தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி
கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
எம் வாயில்
பீயைத் திணிக்கவும்
ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்
ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்
உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்
ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்
என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை
ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி
பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !
அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி நக்சல்பாரியே உன் வழி
குறிச்சொற்கள்: அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
6:19 பிப இல் ஜூன் 22, 2011 |
கடந்த ஐந்து வருடங்களாக பள்ளி இன்றி சிறுநெசலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை எழுத்தறிவற்ற தற்குறிகளாக ஆக்கிய அரசை எதிர்த்து விருத்தாசலம் பகுதி வி வி மு,போரட்டகுழுவை கட்டமைத்து , மக்களை அணிதிரட்டி போர்குனமுள்ள போராட்டத்தை நடத்தியது. . இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, மக்களின் அடுத்தகட்ட போராட்டங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுத்தகூடிய நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு முன்னனியாளர்களின் மீது பொய்வழக்கு போட்டு போராடத்தை முடக்கவும், அதன் மூலம் மக்களிடம் பயஉணர்வை ஏற்படுத்தி போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைகளையும் அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுக்கவும், போராடத்தின் நோக்கமான பள்ளி கட்டிடத்தை மாணவர்களுக்கு பெற்றுத்தரவும் தொடர்ச்சியாக மக்களிடமும், ஊடகங்களின் துணையுடன் அணைத்து மக்களையும் சென்றடைந்து போராட்டத்திற்கு ஆதரவை போராட்ட குழு திரட்டி வருகிறது. இதன் ஒரு அங்கமாக இணையங்களில் உள்ள ஜனநாயக சக்திகளிடமும் இந்த போராட்ட செய்திகளை பிரசுரம் செய்யுமாறு வேண்டுவதன் மூலம் மக்களிடம் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நண்பர்களும், தோழர்களும் இந்த கட்டுரையை தங்களின் தளங்களில் வெளியிட்டு மக்களை சென்றடையும் முயற்சியில் உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
http://suraavali.blogspot.com/2011/06/blog-post_22.html
நன்றிகளுடன்
போராட்ட குழு
சிறுநெசலூர்
3:05 பிப இல் ஒக்ரோபர் 15, 2011 |
[…] […]