நாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும்

நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும்veeramani_a copy

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார். அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.

தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.

தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி  ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில்  பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.

பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு  குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.

பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி  கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.

இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற  அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு  வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.

தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி  கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?

செயாவை விட்டு வந்து கருணாநிதியிடம் வீரமணி ஒட்டிக்கொண்ட சம்பவம் குறித்து திகவின் ஒரு நிர்வாகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் அவர் சொன்னார் “இப்போதுதான் சேர்ந்துவிட்டார்களே” அப்படிஎன்றால் இது வரை கருணாநிதியை  நீங்கள் விமர்சித்தது எல்லாம் மறந்து விடவேண்டுமா? அல்லது பாப்பாத்திக்கு சோப்பு போட்டதையெல்லாம் மனதிலிருந்து அழித்து விடவேண்டுமா?
கண்டிப்பாய் எல்லாம் அழியாது இது தந்தை பெரியாரின் மண் சுயமரியாதை பூமி உங்களை போன்ற பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம்? உங்கள் வாய்கள் சொன்னதை உங்களின் காதுகள் மறந்து போகலாம். மறப்பதற்கு மக்கள் ஒன்றும் முன்னாள் போயஸ்கார்டன், இன்னாள் கோபாலபுரத்து  நாய்கள்  இல்லையே?

சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை  சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?

அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே.  நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள்  பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.

உரிமை அது எல்லோருக்கும் பொது என சொன்னவ்ரின் எழுத்துக்கள் தனியார்மயம்.பகுத்தறிவு தேய்ந்து தேய்ந்து பணம் சம்பதிக்க வந்த கதையும் இதுதான். பணம் சம்பாதிக்க அய்யா வீரமணி அவர்களே பேசாமல் கோயிலைதிறந்து விடுங்கள் சீக்கிரம் கல்லா நிரம்பிவிடும்.அதைவிட்டு விட்டு…….
தந்தை பெரியாருக்கு, அவரின் எழுத்துக்களுக்கு தாங்கள் மட்டும் தானென உரிமை கொண்டாடுங்கள்.அதற்கு பகுத்தறிவு சாயம் மட்டும் பூசாதீர்கள். அது பெரியாருக்குத்தான் மாபெரும் அவமானம். அதைப்பற்றி உங்களுக்கென்ன அக்கறை காசு வந்தால் சரிதானோ.
தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க
http://www.periyar.org/html/ap_agallery.asp

 

http://www.youtube.com/watch?v=QaVmEiQ1jTU

 

http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches

Advertisement

குறிச்சொற்கள்: , , ,

18 பதில்கள் to “நாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும்”

  1. சுனா பானா Says:

    வீரமணியும், திக கட்சியும் நாத்திகத்தையும் பிரச்சாரம் செய்வதில்லை. ஒப்புக்கு சில கூட்டங்கள் அவ்வளவு தான். நாத்திகத்தை மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்வதை விடுத்து பணம் பெருக்குவதில் குறியாக இருக்கிறார்.

  2. பகத். Says:

    கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா மாதிரி… கொள்கைகளை உண்மையாலுமே வெங்காயமாக ஆக்கிவிட்டார் வீரமணி..

  3. பகத். Says:

    தோழர், தந்தை பெரியாரின் உரைகளை இணையத்தில் கேட்க இயலுமா? அதற்கான இணைப்புகள் உங்களிடம் உள்ளனவா?

  4. kalagam Says:

    தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க
    http://www.periyar.org/html/ap_agallery.asp

    http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches

  5. Evera Iniyan. Says:

    மாமா வீரமணி இனிமேல் அய்யாவை பெரியார் திடலுக்குள் முடக்க முடியாது, தந்தை பெரியார் ஒரு காற்றைப்போல எல்லோருக்கும் சொந்தமானவர், அய்யாவின் எழுத்துகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பு வீரமணிக்கு விழுந்த சாட்டையடி.

  6. dalitfriend Says:

    கலகம் கழுதையே நீ என்றாவது அம்பத்கருக்கு ஆதரவாய் எழதினாயா
    மேல் சாதியை சேர்ந்த நீங்கள் பெரியாரை கை விட்டு அம்பெத்காரை
    வனங்கமாட்டீர்கள் தலித்தை வீட்டுக்குள் சேர்க்காத நீங்கள் புரட்சி
    கிழிப்பீர்கள்,

  7. priyadharshini Says:

    ஹா……ஹா….. பொது உடமை வாதிகள் பெரியாரை பற்றி பேசினால் அவர்கள் அரை வேக்காடுகள் என்றுதான் அர்த்தம்.ஏன் என்றால் பொது உடமை வாதத்தின் நேர் எதிர்கொள்கை திராவிடர் கொள்கை.கீழ வெண்மணி படுகொலையை கண்டிக்காமல் கள்ள மௌனம் சாதித்தது இந்த பெரியார் தானே?உமக்கு உண்மையாகவே என்னோடு விமர்சிக்க துணிவு இருந்தால் ஆர்க்குட்டில் காகங்கள் சமூகத்தில் வந்து எழுதிப்பார்க்கலாமே? முக மூடி அங்கு கிழிக்கப்பட்டு விடும் என்ற பயமா?

  8. priyadharshini Says:

    ச்சையான தலித் விரோதி தானே இந்த பெரியார்

  9. kalagam Says:

    அடடா பிரியதர்சினி,

    துணிவா ரொம்ப சந்தோசம், தந்தை பெரியாரின் மீது விமர்சனங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். அவர் தான் கொண்ட சீர்திருத்த, பார்ப்பன எதிர்ப்பு கொள்கைக்கு வாழ்ந்தாரா இல்லையா? காகங்களுக்கு வருவதை விட இங்கயே விவாதத்தை தொடங்குங்கள் இல்லையெனில் வினவிற்கு வருகிறீர்களா?

    காகங்களில் உங்கள் அறிவுத்தனத்தை பார்த்து மிகவும் மயங்கியே விட்டேன் . எதைப்பற்றி விவாதம் செய்யலாம் நீங்களே ஆரம்பியுங்கள். வினவில் எல்லா வகை கட்டுரையும் இருக்கிறது . முன்னரே சொன்னது போல வினவுக்கு வாருங்கள். என்ன பொதுவுடமை போர்வாளே புடம் போட்டுவிடலாமா?

    கலகம்

  10. kalagam Says:

    முன்னரே சொன்னது போல வினவுக்கு வாருங்கள். என்ன பொதுவுடமை போர்வாளே புடம் போட்டுவிடலாமா?

    http://www.vinavu.com/2009/07/30/periyar-viduthalai

  11. சுனா பானா Says:

    தலித்பிரண்ட்,
    தோழர் பெரியார் & அம்பேத்கர் இருவரும் பார்ப்பனீயத்தை தோலுரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். அம்பேத்காரை பற்றி எழுத வில்லை என்பதாலேயே அவர் தலித் விரோதி என சொல்வது அவதூறு. இந்த கட்டுரையில் அல்லது இந்த தளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக எதுவும் எழுதவில்லையே. அப்படி எழுதி இருப்பின் நேர்மையாக அதை குறிப்பிடுங்களேன்.

  12. சுனா பானா Says:

    பிரியதர்ஷினி,
    பார்ப்பனீயர்கள் பிரித்தாள்வதில் கை தேர்ந்தவர்கள். தாங்கள் பெரியாரை பொதுவுடைமைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நிறுத்த பார்க்கிறீர்கள். தாங்கள் பாப்பாத்தியா அல்லது கருப்பு பாப்பாத்தியா? (பி.கு – பிறப்பால் பார்ப்பனனாக இல்லாவிட்டாலும், பார்ப்பனீயத்தை பின்பற்றி அமல்படுத்தும் பார்பனீய பாததாங்கிகள் கருப்பு பார்ப்பனர்கள்)

  13. dalitfriend Says:

    மேல் சாதியை சேர்ந்த கலகமே நி உன் ஜாதியை சொல்ல தயாரா
    துணிவு இருக்கா னி மேல் ஜாதின்னு தெரியும்
    நி எந்த உருன்னு சொல்லு நான் உ ஜாதிய சொல்றன்

  14. மரண அடி Says:

    தலித்து பிரண்டு !

    ஏன் கலகம் பிற்படுத்தபட்டவராக இருந்தால் உமக்கு எதிரியா
    பெரியார் தாழ்த்தபட்டவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர் அவரையும்
    சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பது முட்டாள்தனம்
    நீ தான் உண்மையான சாதி வெறியன்

  15. மரண அடி Says:

    தலித்து பிரண்டு !

    ஏன் கலகம் பிற்படுத்தபட்டவராக இருந்தால் உமக்கு எதிரியா
    பெரியார் தாழ்த்தபட்டவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர் அவரையும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பது முட்டாள்தனம்
    நீ தான் உண்மையான சாதி வெறியன்

  16. thangam Says:

    nanparkale namakul thevai illatha varthai upayokangal vendam , nammai pritthu aandavarkal mandanar, meendum antha nilamai vendam, ples

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: