ஈழப்பிணங்கள்

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

raja _b copy

 

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில்  இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது  நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும்,  தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல  செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று  , தின்று  எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என  தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும்  ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்”  என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு  நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும்  முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு  அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும்  என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது  இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.

காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே.  இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும்  செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை  நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது,  அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த  மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும்  மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக  பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய்  அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
 
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து  விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது  தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின்  இந்தப்பிரச்சாரம் எதற்காக?  கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும்  அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது  வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது.  குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-

தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில்  ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும்  தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம்  பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார்.  ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி  தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
 
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?

 நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த  உங்களை என்னவென்று
சொல்வது?
 
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது  இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார்  வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
 கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும்  எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும்  மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

4 பதில்கள் to “ஈழப்பிணங்கள்”

  1. mahendran Says:

    இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

  2. babu Says:

    Nambungal tamil eelam naalai malarum.
    I still believe the above. We are crying now but one day they all have to pay the price for what they did to us.

    Naaikalum narikalum pinam thinnum kaattile, maankalum mayilkalum nadanamada idamilai.

  3. செங்கொடி Says:

    பிரபாகரன் மரணத்தைவிட அங்குள்ள மக்களை அடுத்த கட்ட போராட்டத்திற்காக நகர்த்த வேண்டியது முக்கியமானது. இல்லையேல் துரோக குழுக்கள் களமிறக்கப்பட்டு மக்களின் போராட்ட உணர்வுகள் தவறான திசையில் இழுத்துச்செல்லப்பட வாய்ப்பிருக்கிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

  4. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் « கலகம் Says:

    […] !! 2.வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் 3.ஈழப்பிணங்கள்-சுடுகாட்டில் அமைதியைத… 4.ஈழத்தின் மீதான இந்தியாவின் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: