தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்


ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும்  அதில்பெரியார்  தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும்  முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.

அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.

எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை  சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.

இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை  பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.

மக இ கவின் தோழர்  பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே  அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது.  மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம்  பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.

யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?

ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.

ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.

ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி  தற்போதுதான்  ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.

எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார்.  அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.

நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே  அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி  பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன்  எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு  மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார்,  நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை  கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட  அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால்   2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.

இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு  பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.

ஆனால்  பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு  சேவை செய்யும் பெதிகவினை  என்ன வென அழைப்பது?

தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க  கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ”  இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்”

  1. விடுதலை Says:

    ‘ஈழத்தமிழர்களின் துயரம் தமிழிண உணர்வாளர்களை அம்பலபடுத்தியது’

    என்ற கட்டுரையில் இன்றைய ஈழ போராட்டத்தின் நிலமையை மதிமாறன் அவர்கள் வெளியிட்டிருந்தார் அதற்கு எதிவினையாக தோழர் பெரியார் தளத்தில் அதி அசுரன் என்பவர் ம.க.இ.கவை பற்றிய அவதூறு கட்டுரையை எழுதியுள்ளார்.

    ம.க.இ.கவின் நடைமுறைகளை பார்த்தவன் என்பதாலும் ம.க.இ.கவின் சமரசமற்ற பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கையை ஆதரிப்பவன் என்பதாலும் இதற்கு பதில்களும் சில கேள்விகளும்.

    முதலில் முத்துகுமர் மரண்த்தில் ம.க.இ.க வினர் ஆள் பிடிக்க போனார்கள் என்பதே உங்களுடைய வயிற்றெரிச்சலை காட்டுகிறது. இன்றைய இளைஞர்கள் ஈழத்தில் நமது உறவுகள் கொடுரமான முறையில் கொன்றொழிக்கபடுவது பற்றி அக்கறையில்லாமல் சினிமா, பொறுக்கி கலாச்சாரம் போன்ற சுயநலங்களில் மூழ்கி இருக்கும்போது அவர்களை தட்டி எழுப்ப தன்னுயிரையே நெருப்புக்கு தந்தாரே தியாகி முத்துகுமார் அவருடை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது ஆள் பிடிக்கும் வேலையா?

    ம.க.இ.க.வின் பேனர்கள் முத்துக்குமரை கௌரவபடுத்து விதமாகத்தான் வந்தன ஏனென்றால் ம.க.இ.க. எங்கும் ஓட்டு பிச்சைக்காக் எவனையும் ஆதரித்து பொறுக்கி திங்கவில்லை. அதனால் ம.க.இ.க.வின் பேனர்களால் முத்துக்குமரின் தியாகத்துக்கு பெருமையே!

    உழைக்கும் மக்கள் அதிகாரம் , சாதி, மதமற்ற அரசு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு ஆள் பிடித்தால் பெ.தி.கவிற்கு என்ன நஷ்டம் வந்துவிடபோகிறாது தந்தை பெரியாரின் கொள்கைக்கு அதில் என்ன மாற்று கருத்து உள்ளது. ம.க.இ.க.வை பார்ப்பன பண்டார பரதேசி கூட்டம் முக்கிய எதிரியாகவே அறிவித்துள்ளது (கடந்த வருடம் பயங்கரவாதி இராமகோபால்ன் அறிக்கை விட்டுள்ளான்) இப்போது நீங்களும் அதே போன்ற கருத்தை கூறியுள்ளிர்கள் இப்போது யார் அக்ரகார அடுப்படியி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.

    அதே போல் ‘ஆ ஊனா’ முத்துகுமார் ஊர்வலத்தி கலந்து கொண்டதை குற்றமாக சொல்லுகிறீர்களே நீங்கள் எதற்கு கலந்து கொண்டீர்கள் முத்துகுமார் என்ன பெ.தி.க மெம்பரா? உங்களுக்கு முத்துகுமார் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்கும் முக்கியம் என்னமோ தியாகி முத்துகுமாரை மொத்தமா குத்தகைக்கு எடுத்தது போல கதறுவதை இனி நிறுத்தி கொள்ளுங்கள் !

    மற்றபடி பழைய கதையெல்லம் வேண்டாம் இப்போது போய் ஈழத்தில் ஆயுதம் எடுத்து போராடுவேண்டியது தானே எந்த் மாமி தடுத்தாள்? வாய் கிழிய பேசி உங்கள் பிழைப்புவாதத்தை மறைக்கமுடியாது! ஏதொ பார்ப்பன எதிர்ப்பு போராட்ட்தையாவது செய்கிறார்களே என்று தான் பெரியார் திக மீது நேரடி விமர்சனம் செய்யாமல் தோழமை சக்தியாக
    நினைத்தோம் ஆனல் ஈழ பிரச்சன்யை சாக்காக வைத்து ஐய்யங்கார் மாமியிடம் சரணடைந்து விட்டபிறகு கடுமையான விமர்சனத்தை வைக்கிறோம்

    //துரோகம் செய்த தி.மு.கவை தண்டிக்க நமக்குக்கிடைத்த ஒரு எளிய எதிர்வினைதான் இந்த அ.தி.மு.க ஆதரவுநிலை. அவ்வளவுதான்//

    இது எவ்வளவு கேவலமான பிழைப்புவாதம் ,
    போரை நடத்துவதே இந்தியாதான் அப்படிபட்ட இந்தியாவை எதிர்த்து தேர்தலை புறக்க்ணித்திருக்கவேண்டும். கொடூர இந்தியா அரசை அம்பலபடுத்தியிருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு
    செயா மாமி காலி விழுந்துள்ளீர்கள்.

    சரி செயா ஆட்சியில் வாயை திறந்தாலே சிறை தான் , அதெல்லாம் மறந்துவிட்டதா?
    வரும் 5 வருடம் தமிழகத்தை செயா கையில் ஒப்படைக்க துணிந்த உங்களின் தமிழ்நாட்டு மக்களின் மீதான அக்கறை சிலிர்க்கவைக்கிறது.

    //ரன்வீர் சேனையை எதிர்த்து களம் காண்கிறோம், இதோ வருகிறது செம்பாதை, நேபாளத்தைப் பாரீர் என்றெல்லாம் அகில இந்தியம், அகில உலக தேசியம் பேசும் ம.க.இ.க தோழர்கள் ஈழச்சிக்கலுக்காக பீகாரில், ஜார்கண்ட்டில், சட்டீஸ்கரில், ஆந்திராவில் ஏதாவது ஒரு கண்டனக் கூட்டமாவது நடத்தினார்களா?
    படித்துறைப் பாண்டி கணக்கா நேபாளம் பற்றி பீலா விட்டுத் திரிகிறார்களே மகஇக வினர். அந்த நேபாளத்தில் ஈழத்தமிழினப் படுகொலையைக் கண்டித்து ஒரு போஸ்டராவது உண்டா? //

    ம.க.இகவினர் என்றைக்காவது பீகாரில், ஜார்கண்டில், ஆந்திரத்தில் செயல் படுகிறோம் என்று எப்போது சொன்னார்கள்
    ஆதார இருக்கிறதா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் அவதூறு என்று ஆன பின்பு பொய்யாவது மொய்யாவது…

    நேபாளத்தில் போஸ்டர் ஒட்டுவது என்ற விதண்டாவத
    கேள்வி எழுப்புகிறீர்களே பதிலுக்கு நாமும் தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைக்காக ஈழத்தில் போஸ்டர் ஒட்டினீர்களா என்று கேள்வி கேட்கமுடியும். ஆனால் அது அறிவு வளர்ச்சிக்கு உதவாது !

    ‘கட்டிலில் கவுந்தடிச்சு படுத்துகொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது”

    சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது…..

  2. விடுதலை Says:

    மேலே நான் வெளியிட்டுள்ள பின்னூட்டத்தை தோழர் மதிமாறன் தளத்தில் நேற்று வெளியிட்டிருந்தேன் அவர் ஏனோ வெளியிடவில்லை அதனால் இங்கு வெளியிட்டுள்ளேன்.

  3. செங்கொடி Says:

    நெருப்புக்கோழியைப்போல் த‌ங்களின் நிறம் வெளுக்கவில்லை என்று மணலில் தலைபுதைத்துக்கொள்கிறார்கள். பார்ப்பனீயத்தலைமை என்று உழுத்துப்போன அட்டைக்கத்தியை கொண்டு போருக்கு வருகிறார்கள். பதில் என்ற முறையிலலாவிடினும் அவர்களை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

  4. rudhran Says:

    keep writing, best wishes

  5. ஏகலைவன் Says:

    ///////////விடுதலை சொல்வதென்னவென்றால்:
    1:54 பிற்பகல் இல் ஏப்ரல் 24, 2009 | பதில்
    மேலே நான் வெளியிட்டுள்ள பின்னூட்டத்தை தோழர் மதிமாறன் தளத்தில் நேற்று வெளியிட்டிருந்தேன் அவர் ஏனோ வெளியிடவில்லை அதனால் இங்கு வெளியிட்டுள்ளேன்.////////////////

    தோழர் விடுதலை,

    தோழர் மதிமாறனுக்கு பெ.தி.க.விடம் வாங்கிக்கட்டிக்கொண்டது போதவில்லை என்று கருதுகிறேன். பின்னூட்டங்களை போடத் தயங்குகிற அவரது நிலையை வைத்து பார்த்தாலே எளிதில் புரிகிறது.

    ஜெயலலிதா, கருணாநிதி என்று ஓட்டுப்பொறுக்கிகளை மாறிமாறி தேர்தலுக்குத் தேர்தல் சொறிந்துவிட்டு(ஆனால் தேர்தலில் பங்கெடுக்காமல்…) பிழைப்புவாத அரசியல் நடத்தும் தி.க., பெ.தி.க., யோக்கியர்கள் தோழர் மதிமாறனைக் கேள்வி கேட்கும் அருகதையற்றவர்கள்.

    இவர்கள் அ.தி.முக. அணியை ஆதரிப்பது ஈழ நிலைப்பாடுகளிலிருந்து அல்ல. இவரது பங்காளியான வீரமணி கருணாநிதியை ஆதரிப்பதால் அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொள்ள வேண்டிய நிலையில்தான் இவர்கள் ஜெயாமாமியை ஆதரிக்கிறார்கள். இதற்கு பெரியாரியல் ரீதியிலான விளக்கமெல்லாம் கொடுத்துவருவது, நம்மையும் பெ.தி.க.வின் நேர்மையான ஊழியர்களையும் தோழர் மதிமாறன் போன்ற தீவிரமான ஆதரவாளர்களையும் ஏமாற்றத்தான்.

    ஈழத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு போர் குறித்து இந்து நாளேடு வெளியிடும் மோசடியான செய்திகளைக் கண்டித்து பெ.தி.க. தோழர்கள் கோவையிலும் ஈரோட்டிலும் போராட்டம் நடத்தியபோது, அந்த நியாயமான போராட்டத்தைக் கண்டித்து சி.பி.எம். என்கிற போலி கம்யூனிச நிறுவணத்தின் செய்தி ஏடான தீக்கதிர் தலையங்கம் எழுதி பெ.தி.க.வின் போராட்டத்தைக் கண்டித்தது.

    பார்ப்பனக் கொழுப்போடு ஈழம் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் சிங்கள அடிவருடிக் கூட்டமான இந்துராம், சோ, மதன் போன்றோருடைய கருத்தில் சிறிதும் பிறழாத பார்வை கொண்டவர்கள்தான் சி.பி.எம். என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இருப்பினும் பெ.தி.க.வின் ஈழ நிலைப்பாடும் கருணாநிதிக்கு மாற்றாக ஜெயாவையும் காங்கிரசின் துரோகத்துக்கு மாற்றாக பார்ப்பன பயங்கரவாத பா.ஜ.க.வையும் ஆதரித்து பெ.தி.க. செய்துவரும் பிரச்சாரங்களும் சி.பி.எம். கட்சியின் மோசடியான நிலைப்பாட்டைப் போன்றதுதான்.

    ம.க.இ.க.வின் பார்ப்பனிய / ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை கருத்து கூறுவதற்கும் விமர்சிப்பதற்கும் பெ.தி.க.வுக்கு உரிமை உண்டு. அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதினால்தான் கடைசியாக வெளிவந்த விடுதலை ராசேந்திரனின் அவதூறுகள் வரை அனைத்திற்கும் எமது தோழர்கள் கருத்தியல் ரீதியிலான எதிர்விணையைப் பதிந்து வருகின்றனர். அந்த பதில்கள் எதையும் முறையாகப் பரிசீலிக்காமல் அல்லது அறவே புறக்கணிக்கும் நடைமுறையோடு தொடர்ந்து தமது அவதூறுகளை பெ.தி.க. செய்துவருகிறது.

    நான் மேலே குறிப்பிட்டது போல ம.க.இ.க.வை விமர்சிக்க பெ.தி.க.வுக்கு உரிமையுண்டேயொழிய எமது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்குவதற்கு பெ.தி.க.விற்கு எந்த அருகதையுமில்லை. பார்ப்பன பயங்கரவாதிகளுல் முக்கியமானவரான ஜெயலலிதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு எமது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்ப ஏதேனும் தகுதியிருக்கிறதா என்று பெ.தி.க.வின் ஊழியர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். அதி அசுரன் போன்ற மண்டைவீங்கிகளின் அறிவு முதிர்ச்சியற்ற வெளிப்பாடுகளை தோழர் மதிமாறன் போன்றவர்கள் இனியாவது முறையாக மதிப்பிட்டு புரிந்துகொள்ளவேண்டும்.

    தோழர் மதிமாறனை விமர்சிக்க அதிஅசுரனுக்கோ அல்லது பெ.தி.க.வின் சார்பான வேறெவருக்கோ அருகதையில்லை என்பதை மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏகலைவன்.

  6. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் « கலகம் Says:

    […] நெருப்பும்,சுடுகிற கண்ணீரும் 8.தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங…         […]

  7. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் « கலகம் Says:

    […] நெருப்பும்,சுடுகிற கண்ணீரும் 8.தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங…         […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: