தேர்தல் புராணம் – 2009

தேர்தல் புராணம்  – 2009
பிடுங்கப்பட்ட மின்சாரம்
பியூஸ் போன தெருவிளக்கு
போடப்படாத சாலை
உடைந்துபோன பள்ளிக்கனவுகள்……

புதைக்குழிக்குள் விவசாயம்
பாலிடாலுக்கு தலையை
அடகு வைத்த விவசாயி
நெய்வதற்கு நூலில்லை
சொல்லுவதற்கு நெசவாளி
யென்ற பேரும் சொந்தம் இல்லை

இந்தியா முன்னேருகிறது
வசனங்கள் காதை கிழிக்க
இத்தாலி மருமவளும்
பஞ்சாப் வைப்பாட்டியும்
ஓட்டு கேக்க வருவார்கள் கைக்கு…….
சாதாரண கையா இது
நன்றாக பார்த்தால் தானே
தெரிகிறது காந்தியின்
பொக்’கை’

 
கண்ணன் வாயைதிறந்தால்
உலகமே தெரிந்ததாம்
அடேங்கப்பா
காந்தி வாய் திறந்தாலோ
அந்தக்கவலை காந்திக்கு வந்ததில்லை
எல்லாவற்றிக்கும் சிரிப்பு
அழகான புன்னகை

எப்படிப்பட்ட புன்னகை தெரியுமா
தாழ்த்தப்பட்டோரின் தோலினை
உரிக்க  உரிக்க -முசுலீம்களை
எரிக்க எரிக்க வந்த சிரிப்பல்லவா இது…..

காந்திக்கு பிறக்காவிட்டாலும்
தப்பாமல் காந்தியின் வாரிசாய்
மிளிர்ந்த அன்னை இந்திராவைத்தெரியுமா
என்ன செயலலிதா அவளின் ஆத்தாளே
இந்திராவுக்கு மல்லு கட்ட முடியுமா
மல்லு என்ன லுங்கியை தூக்கி
கட்டியவனுக்கெல்லாம் 3 கிலோ
அரிசி தந்து அறுத்து விட்ட கதை
சொன்னால்தான் தங்கபாலுவுக்கு தெரியுமா…

சீக்கியர் பிணத்தை தின்று
போராளிக்குழுக்களை ‘கை’யில்
வளைத்து சீன் காட்டி  சல்லடையாய்
நாயைப்போல குப்புறக்கிடந்த போது
ஆத்தா போலவே மகனும்
எது முன்
எது பின்
எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
கண்ட கண்ட நாயெல்லாம்
என் மேல் விழுந்து சாவுறாங்களே
என்று….

‘கை’கதை தெரியாதென
வருகிறார்களோ இல்லை
தெரிந்தால் தான் என்னவென
வருகிறார்களோ
மறவாதீர் வாக்காளரே
கைக்கு ஓட்டு போட்ட
உங்கள் கையை பத்திரமாய்
வைத்துக்கொள்ளுங்கள்
ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……

 
ஒருபக்கம் கை என்றால்
மறுபக்கம் தாமரை
மலரினும் மெல்லிய
ஆனால் தாமரை எவ்வளவு மெல்லியது
தெரியுமா குஜராத்தில் கர்ப்பிணியின்
வயிற்றை கிழித்து சிசுவை அறுத்த
அதன் இதழ்களின் மென்மையை
பண்டாரப்பரதேசியெல்லாம்
வாய்மணக்க பாடுதே

சேற்றில் முளைத்த செந்தாமரை தெரியும்
அது என்ன பாரத மாதாவின் தாமரை
இது முளைக்க ரத்தசேறுதான் வேண்டும்
அதுவும் முசுலீம் ரத்தமென்றால் அலாதிபிரியம்
மாதாவின் ஒருகையில்
தாமரை மறுகையிலோ சூலம்
சாதா சூலமல்ல
ஸ்பெஷல் திரிசூலம்
முசுலீம் கிருத்துவன் கடைசியாய்
உழைக்கும் இந்துவென எல்லோருக்கும் வரிசையாய்
இருக்கிறது ஆப்பு…..

 

இலவசம்
இலவசம்  இலவசம்  எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்
சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..
நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா – ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
யாரிடமும் சொல்லாதீர்கள்
பிரசவத்திற்கு இலவசமென
ஓசியாய் ரிக்சாவில்
கூட்டிவந்த பெரியார் தி க
வாரிசுகளோ ஓரமாய் உட்கார்ந்து
விம்மி விம்மி அழ – மணியரசன் நெடுமாறனெல்லாம்
மருமகன் பொறந்ததுக்கு
குத்தாட்டம் போட
கதை கேட்டவர் என்னை திருப்பி கேட்டார்
ஏப்பா மொட்டத்தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுற?

எது மொட்டை? எது முழங்கால்?
காந்தி மொட்டை ராஜபக்ஷே முழங்காலா?

தெளிவாய் விளக்கினேன்
” காங்கிரசு, பிஜேபி,பாமக,
வி.சி,திமுக,ம்திமுக,அதிமுக,
சிபிஎம்,சிபிஐ,ஆயிரம் பேர் வந்தாலும்
எல்லாவற்றிற்கும் ஆன்மாவும் ஒன்றுதான்
உயிரும் ஒன்றுதான்
அதுதான் அகிம்சை
அதுதான் காந்தி

 
காந்திகள் சிரித்துக்கொண்டிருக்கும் வரை
மக்களின் பிணங்கள்
எரிந்து கொண்டே இருக்கும்
தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்

 

“என்ன இருந்தாலும் ஓட்டு போடாம
இருக்க முடியுமா” கோபம் கொப்பளித்தார்

 
நான் பொறுமையாய் சொன்னேன்
பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “தேர்தல் புராணம் – 2009”

  1. கலகக்காரன் Says:

    //நான் பொறுமையாய் சொன்னேன்
    பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
    ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
    தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.//

    செருப்படி…….. உயிருள்ள முண்டங்கள் பதில் சொல்லுமா?

  2. செங்கொடி Says:

    “கண்ட கண்ட நாயெல்லாம்
    என் மேல் விழுந்து சாவுறாங்களே”
    உருவகங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறீர்கள்.
    காற்றும் இவர்களை விட்டுவிலகி வீசவேண்டும்.
    ஜனநாயக உரிமை என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள் ஆனால் ஜனநாயகம் என்பதன் பொருள்தான் யாருக்கும் புரியவில்லை.

    தோழமையுடன்
    செங்கொடி

  3. பாலா Says:

    வணக்கம்,

    இன்று தான் வே.மதிமாறன் தளம் மூலமாக உங்களை அறிந்தேன்,
    நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல அரசியல் கவிதை படித்தேன்.
    நன்று/நன்றி.

    பாலா-சிங்கப்பூர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: