இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..
இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….
ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?
ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15
எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்
ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்
அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.
குறிச்சொற்கள்: இந்தியா, கவிதைகள், சுதந்திர நாள், துரோகம்
8:46 பிப இல் ஓகஸ்ட் 17, 2009 |
“சுதந்திரம் – பொய்யும் புனைசுருட்டும்..”
4:55 பிப இல் ஓகஸ்ட் 19, 2009 |
சுதந்திரம் என சொல்லப்படுவதையே இரண்டாகப்பிரிக்கலாம். அதிகாரவர்க்கத்திற்கு, பணக்காரவர்க்கத்திற்கு வரிவிலக்கு, லாபத்திற்கு உத்திரவாதம், புதுப்புது வாய்ப்புகளுக்கான சுதந்திரம்.
உழைக்கும் வர்க்கத்திற்கோ கொண்டாடுவதற்கு சுதந்திரம். சுதந்திரதினம் கொண்டாடி தந்த சாக்லேட்டை தின்றுவிட்டு சுற்றப்பட்டிருந்த காகிதத்தை வீசிவிடுவோம்.
உண்மையில் நம் உழைப்பால் கிடைத்த சாக்லேட்டை தின்பது ஊதாரிவர்க்கம், உழைக்கும் வர்க்கமோ வீசப்பட்ட காகிதமாய் புழுதியில்.
தோழமையுடன்
செங்கொடி
9:33 பிப இல் ஓகஸ்ட் 22, 2009 |
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை சுரண்டிவிட்டு, இனிமேல் எடுக்க பிச்சைதான் உள்ளது என்று இரவோடு இரவாக இந்த நாசமாய்ப்போன நாட்டைவிட்டு வெள்ளைக்காரன் கிளம்பிய தினத்தை, இங்குள்ள முட்டாள்கள் சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழன் என்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறானோ அன்று தான் நமக்கான உண்மையான சுதந்திர தினம்.
6:46 பிப இல் ஓகஸ்ட் 26, 2009 |
//
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை சுரண்டிவிட்டு, இனிமேல் எடுக்க பிச்சைதான் உள்ளது என்று இரவோடு இரவாக இந்த நாசமாய்ப்போன நாட்டைவிட்டு வெள்ளைக்காரன் கிளம்பிய தினத்தை, இங்குள்ள முட்டாள்கள் சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழன் என்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறானோ அன்று தான் நமக்கான உண்மையான சுதந்திர தினம்.
//
இப்படி ஒரு முட்டாள் தனமான கருத்துகளை நான் இது வரை யாரிடமிருந்தும் கேட்டதில்லை.. இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கின்றன என்று நான் தெரிந்து கொள்கிறேன் உங்களை பார்த்து.. அங்கிலோயன் நினைத்திருந்தால் இன்னும் உங்களை அடிமை படுத்தி உங்கள் உழைப்பை சுரண்டி வாழ்ந்திருக்க முடியும் .. நீங்களும் கருத்து சுதந்திரம் இல்லாமல் இப்படி அறிவு கெட்ட தனமாக கவிதை எழுதிருக்கவும் மாட்டீர்கள் அதற்கு வலைபதிவில் பின்னுடம் இட்டிருக்க மாட்டீர்கள் .. அடிமை எப்படி இருக்கும் என்பதை உணராததலயோ எனமோ உங்களுக்கு எல்லாம் இந்த சுதந்திரம் எழனமாக தெரிகிறது