நான் கடவுள் – சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

kadavul-low1

சுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு  “அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன், அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு”  என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.

தொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின்  மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.

குருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க, எல்லாவற்றையும் இல்லாததாக்குவதற்கு அப்பனுடன் செல்கிறான்  ருத்ரன் அகோரி.

யார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்தவுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்

தன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி, அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவது குற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில்  ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.

இதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர்  வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி  இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமா ஒருவன் ஆலோசனை கூற  அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன  நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது  ருத்ரன் காப்பாறுகிறான் .

ஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றம் அவனை விடுவிக்கிறது.

மீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து   தவழ்ந்து  மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் கேட்கிறாள் “சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க”.

 இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால்  அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.
——————————————————————————-
படம் இவ்வளவுதான் “நான்கடவுள்”  இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால்  கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது  எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டால் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.
அந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.

கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.


ஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக  செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கள்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.

அப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து  புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்.

அப்படி தின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் “எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை”

 

இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படலாம்.

பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவர்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.

இது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாது கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.

மதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால்  கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.

இப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.

குறிப்பு
இது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான்  அவருக்கு மோட்சம் கிட்டுமோ  என்னவோ? யாருக்கு தெரியும் ஒரு வேளை  அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.

குறிச்சொற்கள்: , , , , , , ,

4 பதில்கள் to “நான் கடவுள் – சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்”

 1. Raja Says:

  அடாடா ஸ்டாலின் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்றல்லவா வரலாறு பதிவு செய்திருக்கிறது.

  போங்க சார் போய் ஸ்டாலின் ஆட்சி பற்றிய முழு வரலாறை படித்துவிட்டு வந்து விமர்சியுங்கள். யார் பிணந்தின்னி மற்றும் கொத்துகொத்தாய் மக்களை கொன்ற கொடும் சர்வாதிகாரி என்று தெரியும்.

  இன்னுமா பாடையில் போய் சேர்ந்துவிட்ட கம்யுனிசத்தை கட்டி அழுகிறீர்கள். உங்கள் சாயம் மேற்கு வங்கத்தில் சுத்தமாக வெளுத்து உங்களை விரட்டி அடிக்கும் காலம் வந்துவிட்டதே.

  போய் வேறு ஏதாவது பிழைக்கிற வழியை தேடுங்கள்.

 2. saji Says:

  dude.. naan ithuvarai paditha vimarsanagalil mikavum moosamaanathu ithu thaan.

  blog a/c irukkunna yedha venumnaalum yezhudhalaam yendrillai… konjam sensible-aa yezhudha pazhagunga…

  saji

 3. பாலகிருஷ்ணா Says:

  மிகச் சரியான விமர்சனம் உங்களது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் கடவுள் திரைப்படம் குப்பைக் கூடையில் போடக்கூட லாயக்கு இல்லாத படம். கொடுமை என்னவென்றால் மீடியாக்கள் மிகச் சிறந்த படமென்று படமெடுத்து ஆடுவது தான். போங்கய்யா, நீங்களும் உங்க ரசனைகளும். இன்னும் கொஞ்ச காலத்தில் மலத்தை தின்பவர்கள் கிகோரிகள் என்று ஒரு படம் வரத்தான் போகிறது…..

 4. Viji Says:

  தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: