ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்

ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்118vinayakerselaibox-01_ad
ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ரெண்டு பேரை தொடையில் வைத்துக்கொண்டு, பக்காவாய் சீன் காட்டிக்கொண்டு வருவார் நம்ம கணேசு.
இந்த ஆண்டோ ஈழப்பிள்ளையார், பிரபாகரன் பிள்ளையாரென  மேலும் தன் பங்குக்கு அவதாரம் எடுத்து இருக்கிறார். கோவையில் நடந்த இந்து மக்கள் கட்சி என்ற பாசிச சேக்காளிகளின் சதூர்த்தி விழாவுக்கு கொடியசைத்து துவக்கியும் வைத்திருக்கிறார்.
அண்ணார் சிவாஜிலிங்கத்தின் (M.P) உதிர்ந்த முத்துக்கள்

// இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர்.
இதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. 2000ம் ஆண்டு, கோவிலில் இருந்த விநாயகரை பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள குளத்துக்கு இழுத்துச் சென்று மூழ்கடித்தனர்…………………………………………………………
இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது.//
——————————————————————————————————————————————————————————–
இப்படி பார்ப்பன பாசிசத்தின் அரவணைப்பில் பெறப்போகும் இந்து ஈழத்தில் தாழ்த்தப்பட்ட, பிறமத மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு இடம் இருக்குமா என்ன?
இல்லையில்லை ஒரு அகதியின் ஆதரவு முயற்சிதான் இதை கொச்சை படுத்தக்கூடாதென்பவர்களுகளே ,நியாயமாய் பதில் சொல்லுங்கள் இது வரையிலான பாரியப்பின்னடைவுக்கு  முக்கிய காரணமான இந்தியாவை நீங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தினீர்களா? காங்கிரசு தவிர வேறு கட்சி வந்தால் ஈழத்தை பறித்து கையில் தருவார் என நீங்கள் சொல்லி சொல்லி இந்திய மேலாதிக்கப்போரை காங்கிரசின் தனிப்பட்ட போராக மாற்றினீர்களே. இது ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்துவதாக ஆகாதா?
தமிழ்தேசியம் என்ற பதத்தின் முழுமைக்குமே எதிரானதுதான் பார்ப்பனீயம். அது ஈழம் அமைய ஆதரவு தரும் என நீங்கள் நம்புங்கள். அதைப்பொதுக்கருத்தாக்க முயல்வதற்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா இந்த தமிழ்தேசியம் பேசுவோருக்கும், சிவலிங்கத்துக்கும். யார் கிடைத்தாலும் அவர்களின் முதுகில் ஏறி பறிக்க இது என்ன பலாப்பழமா? மக்களைத்தவித்த இந்த சுய நலமிகளின் கூத்தினையே போராட்டமாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.

ஈழத்தில் நடந்த நடக்கும் இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக முலாம் பூசுகிறார் அய்யா சிவாஜிலிங்கம். இது ஏதோ புதிதல்ல,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அர்ஜுன் சிங்காலையும், “காஞ்சி மகா பெரியவரையும்” சந்தித்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்துக்களுக்கு  அருளாசி வேண்டினார்.

தமிழினவியாதிகளெல்லாம் பார்ப்பன செயாவின் சுருக்குப்பையில் ஈழத்தினைத்தேட அதையே கொஞ்சம் ஹை லெவலில் செய்தார் நம்ம லிங்கம். இது வரை நாமெல்லாம் நினைத்தது போலல்ல ஈழத்தினர் எல்லாம் தமிழர்கள் அல்லவாம் அவர்கள் இந்துக்கள் என புதிதாய் கோடு போட்டுக்காட்டினார். அப்போதிருந்து இப்போது வரை இந்து மதவெறி பாசிஸ்டுகளிடம் அவருக்கு இருக்கும் பாசத்தின் பொருள் மட்டும்தான் விளங்க வில்லை.

ஒரு வேளை சூடு சொரணையற்று தமிழர்களுக்கு இந்த வழியிலும் இனப்பற்றினை ஊட்டுகிறார் போலும்.இந்து மத பர்ப்பனீயத்தின் வரலாறு அவருக்குத்தெரியாதா ? இல்லை நமக்கு தெரியாதென நினைக்கிறாரா?

அதிகம் இல்லை என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் எப்போதாவது நீங்கள் மக்கள் பக்கம் இருந்திருக்கிறீர்களா?

குறிச்சொற்கள்: ,

5 பதில்கள் to “ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்”

 1. sugunadiwakar Says:

  நல்ல கேள்வி தோழர். ஆனால் யார் பதில் சொல்வார்கள் என்றுதான் தெரியவில்லை.

 2. செங்கொடி Says:

  “இப்பொம் எல்லா பொடியன்களும் இங்கன வந்து கையலம்பிட்டு போரியள். ஈழம் வந்த பின்னயும் இங்கன வருவியளா?”
  என்றொரு வரி ஈழத்துக் கதையொன்றில் படித்ததாக நினைவு. அது கதையல்ல நிஜம் என காட்டிக்கொண்டிருக்கிறார் சிவாஜிலிங்கம்

  செங்கொடி

 3. Velu Says:

  Dear Comrades, You are condemning the Hindu fascism at the same time ,you are supporting the pro -Imperialist Tamil Fascism,the LTTE or Tamil Tigers.Can you find any difference between the LTTE /Tamil Tigers or Kosovo Liberattion Front /KLF? There are existing two types of National Leberation Fronts ,One is pro-imperialist ,Mafia like Tamil Tigers or Kosovo lieberation Front ,other one is Anti -Imperialist PLO,etc.For an example ,secular and anti -imperialist Palestinian Liberation Organization(PLO) ,George Gabahsh Palestinian National liberatin front(PNLF) ,or pro religious and anti- imperialit Hamas, Hisbullah and ect. Please think interms of Marxism and Lenism or you will be lost in the future like LTTE.

 4. ஈவேரா இனியன் Says:

  தன்னையும், தன்னை வழிபடும் மக்களையும் காக்க முடியாத பிள்ளையாருக்கு, பிள்ளையார் சதுர்த்தி விழா ஒரு கேடா.

 5. தமிழ் தேசியன் Says:

  தோழர் கலகம்!

  சூழ்நிலை கருதி அதிகார வர்கத்திடம் கையெந்துவதை தவிர வேறு வழி இல்லை..இன்று மூன்று லட்சம் பேர் முட்கம்பி வேலிகளுக்குள்.. மீட்பதற்கு வழியை காணோம்.. தண்ணீரில் மூழ்குபவனை காப்பாற்ற முயலும் போது ஒரு கை ஆதரவாக நீண்டதென்றால் அதை கைப்பற்ற நினைப்பது மனித இயல்பு..

  நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.. தங்களை போன்ற இணையத்தின் விசைபலகை வீரர்கள் இணையத்தில் அட்டை கத்தி சுழற்றுவதை தவிர வேறு என்ன செய்தீர்கள்.. ஆமாம் இங்கு குந்திகொண்டு அடுத்தவனை வக்கணை பேசி கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? நான் சிங்கள பாசிட்டுகளூக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னால் முடிந்தவரை 120 பேரை சேர்த்து இருக்கிறேன்..நீங்களும் உங்கள் தோழர்களை ஒன்றினைய சொல்லுங்கள்..நாம் ஈழத்தில் தாங்கள் விரும்பியபடி கம்னுச ஆட்சியை நிறுவுவோம்..அந்த மக்களும் ஒன்றும் சொல்ல போவது இல்லை..இப்போது காப்பற்றினால் காலமுள்ளவரை அவர்கள் நன்றியோடு நினைவு கூர்வார்கள்.. நாம் இந்த நோக்கத்திற்காக கிளம்புகிறோம் என்றால் இப்போது நீங்க்ள் விமர்சித்த சிவாசிலிங்கமும் இருகரம் கூப்பி வரவேற்பார்.. அந்த இந்துத்தவ பசிட்டுகளை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்.. ஆம் முக்கியமான ஒன்று..தங்கள் கம்னிச சித்தாந்த நாடுகளில் ஒன்றில் அப்படியே ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவும்..அடி ஒவ்வொன்றும் சும்மா சிங்களனுக்கு இடி போல விழ வேண்டும்.. செங்கொடி ஏறட்டும் ஈழத்தில் .. கிளம்புவோம் நாம்.. என்னுடைய இந்த கருத்துகளை வெளியிடுவீர்கள் என நம்பிக்கையுடன்…தமிழ் தேசியன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: