உண்மைகள் கரிக்கின்றன
எத்தனை சொம்பு
தண்ணீர் குடித்தாலும்
உண்மைகள் கரிக்கத்தான் செய்யும்….
பொய்கள் இனிக்கும்
தின்று கொழுத்து வீங்கிய
வயிறுகள் பொய்களை குறைக்க
அணிவகுக்கின்றன சுகர் ப்ரீ சென்டருக்கு…..
இனிப்பதனால் பொய்கள்
உண்மையாகிவிடாது கரிப்பதனால்
உண்மையும் பொய்யாகிவிடாது……
என்னதான் முக்கினாலும்
பொய்களால் கரிப்பை ஜெயிக்க முடிவதில்லை
ஆதிக்கசாதியின் மூத்திரத்தில்
தொடங்கி விவசாயியை குடித்த
யூரியா வரை எல்லாம் கரிக்கத்தான்
செய்கிறது………
என்ன செய்வது
வாயில் கரிப்பை வைத்துக்கொண்டு
எங்களால் பொய்யாய்
சிரிக்கத்தெரியவில்லை…..
எலிமருந்தில் மூவர்ண தேனைத்தடவி
வருகிறார்கள்
ம்!
எல்லோரும் நாக்கை நீட்டுங்கள்
நக்காதவன் எல்லாம் தேசத்துரோகிகள்.
தோழர் குருத்து அவர்களின் கவிதையை படித்தவுடன் எழுதிய கவிதை இது
http://socratesjr2007.blogspot.com/2009/04/2009.html
குறிச்சொற்கள்: கவிதைகள், தேர்தல் 2009
10:48 முப இல் ஏப்ரல் 18, 2009 |
//இனிப்பதனால் பொய்கள்
உண்மையாகிவிடாது
கரிப்பதனால்
உண்மையும் பொய்யாகிவிடாது……//
நன்று.
4:27 பிப இல் ஏப்ரல் 18, 2009 |
அத்தனைத் தொகுதிகளிலும் ஒரே வேட்பாளர். அவரது பெயர் பணம். ஓட்டுக் கேட்டு வருகிறவர்களிடம் வாக்காளர்கள் செய்ய வேண்டிய பணி ஒன்று பாக்கியிருக்கிறது. உள்ளங்கை உங்கள் முகத்தைப் பார்த்தபடியிருக்க நடுவிரலை மட்டும் அவர்களிடம் நீட்டிக் காட்டுவது. வீசுவதற்கு செருப்பில்லாதோரால் கூட குறைந்தபட்சம் இதையாவது செய்ய முடியும்.