ஈழவியாபாரம் – விலைபோகும் சதைப்பிண்டங்கள்

ஈழவியாபாரம்
விலைபோகும் சதைப்பிண்டங்கள்

 

ஆர்குட்டில்  பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை.அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.என்னடா எல்லோரும் (அதுவும்  ஆர்குட்டில்தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=5rB-atZH_-Y&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Eco%2Ei

n%2FFavoriteVideoView%2Easpx%3Frl%3Das%26uid%3D3250078639754726720%26ad%3D124

1747530%26uit%3D%2FHome%2Easpx&feature=player_embedded
யார் அடுத்த பிரபுதேவா என்ற விஜய் டீவியின் நடனப்போட்டி அதில் பல சுற்றுக்களில் வெற்றிபெற்ற ஈழத்தினை சேர்ந்த தமிழர் ஒருவர் பெயர் பிரேம் கோபால்  ஈழமக்கள் படும் இன்னல்களை  மாத்தி யோசி என்ற சுற்றில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற  திரைப்பட பாடல் மூலம் வெளிப்படுத்த…………..
விருந்தினர்பலரும் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியதாக சொன்னார்களே தவிர நடக்கும் போர் சரியா ? யார் நடத்துவது ? யார் எதிரி என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
நிகழ்ச்சியின் விருந்தினர்கள் அப்படியே உணர்வு பூர்வமாகிவிட்டது போல தொகுப்பாளர் சொன்னார்”

ஈழத்தினை சேர்ந்தவர்கள்” எங்கள் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் அகதிகள் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீ£ங்கள்  தான் ஏதாவது செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்” .   நிகழ்ச்சிமுடியும் தருவாயில்  பேக்கிரவுண்டில் குரல் ஒலிக்கிறது ” நம் நேச உறவுகளுக்கு அமைதி கிடைக்குமா விடைதெரியாத கேள்விக்கு காத்திருக்கிறார் பிரேம் கோபால்.” பின்னர் அடுத்த நடனப்போட்டியின் சிறப்பினை குறித்து பேசுகிறது.
பிரேம் கோபால் ஈழத்தமிழரின் உணர்வும், கண்ணீர்விட்டு   அழுத அந்த பெண்களின்   உணர்வுகளும் எப்படி விஜய்டீவியில் ஒளிபரப்பப்ட்டன? கலை என்பது மக்களுக்காகத்தான்.மக்களை தவிர , மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை விடுதலைக்கான கலையை வளர்க்க வேண்டும்.

நான் பார்த்த வீடியோவில் இருந்தவரை பிரேம் கோபாலின் நடிப்பில் அந்த நடன நிகழ்ச்சியில்ஈழமக்களுக்கு யார் எதிரி என்றோ அல்லது எதுதான் இதற்கு காரணம் என்றோஒளிபரப்பப்படவில்லை.அதுதான் விஜய் டீவியை ஒளிபரப்பவைத்தது.

 

அதே பு.மா.இ.மு நடத்திய நாடகங்களோ அல்லது இந்திய அரசினை திரை கிழிக்கும் நாடகங்களோஆவணப்படமோ விஜய் டீவியில்மட்டுமல்ல அய்யாவின் மக்கள் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பவாய்ப்பில்லை, காரணம் இப்போர் முதலாளிகள் தங்கள் நலனுக்காக ஓட்டு பொறுக்கிகளின் சேவையோடுநடை பெறுவது.

முதலாளிகளின் சொத்து பிரிப்புக்காக நடத்தப்படும் இந்த ஈழப்போரினை ஏதோ போர் நடக்கிறது, எதனால் எனத்தெரியாது ? அங்கு அமைதி வேண்டும் எனகூறுவது எப்படி சரியாக இருக்கும். யார் எதிரி என்பதை அறியாமல்  எப்படி?  எதை நிறுத்தப்போகிறோம்?

“உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஒரு தமிழன் உயிரயாவது காப்பாத்துங்க்” என்று அந்த கண்ணீர்விடும் பெண்களின் கேள்விகள் நம்மை சுட்டெரித்தாலும் அவை முழுமை பெறாத நிகழ்ச்சியாகவே இருக்கிறது.

“எங்கள் மக்களை காப்பாத்துங்க” அங்கே ஒலிக்கப்பட்ட அக்குரல்கள் பார்ப்போருக்கு  கண்ணீரைவரவழைத்தாலும் விஜய் டீவிக்கு பணத்தை வரவழைத்திருக்கும்.  அது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுஆனால் தொலைக்காட்சிக்கோ தன்னை வளர்க்க ஒரு வித்யாசம் தேவைப்படுகின்றது.  இப்போது மக்களின் அழுகையும் சரக்குதானே.

மக்களை பைத்தியக்காரனாக்கி ஆண் பெண் வேடமிட்டு ஆடுவதும், பெண் ஆண் வேடமிட்டு கொண்டு கணவன்  மனைவி சகிதமாக கூத்தாடுவதற்கும் , ” அம்மாடி ஆத்தாடி”  என மகன் ஆடுவதை பார்த்து கண்ணீர் விடும் ஒரு பெண்ணின் கண்ணீரும் இந்த ஈழப்பெண்ணின் கண்ணீரும்  இங்கு முதலாளிக்கு ஒரே சரக்குதான்.

ஒவ்வொரு காலச்சூழலுக்கும்  ஏற்றவாறு  தன் பொருளை விற்பதற்கு ஒரு வாய்ப்புதேவைப்படுகின்றது,இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ஈழப்பிணங்கள் சரக்காகி விட்டன. மக்களின்அழுகைகள் விலையேற்ற காரணிகளாகிவிட்டன.

 ஒரு முதலாளி எதையும் , எல்லாவற்றையும் பண்டமாக்குவது போல இப்போது ஈழத்தின் கண்ணீரையும் பண்டமாக்கிவிட்டான். தன்னுடைய ரேட்டிங் ஏறுவதற்கான தூண்டுகோள் தற்போது ஈழம். பாலஸ்தீனத்தின் மீது குதறும் இசுரேலை எதிர்க்காது பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும் என முழக்கமிடுவது எவ்வாறு துரோகத்தனமோ அதைவிட ஈழத்தின் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லாது  இன்னல்களைமட்டும் காட்டி எதிரியை சுட்டாத எந்த ஒரு நிகழ்வும் மக்களுக்கு துரோகமானதே.

 

——————————————————————————————————————-
ஈழமக்களின் பிணத்தினை விற்கும் முன்னணியாளர் என்றால் அது ராமதாஸ்தான். அவருக்குத்தான் அதில்ஏகபோக உரிமை.  விஜய் டீவி மக்களின் இன்னல்களை காசு பொருக்க பயன்படுத்தியதோ அது போலஈழமக்களின் பிணத்தினை காட்டி காட்டி மக்கள் தொலைக்காட்சியில்  ஓட்டு பொறுக்கினார் ராமதாஸ்.

தேர்தல்   நாளன்று தொடர்ந்து ஒளிபரப்பியும் அதற்கு முன்னர்கூட மக்களின் பிணங்களை காட்டி ஓட்டு போடுங்கள்  ஓட்டு போடுங்கள்  அம்மாவுக்கு அவர் வந்தது தன் சுருக்குப்பையினை திறந்து ஈழத்தினைதருவார் என் கூப்பாடு போட்டார். சாதாஅம்மாவை ஈழத்தம்மாவாக்கி ஒவ்வொரு ஈழத்தமிழனின்இன்னலுக்கு தாயின் சுருக்குப்பையில் தீர்விருப்பதாக தெரிவித்தார்.
 
நேற்று வரை பாப்பாத்தியாக, ஈழமக்களின் துரோகியாக விளிக்கப்பட்டவர் இன்று ஈழத்தாயாகபரிணமிக்கிறார் எனில் அதை ஏற்றோ ஏற்காமலோ மக்கள் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் பெரும்பான்மை மக்கள் பார்வையாளராகத்தான் இருக்கிறார்கள். கேட்கும்கேள்விகளுக்கு அவர்களிடம் வெற்றுக்கண்ணீரே பதிலாய் அமைகிறது.
 அதனால் தான் ஈழத்தில் போரும் மக்களின் பிணங்களை வைத்து வியாபாரமும் நடக்கிறது. மக்கள் பார்வையாளர் அந்தஸ்திலிருந்து  போராளிகள் பதவிக்கு பரிணாம வளர்ச்சி யடையும் போது ஈழத்தில் போரை நடத்தும் தரகு முதலாளிகளும்,மக்களின் துயரங்களை முதலீடாக்கும் ஓட்டு பொறுக்கிகளும் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவார்கள்.
 
முதலாளிகளுக்கும் இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கும் ஈழம் கிடைத்தாலும் அது லாபம் கிடைக்காவிட்டாலும் அந்த இன்னல்களைவைத்து கல்லா கட்டிவிடலாம்,ஓட்டு பொறுக்கலாம். ஆனால் போராட்டம் தான்வெற்றியைத்தரும்.கல்லாக்கள் உடைக்கப்படும் போது விடுதலைதானாய் விடுதலை ஆகும்.

குறிச்சொற்கள்: , , , ,

5 பதில்கள் to “ஈழவியாபாரம் – விலைபோகும் சதைப்பிண்டங்கள்”

 1. செங்கொடி Says:

  மக்கள் சாகிறார்கள் என்பதற்க்கு மேல் ஈழத்தை பார்ப்பதற்கு கவனமாக மறுக்கிறார்கள். தமது ஓட்டு வங்கிகளுக்கும் அப்படி ஒரு புரிதல் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் தங்கள் தொலைக்காட்சிகளில் சோக ராகமாகவே ஈழத்தை காட்சிப்படுத்துகிறார்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 2. rudhran Says:

  ஈழம் பற்றி நானும் அவ்வப்போது எழுதியதும் இந்த வகை தானோ என்று யோசிக்கத்தோன்றுகிறது

 3. மரண அடி Says:

  மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு தாங்கள் ஈழத்தைப் பற்றி எழுதியவை ஈழமக்கள் மீதான பச்ைச படுெகாைலைைய பற்றிய அக்கறை ஆதங்கம் சம்பந்தப் பட்டது, ஆனால் மீடியாக்கள் எனப்படும் இந்த ெபாறுக்கி நாய்கள்
  எழவு வீட்டில் காசு ெபாறுக்கும் ஈனத்தனத்ைத ெசய்கின்றன,
  இவர்க ேளாடு உங்களை ஒப்பிடுவது தவறானது,

 4. arivudan Says:

  ஈழம் என்பதே ஒட்டுமொத்தத்தில் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றம் பெற்று ஏறத்தாழ இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்டன். அதிஷ்டவசமாக இப்போதாவது அது தொடர்பான விழிப்புணர்வு மேலோங்கி வருகிறது.

 5. துரோகி Says:

  அனைத்து ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கும் ம க இ க soc என்பது சீனாவின் கைக்கூலிகள். மக்களை குழப்புவது ம க இக என்று. அதனால்தான். புலிகளை பாசிஸ்டுகள் என்ற ம க இ க soc இப்போது என்ன சொலிகிறார்கள். ஈழத்தினை விளம்பரப்பொருளாக்கிய்வர்களில் முதலிடம் ம க இ க விற்கே,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: