மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

நக்சல்பரியில் துரோகியாய் உருமாறி நந்திகிராமில் பாசிஸ்டாய் பல்லளித்து
அதையும் தாண்டிய பரிணாம வளர்ச்சிக்கு படையெடுத்து மக்களையே இரையாய் தின்னும் போலிகளை  பற்றிய சில கருத்து படங்கள்…

வீரஞ்செறிந்த  லால்கார் மக்களுக்கு செவ்வணக்கம் !

போலிகம்யூனிஸ்டுகளை தனிமைப்படுத்துவோம்!!

வெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

இனியும் போலிகளில் களையெடுக்கப்போவதாய் சொல்லிக்கொண்டிருக்கும்  போலிகளின் புரட்சிகர அணிகளே பதில் சொல்லுங்கள்.புரட்சியை எப்படி செய்வது? இப்படி விவசாயிகளை, உழைக்கும் மக்களை கொன்றபடி புரட்சி செய்யும்  போலிகளிலிருந்து வெளியேறாதவரை நீங்கள் எப்படி தோழராய் இருப்பீர்கள்.

துரோகிக்கு , பாசிஸ்டுக்கு தோழனெனில்
எப்படி உழைக்கும் மக்களுக்கும் தோழன் ?.

வழி இரண்டு தான் ஒன்று நியாயமாய் பதில் சொல்லுங்கள், இல்லையேல் நீங்களும் பாசிஸ்டாய் பரிணமிப்பதை தவிர வேறு வழி இல்லவே இல்லை. இனியும் நீங்கள் காக்கும்  அமைதி உழைக்கும் மக்களின்  சுடுகாட்டுக்கானதே.

குறிச்சொற்கள்: , , , , , , , ,

29 பதில்கள் to “மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி”

 1. கணேஷ் Says:

  போலிக்கலகக்காரருக்கு,

  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மம்தாயிஸ்ட் என்ற பெயர் மாற்றத்திற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

  நாங்கள் நந்திகிராமத்தில் ஊழியம் செய்தோமே… அம்மா… மம்தாம்மா… உங்கள் பார்வை எங்கள் பக்கம் திரும்பாதோ.. என்று கெஞ்சுகிறார் கிஷன்ஜி. அதுவும் முகத்தை மூடிக்கொண்டு. மம்தாம்மாதான் முகம். அதனால் தனியாக முகத்தைக் காட்டத் தேவையில்லை.

  கலகத்தின் விஷமத்தனத்தில் தன்னையறியாமலேயே ஒரு உண்மை பொத்துக் கொண்டு வந்து விழுகிறது.

  துரோகிக்கு, பாசிஸ்டுக்கு தோழனெனில்
  எப்படி உழைக்கும் மக்களுக்கும் தோழன்?

  நியாயமான கேள்விதானே…??

  காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி உங்களுக்கு தோழி என்றால், நீங்கள் எப்படி உழைக்கும் மக்களுக்கு தோழனாக முடியும்…??

  வழி ஒன்றுதான். போலி கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகளை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை….

  கணேஷ்

 2. கணேஷ் Says:

  மம்தாயிஸ்டுகளைத் தோலுரித்துள்ளது தீக்கதிர். ஜூன் 23 ஆம் தேதி நாளிதழில் எட்டாம் பக்க சிறப்புச் செய்தி அபாரம்…

 3. கலகக்காரன் Says:

  தேர்தலில் ஓட்டுப் பொறுக்க, ஜெயாமாமிக்கு சேலையை துவைப்பதும், கருணாநிதி மாமாவுக்கு வேட்டியை துவைப்பதும் என்று தமிழகத்தில் சாக்கடைப் புழுவாக உலாவும் சிபிஎம், சிபிஐ தாங்கிப் பிடிக்கும் கணேசா…,

  உனது கட்சி சிக்கிமில் பிஜேபி, காங்கிரசு உடன் கூட்டுச் சேர்ந்து சிக்கிம் ஜனநாயக முன்னணியை தோற்கடிக்க போராடியது வர்க்கப் போராட்டம் என்பதை தீக்கதிரை தினமும் மூன்று வேளை தின்கும் கழுதை கூட நம்பாது.

  இந்த பிழைப்புவாத, பித்தலாட்ட பாசிஸ்டு பன்றிகள்தான் ஒரு நியாயமான மக்கள் போராட்டத்திற்கு எதிரிகளிடையே இருக்கும் பிளவை பயன்படுத்தும் முகமாக மம்தாவின் ஆதரவை கோருவதை பேசுகிறார்கள்.

  உன்னிடம் யோக்கியாம்சம் ஒரு துளி அளவாவது இருக்கிறது எனில் நியாயமாக லால்கர் பிரச்சினை என்னவென்று பேசியிருக்க வேண்டும், ஆனால் அதை செய்ய துப்பில்லை உனக்கும், உன் கட்சி மாமாக்களுக்கும்.

  மாறாக, மம்தாவின் சேலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஜிண்டாலுக்கு நீயும், உன் தலைமையும் செய்யும் கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலையை நியாயப்படுத்துகிறாய்.

  இந்த பிழைப்புக்கு ஒரு சட்டி மோத்திரம் குடிக்கலாம்.

 4. கலகக்காரன் Says:

  நீ சொல்லுவது படி பார்த்தால் அதாவது சிபிஐ மம்தாயிஸ்டு என்று பேர் வைக்க வேண்டும் எனில், உனது கட்சிக்கு சிபிஐ அம்மாயிஸ்டு, சிபிஐ மஞ்சுதுண்டுயிஸ்டு, சிபிஐபினராய் விஜயன் ஊழலிஸ்டு, சிபிஐ நந்திகிராம் நக்கியிஸ்டு, சிபிஐ டாடாயிஸ்டு, சிபிஐ ஜிண்டாலிஸ்டு, சிபிஐ லங்காயிஸ்டு, சிபிஐ ஜாதியிஸ்டு, சிபிஐ பார்பானிஸ்டு, சிபிஐ இந்துத்துவாயிஸ்டு, சிபிஐ மூன்றாவது முண்டமிஸ்டு என்று பல பெயர் ஏரியாவுக்கு ஏரியா வைக்க வேண்டும்..

  உனது தரப்பை நியாயப்படுத்தவோ, அல்லது வாதம் செய்யவோ மார்க்ஸிய ரீதியாவும் சரி, பொது புத்தி அடிப்படையிலும் சரி ஒன்றும் இல்லை என்பதால்தான் வாரமலர் பாணி(அல்லது தீக்கதிர் பாணி) புரளி, கிசுகிசு அவதூறு பேச்சில் இறங்கியுள்ளாய்.

  மக்களை கூட்டிக் கொடுக்க நீ டாடாவுடன் கூட்டுச் சேரும் போது, அதனை எதிர்ப்பதற்காக மாவோயிஸ்டுகள் மம்தாவுடன் கூட்டு சேர்வதில் உனக்கு எங்கே வலிக்கிறது…?

  டாடாவும், காங்கிரசும், சிபிஎம்மும், பாஜகாவும் இந்திய சின்னதில் குண்டியை ஒட்ட வைத்து உட்கார்ந்திருக்கும் நான்கு சிங்கங்கள் போல் அல்லவா? எந்த குண்டியில் அடித்தாலும், சிபிஎம்க்கு வலிக்கத்தான் செய்யும்.

 5. கணேஷ் Says:

  மம்தாயிஸ்டுக்கு,

  ஜெயா மாமி, கருணாநிதி மாமால்லாம் ஏற்கெனவே நீங்க வாந்தி எடுத்த விஷயங்கள்தானே…. லேட்டஸ்ட் ஹிட் கிஷன்ஜி கெஞ்சல் பத்தி ஒண்ணும் சொல்லலையே… அம்பலமாகி விடுவோம் என்ற பயமா… சிபிஎம் உத்திதான் தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே… இதில்தான் கிஷன்ஜியின் உத்தி உதைக்கிறது.

  காங்கிரசோடு சேர்ந்து எல்லாம் சிபிஎம் போராடுவதால் அதை பாசிஸ்டு என்று முத்திரை குத்தும் கலகம், காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் அமர்த்து அதில் பங்கையும் கேட்டு வாங்கியிருக்கும் மம்தா பானர்ஜி முன் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறாரே கிஷன்ஜி… அதைப்பற்றி ஏன் பேச மாட்டேனென்கிறீர்கள்…
  சிபிஎம் செய்தால் பாசிஸ்டு… நீங்கள் செய்தால் மக்களிஸ்டா…??

  டாடாவுக்கு எதிராக அவருடைய எதிரிகள் அளித்த பணத்தில் கொழித்த மம்தாவும், மாவோயிஸ்டுகளும் எதை வேண்டுமானாலும் “குடித்துக்” கொள்ளட்டும். மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்…

 6. கலகக்காரன் Says:

  திரிபுவாதின்னு உங்க ஆளுங்களுக்கு ஆரம்புத்துல பேரு வைச்சது சரிதான்யா….

  //மக்களை கூட்டிக் கொடுக்க நீ டாடாவுடன் கூட்டுச் சேரும் போது, அதனை எதிர்ப்பதற்காக மாவோயிஸ்டுகள் மம்தாவுடன் கூட்டு சேர்வதில் உனக்கு எங்கே வலிக்கிறது…?//

  //இந்த பிழைப்புவாத, பித்தலாட்ட பாசிஸ்டு பன்றிகள்தான் ஒரு நியாயமான மக்கள் போராட்டத்திற்கு எதிரிகளிடையே இருக்கும் பிளவை பயன்படுத்தும் முகமாக மம்தாவின் ஆதரவை கோருவதை பேசுகிறார்கள்.

  உன்னிடம் யோக்கியாம்சம் ஒரு துளி அளவாவது இருக்கிறது எனில் நியாயமாக லால்கர் பிரச்சினை என்னவென்று பேசியிருக்க வேண்டும், ஆனால் அதை செய்ய துப்பில்லை உனக்கும், உன் கட்சி மாமாக்களுக்கும்.

  மாறாக, மம்தாவின் சேலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஜிண்டாலுக்கு நீயும், உன் தலைமையும் செய்யும் கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலையை நியாயப்படுத்துகிறாய்.//

  கனேசா, உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா?

 7. kalagam Says:

  ஏனுங்கோ,

  அவுரு கோயம்புத்தூருதானுங்கோ. நல்லா தமிழ் தெரியுமுங்கோ.

  கன்று குட்டி கணேசுக்கு,

  ரொம்ப சந்தோசம் தீக்கதிருல லேட்டஸ்ட் சினிமா நியூஸ் என்ன? அப்புறம் பாகிஸ்தான் ஜெயிச்சுடுச்சாம்? நீங்கதான் உள் நாட்டு கோல்கைக்கு எதிர்ப்பும் , வெளி நாட்டு கொள்கைக்கும் ஆதரவும் காட்டு வீங்களே? பட்டாசு வெடிச்சாச்சா? காம்ஸ் எல்லாத்துக்கும் முட்டாய் வாங்கி கொடுத்தாச்சா?

 8. கணேஷ் Says:

  என்ன… வலிக்கிறதா… ஆஹா… பிளவு ஏற்படுத்த முயற்சியாம்.. ஏன், மம்தாம்மாவை உங்க அமைப்போட பொதுச் செயலாளராக்கிடலாமே… யாரும் பிரிக்க முடியாத உறவு பொங்கிருமே…

  நீர் என்னவோ, லால்கரில் நடப்பதைப் பக்கம் பக்கமாக எழுதிவிட்டு அக்கடா..வென்று உட்கார்ந்திருப்பதைப் போலல்லவோ பேசுகிறீர்… சும்மா லாவணிதானே பாடியுள்ளீர். எனது பிளாக்குக்கு வந்துபோனதுபோல் தெரிகிறது. லாவலின் பிரச்சனை, மாவோயிஸ்டுகளின் சுரண்டல் என்று எழுதியிருக்கிறேனே… எனக்கு எளிமையான தமிழ்தான் தெரியும். அதனால் உமக்கு நிச்சயம் புரியும்…

 9. கலகக்காரன் Says:

  //நீர் என்னவோ, லால்கரில் நடப்பதைப் பக்கம் பக்கமாக எழுதிவிட்டு அக்கடா..வென்று உட்கார்ந்திருப்பதைப் போலல்லவோ பேசுகிறீர்… சும்மா லாவணிதானே பாடியுள்ளீர்.//

  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5717:2009-05-07-20-28-39&catid=278:2009&Itemid=27

  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4602:2008-12-13-07-36-42&catid=68:2008&Itemid=27

  லால்கர் குறித்து எமது தோழர்கள் எழுதியது.

 10. கலகக்காரன் Says:

  //லாவலின் பிரச்சனை, மாவோயிஸ்டுகளின் சுரண்டல் என்று எழுதியிருக்கிறேனே…//

  தம்பி கணேசு உனக்கு தமிழ் தெரிந்திருக்கலாம்.. ஆனால் புரிகிறதா என்று தெரியவில்லை. இந்த் பதிவில் பேசப்பட்டுள்ள விசயம் லால்கர். அது குறித்து இன்ன வரைக்கும் ஒரு விவரம், கருத்து, விளக்கம் கொடுக்காமல் மம்தா சேலைக்கு பின்னாடி ஒளிவதிலேயே குறியாய் இருக்கிறாராயே அந்த மொள்ளமாறித்தனம்தான் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  ஒருவேளை மத்தியிலும், தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் முறையே சோனியா, செயலலிதா, மம்தா சேலைக்கு பின்னாடி ஒளிந்த உங்களது கட்சியின் பாரம்பரியம் இங்கும் அவ்வாறு செய்ய தூண்டுகிறதோ?

 11. kalagam Says:

  இந்த பாசிஸ்டுகள் தரகு முதலாளிகளுக்கு முன் மண்டியிடுவதை பெருமையாகவே கருதுவர். மாறாக சந்தால் பழங்குடியினர் மத்தியில் மண்டியிட்டது அவர்களுக்கு மாபெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கும்.

  அய்யா கணேஷ்,

  ஒரே ஒரு கேள்வி எப்படி புரட்சி சாத்தியம்

  மக்கள் பாதையிலா அல்லது நாடாளுமன்ற பன்றித்தொழுவத்திலா?

  1. யோசித்து பாருங்கள் உங்கள் தோழர் லீலாவதியை கொன்ற திமுகவுடன் கூட்டணி என்றீர்கள்?

  2.ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொருவரோடு கூட்டணி அமைத்து பாட்டாளி வர்க்கத்தை வர்த்தீர்களா?

  3. பார்ப்பன பாரதீய சனதா கட்சியின் பி எம் எஸ் தொழிற்சங்கம் குறித்து தங்கள் கருத்து என்ன?

  4.நந்திகிராமில் பாலியல் ரீதியில் ,மக்களை மாக்ஸிஸ்டு குண்டர்கள் தாக்கவில்லை என்கிறீர்களா?

  5.உங்கள் கூற்று படியே மாவோயிஸ்டுகள் தூண்டி விட்டார்கள் எனில் பழங்குடியின மக்களுக்கு நிலத்துக்கான தொகை தரப்படவில்லைதானே ஏன் தரவில்லை ? அது சரியா தவறா?

  தீக்கதிரில் வேலை பார்க்கும் மாண்புமுகு சிபிஎம் தோலர் கணேசு அவர்கள் பதில் சொல்லுங்கள்.

  விவாதிப்பதன் மூலம் தனே உண்மை நிலவரம் அறிய முடியும். அதை விட்டு விட்டு கருணாவுக்கும், செயாவுக்கும் எப்படியெல்லாம் சோப்பு போடுவதென்று குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு அலையாதீர்கள்.

  கலகம்

 12. கணேஷ் Says:

  முதலில் உங்கள் அகங்காரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்… முதலில் உனக்கு தமிழ் தெரியுமா… தெரியாதா… என்று கேட்கிறீர்கள். அப்புறம் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்கள்… தம்பி கணேசு உனக்கு தமிழ் தெரிந்திருக்கலாம். ஆனால் புரிகிறதா என்று தெரியவில்லை… தாழ்வு மனப்பான்மையால் மனதைப் போட்டு உழட்டிக் கொள்பவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள்… நாம் இருவரும் தமிழில்தானே பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். என்னை விட உங்களுக்கு அதிகமான தமிழ் வார்த்தைகளைப் புழக்கத்தில் விடும் திறன் இருக்கலாம். அதற்காக என் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, காதில் ——– போவதற்கு அனுமதிக்க மாட்டேன்.

  ஒரே ஒரு கேள்வி என்று கேட்டுவிட்டு அடுக்கி இருக்கிறீர்களே…
  மக்கள் பாதையில்தான் புரட்சி சாத்தியம். அதில் சந்தேகமே இல்லை. மக்கள் பாதை புரட்சிக்கு லாயக்கற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி எங்குமே சொல்லவில்லை. அந்தப் பாதையில் மக்களைத் திரட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் கட்சியின் உத்தி. உளுத்துப் போன இந்தக் கேள்விகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதால்தான் 1967ல் வெளியேறிய பலர் இந்த உத்திக்கு திரும்பி விட்டார்கள். அவர்கள்தான் இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியவர்கள். உத்தியை ஒப்புக் கொண்டவர்களுக்கு கட்சியை ஒப்புக்கொள்ள தயக்கமாகத்தான் இருக்கிறது. இவர்கள் பல குழுக்களாக இயங்கி வருகிறார்கள். அதில் சி.பி.எம்(எம்.எல்)(எல்) என்பது மிகப்பெரிய இயக்கமாக உள்ளது.

  1 மற்றும் 2 : உங்களின் முதலிரண்டு கேள்விக்கான பதில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். திமுகவுடன் தொகுதி உடன்பாடு என்பது பொது எதிரியை வீழ்த்தவே. பாட்டாளி வர்க்கத்தை வளர்த்திருக்கிறோமா, இல்லையா என்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் பக்கம் திரண்டுள்ள வெகுஜனத்தின் எண்ணிக்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அது சரி… நாடாளுமன்றம் பன்றித்தொழுவம் என்பதை இந்த நாட்டில் எவ்வளவு பேர் ஏற்றுக்கொண்டார்கள்…??

  3. பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை, அதன்கீழ் உள்ள தொழிலாளர்களை, தொழிலாளர்களாகவே பார்க்கிறோம். அதன் தலைமை மதவெறி பிடித்ததுதான் என்பதில் சந்தேகமேயில்லை. அந்தத் தொழிலாளர்களை மதவெறித்தலைமையிடமிருந்து பிரிப்பதற்கான வேலைகளில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபட வேண்டும்.

  4. கேள்வியிலேயே வன்மம்… மார்க்சிஸ்டு குண்டர்கள் என்ற சித்தரிப்பு. அத்தகைய தாக்குதல்களை மார்க்சிஸ்டு தொண்டர்கள் செய்யவில்லை.

  5. பழங்குடியின மக்களுக்கு நிலத்துக்கான தொகை தரப்படவில்லைதானே.. ஏன் தரவில்லை? என்கிறீர்களே, இது எந்த மாவட்டத்தில், எப்போது கையகப்படுத்தப்பட்டது என்று சொல்லுங்கள்… நான்காவது கேள்விக்கு அடுத்ததாக வந்துள்ளதால், நந்திகிராமத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால் அங்கு நிலம் கையகப்படுத்தப்படவேயில்லையே…

  தீக்கதிரைத் தொடர்ந்து படியுங்கள். எங்கள் தோழர்கள் லால்கர் பற்றி நிறைய எழுதுகிறார்கள். அந்தப் பகுதிக்கே சென்று விலாவாரியாக எழுதிக்கொண்டிருக்கும் தி இந்து பத்திரிகையின் சிறப்பு செய்தியாளர் பிரவீண் சுவாமியின் எழுதியுள்ள செய்திக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் சென்று படியுங்கள்…

  http://www.hindu.com/2009/06/26/stories/2009062659761000.htm

 13. kalagam Says:

  காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி உங்களுக்கு தோழி என்றால், நீங்கள் எப்படி உழைக்கும் மக்களுக்கு தோழனாக முடியும்…??//

  நான்கரை ஆண்டு காலம் நீங்கள் தூக்கினீர்கள், அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்ப காலியாவும் என காத்திருந்த மம்ததான் அங்கு போய் தூக்குகிறார், ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

  உளுத்துப்போன கேள்விகள் தான் இன்று மக்களால் உங்களை குத்திக்கிழிக்கிறது. கம்யூனிஸ்டா அவன் கொஞ்ச காலம் செயாவுக்கும், அப்புறம் கர்ணாவுக்கும் துவைச்சு போடுவாங்க என மக்கள் காறி உமிழ்கிறார்கள். நாங்கள் முதலில் போலிகள் அல்ல என விளக்கம் கொடுத்த பின்னே பேச வேண்டிய அவசியத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

  ” மாலெ குழுக்களுக்கிடையே உள்ள பிரிவு எப்படி புரட்சியை சாதிப்பது என்பதில் தானே தவிர போலிகளை போல எப்படி பொறுக்கிதின்பதில் அல்ல”

  இந்தியாவின் மேலாதிக்கத்தை எப்போதாவது எதிர்த்திருக்கிறீர்களா?

  பொது எதிரியை வீழ்த்த கூட்டு சேர்ந்தீர்களா யார் பொது எதிரி?

  ஆனால் ஒன்று புரட்சி சிபிஎம் பன்ண போகிறது என்று உங்களை மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு பன்றி தொழுவத்துக்கு எத்தனை காலம் செண்ட் அடிக்கப்போகிறார்கள்?

  http://poar-parai.blogspot.com/2009/06/blog-post.html

  http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_25.html

 14. கணேஷ் Says:

  // மாலெ குழுக்களுக்கிடையே உள்ள பிரிவு எப்படி புரட்சியை சாதிப்பது என்பதில்தானே தவிர போலிகளை போல எப்படி பொறுக்கி தின்பதில் அல்ல…//

  அப்படிப்பட்ட உத்திகளைக் கையாளுவதில் தவறு ஏதுமில்லை. நான் சொல்வது மட்டும்தான் வழி. அதைக் கேட்காவிட்டால் தீர்த்துக் கட்டி விடுவோம் என்ற அட்டுழியம்தான் மாவோயிஸ்டுகளின் அணுகுமுறை. சிபிஎம்(எம்.எல்.)(எல்) செய்ததை புரட்சியை சாதிப்பதற்கான அணுகுமுறை என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. பாராட்டுக்கள்.

  நான் அளித்த பதில்களில் பொது எதிரி யார் என்ற சந்தேகம் மட்டும்தான் உங்களுக்கு எழுந்துள்ளது. மற்ற பதில்களை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

  பொது எதிரியை அவ்வப்போது உள்ள அரசியல் சூழல்தான் முடிவு செய்யும். உங்களைப் போல சிபிஎம் என்ற ஒரு இலக்கை வைத்துக்கொண்டு எங்களால் செயல்பட முடியாது.

 15. rudhran Says:

  http://rudhrantamil.blogspot.com/

 16. kalagam Says:

  ஏனுங்,
  மறுக்கா மறுக்கா தப்பா புரிஞ்சுகிட்டீங்க்ச், நான் சொன்னது மாலெ குழுக்கள். லிபரேசன் உங்களமாதிரி ஓட்டு பொறுக்கிங்கோ, உதாரணத்துக்கு மார்க்சிஸ்ட்ன்னு சொல்லுவதால் நீங்கள் என்ன மார்க்சிஸ்டா என்ன , மார்க்சியம் என்பதோ, மார்க்சிய லெனினியம் என்பதோ வார்த்தையில் மட்டுமல்ல, நடைமுறையில் செயல் படுபவர்களுக்கே நான் சொன்னது பொருந்தும்.

  என்னங்க நீங்க தீக்கதிருல வேல பாத்துக்குட்டு இப்புடி கேக்குறீங்களே, அப்புடீன்னா தாவண்னா ப்பண்டியன் கூட யூசிபிஐல இருந்தது புரட்சின்னு ஏடாகூடமா கேக்க ஆரம்பிச்சுடுவாங்க அய்யா,

  நக்சல் பாரிகளே நாட்டுப்பற்றாளர்கள்ன்னு சொல்லுறோம், ஒரு நாய் வந்துட்டு நானும் புரட்சியாளன்ன ஒத்துக்கவாமுடியும்?

  எங்களுக்கு நாட்டை சூழ்ந்து இருக்கும் பார்ப்பன பயங்கரவாதமும் மறுகாலனியாக்கமும்தான் பிரதான எதிரிகள் , இவைகளுக்கு தவறாமல் கழுவிவிடும் வேலையை போலிகளாகிய நீங்கள் பார்ப்பதால் வேறு வழியில்லை முக்கிய எதிரியாய் நீங்களும் இருக்கிறீர்கள்.(இப்பவேற பாஸிஸ்டாய் பரிணமிச்சு இருக்கீங்களே)

  கலகம்

 17. rudhran Says:

  பேசுவதா பெரிய விஷயம்?
  ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறோம்

 18. கலகக்காரன் Says:

  //தீக்கதிரைத் தொடர்ந்து படியுங்கள். எங்கள் தோழர்கள் லால்கர் பற்றி நிறைய எழுதுகிறார்கள். அந்தப் பகுதிக்கே சென்று விலாவாரியாக எழுதிக்கொண்டிருக்கும் தி இந்து பத்திரிகையின் சிறப்பு செய்தியாளர் பிரவீண் சுவாமியின் எழுதியுள்ள செய்திக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் சென்று படியுங்கள்…//

  பிரவீன் சாமி இவர் இந்திய அரசு, அதன் ஒடுக்குமுறை யந்திரங்களின் புனிதத்தன்மையை தூக்கிப் பிடிப்பவர். மலேகான் குண்டு வெடிப்புக்கு முன்பு வரை இந்துத்துவ பயங்கரவாதத்தின் புனிதத்தன்மையை கேள்வி கேட்காதவர். மாலேகான் குண்டு வெடிப்பில் காது கிழிந்து புத்தி சுவாதினம் திரும்பியவர்களில் ஒருவர். அவரது இந்த கட்டுரையில் ஆதாரமற்ற சில செய்திகள், அதனை ‘மட்டும்’ தூக்கிப் பிடிக்கும் ஒரு பாசிஸ்டு கட்சி ஏஜெண்டு கணேசு.

  ஒரு வேளை மாவோயிஸ்டு கட்சியினர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த செயலை செய்திருந்தால் அது மிகப் பெரிய தவறு அதில் எமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நமக்கு இங்கு ஒரு சந்தேகமும் வருகிறது, 20000 பேரை திரட்டி போராடிய அந்த தலைவரின் மரணம் அந்த மக்களிடம் ஒரு சிறு சலனத்தைக் கூடவா ஏற்படுத்தவில்லை? இது ஒரு பக்கம் இருக்க, இந்த பதிவிலும், பின்னூட்டத்திலும் முன்னிறுத்தப்படுவது மாவோயிஸ்டு கட்சியினர் நடைமுறை செயல் தந்திர யுத்திகளின் தவறுகள் அல்ல, மாறாக சிபிஎம் எனப்படும் ஒரு போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சியினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் அதனை எதிர்த்த மக்கள் திரள் போராட்டங்களுமே இங்கு பேசப்படுகின்றன.

  சிபிஎம் கட்சியினரின் அப்பட்டமான ஏகாதிபத்திய, அமெரிக்க, இந்திய தரகு-பன்னாட்டு முதலாளிகளுக்கு கோமனமாக செயல்படும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களை கொன்று தள்ளும் சிபிஎம் சிகப்பு காட்டேரி கூலிப் படை கும்பல்களின் அட்டூழியங்கள் குறித்தும் கள்ள மௌனம் சாதிக்கும் கனேசு போன்ற தீவிர ஏஜேண்டுகள், விவாதத்தை சம்பந்தமில்லாத கிளைத் தளங்களுக்கு நகர்த்தி செல்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். இப்படி செய்வதின் மூலம் மிக அவமானகரமான முறையில் இந்த ஏஜெண்டுகள் அம்பலப்பட்டு போகின்றனர்.

  இப்படி செய்வதொன்றைத் தவிர்த்து வேறெந்த வழியிலும் இவர்களைப் போன்றவர்களால் தமது தலையில் வடியும் மலத்தை மறைக்க இயலாது தவிக்கின்றனர். அய்யோ பாவம். துரை. சண்முகத்தின் கவிதையொன்றில் வருவது போல தோலருக்கு ஏதேனும் உதவி செய்வோமா தோழர் ருத்ரன் மற்றும் கலகம்? 🙂

  கலகக்காரன்

 19. kalagam Says:

  இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

  யார் சொன்னது போலிகள்

  புரட்சி பண்ணவில்லையென்று

  “பன்னினார்கள்” எத்தனையோ

  சொல்ல சொல்ல வாய் வலிக்கும்

  வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….

  சிபிஎம் சிபிஐ பேரை

  கேட்டதால் தான் என்னவோ

  புடலங்காய்க்கும் புரட்சி வந்து

  முறுக்கிகொண்டதுவோ…..

  ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து

  கூடவே துரோகத்தனத்துக்கும்

  தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து

  நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி

  இன்னமும் அடங்க மறுக்கிறது

  குறுதியின் வெப்பம்……

  கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி

  உழைக்கும் மக்களுக்கு நீசனாகி

  மாமா வேலை செய்து செய்து

  பாசிஸ்டாக பல்லிளித்து

  செயாவின் காலுக்கு பாத பூசை

  ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை

  தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….

  ஆயிரம் தரகு வேலை

  ஆயிரம் பூசைகள் செய்து

  களைத்து போயிருக்கும்

  நல்லோரே வல்லோரே உங்களுக்கு

  மொத்தமாய் பூசை செய்கிறோம்

  கூடவே நிரந்தர ஓய்வையும்

  இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

  நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்

  ஓட்டுப்பெட்டியும் உங்களின்

  புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….

 20. கணேஷ் Says:

  கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னால், உங்கள் அகராதியில் விவாதத்தை சம்பந்தமில்லாத கிளைத்தளங்களுக்கு நகர்த்திச் செல்வதில் முனைப்பு என்று அர்த்தமோ…?? இப்படியே உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டு அலைந்து திரியுங்கள்…

 21. nadunila aalu Says:

  மார்க்சிஸ்ட் தோழரும் , மாவோயிஸ்ட் தோழரும் சொல் வாதம் செய்கிறார்கள். நல்ல லாவணி தான்.
  அடிப்படையில் கம்யுனிசம் என்பது சனநாயகத்துக்கு ஒவ்வாத அணுகுமுறை கொண்டது; அல்லது, கம்யுனிசத்திற்கு சனநாயகம் ஒத்து வராது..
  நாளடைவில், சனநாயகம் தோற்று விட்டால், கம்யுநிசமோ அல்லது மாவோயிசமோ அரசு செய்யும். அது வரை சன நாயகத்துடன், இந்த லாவனியும் இருக்கும். சில காவல் துறையினர் வெடிகுண்டு வெடிப்பில் இறப்பார்கள்; பொது மக்களுக்கும் சிரமங்கள் தொடரும். வாழ்க சனநாயகம் ! வளர்க தனி மனித உரிமைகள் !!

 22. kumar Says:

  அமெரிக்க கைக்கூலி உனக்கு இவ்வளவு வேகம் தேவையா
  காரல் மர்க்ஸ்கே !?!? ஆலோசனை கூறும்
  அறிவு ஜீவியாக தன்னை நினைத்துகொள்ளும்
  கோமாளி படை கூட்டம்

 23. kumar Says:

  அமெரிக்க கைக்கூலி உனக்கு இவ்வளவு வேகம் தேவையா
  காரல் மர்க்ஸ்கே !?!? ஆலோசனை கூறும்
  அறிவு ஜீவியாக தன்னை நினைத்துகொள்ளும்
  கோமாளி படை கூட்டம்
  நீ சி பி எம் மை குறை கூருகிராய்

 24. Kanthasamy Says:

  மார்க்ஸிஸ்டுகள் என்றாவது அண்ணன் இளைய தளபதி விஜய்யுடனோ, அல்லது காந்துடனோ வருங்காலத்தில் கூட்டு சேந்து தமிழகத்தை ஆள நேரிடலாம்.. அப்போது உங்கள் கதி என்ன…? சற்று நிதானமாக திட்டுங்கள் தலைவரே…

 25. mahadevan Says:

  its true long live peples revolution

 26. யெஸ்.பாலபாரதி Says:

  தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

  🙂

  தோழன்
  பாலா

 27. ஊர்சுற்றி Says:

  தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். 🙂

 28. வலிபோக்கன் Says:

  விவாதத்தில் முடிவு ஏற்ப்படவில்லையே? தொடருமா?

 29. பரணி Says:

  மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி அடையாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: