நான் வெறி பிடித்தவன்

nepal copyநான் வெறி பிடித்தவன்

ஏனிந்த மாற்றம் என்னில்
எப்போதும் போல
இல்லை இன்று
அவ்வப்போது இப்படித்தான்
சில செய்திகள் என்னுள்
சந்தோசத்தில் மிதக்கின்றன
ஏனென்று தெரியவில்லை
ஆனாலும் இவற்றுக்காக
 சந்தோசப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன், இருப்பேன்….
 
பல செய்திகளுக்கு நானே
வருந்துவது  சில
செய்திகளுக்கு
வலிந்து மகிழ்வதும் ஏனென்று
புரியவில்லை……
 
எப்போதும் எரிச்சலுடன் தொடங்கும்
என் காலை  
இன்று நாளிதள்களை
புரட்டியவுடன் காணாமல்
போனது

நேற்று  ஆந்திரத்தில் விவசாயிகள்
தற்கொலை, முந்தா நாள்
கயர்லாஞ்சியில்
கொல்லப்பட்ட எம் மக்கள்
முந்தா நாளுக்கு முந்தி
மார்பு அறுக்கப்பட்ட தாய் மார்கள்…..

எல்லாம்  கவலையாய்
என்னுள் அடைத்து எங்காவது
எப்போதாவது  வெடிக்கும்
அப்படித்தான் இன்றும்…..

 
பல்லாயிரம் மைல்களுகளுக்கு
அப்பால் நேபாளத்தில்
ஒரு பார்ப்பன வெறியனின் பூணூல்
அறுக்கப்பட்டதாம், ஆடைகள்
கிழிக்கப்பட்டதாம்
அவன் முகம்
சிதைக்கப்பட்டதாம்….

அறுக்கப்பட்ட இடத்தில் தான்
நாங்கள் துளிர்க்கிறோம்
கிழிக்கப்பட்ட இடத்தில்
நாங்கள் மலர்கிறோம்
சிதைக்கப்பட்ட இடத்தில்
பிறக்கிறோம்….

அவர்களைப்போல
எல்லாம் கடவுள் செயல்,விதியென்று
சொல்வதில்லை,

இது தண்டனை
பூணூல் கொழுப்பில்
நான் விபச்சாரியின்
மகன் ஆனதற்கு
ஆக்கவைக்கப்பட்டதற்கு தண்டனை…..
 
இதென்ன கொடுமை வெறிபிடித்தவனே
தூற்றலாம் என்னை
அவன் அழுதால்
உனக்கு மகிழ்ச்சியா கேட்கலாம்

 

 
பூணூல் அறுபட்டால், எம் மக்கள்
கோயிலில் நுழைந்தால் துடிக்கும்
உன் தசைக்கு  தெரியுமா
 அந்த உணர்ச்சிக்கு பேர் என்னெவென்று? 
நீ சொல்லலாம் அது மனிதாபிமானம்….

நான் பெருமையாய் சொல்லுவேன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்

 

 

Advertisements

குறிச்சொற்கள்:

3 பதில்கள் to “நான் வெறி பிடித்தவன்”

  1. செங்கொடி Says:

    எம் உயிர் அறுந்த போது
    உதிராத உணச்சிகள்
    எம் ரத்தத்தை கொதிக்கவைத்தபோது
    குதிக்காத ரத்தங்கள்
    சில நூல்கள் அறுந்ததற்க்காய்
    கொதித்தெழுந்தால்
    அதை மனிதாபிமானம் எனவழைக்க‌
    நாம் ஒன்றும் மலம் தின்று பிழைக்கவில்லை

    தோழமையுடன்
    செங்கொடி

  2. சித்தார்தன் Says:

    கவிதைகள் தீட்டத் தீட்ட தான் முழுமை பெறும்,தொடர்ந்து எழுதுங்கள்.

  3. நான் வெறி பிடித்தவன் - புகலிடச் சிந்தனை மையம் Says:

    […] https://kalagam.wordpress.com/2009/09/07/நான்-வெறி-பிடித்தவன்/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: