சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு
அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென தூற்றப்படலாம்
கலங்காதே மனமே!
புரட்சி ஒன்றே தீர்வு
விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி
போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும் எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை
சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்
குறிச்சொற்கள்: கதை, கதைகள், கலகம், கவிதைகள், குருசேவ், சிபிஐ, தா.பாண்டியன், பு மா இ மு, புஜதொமு விவிமு, புதிய ஜன நாயகம், புரட்சி, மகஇக
9:33 பிப இல் செப்ரெம்பர் 27, 2010 |
ஆம் புரட்சி ஒன்றே தீர்வு…….. அது இன்றே தேவை.
7:43 பிப இல் ஒக்ரோபர் 2, 2010 |
எங்கே செல்லும் இந்த பாதை…