போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை

raja-copy1தூரிகைகளின் துயரப்பதிவுகள்
கண்டது முதல்
என்னிடம் சொல்வதற்கு
ஏதுமில்லை
மக்களின் மவுனம் என்னை கொல்லுகின்றது….
ஓட்டுப்பொறுக்கிகளின் சிரிப்புக்கள்
மகிந்தாவின் சிரிப்போடு
ஒத்துப்போய் சிரிப்புக்கள்
பெருஞ்சிரிப்பாகி விட்டன
அலைகளெல்லாம் ஒன்றாய் சேர்ந்து
சுனாமியானது போல்
எங்களின் துயரங்கள்
அவர்களின் சிரிப்புக்கள்
சந்தோசங்கள், ஆர்ப்பரிப்புக்கள்
சச்சின் சிக்ஸர் அடித்த வேளையில்
மகிந்தாவோ பிணங்களின் சதங்களை
எண்ணிக்கொண்டிருக்கின்றான்……………

கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது
மனமோ தட்டி தட்டி
தடுக்கிறது

மனிதனின்
உடல்கள் பாஸ்பரசு குண்டுகளால்
எரிந்து கொண்டிருக்க
இரவு பத்து மணிக்கு மேல்
டாஸ்மாக்கை ஒரு கும்பல்
தட்டிக்கொண்டிருக்கிறது…..

என்னைப்போலவே பலரிடமும்
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை

ஆம் உண்மைதான்
சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை
இருக்கின்ற வார்த்தைகள்
எல்லாம்
சொல்லுகின்றன
திமுக அதிமுக பாமக
பாஜக காங்கிரஸ்,கலைஞர் ,
செயா,ரஜினி,விஜய்,அஜீத்,
சில்க்,நமீதா………
வார்த்தைகள் அடமானம்
வைக்கப்பட்டிருக்கின்றன
உலக வங்கியில் அல்ல
உள்ளூர் தேசியத்தில்……
உன்னில் தூங்கி கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப
இன்னும் எத்தனை பேர்
கருகிப்போகவேண்டும்……

வேறு வழியே இல்லை
இன்று ஈழம்
நாளை உன் இல்லம்
கண்டிப்பாய் நீயும்
கருக்கத்தான் படப்போகிறாய்

போராட்டத்தை தவிர வேறு
வழி இல்லை இல்லவே இல்லை

இனியும்
குப்புறப்படுத்து கிரிக்கெட்
ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
இந்தியத்தை முறியடிக்க
கூடவே உன்னையும் சேர்த்து.

குறிச்சொற்கள்: , , , , , ,

5 பதில்கள் to “போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை”

 1. செங்கொடி Says:

  மகிழ்ச்சி என்பது போராட்டம்; மகிழ்ச்சி என்பது சுகம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் தடிச்சுவர் தான் தகர்க்கப்படவேண்டியது. கவிதை அதை சரியாகவே செய்கிறது

  உங்க‌ள் கைக‌ளையும்
  இணைத்துக்கொண்டே
  வெட்டி வீழ்த்துவோம்
  உல‌க‌ம‌ய‌ ஈன‌த்தை.
  http://senkodi.wordpress.com/2008/12/11/இது-நிச்சயம்/

  தோழமையுடன்
  செங்கொடி

 2. தெ. சுந்தரமகாலிங்கம் Says:

  //இனியும்
  குப்புறப்படுத்து கிரிக்கெட்
  ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
  நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
  இந்தியத்தை முறியடிக்க
  கூடவே உன்னையும் சேர்த்து.//

  தமிழர்களின் மழுங்கடிக்கப்பட்ட மனநிலையை உசுப்பிவிடும் வரிகள்! கவிதை அருமை!

 3. தெ. சுந்தரமகாலிங்கம் Says:

  எனது இணைய வலைத்தளம்: http://inaiyavuli.blogspot.com/

  தெ. சுந்தரமகாலிங்கம்

 4. அர டிக்கெட்டு ! Says:

  உங்களுக்கு கவிதை எழுவதில் நல்ல திறமை உள்ளது. அதை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள். மற்ற தோழர்களின் தளங்களுக்கும் பிரசுரிக்கச்சொல்லி அனுப்புங்கள்.

 5. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் « கலகம் Says:

  […] வந்த தோழர் மருதையனின் பேட்டி 6.போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை 7.சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: