சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
…………………………………………………………………………………….
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்……………
http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/
சரணடை … சரணடைந்து விடு
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்……
உயிர் வாழ
ஒரே தீர்வு தான்
உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டு பொறுக்கிகள், தமிழர், தேர்தல் 2009, பு ஜ தொ மு, பு ம இ மு, பெவிமு, ம க இ க, விவிமு
12:31 முப இல் ஏப்ரல் 30, 2009 |
தூக்கத்திலேயே மரணம்:58 சிறுவர்கள் உட்பட 278 தமிழர்கள்
12:47 பிப இல் மே 3, 2009 |
தஞ்சை மே தின நிகழ்வில், ஓவியக் கண்காட்சியில் உங்களுடைய கருத்துப்படம்
ஒன்று இடம் பெற்றிருந்தது. சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.
10:37 முப இல் மே 4, 2009 |
தோழர்
அது கலகத்தின் படம் அல்ல,விடுதலை அவர்களுடையது.
http://vitudhalai.wordpress.com/