வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

மாதங்கள்
உருண்டோடிவிட்டன
ரணங்களை  இன்னும்
அழிக்கமுடியவில்லை என்னால் ……
ealam_b
கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை
கிழித்து சூக்குமம் தேடின
குண்டுகள்
செத்த தமிழரின்
உடலையும் துளைத்தன சிங்கள
வெறி வண்டுகள்….
தலையில் கட்டு போட்டபடி
அம்மாவும் மகளும்
அழுது கொண்டிருந்த
அக்காட்சி போய்விட்டதா மனதில்
ealam_c
பிணத்தோடு பிணமாய்
பிணமாவதற்கு தயாராகிக்
கொண்டிருக்கும் அவரின்
கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன
என்ன பாவம் செய்தோம்…..
அவர் வருவார், இல்லையில்லை
இவர் வருவார் ஒரே நாளில்
அதிசயம் நடக்கும் – கனவுகள்
தான்  நடப்பதில்லையே
வந்த படங்களைவிட வராதபடங்கள்
வராதவையாகவே இருக்கட்டும்
இருபதினாயிரம் பேர்
இன்னும் ஐம்பதாயிரம் பேர்
எண்ணிக்கைகளுக்கு
எண்ணத்தெரியவில்லை……
அப்பன், மாமன், மனைவி, கணவன்,
மச்சான் எல்லோரையும் இழந்து
விசத்தை கேட்கும் அந்த மனம் இனி
யாரை நம்பும்,
நம்பிக்கையாய்
இருக்க என்ன செய்தோம்
ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர…..
கம்பிதாண்டி போனவர்கள்
கருகிப்போய் கிடக்கிறார்கள்
வாழ்க்கையில் உதிக்காது
சோத்துக்கு நிற்கயில்
உள்ளங்காலில் சூரியன் தகிக்க
அதை விட சுடுமா
துப்பாக்கியின் ரவைகள்….
ealam_e
விடுதலையின் வெப்பம்
குறைந்திடுமா என்ன
தெறிக்கும் ரத்தத்தில்
மரண சத்தத்தில்
ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள்

இது என்ன ஜோசியமா
இல்லை-வரலாறு
ஆம் ஜாலியன் வாலாபாக்
பகத்சிங்கை பெற்றெடுத்தது
பூங்காவில் சுற்றிவளைக்க
பரங்கியர் தலையுடைத்து சரித்திரம்
சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்…..

தேடுதல் வேட்டைகள் தேடத்தேட
விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம்
தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி
எங்கள் நக்சல் பரி

பாரிஸ் புரட்சி தோல்வி தான்
ஆனால் முடிந்து விட்டதா
போராட்டம் ?
செத்த பின்னும்
பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது
ஆளும் வர்க்கம் –  இன்று வரை
அது  பயந்தோடுகின்ற
சொல் எது  தெரியுமா?
மக்கள்………ealam_d

ஆம்
கைகோர்ப்போம் இங்கு
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் !
கண்ணீரைதுடைத்து
கட்டியமைப்போம் மக்கட் படைகளை
உரத்து முழங்குவோம்
ஏகாதிபத்தியம் ஒழிக !
இந்திய மேலாதிக்கம் ஒழிக ! !
சிங்களபேரினவாதம் ஒழிக ! ! !
சிவப்பு பயங்கரவாதத்தில்
மூழ்கிப்போகட்டும் பேரினவாதம்,
சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம்
ஏகாதிபத்தியத்தை பிணமாய்
ஏற்றுமதி செய்வோம்….french_revolt
சிவப்பு அது பட்டு போகாது
சுத்தியலும் அரிவாளும்
இனி அறுவை சிகிச்சையின்
கருவிகளாகட்டும்.

குறிச்சொற்கள்: , ,

4 பதில்கள் to “வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்”

 1. superlinks Says:

  முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

  நாம் நினைத்தது நடந்தது ! கீற்று நிர்வாகிகள் ‘இந்திய‌ ஜனநாய’கத்தின் கற்பை காக்கும் விதமாக அதற்கு தேவையான நேர்மையின்மையோடும், நாணயமற்ற முறையிலும் நடந்துகொண்டார்கள்.காலையில் இட்ட எமது பின்னூட்டம் இப்பொழுதுவரை வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ள‌ன.

  கீற்றுவின் யோக்கியதையில் ஏற்கெனவே எமக்கு முழு நம்பிக்கை இல்லாததால் முன் எச்சரிக்கையுடன் அங்கு இட்ட பின்னூட்டத்தை சிறு குறிப்புடன் வினவு தளத்திலும் பின்னூட்டமாக போட்டோம். இதோ அந்த பின்னூட்டம்.

  இந்த பின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போட‌ப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள ப‌யன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.

  முத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.

  ஆதாரங்கள் வாசிக்க
  இணைப்புகள் கீழே

  பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.
  இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
  http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

  சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
  முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …
  http://www.keetru.com/literature/essays/vinavu_2.php

  தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
  http://mathimaran.wordpress.com/2009/08/27/article-233-2/

  கீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.

  /////////////

  கீற்றுக்கு வணக்கம்.
  எனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.
  நன்றி
  /////////////

  முத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல‌.தென் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்த விசயம் தான்.அந்த சாதிவெறியனைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டால் கீற்றுக்கு ஏன் வலிக்கிறது ? ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை ? இதற்கு கீற்று நேர்மையுடன் பதிலளிக்க வேண்டும்.‌

  ஒரு பக்கம் எமது அமைப்பை அவதூறு செய்து எழுதுவதற்கு,இனவாத கும்பல் தமது காழ்புணர்வை கக்குவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது.அதற்கு தமிழ்தேசியம்,முற்போக்கு மண்ணாங்கட்டி என்றெல்லாம் விளக்கம் வேறு கொடுப்பது. இன்னொரு பக்கம் சாதிவெறியனான,தலித் மக்களையும் இம்மானுவேல் சேகரன் போன்ற த‌லைவர்களையும் கொன்ற கிரிமினலான பயலான‌ முத்துராமலிங்கத்தை காப்பாற்ற எமது கருத்தை இருட்டடிப்பு செய்வது.இது தான் இந்த தமிழ்தேசியம் பேசும் மண்ணாங்கட்டிகளின் யோக்கியதை. இதற்கு கீற்று அடுதத ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.மேலும் எமது பின்னூட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னூட்டம் ஏன் மட்டுறுத்தபட்டது என்பதற்கு விளக்கமும் வேண்டும். அந்த விளக்கத்தை கீற்று எப்படி வேண்ட்டுமானாலும் சொல்லலாம். எமது வார்த்தைகளில் ‘நாகரீகம்’ இல்லை என்றோ, ஒரு தலைவரை மரியாதை இல்லாமல் பேசினால் அவர் சார்ந்த சமூகத்தினரின் மனது புண்படும் என்றோ கீற்று கருதினால் அதை உள்ளது உள்ளபடி பொது அரங்கில் சொல்ல வேண்டும்.
  இல்லையெனில் நாமே ஒரு முடிவிற்கு வந்து கீற்று தளத்திற்கு இன்னொரு பெயரை சூட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

 2. செங்கொடி Says:

  அழுது, அழுது கண்ணீர் வற்றியதும் அங்கு சினம் பிறக்கும். அந்தச்சினம் சிங்கங்களை ஈன்றெடுக்கும். நிச்சயம்.

  தோழமையுடன்
  செங்கொடி

 3. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் « கலகம் Says:

  […] நாங்கள் தோற்றுப் போனோம் !! 2.வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் 3.ஈழப்பிணங்கள்-சுடுகாட்டில் […]

 4. ஏகாதிபத்தியம் ஒழிக ! இந்திய மேலாதிக்கம் ஒழிக ! ! சிங்களபேரினவாதம் ஒழிக ! ! ! - புகலிடச் சிந்தனை மையம Says:

  […] ஏகாதிபத்தியம் ஒழிக ! இந்திய மேலாதிக்கம் ஒழிக ! ! சிங்களபேரினவாதம் ஒழிக ! ! ! மாதங்கள் உருண்டோடிவிட்டன ரணங்களை  இன்னும் அழிக்கமுடியவில்லை என்னால் …… கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை கிழித்து சூக்குமம் தேடின குண்டுகள் செத்த தமிழரின் உடலையும் துளைத்தன சிங்கள வெறி வண்டுகள்…. தலையில் கட்டு போட்டபடி அம்மாவும் மகளும் அழுது கொண்டிருந்த அக்காட்சி போய்விட்டதா மனதில் பிணத்தோடு பிணமாய் பிணமாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அவரின் கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன என்ன பாவம் செய்தோம்….. அவர் வருவார், இல்லையில்லை இவர் வருவார் ஒரே நாளில் அதிசயம் நடக்கும் – கனவுகள் தான்  நடப்பதில்லையே வந்த படங்களைவிட வராதபடங்கள் வராதவையாகவே இருக்கட்டும் இருபதினாயிரம் பேர் இன்னும் ஐம்பதாயிரம் பேர் எண்ணிக்கைகளுக்கு எண்ணத்தெரியவில்லை…… அப்பன், மாமன், மனைவி, கணவன், மச்சான் எல்லோரையும் இழந்து விசத்தை கேட்கும் அந்த மனம் இனி யாரை நம்பும், நம்பிக்கையாய் இருக்க என்ன செய்தோம் ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர….. கம்பிதாண்டி போனவர்கள் கருகிப்போய் கிடக்கிறார்கள் வாழ்க்கையில் உதிக்காது சோத்துக்கு நிற்கயில் உள்ளங்காலில் சூரியன் தகிக்க அதை விட சுடுமா துப்பாக்கியின் ரவைகள்…. விடுதலையின் வெப்பம் குறைந்திடுமா என்ன தெறிக்கும் ரத்தத்தில் மரண சத்தத்தில் ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள் இது என்ன ஜோசியமா இல்லை-வரலாறு ஆம் ஜாலியன் வாலாபாக் பகத்சிங்கை பெற்றெடுத்தது பூங்காவில் சுற்றிவளைக்க பரங்கியர் தலையுடைத்து சரித்திரம் சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்….. தேடுதல் வேட்டைகள் தேடத்தேட விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம் தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி எங்கள் நக்சல் பரி பாரிஸ் புரட்சி தோல்வி தான் ஆனால் முடிந்து விட்டதா போராட்டம் ? செத்த பின்னும் பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம் –  இன்று வரை அது  பயந்தோடுகின்ற சொல் எது  தெரியுமா? மக்கள்……… ஆம் கைகோர்ப்போம் இங்கு வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் ! கண்ணீரைதுடைத்து கட்டியமைப்போம் மக்கட் படைகளை உரத்து முழங்குவோம் ஏகாதிபத்தியம் ஒழிக ! இந்திய மேலாதிக்கம் ஒழிக ! ! சிங்களபேரினவாதம் ஒழிக ! ! ! சிவப்பு பயங்கரவாதத்தில் மூழ்கிப்போகட்டும் பேரினவாதம், சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம் ஏகாதிபத்தியத்தை பிணமாய் ஏற்றுமதி செய்வோம்…. சிவப்பு அது பட்டு போகாது சுத்தியலும் அரிவாளும் இனி அறுவை சிகிச்சையின் கருவிகளாகட்டும். https://kalagam.wordpress.com/2009/09/13/வர்க்கம்-ஒன்றே-பதில்-ச… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: