புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்”

  1. செங்கொடி Says:

    எதையும் நீ செய்யலாம், ஆனால் இந்த மரத்தின் கனிகளை மட்டும் புசிக்காதே என்று ஆதாமிடம் தேவன் சொன்னாராம். அதுபோல எதையும் செய், சொல் ஆனால் அரசு அமைப்பை மட்டும் குறை சொல்லாதே என்கிறது அரசு.

    மதம் மூடந‌ம்பிக்கை என்ற புரிதல் மக்களிடம் கொஞ்சமாவது இருக்கிறது. ஆனால் அரசமைப்பு என்பதோ…….

    அதை மூடநம்பிக்கை எனக்காட்டும் சாத்தான்களாக இருப்பதில் தான் சொர்க்கமே இருக்கிறது.

  2. வலிபோக்கன் Says:

    cpi காரன் இந்த லிஸ்ட்லருந்து தப்புசுட்டானே, பயம்தான் ஆணிவேர்
    இநத வேர புடுஙகிபுட்டா ,எவானா இருந்தா என்ன!

  3. ஊரான் Says:

    அரசியல் வாதிகளின் முகத்தில் அறையும் வரிகள். வரிகளை வரைந்த கலகத்துக்கு வாழ்த்துக்கள்!

  4. vallalraj Says:

    தேர்தல் ஆனையத்தின் அவலம்!!

    [13-4-2011] நடந்த தேர்லுக்கு ஓட்டு போடுவதற்க்காக நான் சென்றிருந்தேன்.

    எனக்கு எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாததால் தேர்தல் அதிகாரியிடம் சென்று 49-0 முறைப் படி எனக்கு ஓட்டு போட விருப்பம் இல்லை என தெரிவித்தேன்.

    அதற்கு தேர்தல் அதிகாரி ” 49-0 ….!!! அப்படி என்றால் என்ன? ” என கேட்டார்.

    நான் 49-0 என்பது ஒரு விதி என்று சொல்லி அதன் விளக்கத்தையும் சொன்னேன்.

    அப்படியா…!!! என்று கேட்ட அவர் பிறகு தேர்தல் குறிப்பேட்டு புத்தகத்தை எடுத்து புரட்டி பார்த்தார். இதில் மிக பெரிய நகைசுவை என்னவென்றால் குறிப்பேட்டு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது ஆனால் இவருக்கோ சரியாக ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. அவர் சரியாக 35 நிமிடம் தேடி பார்த்தார். அவன் பின்னர் அவர் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தில் 49-0 விதிமுறை வரும்போது நானே சுட்டி காட்டினேன்.

    அதன் பிறகும் என்ன செய்வதென்று தெரியாத தேர்தல் அதிகாரியிடம் ஒரு வெள்ளை காகிதத்தில் ” எனக்கு எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ” என எழுதி கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு. வாக்காளர் பதிவேட்டில் குறிக்க சொன்னேன்.

    மேலும் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்ற செய்தியை அருகில் உள்ள அதிகாரிடம் அவர் சொன்னபோது அனைவருக்கும் கேட்கும் படி மிகுந்த சத்ததுடன் சொன்னார். ( இதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை ) இதனால் பல கட்சியினரின் மனதிலும் நான் எதிரியாக தோன்ற கூடும்.

    எல்லாம் முடிந்த பிறகு எனக்கு கையில் மை வைக்கவில்லை.

    தேர்தல் விதிமுறைகளே தெரியாதவர்களை தேர்தல் அதிகாரியாக நியமிக்கும் அளவிற்கு மானக்கேடான நிலை இங்கு மட்டுமே இருக்கிறது. தேர்தல் ஆனையத்தின் மீது எனக்கு ஒரு நல்ல எண்ணம் இருந்தது. ஆனால் இது போன்று வெட்க்ககேடான நிலையை பார்த்த போது அந்த எண்ணம் தலைகீழாக மாறியுள்ளது.

    சம்பவம் நடந்த இடம்: அரசினர் மேல் நிலை பள்ளி ( பிரிவு எண் 93 )

    திருமுல்லைவாசல்

    சீர்காழி தொகுதி

    நாகப்பட்டினம் மாவட்டம்.

  5. Sothy Says:

    உங்க நாட்டிலென்ன எல்லா நாடுகளிலும் இதே கதை தான். இங்கே இன்னும் ஒன்று. ஆளுக்கென்று தனிதொகுதியும் இல்லை. முழு மாவட்டத்துக்கும் போட்டிபோட வேண்டும். ஆக பெரும் பணம் படைத்தவர்களுக்கே தேர்தல் என்றும் ஆகிவிட்டது. முதலாளிகளின் அரசு யந்திரத்தை அசைக்க முடியாதபடி செய்து வைத்திருக்கிறார்கள். அதை தகர்ப்பதே ஒரே வழி. வேறே வழியில்லை

  6. தேர்தல் 2011 – தோழர் கலகத்தின் கவிதைகள்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி Says:

    […] புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன் […]

  7. sirippousingaram Says:

    வன்முறை இயக்கம் வளரக்கூடாது..உங்கள் கொள்கைகள் சீனாவிலும்,கியூபாவிலும் சந்தி சிரிக்கிறது.இளஞர்கள் ஜாக்கிறதை

வலிபோக்கன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி