பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி
அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை பார்ப்பன பாதாளச் சாக்கடையின் புழுவாக தன்னை வெளிக்காட்டிய போது பத்திரிக்கை உலகம் அவரை உச்சி முகர்ந்திருக்கும். அப்படி ஒரு சேவை பார்ப்பனிய பாதத்துக்கு.

கருப்பையா எழுதிய கட்டுரை ” ஏன் இந்த நோய்ச்சிந்தனை?” ஆம் அந்தக் கட்டுரைதான் அவரின் பார்ப்பன நோயை வெளியே எடுத்துக்காட்டியிருக்கிறது. கருணாநிதி சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவின் போது  சொன்ன வார்த்தைகள் தினமணியியின் பாதத்தில்  முள்ளாக குத்த  மணியின் முக்கிய  விருந்தாளியான அவருக்கோ அது இதயத்தையே குத்தி விட்டதாம். முன்னேறுவதற்கு சாதி தடை இல்லை அது ஒரு கற்பனை, பிழைப்புவாதமென்கிறார்.

கருணாநிதி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பது தெரிந்த விசயமே. ஆனால் அவர் பிழைப்புவாதியென்பதை பார்ப்பனரை விமர்சனம் செய்தவுடன் தான் புரிந்து கொண்டு வெம்பியிருக்கிறார் அன்ணன் தினமணிக்கு தட்டாத தம்பி. சமீப காலமாக தின மணிக்கு தமிழர்கள் மீதும் திராவிட இயக்கம் மீதும் அளவில்லா பற்று, அய்ய்யோ திராவிட இயக்கம், தமிழகம் இப்படி சீரழிகிறதே என ஒப்பாரி வைத்து, தான் நினைப்பதை தன் விருந்தாளிகள் (நெடுமாறன், பழ.கருப்பையா, நடராஜ், விஜயன்,)
மூலம் பொதுக்கருத்தாக்க முனைகிறது.

சர்வக்ஞர்  பிற்படுத்த சாதியை சேர்ந்தவரென்பதால் புகழ் பெற முடியவில்லை என்றார் கருணாநிதி. உடனே பார்ப்பன பதர்கள் பொங்கியெழ அதற்கு தடை போட்டு நானே இறங்குகிறேன் என இறங்கி விட்டார் கருப்பையா . அவரின் வாதமெல்லாம் உதாரணமெல்லாம் எதற்கு ஏன் எல்லாம் ஒன்றை  மட்டுமே சொல்லுகின்றன ஒன்றை நீரூபிக்க “சாதி வேறுபாடில்லை” என்ற பொய்யை மெய்யாக்க.  வள்ளுவன் என்ன மேல் சாதியா அவன் முன்னேற புகழ்பெற எந்த சாதி தடையாய் இருந்தது?

தமிழகத்தை அதன் போக்கை மாற்றிய அன்ணா முற்பட்ட சாதியா?  எல்லாவற்றையும் விட கருணாநிதி என்ன மேல் சாதியா கீழ் சாதி தானே, அவர் 5 முறைமுதல்வராக வில்லை அவரை எந்த சாதி தடுத்தது?  இத்தனைக்கும் அவர் சாதி சிறுபான்மை. பாரதி பார்ப்பான் என்பதால் மட்டும் புகழ்பெறவில்லை அவனுடைய அறிவே அவனின் புகழுக்கு காரணம் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் கூட பிற்பட்ட சாதிதானே?

உயர் சாதியான பார்ப்பனர்கள் தொன்று தொட்டு வழிபட்டு பின்பற்ற அதை எழுதியவர்களின் சாதி தடுக்க வில்லையே? திருமூலர் கூட இடையன் தானே அவர் புகழடையவில்லையா? ஆக சாதி எப்போதும் ஒருவன் முன்னேர தடையாய் இல்லை.

மொத்தமாய் அவர் சொல்லவருவது பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை கீழ் சாதிக்காரன் எழுதிய புத்தகத்தை தனது வேத நூலாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் கீழ் சாதியிலிருந்து போன கருணாநிதி போன்றவர்கள் தான் சாதியை தினம் வளர்க்கிறார்கள். சாதியை கடந்த சமுதாயத்தில் சாதிப்பிரச்சினை வேண்டுமென்றே புகுத்தப்படுகின்றது.

இது சாதி இல்லாத சமுதாயமா?

கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது? ஆனால் உண்மைகள் காதில் அறைந்து சொல்கின்றன , உறைக்கவைக்கின்றன. பாரதி பார்ப்பனன் என்பதனைத்தவிர எதனால் புகழ்பெற்றான்?. மதிமாறன்  எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டியிலும் தோழர் மருதையன் எழுதிய அது குறித்த கட்டுரையிலும் தெளிவாய் கோடிட்டு காட்டினார்கள். பறையர்கள் இந்துக்களை அடித்துவிட்டார்களே ஏன் இன்னும் சும்மா இருக்கிறீர்கள் என இந்துக்களை திமிறி எழச்சொல்கிறார் பாரதி. பறையர்களுக்கும் பூணூல் அணிவித்துவிட்டு  அவர்களை இந்துக்களை கொண்டு தாக்க  சொன்ன ஒரு கிரிமினல் பேர்வழி யாரால் தூக்கிப்பிடிக்கப்படுகிறான் பார்ப்பனீய கருத்துக்களை தூக்கிப்பிடிப்பவர்களைத் தவிர?

பிறப்புச்சாதிக்குண்டான தொழிலை செய்யவேண்டுமென்று சட்டம் போட்ட ராஜாஜி என்ற சாதி வெறி பிடித்த அயோக்கியன் மூதறிஞர் எப்படி ஆனார் தன் பிறப்புத்தகுதியைத்தவிர?  ஏன் நம்முடைய சங்கராச்சாரியை எடுத்துக்கொள்ளுங்கள் சொர்ணமால்யாவோடு கும்மாளம், பெண் எழுத்தாளரை மானபங்க படுத்த முயற்சி, கொலை வழக்கில் முக்கியபுள்ளி என இத்தனை கேடித்தனங்கள் இருந்தாலும்  அவன் ஜெகத் குருவாக நீடிக்க நீட்டிக்க வைப்பது எது அந்த பூணூலைத் தவிர.

மற்ற சாதியில் பிறந்த யாரும் குற்றமே செய்யவில்லையா எனலாம் அப்படி சொல்லவில்லை எல்லா சாதியிலும் அயோக்கியன் இருக்கலாம் . ஆனால் அயோக்கியனாய் இருந்தாலும் பார்ப்பனன் என்பதற்காகவே மேற்கண்ட “தலைவர்களெல்லாம்” புகழப்பட்டார்கள் , புகழப்படவுமிருக்கிறார்கள் என்பது உண்மையா பொய்யா? அதற்கு பார்ப்பன சமூகமே முன் வந்து ஆதரவளிப்பதும் பொய்யா?

சட்டசபையில் நான் பாப்பாத்தி என சூளுரைத்த செயலலிதாவை கண்டித்ததா தினமணி, மடத்தைவிட்டு ஓடிப்போன காமேஸ்வரனின் லீலைகளை விமர்சித்ததா தினமணி, சர்வக்ஞர் விழாவில் பேசிய கருணநிதிக்கு தனது அல்லக்கை மூலம் விமர்சனம் செய்யும் திணமணி இப்படி செயாவை சாதி ரீதியாக ஒப்பிட்டு எழுதுமா ஒருவேளை(!!!!!!!) வந்தாலும் நம் கருப்பையாதான்  எழுதிவிடுவாரா என்ன?

என்ன சாதி தடை இல்லையா? நிகழ்காலம் கொஞ்சமல்ல ரொம்பவே கசக்கிறது. அகற்றப்படாத ரெட்டைக்குவளைகள், ஒதுக்கப்படும்குடியிருப்புக்கள்,மறுக்கப்படும் ஆலய வழிபாட்டு உரிமை இப்படி எத்தனையோ இருக்க சாதி ஒரு தடை இல்லை என்கிறது பார்ப்பனீயம், கருப்பு பார்ப்பனன் பழ.கருப்பையாவோடு கும்மியடித்தவாறே.

வள்ளுவனுக்கு குறுக்கே நிற்காத சாதி எதற்கு நந்தனை மறித்து எரித்தது?  வேதம் எழுத தடை விதிக்காத சாதி ஏன் ஏகலைவன் விரலை வெட்டியது.  திருமூலரின் புகழை தடுக்காத  சாதி நிகழ் காலத்தில்   ஆறுமுக சாமியை எதற்கு  அடித்து வெறியாட்டம் போட்டது?

அன்ணாதுரையும் கருணாநிதியும் முதல்வரானது சாதி இறந்ததற்கு அடையாளமாம். அப்படியாயின் கயர்லாஞ்சி பாலியல் கொலைகளும் , பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கொடுமைகளும் எதை உணர்த்துகின்றன?தமிழ் நடராசனின் காதில் விழாமலிருக்க ஊளையிட்ட தீட்சிதர்களின் ஆணவம் எதை காட்டுகிறது? ஒரு வேளை இவையெல்லாம் மாயையாக தெரிகிறதா தினமணிக்கும் கருப்பையாவுக்கும்.

மாயையாகத்தெரியலாம் ஆனால் பாதிக்கப்படபோவது பாதிக்கப்பட்டது உழைக்கும் மக்களல்லவா?பூணூலை மாட்டிக்கொண்டு டேய் சூத்திரப்பசங்களா நான் மேல் சாதி என்று  கிளம்பும் பார்ப்பனத்திமிர்தான்  திராவிட சித்தாந்தம் சீரழிவதை பற்றிகவலைப்படுகின்றது. அதுவே ஒப்பாரியும் வைக்கிறது எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று.

இளையராசா மேல்  தாழ்த்தப்பட்டவரென்பதால் சொல்கிறது ஏன் அவர் முன்னேறிவரலை திறமை இருந்தா நீ வா ! உன்னை எது தடுக்குது? இளையராசா கும்பாபிசேகத்துக்கு காசுகொடுத்தாலும் உள்ளே வரவிடாமல் எது தடுத்ததோ? எது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வழக்குப்போடு முடக்கியதோ,  மகாமகத்தின் போது தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை  எது மாற்றியதோ அதுதான் பார்ப்பானை பார்ப்பானவே நீட்டிக்கவும் வைக்கிறது  தாழ்த்தப்படவனை பிற்படுத்தப்பட்டவனை அப்படியே இருக்கச்செய்கிறது.

என்னதான் பணக்காரனாயிருந்தாலும் கருவறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை பிறப்புதானே தீர்மானிக்கிறது. கோயிலை அரசுவசமாக்கிக்கொண்டால் சாமிக்கு நைவேத்தியம் பண்ணமுடியுமா  என கவலைப்படும் தினமணி  அந்தக்கோயிலுக்கு தன் உழைப்பை பொருளைகொடுத்தவனுக்கு கருவறையில் நுழைய அதிகாரம் இல்லை என்கிறது .

பழ.கருப்பையா மூலம் தனது பார்ப்பன அரிப்பை தீர்த்துக்கொண்ட தினமணிக்கு  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும்  அஞ்சத  நெறிகளும் எதற்காக யாருடைய தேவைக்காக?  எதற்கு? பூணுலுக்கு மேக்கப் போடுவதைத் தவிர.

 

 

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்”

  1. செங்கொடி Says:

    ஞானியின் வரிசையில் முகத்திலடிக்கும் அடுத்த குப்பை. குப்பை என ஒதுக்கிவிடமுடியாது, ஏனென்றால் முகத்திலல்லவா அடிக்கிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: