டின் வளர்ச்சி விகிதம்
உயர்ந்து விட்டது
கொண்டாட்டங்களும் திண்டாட்டங்களும்
கூடி கும்மியடிக்கின்றன எங்களின்
இழவு வீட்டில்…..

தின்ன சோறில்லை
ரெண்டுபக்கமும் குண்டுமழை
தத்தி தத்தி
கள்ளத்தோணி ஏறும் போது
போய்விட்டது உயிர்…..

முகத்தின் சுருக்கங்கள்
சொல்லும் முதுமையை
நிலத்தின் சுருக்கங்களோ
அறிவித்தது மண்ணின்
மரணித்தலை
ஆனாலும் வழியில்லை
தோண்டுகிறோம்……..

அழுகிறது குழந்தை
தூக்கம் கெட்டுப்போகவில்லை
பலநாளாய் போகவில்லை
தொண்டைக்குழிக்குள் எதுவும்-
ஆத்தாளோ பறிக்க
போயிருக்கிறாள் ஒடுவந்தலையை….

வேலையில்லை
இருந்த கம்பெனிகள்
முடிக்கொள்ள

பூட்டுகள் மீண்டும்
சொல்கின்றன வேலையில்லை

வேலையில்லை…..

தண்ணீர்,சோறு எல்லாம்
கானல் நீராய்ப்போக
சாக்கடை தண்ணீர் மட்டும் தான்
மிச்சமிருக்கிறது…..

என்ன இருந்தாலும் எல்லா
விரலும் ஒரே மாதிரியா
இருப்பதில்லை  உண்மைதான் யாரும்
சுண்டு விரலாய் இருக்கவிரும்புவதில்லை

நாங்கள் கூட  சோத்துக்கு
லாட்டரி அடிக்க விரும்பியதில்லை
ஆனால் இன்று வரை
அடித்துக்கொண்டே இருக்கிறோம்
விழாத பரிசுச்சீட்டை சுரண்டிக்கொண்டே இருக்கிறோம்……..

எப்படி இருந்தாலும் பெருமைப்பட்டே
ஆகவேண்டுமாம்
ஒன்பது ஆஸ்கர் விருது
கிடைத்ததற்காக
ஒவொவொரு நாளும் ஒவ்வொரு
பெருமைகள் எங்களை
கர்வமாயிருக்கச்சொல்கின்றன…..

போட்டியிடாமலே விருதுகள்
எங்களுக்கு குவிகின்றன
பதவிகள் கனக்கின்றன
பாதையோ கருமையாய் இருக்கின்றது….

எல்லோரும் பெருமைப்படுங்கள்
நாங்களும் பெருமையோடு
செத்துப்போகிறோம்
கண்டிப்பாய் எங்களுக்கு சொர்க்கம் கிடைக்காது
உழைக்காத ஊதாரிகள் எங்களுக்கு தந்த
கடைசி ஆஸ்கர் விருதுதான் நரகம்.

குறிச்சொற்கள்: , , , , ,

13 பதில்கள் to “கடைசி ஆஸ்கர்”

 1. rudhran Says:

  excellent

 2. lightink Says:

  உண்மையை தெரிகின்ற சொற்கள்

 3. Akaran Says:

  சோழியன் குடுமி சும்மா ஆடாது. காரணமில்லாமல் இந்தியர்களுக்கு ஆஸ்கார் கொடுக்கவில்லை. இனிமேல் இந்தியர்கள் உலகில் எந்த நாட்டிற்கு போனாலும், ஸ்லம்டொக் மில்லியனர் படம் ஞாபகம் வரும். அனேகமாக நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு சங்கடமான நிலை.

 4. Loverboy Says:

  இந்தியாவில் கன்ஸ்யூமர் பொருட்களுக்கான சந்தையின் கதவுகள் திறந்து விடப்பட்ட சில வருடங்களில் ஐஸ்வர்யா ராயும் சுஸ்மித சென்னும் உலக அழகிகளாக தெரிவு செய்யப்பட்டனர் – விளைவு? அவர்கள் மாபெரும் ப்ராண்ட் அம்பாஸிடர்களாக இருந்து யுனிலிவர் /பெப்ஸி/ கோக் மற்றுமுள்ள இறக்குமதிச் சரக்குகளைக் கூவிக் கூவி விற்றனர்..

  இப்போது ரஹ்மான்! இப்போது மியா! – அதே இப்போது – கொந்தளிப்பான தமிழர்கள்! ம்ம்ம்.. அடுத்து என்ன நடக்கலாம்? ரஹ்மான் ஒரு உதாரண இந்தியராக – மாதிரித் தமிழராக உருவகித்துக் காட்டப்படலாம். தமிழர்களின் முன்மாதிரியாக முன்னிருத்தப்படலாம் – பொங்கி எழும் தமிழுனர்வில் கொஞ்சம் தண்ணியைத் தெளித்து பார்ப்பன தேசியத்தில் கோர்த்து விட்டு விடலாம்.

  ஒன்னு கவனிச்சீங்கன்னா – அவர்கள் கவனமாக முஸ்லிமாகப் பார்த்து முன்னிருத்துகிறார்கள் – முன்னே அப்துல் கலாம், இப்போ ரஹ்மான் இவர்கள் தான் முன்மாதிரித் தமிழர்கள் ( பார்ப்பன தேசியத்தில் )

  எனக்கு இன்னும் சரியா / கோர்வையாக சொல்லத் தெரியவில்லை.. ஆனா இந்த மொத்த விஷயத்திலெ ஏதோ நாறுது.

 5. வினவு Says:

  ஹாலிவுட் படங்களுக்கான இந்தியச் சந்தையின் மதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஆஸ்கார் விருதுகள் இங்கேயும் ஒன்றிரண்டு தர்மத்தக்கு வீசப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

  வினவு

 6. Kalaiyarasan Says:

  இது இந்தியர்க்கு(அல்லது இந்திய வறுமைக்கு) எதிரான அமெரிக்காவின் ஜிகாத். படம் பார்த்த பிறகு இன்னும் விபரமாக சொல்கிறேன்.

 7. Jeyakumar Says:

  என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

  ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.

  இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?

 8. ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !! « வினவு, வினை செய்! Says:

  […] கடைசி ஆஸ்கர் […]

 9. டாஸ்மாக் Says:

  //ஹாலிவுட் படங்களுக்கான இந்தியச் சந்தையின் மதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஆஸ்கார் விருதுகள் இங்கேயும் ஒன்றிரண்டு தர்மத்தக்கு வீசப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

  வினவு///

  சமீபத்திய பொருளாதார சிக்கலை தொடர்ந்து எல்லா துறைகளும் ஊற்றி மூடிக் கொள்ள, பொழுதுபோக்கு துறைகளில் முதலீடுகள் குவிகின்றன. உலகின் மிகப் பெரியதான இந்திய சினிமா சந்தையை குறிவைத்து தற்போது பெரு முதலீடுகள் வந்துள்ளன. இதற்கு தேவையான சந்தைப்படுத்தும் உத்திதான் ரஹ்மான் விருது.

  டாஸ்மாக்

 10. செங்கொடி Says:

  அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கும், ஜெய் ஹோ பாடலை கேட்டவர்களுக்கும் நாம் கூறிக்கொண்டிருப்பதன் பொருள் நாம் விளக்காமலேயே புறியவரும். நாம் கொள்ளையடிக்கபடுவதை நம்மை கொண்டாடச்சொல்லும் ஆஸ்கார். வாழ்க ரசிகர்கள்(!)

  தோழமையுடன்
  செங்கொடி

 11. மரண அடி Says:

  தோழர்கள் மன்னிக்கவும் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னுட்டத்தை வெளியிடுகிறேன்.
  கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?
  என்ற தலைப்பில் திரு.வே.மதிமாறன் அவர்களுடைய தளத்தில் வெளியான கட்டுரைக்கு
  வெளியான பின்னூட்டங்களில் பெரியார் திகவை சேர்ந்தவகள் மக இகவை பற்றி அவதூறை அள்ளி தெறித்திருக்கிறார்கள்.நமது தோழர்களும் அதற்கு சரியான் பதிலிட்டு இருக்கிறார்கள் அதற்கு தமிழச்சி அவர்கள் மிரட்டல் தொனியில் ஒரு பின்னுட்டமிட்டுருக்கிறார். அதற்கு பதிலை நான் இங்கு இடவே விரும்புகிறேன்.

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  தமிழச்சி அவர்களே!

  //நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும்//

  இதற்கு என்ன அர்த்தம் ? நீங்கள் நினைத்தால் (பகைத்தால்) என்னவேண்டுமானாலும் செய்யமுடியும் என்று நினைப்பா?
  போன் போடுங்க சுப்ரமணியசாமி செருப்ப கூட தொட முடியாது.

  ஜாலியா பென்ஸ் காரில் (அதுவும் ரெண்டு இருக்கு) சுத்தி கொண்டு தந்தை பெரியாரின் கொள்கைகளை பேஷனாக கருதும் உங்களை போன்ற பணக்காரர்களால் வர்க்க ரீதியாக மக்களை திரட்டி போராடிகொண்டிருக்கும் தோழர்களின் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது.

  //நீங்க வேற நானெல்லாம் போட வேண்டிய இடத்தில் ஒரு போனை போட்டாலே மேட்டர் முடிஞ்சிடும்//

  இந்த கேள்வியை யார் கேட்டாலும் நாங்கள் சொல்லும் பதில் இதுதான் .

  “நாங்கள் நக்சல்பாரிகள் இத்ற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.

  முடிந்தால் செய்து பார்”

 12. athmaa Says:

  மிகவும் அபத்தமாக இருக்கிறது உங்கள் கவிதை. ஆஸ்கர் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லையென்றால் வன்னிக் காட்டில் அமைதி வந்து விடுமா? அரசியல்வாதிகளெல்லாம் திருந்தி நாடு சுபிட்சமடைந்து விடுமா..? ரஹ்மானின் இசைக்கு அங்கீகாரம் கிடைத்தது எல்லோருக்குமான கர்வம்.நாங்களும் உலகத்தரம் தான் என்று மார் தட்டிக் கொள்ளும் ஆசை. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஈழப் ப்ரச்சினையைக் காரணம் காட்டி உங்கள் சம்பள உயர்வை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவீர்களா? உலகில் எப்போதுதான் பிரச்சினை இல்லை? ஏதாவது காரணம் சொல்லி விருதுகளை மறுக்க வேண்டும் என்றால் யாருமே தன் திறமைக்கான கௌரவத்தை அடைய முடியாது.

 13. athmaa Says:

  அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கும், ஜெய் ஹோ பாடலை கேட்டவர்களுக்கும் நாம் கூறிக்கொண்டிருப்பதன் பொருள் நாம் விளக்காமலேயே புறியவரும். நாம் கொள்ளையடிக்கபடுவதை நம்மை கொண்டாடச்சொல்லும் ஆஸ்கார். வாழ்க ரசிகர்கள்(!)

  தோழமையுடன்
  செங்கொடி
  ________________________________________________________________

  இந்தியாவில் இனிமேல் தான் புதிதாக சந்தையை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை ஹாலிவுட். ஏற்கெனவே மூன்றாம் உலக நாடுகளுக்கென ஒரு சந்தையை உருவாக்கி அதில் நல்ல லாபமும் பார்த்தும் வருகிறார்கள். ரஹ்மானின் இசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்பதற்காகவாவது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வேண்டுமானால் ஒரு புதிய சந்தை உருவாக வாய்ப்பிருக்கிறது.இனி ரஹ்மான் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கக் கூடும். இங்கே இருப்பது போன்று அங்கும் ரஹ்மானுக்கென ஆடியோ மார்க்கெட் உருவாகலாம். அப்போதும் ” எங்க ஊர்ல மழையே பெய்யல! கன்னடத்துக்காரன் தண்ணி தர மாட்றான்! ஆனா அமெரிக்கால இந்திய இசைய கொண்டாடறானுவ!” அப்படீன்னு புலம்பிக் கவிதை எழுதுவீங்களோ என்னவோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: