இற்று வீழும் முகமுடிகள்

ஜனவரி 19, 2009

sathyama-copy

இற்று வீழும் முகமுடிகள்

சாயம் பூசும் தேசம்

பல முறை தேசிய விருதுகளைப்பெற்று உழைப்பால் உயர்ந்த உத்தமன்கள் வரிசையில் முன்வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்த நாமலிஙக ராஜு தப்பை ஒத்துக்கொண்டு வாரம் ஒன்றாகிவிட்டது..கடந்த வெள்ளிகிழமை ராஜுவின் மனுவை விசாரித்த வழக்காடு மன்றமோ தள்ளி வைத்திருக்கின்றது. பத்திரிக்கைகளோ பாவம் ராஜுவும் அவரது சகோதரரர்களும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் திறந்த வெளி கழிப்பறையில் காலைக்கடனை கழிக்கிறார்கள்.சாதாரண கைதி போலவே நடத்தப்படுகின்றார்,

இப்படி அந்த கிரிமினலின் வாழ்க்கையில் ஏதோ தெரியாமல் நடந்த தவறுக்காக இப்படி ஆகிவிட்டதே என்றபடி நம்மையும் பீலிங்கில் ஆழ்த்துகின்றன. ஒன்றல்ல ரெண்டல்ல எட்டாயிரம் கோடிகளை (கண்ணுக்கு தெரிந்து மட்டும்) அமுக்கிய ராஜு இன்னும் ஊடகங்களாலும் மற்றோர்களாலும் “அவர்” என்று மதிக்கப்படுகிறார்,சாதாரண பிக்பாக்கெட் திருடன் அவன் என்று ஏசப்படுகிறார்.ஏற்கனவே ராஜுவின் மீது பாலியல் சம்பந்தப்பட்ட புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது,அப்போதெல்லாம் அவன் மீது கையை வைக்காத போலீசு தற்போது மட்டும் லாக்கப்பில் தள்ளியது ஏன்?

 ஒரு முதலாளியே தன் தவறை ஒப்புக்கொண்டு விட்டதால் அது கண்டிப்பாய் உண்மையாய் தானிருக்கும்,ஏனெனில் எப்படி டாடா நாட்டுக்காக உழைத்து மிகக்குறைவான லாபத்தில் மக்களுக்காக லட்சரூபாய் கார்தர வந்தாரோ ,அப்படித்தான் இவரும் வந்தார்,ரொம்ப தூரம் வந்தவர் கொஞ்சம் கால்தடுக்கி விழுந்து விட்டார்.அவ்வளவுதான் , “நான் தப்பு செய்து விட்டேன் “அதற்காக சட்டம் த்ரும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன்” கடைசியாய் கம்பெனிக்கு எழுதிய கடிதம் இது. ஒரு குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதால்……………. என இதை எடுத்துக்கொள்ள முடியுமா?

கண்டிப்பாய் முடியாது,சத்யம் டாடா,இன்போசிஸ் மட்டுமல்ல பல சிறு ஐடி பீபீஓ நிறுவனங்கள் தங்களின் கம்பெனியை சந்தையில் வைத்திருக்கின்றன.பங்குகளை அதிகம் வாங்கும் யாரும் அவர் நினைத்த எடுப்பிலேயே கம்பெனியை மூடக்கூட முடியும்,ஒரு தொழிலாளியின் உழைப்பை முதலாளி விற்று காசாக்குகிறான்.அதையே வைத்து தற்போது சூதாடிக்கொண்டிருக்கின்றான். இப்படி சூதாடும் ஆட்டத்தில் அரசு நிறுவனங்கள் பலவும் மக்களின் பணத்தை சத்தியம் டாடா போன்ற நிறுவனத்தில் பங்குகளை வாங்கிகுவித்தன.SBI-n காப்பீடு திட்டத்தின் விளம்பரத்தில் இப்படிவரும்” நாங்கள் தேர்ந்தெடுத்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறோம்”. தனியார் முதலாளிகள்,அரசு, நடுத்த்ர வர்க்கத்தின் சிறு பிரிவினர் ஆகியோர் சூதாட்ட்டத்தில் குவித்தனர்,ஒரு நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,ஆனாலும் நீ காலையில் ஒரு கம்பெனிக்கு பங்குதாரன் பிடிக்க வில்லையா மறுனாள் டிசிஎஸ்க்கு பங்குதாரன்,இப்படி சுற்றும் உலகை விட வேகமாய் சுற்றினார்கள்.

போட்டதை விட பல நூறு மடங்கு தரும் தங்க சுரங்கம் தான் பங்கு சந்தை என்பதை உணர்ந்த முதலாளிகள் என்னைப்பார் என் அழகைபார் என்றபடியே வரவுக்கணக்கை தாறுமாறாய் ஏற்றிக்காண்பித்து அதன் மூலம் பங்கு வருவாய்களை அதிகப்படுத்தினர்.மேலும் போலியாக கம்பெனிகளை உருவாக்கி அதிகமாக வாங்குவதற்கு வரவேற்பு இருப்பதாக செட்டப் செய்தார்கள்.மக்களின் பணத்தை தின்று குடித்த முதலாளிகளோ பல கம்பெனிகளை புதிதாய் உருவாக்கி அதையும் சந்தையில் இறக்கினர்கள்.

இப்படி சூதாட்டம் தேசப்பாதுகாப்பாக மாறியதால் சூதாடிகள் அரசின் பட்டங்களையும் மொத்தமாய் அள்ளினார்கள். இப்படி எல்லாரும் கமுக்கமாய் சுரண்டிக்கொண்டிடுந்த போது தான் அமெரிக்க பொருளாதார சுனாமி வந்தது.அதனால் தான் பங்கு சந்தையில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டும் ரொம்பவும் மண்மோகன் முன்முயற்சி எடுத்து சாக்கடையின் அடைப்பினை எடுத்துவிட்டதாக கூறினார்.அதையும் மீறி இந்தியாவில் ஐடி பீபீஓ நிறுவனங்கள் மூடத்தொடங்கின. சூதாடிகளோ தங்கள் கம்பெனிக்கு மேக்கப் போட்டு கொள்ளைஅடித்துக்கொண்டே போனார்கள்.

ஒருக்கட்டத்தில் தணிக்கை விசயத்தில் முதலில் மாட்டிய சத்தியம் திடீரன கம்பெனி நட்டத்தில் போவதாக அறிவித்து அதன் தலைவனும் கொள்ளைக்காரனுமான ராஜு “இப்ப என்னபண்ணறது” என்ற படி தெனாவட்டாயிருக்கிறான்.

53 ஆயிரம் பேரின் கதி என்ன என்பது இப்போது பங்கு சந்தை சூதாடிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படப்போகின்றது.எத்தனை பேர் சாகவேண்டும் என்பதும் செத்தார்கள் என்பதும் காலையில் பங்கு சந்தைப்போல ஏறி இறஙகவும் நேரலாம்.உணவுப்பொருளை வைத்து சூதாடி விலைவாசியை விசம் போல் ஏற்றியது போல் மனித உழைப்பும் பங்கு சந்தையில் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இது என்னவோ ராஜு மட்டுமே குற்றவாளி இல்லை.இந்த அரசு தான் முக்கிய குற்றவாளி.சூதாட்டத்தில் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட முதலாளிகளௌக்கு எப்படியும் தண்டனை கிடைக்கப்போவதில்லை,அர்சத் மேத்தா பல்லாயிரம் கோடி ஊழல் செதான் தீர்ப்புக்கு முன்னரே அவன் சொர்க்கலோகம் பத்திரமாக போய்விட்டான்.

அவனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னு நரகத்தில் துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இப்போது சொல்லப்படுகிறதே “சத்யத்துக்கு அரசு 2000 கோடி த்ர வாய்ப்புண்டு ” என்ற இது கூட 53 ஆயிரம் பேருக்காக இல்லை. அண்ணிய செலாவணி மேற்கொண்டு வரவேண்டும் ஐடி பீபீஓ கம்பெனிகள் தங்கு தடையின்றி நாட்டையே சுடுகாடாக்கவேண்டும் அதுதான் இப்போதிருக்கும் காங்கிரசுக்கும் பீஜேபி போலிகள் உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளின் எண்ணம். மக்களின் பணத்தை இந்த நாய்கள் பிச்சையாய் அல்ல உரிமையாக கேட்கிறார்கள் எப்படி அமெரிக்காவில் செய்தார்களோ அதையே இங்கேயும் கோருகிறார்கள்.மக்களின் பணத்தில் வரிசலுகைகள் அவர்களின் நிலஙகளை பறித்து லட்சக்கணக்கானோரை கொத்தடிமையாக மாற்றிவிட்டு தன்னுடைய சொகுசுக்கு குறவு வந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை சாகவும் சொல்கிறார்கள். இதைத்தான் டாடா,இன்போசிஸ் நாரயணன் மூர்த்தி மற்றும் ஏனைய கம்பெனி கிரிமினல்களும் அரசின் ஆசியுடன் மேற்கொள்கின்றனர். தேவையென் ஆட்குறைப்பு நடவடிக்கை , தன் தேவைக்காக வேலையில்லா கூலிப்பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த விலைக்கு அடிமைகளை உருவாக்குதல் போன்றவை ஒரு முதலாளி மனசை கல்லாக்கிக் கொண்டு செய்யும் காரியங்களாக சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு முதலாளி எல்லாம் திட்டம் போட்டே அடிமைகளை உருவாக்குதலையும்,ஆட்குறைப்பையும் மேற்கொள்கிறான். அப்போது தான் அவன் முதலாளியாக நீடிக்க முடியும். கண்ணா இது தான் டிரைலர் முழுப்படத்த பார்த்த….. இப்போது ராஜுதான் ஆரம்பமே இன்னும் பலரின் முகமுடிகள் இற்று விழ ஆரம்பித்து விட்டன,அவை கண்டிப்பாய் தேசத்தின் சோகமான முடிவுகளாக காட்டப்படும்,அம்முதலைகளின் கண்ணீருக்கு பதிலாய் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்படும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் வேரோடு பிடுங்கப்பட்டு எறிபப்படும்.

கடந்த சனியன்று ராஜு இருக்கும் சிறைக்கு வெளியில் பூங்கொத்து கொடுத்து வைத்து அவர் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சூதாடிகள் ஆணவமாய் சொல்லுகிறார்கள்.இனியும் அமைதியாய் இருந்தால் கண்டிப்பாய் அரச பயங்கரவாதிகளும் முதலாளித்துவ பயங்கரவாதிகளும் சாயம் பூசுவார்கள் நம் கல்லறைகளுக்கு. மார்க்ஸ் சொன்னாரே”இழப்பதற்கு ஏதுமில்லா வர்க்கம்” என்று அந்த தொழிலாளி வர்க்கத்தால் மட்டும் தான் இந்த பாசிசப்பயங்கர வாதிகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் அவர்களுக்கு கல்லறை கட்டமுடியும். நாம் பாட்டாளிகள் என்பதை நாங்கள் முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டோம்.

என்னருமை ஐடி பீபிஓ ஊழியனே அடிமை வர்க்கமா இல்லை ? இல்லை தொழிலாளி வர்க்கமா?முதலாளிய பயங்கர வாதத்துக்கு கல்லறை கட்டப்போகிறாயா இல்லை உனக்கு நீயே சாவு மணி அடித்துக்கொள்ளப்போகிறாயா நீயே முடிவு செய் முடிவு உன்கையில்.

டிசம்பெர் 25 முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு கல்லறை கட்டுவோம்.வர்க்கமாய் ஒன்றிணைவோம்.

சன நாயக தேவதை

ஜனவரி 16, 2009

azhagiri-copy

சன நாயக தேவதை
முண்டச்சியாய் மூலையில்
நிற்க கைம்பெண் ஆனது
பெண்னெனில் பரவாயில்லை
தேவதையே தாலியறுத்தால்
தாங்குமா நெஞ்சு
கண்டிப்பாய் தாங்காது இது
நெஞ்சுக்கு நீதியின் ஐந்தாம் பாகம்……………

கதை எழுதி கவிதை
படைத்து வசனம் சொல்லி
போரடித்து விட புதியதாய்
கலைஞர் எடுத்தார்
அவதாரம் அது இயக்குனர்
அவதாரம்
சிகரம்,இமயம்
என எல்லாம் ஒரே நாளில்
தூள் தூளாய் போனது
ரிலீஸ் ஆன முதல் நாளே
பிய்த்துக்கொண்டு போக
கலை உலகமே கயிற்றில்
தொங்கப்போகிறது
பட்டம் வைக்க பேர் கிடைக்காமல்……….

கத்தியும் அறுவாளும்
காவியம் படைக்க
சன நாயக தேவதைக்கு
செய்து  வைக்கப்
பார்த்தார்கள் மறு கல்யாணம்.

நானா நீயா என
போட்டிகளோ எராளம்
பிச்சுவாளும் கம்பும்
மட்டும் சீதனமாய் கொடுத்தால்
வந்திடுமா தேவதை
அது மயங்கும்
ஒரே மருந்து காந்தி……..

எல்லோரும் மருந்து கொண்டுவர
தேவதையோ சொல்லிவிட்டாள்
யாரிடம் அதிக காந்தியோ
அவர்களுக்கு தான் நானென்று
போனமுறை எதிர்க்கட்சியாய்
வீற்றிருந்தபோது
செங்கோல்  தப்பாமல்
செய்ததை அப்படியே பிசகாமல்
செய்தார்
கண்டிப்பாய் பிசகியிருக்கும்
தனயனை தனியாய்
விட்டிருந்தால் – கருங்கற்களை
பெற்றிருந்தால் தானே
தனியாய் விட, பெற்றதோ
அங்குசம்
சதிராடும் யானையை அடக்க
ஒரே வழியாய் அதுவே கடைசி
ஆயுதமாய் எடுத்து விட…….

அங்குசமோ அணுகுண்டாய் மாறாது
அகிம்சையாய் போய்விழ
பதிந்த சுவடுகளெல்லாம்
காந்தியின் நிழல்கள்
ஓட்டுயந்திரத்தின் எல்லா
பொத்தான்களிலும்
காந்தியின் புன்னகை
ஒன்றில் 1000 காந்தி
இன்னொன்றில் 2000 காந்தி
இன்னொன்றில் 5000 காந்தி………..

திமுக அதிமுக
தேமுதிக சமக
மார்க்சிஸ்டு முமூக
இப்படி எல்லாம் காந்திராஜ்யாமாய்
மாறிப்போனதினால்
திகைத்து போன மக்களோ
யாருக்கு அமுக்கினாலும்
காந்திக்கு போவதினால் மொத்தமாய்
காந்திக்கு வாழ்க்கைப்பட்டார்கள்
காந்தியோ தேவதைக்கு
வாழ்க்கை கொடுத்தார்
முண்டச்சி மகாலட்சுமியாய்
மாற
தயா நிதி வந்து சுபம்
போட
படம் முடிந்து விட்டதாம்
யாரும் எழவில்லை
ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
எங்க தொகுதியில
எப்ப இடைத்தேர்தல் வரும்?

பெண்களும் விளம்பரங்களும்

ஜனவரி 11, 2009

ad-copy
பெண்களும் விளம்பரங்களும்
நுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை

இப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது, திரும்பிய இடங்களிளெல்லாம்விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது.அது “எப்போதும் சளைக்காதவர்களுக்கு”அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான்  கீழே போட்டிருக்கின்றார்கள் “சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு  ELF OIL ” விளம்பரம் முடிகின்றது.சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.இந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விசயமாகிவிட்டது,சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக்கொள்ளும் படி ஏற்படுத்த் வில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான்  உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,ஆணின் பெருமையானது  பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது  ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது.பேர் அண்டு லவ்லி  விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்  ஒரே பல்லவி  தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது,மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய்  நாட்டுக்கு ஆண்களுக்கு  தேவை.

ஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க , ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க  பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது,பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை  பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்…………..

விளம்பரம் மற்றும் சினிமாக்கள் நாடகங்களில் இம்மாதிரியான கருத்துக்கள் தானாய் தோன்றிடவில்லை.சமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது.பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது,கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம் .சில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன்,காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன்,ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதிவெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.

சினிமாக்களில் பெண் என்பவர் ஒன்று அடக்க ஒடுக்கமாக அல்லது திமிர் பிடித்த பெண்னாகத்தான் கதானாயகி காட்டப்படுகிறார்.கதானாயகியின் கொட்டத்தை அடக்கி தன் ஆண்மயை நாயகன் நிரூபிக்கிறான்.”அவ கிட்ட பிடிச்சதே திமிர் தாண்டா”.    இப்படி ஆணின் ரசிப்புக்காக பெண்மைகள் படைக்கப்படுகின்றன.ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள் நடத்தை கெட்டவர்களாக சித்த்ரிக்கப்படுகின்றனர்.எப்படி இந்த சுமூகத்தில் “பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது சாமியை பழிக்கக்கூடாது” போன்றவை  சனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது.  ஒரு பேருந்து முழுக்க செல்லும்  பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும்.ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சாலையோரத்தில் நிற்கும் பெண்ணின்  செயல் பரிகாசிக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது  பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது?சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்படுத்தப்படும் போதும்   ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும்  கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது. ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும்  ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

எல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு,பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது இன்று வரை . ஆணாதிக்கம் வரன்முறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது பெண்ணியம் பேசும் பலரும் அழகீயலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர்.அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.
அரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒருபய னும் ஏற்படப்போவதில்லை.பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை,பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை  ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.

வினவு

ஜனவரி 11, 2009

வினவு
ஒரு பார்வை

வினவு  – இது  மிகவும் பிரபலமான வலைத்தளம், கடந்த ஆறு மாதத்தில் 90 கட்டுரைகள் இடப்பட்டிருக்கின்றன  ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்திருக்கின்றனர்,ஆயிரக்கணக்கானோர்  பின்னூட்டமிட்டுருக்கின்றனர். வினவு கட்டுரைகள் ஆறு புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.உண்மையில் இது மகிழ்ச்சிகரமான விசயம் தான்.நான் கவனித்ததிலிருந்து பலமாதங்கள் வேர்ட்பிரஸ்ன் மேலோங்கும் பதிவுகளில் வினவின் பெயர் இடம் பெறாத நாளை மிக மிக சில நாட்கள் எனலாம்.பலரும் கூறலாம் .இதிலென்ன பெரிய விசயம் எழுதுவதில் நேர்த்தி என்பது இருந்தால் யாரும் இந்த இடத்தை பிடிக்கலாம்,எழுத்து நேர்த்தி என்பது பதிவர்க்கு தேவையானது தான் என்றாலும் வினவின் தளத்தை அந்த ஒரு சிறப்பில் மட்டும் ஆழ்த்திவிட முடியாது,புரட்சிகவியையும் காமக்கவிஞன் வாலியையும் ஒரே தட்டில் வைத்து  படைப்பாளி என்று சொல்வது எவ்வளவு கடுமையான தவறோ அதைப்போன்றதே வினவின் இந்த வளர்ச்சியையும் மற்ற கழிசடை தளங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது.

இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக   வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படி vinavu-copy ஆகமுடியும்.. ஆசான்கள்   சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே  முடியாது.

பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் எதையுமே சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் கதையாக,கவிதையாக,கட்டுரையாக,இசையாக இப்படி பல வழிகளில்,கண்ணதாசன் வயிரமுத்தன்களி¢ன் கவிதைகளை படித்து பலரும் இப்படி சொல்வதுண்டு”எதை கொடுத்தாலும் அந்த ரெண்டு பேரும் அப்படியே கவிதையா வடிப்பாங்க” அப்படித்தான் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று பாட்டெழுதிய வைரமுத்து தான் “ஆண் தொடாத பெண்மையா” என்றும் எழுதினார்.ஒரு  படைப்பாளி  தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில்  எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான்  அவனின் தேவைக்கு  ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

இந்த மாடர்ன் உலகத்திலே உலகமே கையளவாக சுருங்கி போய்விட்டது, தினசரி பத்திரிக்கைகள் போல  புற்றீசலாய் இணையத்தில் பல வலைத்தளங்கள் உள்ளன,எப்படி மஞ்சள் பத்திரிக்கைகளும் ஆபாச எழுத்தாளர்களும் வெளியில் குவிந்து கிடக்கின்றார்களோ அதை விட இணையத்தில் மிக அதிகமாகவே நிரம்பியிருக்கின்றார்கள்,”பெண்களை வளைக்க என்ன செய்வது,கடலை போடுவது எப்படி போன்ற சிறப்பு பாடங்கள்  வலைத்தளங்களில்  இன்றைய சூடாட இடுக்கைகளில் நிரம்பி வழிகின்றன.சைதப்பேட்டையில் வட நாட்டினர் எப்படி குளிக்கின்றார்கள் என்பதைபற்றி ,ஒரு பதிவர்  அதை தடுக்க கோரி அரசுக்கு தன் பதிவை பதிக்கின்றார் அதற்கு தலைப்பே அம்மண குளியல். தன் தளத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது  என இப்டித்தான் இருக்கின்றது வலைப்பூக்கள்.

அவர்கள் எப்படி தன் வர்க்கத்துகாக எழுதுகின்றார்களோ அப்படித்தான் வினவின் படைப்புக்களும் உழைக்கும் வர்க்கத்துக்காக எழுதப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்களின் வாழ்வாதரம் எப்படி தொடர்புடையதென்பதை   நிரூபிக்கும் அவரின் எழுத்துக்கள்.வினவின் எழுத்துக்களை படிக்கும் ஒவ்வொரு வரும் கண்டிப்பாய் நழுவ முடியாது பதில் சொல்லியே தீர வேண்டும்,மறுமொழிகளை படித்தாலே புரியும்   பின்னூட்டமிடும் யாருமே தான் எந்த சார்பை சார்ந்தவரென்பதை தெளிவாக எடுத்துவைக்கவேண்டிய முடிவுக்கு தள்ளப்படுகின்றார். குறிப்பாக சாதி வெறிக்கட்டுரையில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராய்  ஊடகங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்தி மாணவர்கள் தாக்கியது சரியே என்ற கருத்தை வைத்தது.எதையும் நடு நிலைமையாய் பேசுவோம் எனக்கூறி  ஈனத்தனமாய் முடிவெடுத்த பலருக்கும் சவுக்கடி கொடுத்தது,அதனால் தால் குழலி எழுத நேர்ந்தது”செய்தியாளர்களை குறை சொல்லும் பதிவர்களே…..”.

கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு  கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில்  வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.

பரப்பிரம்மம்

ஜனவரி 4, 2009

பரப்பிரம்மம்
saami-copyஓம் மார்க்சிஸ்ட்டாய நமக
ஓம் பாஸிஸ்டாய  நமக
ஓம்  பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக

அவனின்றி அணுவும் அசையாது
சிபிஎம் இன்றி அவனும் அசைய
மாட்டான்,அசைவுகள் காத்து
கிடக்கின்றன பொலீட்பீரோவின்
பதில்களுக்காக……….

ஊணக்கண்ணுக்கு தான் நான்முகம்
ஞானக்கண்ணுக்கோ நான்காயிர
முகங்கள்,முகங்கள்
அதிகரிக்கலாம் வரத்துகளின்
எண்ணிக்கைக்கு ஏற்ப…

நாயையும் முதல்வராகும்
பேயையும் பிரதமராக்கும்
சூட்சுமம்  தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…

அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….

காந்தியிசம் டாங்கேயிசம்
ரணதிவேயிசம்  கல்யாணிசம்
சோதியிசம் புத்ததேவிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும் இசஙள்
வந்தாலும் பரம்பிரம்மம்
ஒன்றே……

ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
சீபீஎம் உறுப்பினர் சீடு….

வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
யாரையும் வளைக்கும் திறனுண்டு
அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில்  யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….

சாதுகடவுளென நினைத்தயோ
அற்பனே நக்சல் பரி
நந்திகிராம்,காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு
சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
பூசாரி வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன் அதுதான்
சீபீஎம்.

விடுதலையின் அரசியல் கருத்துப்படங்கள் போலிகளை வீழ்த்தும் ஆயதங்கள்

ஜனவரி 4, 2009

விடுதலையின்  அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயதங்கள்

விடுதலை அவர்கள் தன்னுடைய தளத்தில் போலிகளை அம்பலப்படுத்தி மூன்று கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.

போலி கம்யூனிஸ்ட் கட்சியின்  பார்ப்பன தலைமை

இந்து மத பார்ப்பன வெறியர்களாய் சீரழிந்து கிடக்கும் சீபிஎம் போலி கம்யூனிஸ்டுகளுடைய ஆடையை உருவி அம்மனமாய் அடித்து துரத்துகின்றது இப்படம்.கேரளாவில் பொம்பள பொறுக்கி சங்கராச்சாரிக்கு அரசு விருந்தினர் பட்டம்,மே வ  வில் சிபிஎம் அமைச்சர் “நான் முதல்ல பிராமணன் அப்புறம் தான் கம்யூனிஸ்டு” என்று பறை சாற்றிய விதமும் சரி,ஏன் தமிழகத்தில் சிதம்பரத்தில் தீட்சிதர்களை கண்டித்து நடந்த போது கூட்டத்தில் பார்ப்பனன் என கூறியதால் மனம் புண்பட்டும் அந்த ஒருங்கிணைப்பு குழுவிழுருந்து  விலகிய விதமும்  தான் தமிழகத்தில்   பார்ப்பன பங்காளி என அறிவித்தது. சிதம்பரத்தில் அவர்கள் விலகியதால் தான் முசுலீமாய் இருந்தாலும் கூட  சிபீஎம் நகர செயலாளர் மூசாவுக்கு பார்ப்பனர்கள் பரி வட்டம் கட்டி வரவேற்பு கொடுக்கப்பட்டது,அதுமட்டுமல்ல அதன்  இளைஞர் அமைப்பான டைபி  பல இடங்களிலும் சிதைந்து விட்டு வர்க்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு சீரழிந்து போஇவிட்டது.அவர்களின் முக்கிய வேலையே பொங்கல் விழா ,ஆயுத பூசையை சிறப்பாக நடத்துவது மட்டுமே.

பார்ப்பன மதவெறியர்களின் உறுப்பாக மாறிக்கொண்டு வரும் சிபிஎம் லிருந்து அதில் புரட்சிகர அணிகள் வெளியேறாவிட்டால் வரலாறு கண்டிப்பாய் அவ்ர்களுக்கு துரோகி பட்டியலிலே இடம் தரும்.

போலி கம்யூனிஸ்ட் ராம மூர்த்தியின் நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு

தரகு வேலை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ள சீபிஎம் இன்  முதல் தர தரகனான ராமமூத்தியின் வேலையை அம்பலப்படுத்துகிறது.

நேரு முதல் பலருக்கு ராம மூர்த்தி  தரகு வேலை பாத்ததையே  பெருமையாக சீபிஎம் அணிகள் பீற்றிவரும் இவேளையில் அவரி அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது. எம்ஜிஆர் என்ற சாதாரண நடிகனை புரட்சித்தலைவனாக்கிய  சாதனையை செய்தது காம்முரேடு ராம மூர்த்தி.இன்று சீபிஎம் எப்படி செயாவின் காலிலும் விசயகாந்து வீட்டு வாசலிலும் விழுந்து கிடக்கின்றார்களோ,சீபிஐ விஜயின் எச்சிலுக்காக நாக்கை தொங்கப்போட்டு திரிகின்ற வேலை தான் போலிகளின் செயல் திட்டம் என்பதை ராம மூர்த்திதான் நிரூபித்தார்.காந்தியிசத்துக்கு வால் பிடித்து  கம்யூனிசத்தை குழிதோண்டிபுதைத்த வேலையை நையாண்டித்தனத்துடன் அம்பலப்படுத்திக்றார் விடுதலை.தோழர் ஸ்டாலின் கால சோசலிசத்தை சிதைவுற்ற சோசலிசம் என்கூறி பாட்டாளிவர்க்க புரட்சியை சிறுமைப்படுத்தும் போலிகளுக்கு செருப்படியை தனது ஓவியங்கள மூலம் கொடுத்துள்ளார்.
விடுதலை -ன் தள முகவரி

http://vitudhalai.wordpress.com/

சாயம் வெளுத்துப் போன போலிகள்

ஜனவரி 1, 2009

cpm1சாயம் வெளுத்துப்போன போலிகள்
போர்ஜரி கம்யூனிஸ்டுகள்

ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்ட்.மணி , ஞாயிறு என்பதால் பேருந்தும் அதிகமில்லை ரொம்ப நேரம் காத்திருந்து ஏறினேன் .நகர பேருந்தில் கூட்டம் அதிகமில்லை . ஒரு சென்ட்ரல் கொடுங்க என்றேன் .ரொம்ப பொறுமையாக அவ்ர் இந்தாங்க என்ற படி சில்லரையை கொடுத்தார்.கூட்டம்  இல்லாதபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்.மிக விரைவாக வந்து சேர்ந்தது.வெளியே பலகை தெரிந்தது சென்னை சென்ட்ரல் . அப்படியே இறங்கி ரயில்வே நிலைத்துக்குள் சென்றேன்.கியூ ரொம்ப நீளமாக இருந்தது,அரை மணி நேரம் காத்திருந்து டிக்கெட்ட் ஐ வாங்கினேன் . நான் 2வது பிளாட்பாரம் செல்வதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.. அப்பெட்டியில் நான் தான் முதல் ஆள் மற்ற நாளில் அன்ரிசர்வு பெட்டிகலில் ஏற வேண்டுமெனில் தற்காப்பு கலை தெரியமல் உள்ளேயே செல்ல முடியாது .இன்னும் அரை மணினேரம் இருக்கின்றது.  மெதுவாய் புத்தகத்தை  புரட்டிக்கொண்டிருந்தேன். சரியாய் 30 நிமிடம் ஆக  ரயில் கிளம்பியது.
எதிரில் ஒருவர் பொறியியல் புத்தகத்தை வைத்து கொண்டிருந்தார் ஒரு  கல்லூரியின் புரபசர் என்றார்.அவருக்கு அருகி சுமார் நாலு மலையாளிகள்.மற்றவர்கள் யாரென தெரியவில்லை.அந்த மலையாளிகள் தொன தொன என்று பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சு கேரளாவை மிதமிஞ்சி புகழ்ந்து கொண்டே வந்தார்கள்.இந்தியத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு வந்தார்கள் . அங்கு எல்லோரும் படித்த்வர்கள்,எல்லோரும் அறிவாளிகள்என்று, பேசுவது மலையாளமாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.ரயில் கிளம்பி 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை ,களத்திலிறங்க முடிவு செய்து விட்டேன்.
அதிலே அதிகம் பேசிய நபரிடம் கேட்டேன் ” நீங்க பாலக்காடா ? இங்கேயிருந்து போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்”, நாங்க பாலக்காடில்ல,திருவனந்தபுரம் எப்படியும் போக  8 அவர்ஸ் ஆகும். சம்பிரதாயமாக  சடங்கு கேள்விகளை கேட்டு இப்போது ஆரம்பித்தேன்.”ஆமா,னீங்க என்ன கட்சி  ஒருவர் ” நாங்கள் எல்லோரும்  CPM,ஒருவரை சுட்டிக்காட்டி இவர் தான்   டைபி நகரச்செயலாளர்”.”ரொம்ப வசதியாய் போச்சு என்ற படியே “கேரளாவுல கோக்குக்கு எதிரா – நீங்க தான போராட்டம் செஞ்சீங்க? ”  ஆமாம் நாங்க தான்,  எப்பவுமே மக்களோட பிரச்சினைக்காக நாங்க தான் போராடுறோம்.அப்படியா  பிளாச்சிமடா வில போராடுனது  red flag ன்னு படிச்சேன். நீங்களோ மார்க்ஸிஸ்டுன்னு சொல்லுறீங்க.”இல்ல அவங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் டெர்ரெர்ரிஸ்ட், நக்சலைட்ஸ்.”என்ன நக்சலைட்ன்னு சொல்லுறீங்கபோலீசு காரன் கிட்ட அடிவாங்கி மண்ட உடஞ்சு நிக்கறாங்க,உண்ணாவிரதமெல்லாம் இருக்காங்க.உலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து அட்வாங்கி திருப்பி அடிக்காத பயங்க வாதி அவங்க தனோ” என்றேன்.அந்த  இரு வரிசையில் இருந்தவர்களும் விவாதத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அத நானும் அவர்களும் உணர்ந்தனர்.உடனே அவர் ” நீங்க ரெட் பிளாக்கா?”என்றார்.  அதுவரை ரசித்த் ஆமோதித்த அருகிலிருந்தவர்களோ நான் தீவிரவாதியா என பார்க்க் ஆரம்பித்தார்கள்.

நான் ரெட் பிளாக் இல்லை அப்படியே இருந்தாலும்  சொல்லறதுக்கு எனக்கு தயக்கம் இல்லை.சொல்லுங்க உங்க மார்க்சிஸ்டு அரசாங்கத்தால் ஏன் கோக்கை தடை செய்ய முடியவில்ல? ” அது சென்ட்ரல் கையில் இருக்கு நாங்க என்ன செய்ய முடியும்.
“அப்படியா சரி  பெரியாறு பிரச்சினை என்னங்க? என்றேன். ஆக்சுவலா கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்  அங்கே தமிழ் தன்ணீ கேட் தொல்ல பண்ணறாங்க. கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்னா கேரளாவுக்கு சொந்தமானதா,அப்படீன்னாஒரு காலத்துல சேர மன்னன் கேரளாவை ஆண்டான்னு சொல்லுறாங்க,அதுக்காக கேரளாவை தமிழன் சொந்தம் கொண்டாட முடியுமா. (அப்போதுபு.ஜ வில் பெரியாறு சம்பந்தப்பட்ட கட்டுரை வந்திருந்தது) .கையிலிருந்த புத்த்கத்தை எடுத்து புள்ளி விவரத்தோடு பெரியாறு அணை குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.அவர் வாய் திறக்க முடியவில்லை.

அது சரி அணையோட நீர் மட்டத்தை உயர்த்தலாம்ன்னு  supreme court  சொன்ன பிறகும் உங்களால சட்டசபையில  சட்டம் போட்டு தடுக்க முடியுது? ஆனா 1 லி கோக் கழிவால 8 லி நல்ல  தண்ணீ பாதிக்கப்படுது,விளை நிலமெல்லாம் அழிஞ்சு போகுது அதை சட்டசபை கூட்டி தடுக்க முடியாதா? . அட ஆமா என்றார்கள்  பெட்டியிலிருந்தவர்கள்.  “டைபி கோக் பேக்டரிய உடைச்சதா பெருமை பட்டீங்கன்னா அதே டைபி தானே த்மிழ் நாட்டுக்கு தண்ணீ தரக்கூடாதுன்னு மறியல் செஞ்சங்க? அங்க ஒண்ணு பேசற்து,கர்னாடகாவுல தமிழகத்துக்கு  நீர் தரக்கூடாதுன்னு சொல்லறது.இங்கேயும் தண்ணீ கொடுன்னு போராடுறதுன்னா? நீங்க எல்லாம் ஒரே கட்சின்னு சொல்லிக்குறீங்க எதுக்கு இந்த பித்தலாட்டம்.இப்படி இனவெறியோட செயல் படுற முதல்வரை மார்க்சிஸ்டு தன் கட்சியிலிருந்து நீக்கியிருக்கணுமா வேண்டாமா? நீக்க மாட்டாங்க ஏனா அது  போர்ஜரி பார்ட்டி ஆப் இந்தியா.

” நீங்க சொல்றது சரி தான் நாமெல்லாம் இந்தியர்கள் மொழி இன பேதம் இருக்கக்கூடாது ஆமா நாங்க தப்புதான் பண்ணறோம்”வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்கொண்டார்”. நான் தீர்க்கமாய் சொன்னேன் “தோழர் லெனின் சொல்லியிருக்கின்றார் கம்யூனிஸ்டுக்கு நாடு மொழி எல்லை கிடையாது என்று  நீஙக்ள் பேரை மாற்றிக்கொள்ளுங்கள்”கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்றேன். அவரை தன் வாயாலேயே சொல்ல வைத்தேன்  போர்ஜரி கம்யூனிஸ்டு என்று.

இந்த விவாதத்தின் போது என்னுடன் பயணம் செய்த சுமார் 15 பேர் எனக்கு அதிகமாய் உதவினார்,பல ஆங்கில வார்த்தைகளை கல்லூரி பேராசிரியர் சொல்லிக்கொடுத்தார்.,சேலத்திலிருந்து திருப்பூர்  நான் செல்லும் வரை  அந்த நான்கு” தோல”ர்களும் வாய் திறக்கவேயில்லை.
—————————————————————————————————————————————————————————–

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் . அவரிடம் நான் கேட்ட கேள்விகளை விடுதலை,சந்திப்பு போன்ற போலிகளிடம் இப்போது  கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள்.அந்த ரயிலில் வந்த நால்வராவது கொஞ்சம் நாணயமாக அரசியல் பேசினார்கள் .இவர்களோ தன்னை அறிவாளி என்று கூறிக்கொள்கிறார்கள் . வினவோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு அரசியல்  ரீதியாக பதிலளிக்க திராணியற்ற்வர்கள் எழுப்பிய முழக்கம் தான் மருதையன் பார்ப்பனன் என்பது.பார்ப்பனன் என்று சொன்னதாலே மனம் புண்பட்டு சித்ம்பரத்தில் கழன்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் மருதையன் பார்ப்பனன் . இதற்கு ஏற்கனவே தோழர் பதில் சொல்லிவிட்டிருந்தாலும் நாமும் சொல்வோம்  “அவரின் நடைமுறை வாழ்வில் பார்ப்பனீயத்தை இம்மி அளவாவது காட்ட முடியுமா”.அவரின் பேச்சில் உள்ள பார்ப்பனீய எதிர்ப்பை எந்த சி.பி.எம் காரனின் பேச்சில் கேட்க முடியும்?.

கிடாவெட்டு தடை சட்டம்,சிறீ ரங்கம் கோயிலில்  நுழைதல் ,சிதம்பரம் கோயில் பிரச்சினை போன்ற பல போராட்டங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை பறை சாற்றியிருக்கின்றன.போலிகளின் பார்ப்ப்ன தலைமயோ என்ன சொல்கிறது ” நான் முதலில் பிராமணன் அப்புறம் கம்யூனிஸ்டு”.போலிகளில் இனியும் புரட்சிகர அணிகள் இருந்தார்கள் எனில் பதில் சொல்லுங்கள்”தூய்மையின் வடிவம் என்று இப்போது பாராட்டும் நிரூபன் சக்கரவர்த்தியை பைத்தியக்காரன் ஆக்கியது யார்?,” “எம்ஜிஆர் செயாவுக்கு தரகு வேல பார்ப்பதயே வேலையாக வைத்துக்கொண்டு திரிவது யார்” இந்த கேள்விகளுக்கு உங்கள் தலைமை கண்டிப்பாய் பதில் தராது, நாங்கள் சொல்கிறோம் ஏனெனில் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

வினவு,கலகம், உள்ளிட்டோரின்  கேள்விக்கு உங்கள் தலைமை சொல்லும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம்  இருக்கின்றதா? புரட்சி கர அமைப்புகளின்  முகவரிகளை அளித்த் பின்னும் எதற்கெடுத்தாலும் மறைமுகத்தலைமை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது எதை காட்டுகின்றது? போலிகளில் உள்ள புரட்சிகரம் என சொல்லும் அணிகளே உங்களுக்கு அரசியல் சித்தாந்தத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.தனது பித்தலாட்ட கொள்கைகளை மறைக்க பயங்கரவாத பீதியூட்டுகிறார்கள். நீ£ங்களும் உடனே அமைதியாகிவிடுகிறீர்கள் இல்லையா. கடந்த வருடம் லயோலா கல்லூரியில் நடந்த எஸ் எப் ஐ  மா நாட்டில் சிவக்குமாரை  எதற்காக அழைத்தீர்கள் .R.S.S. கருத்துக்களை உமிழும் அவர் உங்களுக்கு தேனாய் இனிக்கிறார்.புத்த்ககண்காட்சியில் போய் பார்த்தீர்களா  மொட்டை சோவின் அல்லயன்ஸ் ல் கையெழுத்து போட்டு சீன் காட்டிக்கொண்டிருந்தார்.போலி விடுதலை சொன்னாரே
R.S.S.BJP ஐ நாங்கள் எதிர்க்கின்றோம் என்று எப்படி   சிவக்குமார்  உங்களுக்கும், R.S.S.க்கும் வேண்டப்பட்டவராயிருக்கிறார்.

போலிகளுக்கு  எதிராய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி எழுச்சியை  “வாதம்” என்று  அழைக்கின்றார்கள்.தோழர் ஸ்டாலினின் சோவியத்தை சிதைவுற்ற சோசலிசம் என்று  குறிப்பிடுகின்றார்கள்.ரணதிவேவோ தோழர் மாவோ அவர்களை போலி மருத்துவர் என்றார்.இந்த சீபிஎம் சீ பி ஐ போலிகளோ மந்திரம் போட்டே புரட்சியை சாதித்து விடு வார்கள் போலிருக்கின்றது.

சந்திப்பு தனது  தளத்தில் “மாமா வேலை செய்பவர்களுக்கு” என எழுதியிருக்கிறார்.அய்யா சந்திப்பு மாமா வேலை செய்வது யார்?
உங்களின் மாபெரும் தரகன் அரிகிஷன் சுர்ஜிட் செஇத காரியங்கள் என்ன? எப்போது பார்த்தாலும் செயாவின் தோட்டத்திலேயே வந்து கழுவிக்கொண்டிருந்தாரே அதை பற்றி என்ன எழுதுவீர்கள்  கூட்டணி வேந்தர் என்றா?  போலிகளின் இன்னொரு வாதம் எங்கல் பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஏன் சந்திப்பு உங்களை போல எங்களையும் முட்டாள் என நினைத்தீர்களா? சீபிஎம் பெர்ரை சொன்னாலே மக்கள் செருப்பை கழட்டும்போது அந்த பேரை யார்தான் சொல்வார்கள். ஆனால் ம க இ க வின் பாடல்களின் மெட்டை நீங்கள் பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரியும் .
கலகம் தயார் ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்பின் வேலைகளில் பார்ப்பனீயம் இல்லையென்றும் உங்கள் மாமா வேலைகளை பட்டியலிடவும் ,  நீ தயாரா? கருத்திலும் களத்திலும் உங்களைப்போன்ற போலிகளை ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எதிர் கொள்ளாமல் இல்லை.ஆனால் உங்களின் பரிணாம வளர்ச்சி எங்கு தான் போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.
பின்குறிப்பு : அந்த ரயிலில் வந்த நபர்களின் முகவரியோ கூட வந்தவர்களின் முகவரியோ தெரியாது. அந்த நாலு பேரின் முகவைரியை கொடு என்பார்கள் போலிகள்.
இதைதான் விவாதப் பொருளாய் மாற்றுவார்களே தவிர கண்டிப்பாய் நம் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள்.

கவிதைகள்-ஹேப்பி நியூ இயர்

திசெம்பர் 31, 2008

ஹேப்பி நியூ இயர்

ஒரு வாரம் முன்னிலிருந்தே
செல்பேசிகள்
சொல்லத்தொடங்கி
விட்டன ஹேப்பி நியூ இயர்……..

நடந்தவைகளை
மறப்போம் பத்திரிக்கைகளின்
காலச்சுவடுகள்
மெல்ல பதிந்து விட்டு
செல்கின்றன……

நடந்தவைகளை
மறக்கமுடியுமா என்னால்
நிம்மதியாய் உறங்கத்தான்
முடியுமா இனி
நடக்கப்போவதை நினைத்தால்……
கயர்லாஞ்சியின்
கொடுமைகள் எப்படி
மறையும்
அது மறையாத
வரை  என் கனவுகளின்
நடுக்கங்களும் குறையப்போவதில்லை……..

என் காதுகள்
இசையை கேட்காமலே
மூடிக்கொள்கின்றன……

எப்படி என்
காதுகள் திறக்கும்
பறையை அடித்ததற்காக
பீயை வாயில் திணித்தவன்
மேல்சாதியாய் நீடிக்கும்
வரை
என் காதுகள்எப்படி கேட்கும்
ஹேப்பி நியூ இயரை……

என் வாய்
குழறிக்கொண்டிருக்கின்றது

வெட்டுப்பட்டு
சாகும் போது மேலவளவு
முருகேசனின் குரல்
குழறியதை விட இன்னும் அதிகமாக
நான் எப்படி சொல்வேன்
 ஹேப்பி நியூ இயர்……..

என் பாதங்கள்
ஆட
மறுக்கின்றன பாதணிகள்
கக்கத்தில் ஏறுவது
நிற்காதவரை
என்னால் ஆட
முடியாது………

ரெட்டை டம்ளர்
பாலியல் வன்முறை
கொல்லப்படும் விவசாயிகள்
நெசவாளிக்கு
தூக்கு கயிறான கைத்தறி
இப்படி எதுவுமே
மாறவில்லை
ஹேப்பி நியூ இயரும் கூடத்தான்……

“மாற்றம்
ஒன்றே மாறாதது”

ஆம்
மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றத்தினை கொண்டுவருவோம்
மக்களோடு மக்களாக
சாவது தெரியாமல்
ஊளையிடுபவர்கள்
தொடரட்டும்
நாம் தொடங்குவோம்
நமக்காக
அங்கு
பலரின் முடிவுகள்
காத்திருக்கின்றன .

B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்

திசெம்பர் 28, 2008

B.P.O அடிமை .காம் பகுதி-3
அடிமைகளின் சொர்க்கம்

டிசம்பர் மாதம் என்றாலே  பீபிஓ கம்பெனிகளில் ஜாப் வரத்து வெகுவாக குறைந்து விடும்.கிறிஸ்துமஸ் முடியும் வரை அதிக ஜாப்கள் வராது. அந்த மாதம் கூட சரியான நேரத்துக்கு எங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்ய சொல்வார்கள்.

இன்னைக்கும் பக்கத்து டீம் ஜாப் ஐ  வாங்கி செய்யசொல்லிட்டானுங்க.மெதுவாக செய்ய ஆரம்பித்தேன் மணி பனிரெண்டுதான் ஆகுது .காலையில வந்த வுடனே டி.எல் கிட்டேசொன்னேன்”இன்னைக்கு பர்மிசன் வேணும்” பார்க்கலாம் ஜாப் வரத்தை பார்த்துட்டு சொல்லுறேன். கடந்த ரெண்டு மாசமா நான் பர்மிசனே போடவில்லை,இது தான் கடைசி வாரம் இப்போ போடலேன்னா 3 வது மாசம் ஆயிடும்.இன்னும் டி.எல் வரலை.அவரு பிரேக் போனாலே எப்படியும் 1 மணி நேரம்  ஆயிடும்.  கதைஅடித்துக்கொண்டு இருந்தோம்.

நான்  “எங்க தாத்தா ராஜராஜ சோழன்கிட்டே படைத்தளபதியா வேலைசெஞ்சாரு” கதை விட்டேன்.உடனே ஒருவ்வர் சொன்னார்”ந்£ங்க என்ன கம்யூனிட்டின்னு சொல்லுங்க உண்மையா பொய்யான்னு  சொல்லுறேன்”.
மிகவும் சாதரணமாக மற்றவர்கள் இருந்தார்கள். “எனக்கு என்ன சாதின்னு தெரியாது ஆனா ஒண்ணுமட்டும் தெரியும் பாப்பான் தான் தான் நம்மையெல்லாம் வைப்பாட்டி மக்களா மாத்தினான்.என்னோட சாதிய நான் சொன்னேனா  அவன் சொன்னது உண்மைன்னு ஆயிடும்” என்றேன்.அருகில் இருந்த சுரேஷ் “சும்மா அதையே சொல்லாதீங்க எந்த பாப்பான் உங்களை படிக்கவேண்டாமுன்னு சொன்னான்,திமிரெடுத்துப்போயி நீங்க படிக்கலேன்னா அதுக்கு அவனா பொறுப்பு அவன் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான் அவனை புடிச்சு ஏன் நோண்டுறீங்கதிமுக ஆட்சியில முதலியாருங்க எல்லாம் எல்லாம் வளந்தாஙளே அப்புடி எந்த பாப்பான் பணக்காரனா இருக்கான்? என வெடித்தார். “அப்புடியா எல்லாம் முதலியாரு பணக்காரனாயிட்டான்னு சொல்லுறீங்களே எங்க ஊரில் பக்கம் கஞ்சி தொட்டி திறந்தப்ப  கியூ வுல நின்னது முக்காவாசி  அவுங்க தான் திமுக ஆட்சியில இருந்தப்ப கூட சிலபேர் பொறுக்கி தின்னுறுப்பான் அதுக்காக முதலியார் சமூகமே முன்னேரிடுச்சா என்ன?சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன்  பாதிப்பேர் தன் கண்களில் எனக்கு ஆதரவாய் பார்வை பார்த்தனர். மற்றொரு பெண் ஊழியரோ “எங்க சாதியில கூட அப்ப்டி இருக்காங்கன்னு சொன்னா நான் கோபப்பட மாட்டேன் அப்படியும்கூட பன்னலாம்”சந்தடி சாக்கில் தான் ஆதிகக சாதி என்பதை எடுத்துவிட்டார்.  அதற்குள் மதிய உணவுக்கு சென்றோம்.

சாப்பிடு போது கூட கடுமையான விவாதம் நானும் சுரேஷ¤ம் பேச அருகிலிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களை எந்த வகையில முன்னேற்றத்தை  தடுத்தாங்க? .”தமிழகத்தில எதனை கிராமத்தில ரெட்டை குவளை முறை இருக்குன்னு தெரியுமா.வயதான தலித்தை கூட் மேல்சாதிகாரன் பயன் வாடா போடான்னு கூப்பிட்டு பார்த்து இருக்கீங்களா?”
எல்லாம் பார்த்து இருக்கோம் அப்புறம் என்னா இதுக்கு அவன் அங்கே இருக்கான் வேற இடத்துக்கு போக வேண்டியது தானே ரசிகர் மன்றம் வைக்கின்றது யார் ? கள்ளச்சாராயம் குடிக்கிறது யார் ? தலித்துங்க தானே முதல்ல தன் முதுகுல இருக்குற அழுக்க துடைச்சுட்டு வரசொல்லுங்க என்னமோ தலித்து எல்லாம் யோக்கியம் மாதிரி பேசுறீங்க,உமா சங்கர் என்ன சாதின்னு தெரியுமா அவரு படிச்சு முன்னேறுல இவனுக எல்லாம் சோம்பேறி”என்றார்.சற்று நேரத்துக்கு முன் எனக்கு ஆதரவாய் இருந்த கண்கள் எல்லாம் இப்போது சுரேஷ் பக்கம் சாய்ந்திருந்தது. நான் தீர்க்கமாய் சொன்னேன் எல்லோரு ரசிக்குறாங்களே இளையராசா அவரு ஊருக்கே ராசான்னாலும் பண்ணைபுரத்துல அவரு சொந்தக்காரனுக்கு ரெண்டாவது டம்ளர் தான் அதை விடுங்க மேல்சாதி மேல்சாதி
ந்னு பீத்திக்கிறீங்களே உன்னை ஏன் கோயிலுக்குள்ள மூலஸ்தானத்துக்குள்ள விட மாட்டேங்குறான் கேட்டா அது அவன் சுத்தமானவன் சொல்லுவீங்க ஏன் நீ உன் குடும்பத்துல யாருமே சுத்தம் இல்லையா ? இவ்வலவு ஏன் ஐஐடியில மாடுமேய்க்குற பயலுக வந்தா படிப்போட தரம் குறையும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துனானுங்களே அப்பமட்டும் உங்களோட எல்லா வாயையும் மூடிக்குறீ………….   நேரம் ரொம்ப ஆகிவிட்டது .கைகள் காய்ந்திருந்தது.
மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தேன் டி.எல்  பக்கத்து டீமிலிருந்து வாங்கி நிறய ஜாப் கொடுத்தார்.எல்லாம் முடித்தேன்.கைகள் வேலை செய்தாலும் மனமோ சரியா பதில் சொன்னோமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.என்ன செய்யலாம் ஆபிஸ்  விட்டவுடனே சுரேஷ் கிட்ட நிறய பேசனும் அவன் எப்படி யெல்லாம் கேள்விகேப்பாருன்னு மனதுக்குள்ளயே யோசித்து பதிலும் சொல்லிப்பார்த்தேன். இந்த யோசனையில் பர்மிஸன் கேட்டதை மறந்து போனேன்.மணி 4.30 ஆனது கிட்டதட்ட இது 6 து முறை சரியான நேரத்துக்கு கிளம்புவது. திரும்பி பார்த்தேன் சுரேஷ் சென்று கொண்டிருந்தார்.ஓடிப்போய் அவரோடு நடக்க ஆரம்பித்துவிட்டேன்.எதேச்சையை அவரின் கையை பார்த்தேன் கையில் கேடயம் வாள்  மற்றும் தனியாக மீன் பச்சை குத்த்ப்பட்டு இருந்தது.இந்த சின்னத்தை   எங்கேயோ பார்த்த   நினைவு, அவர் ஆரம்பித்தார்” நானெல்லாம் எங்க சாதிக்காக எத்தனை கேஸ் விழுந்திருக்குன்னு தெரியுமா தஞ்சாவூரில ஒருத்தனை ஓட வீட்டு குத்துனேன் எதுவும் வேண்டாமுன்னு விட்டுட்டு வந்துட்டேன்
எனக்கு பி சிகளை கண்டாவே புடிக்காது.எங்க ஊர் தஞ்சாவூர் மன்னாகுடி அடுத்த கிராமம் பிசிங்க அடிச்சா திருப்பி அடிதான்.சுத்தி 108 கிராமம் இருக்குது எங்க ஊர் மாதிரி எங்கேயும் இல்லை  நான் ஸ்டேட் கபடி பிளேயர் பக்கது ஊரில எங்க டீம் போனாலே பைனலில பிராடு பண்ணி தோக்கடிச்சுருவானுங்க தான் ஆதிக்க சாதியிடம் எப்படியெல்லாம் அடிப்பட்டதை விவரித்தார். கிண்டி ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்த படி பேசிக்கொண்டிருந்தோம்.என்ன தான் தீர்வு என்றேன் . நான் வரலை மற்றவனும் வரவேண்டியது தானே எல்லோரும் படித்தா சாதி ஒழிஞ்சுடும்” சொல்லிவிட்டு நேரமாச்சு என்ற படி கிளம்பினார்.

 நான் யோசித்தேன்”ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து இப்படி அம்மக்களுக்கே எதிராக பேச வைப்பது எது? ஒருவேளை அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டதால் இப்படி பேசுறாரோ.மறு நாள் காலையில் டீ பிரேக்கின்போது மீண்டும் ஆரம்பித்தது சுரேஷ் பேச ஆரம்பித்தார்”என்ன விவசாயம் பண்ணுறாங்க மாடர்ன் உலகத்துல அமெரிக்காவுல எப்படி முன்னேறுறானு பாக்குறத விட்டுட்டு  இன்னும் நிலத்தை புடிச்சு தொங்குறானுங்க என ஆரம்பித்து  நேத்து  போல்  தாழ்த்தப்பட்டோர் மீது சேற்றை வாரி இறைத்தார்.
 நானும் பதிலுக்கு பேசினேன் பிறகுதான் புரிந்தது இவன் பாதிக்கப்பட்டதால் பேசவில்லை அடிமைப்புத்தி அவனை பேச வைக்கின்றது
நாலு பேர் இருக்கும் போது தன்னை மேல்சாதியாக காட்டிக்கொள்வது தனியே என்னிடம் பேசும் போது தலித்தாக காட்டிக்கொள்வது என தன் பச்சோந்தி தனத்தை காட்டிக்கொண்டு இருந்தான். இவனின் தேவை எல்லம் தன்னை மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்பது தான்.

நான் வெறுத்துப்போனேன் இப்படியும்  ஒரு மனிதனா? பிரேக் முடிந்து வரும் போது நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் “New year celebration contest ” நடனம் பாட்டு என சகல கலைகளும் அடங்கியிருந்தன. டி.எல் சொன்னார்   எல்லாத்துலேயும் கலந்துக்கோங்க.என்னோட டீம் -ல் இது சம்பந்தமாக பேச ஆரம்பித்துவிட்டேன். நை ஷிப்ட்க்கும் ஓடிக்கும் அலவன்ஸ் தரதில்ல போட்டி வக்குறானுங்களாம் போட்டி.என் டீமிலிருந்த பெண்ணை கேட்டேன்” நீங்க கலந்துக்க போறீங்களா” ” நல்லா டேன்ஸ் பண்ணுவேன் ஆணா வேண்டாம்” என்றார்.
மூன்று நாட்கள் போனது  நடன போட்டிக்கு இன்சாஜ் இருவர் மணிக்கொருதரம் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர் அப்பென்ணிடம்”கலந்துக்கோங்க”.கடைசியாய் விபி வந்தார் என்ன கேர்ள்ஸ் யாரும் கல்ச்சுரல் புரோகிராம்ஸ்ல கலந்துக்கவே இல்லீயா ஏன்? எல்லாம் பேர் கொடுத்துருங்க சரியா ?சொன்னவுடனே பணிபுரியும் பெண்களில் பாதிபேர் பேரை கொடுத்தார்கள் என் டீமிலிருக்கும் பெண் உட்பட. மாலை 6 மணி ஆனது  திடீரென நிறைய ஜாப் வந்திருந்தது செய்து கொண்டிருந்தோம்.ஒருவர் லைட்டாக  என்னிடம் கேட்டார்” நீங்க இந்த புரோகிராம் பத்தி என்ன  நினைக்குறீங்க?”

மெதுவாய் சொன்னேன் ” சொறி நாய்கள் ஆடுகின்றன வெறி நாய்கள் வேடிக்கை பார்க்கப்போகின்றன” அவ்வளவுதான் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ” எப்படி சொல்லலாம் ,இதை ஏன் ஒரு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் ஆக நினைக்ககூடாது,டேன்ஸ் ஆடுற எல்லாரும் கீழ்த்தரமானவங்களா? அந்தப்பெண் சொன்னார்” நடனத்திறமை எங்கிட்ட இருக்கு இதை எப்படி கேவலமா சொல்லலாம் என்றார் மூக்கு விடைத்தபடி.

” அதாவதுங்க நீங்க எங்க வேணும்னாலும் ஆடலாம் இங்கே எதுக்கு ஆடறீங்க உண்மையாலுமே நடனத்து மேல அவ்வளவு பற்று அப்படீன்னா நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்களா. நீங்க சொல்லுற  எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ்  அப்படீங்குறது இப்ப எதுக்கு பயன் படுதுன்னு சொல்லுங்க மற்றவரிடமிருந்து தன்னை வித்யாசப்படுத்தி காட்டறதுக்குதானே.அதுக்கு பல வழிமுறை இருக்கு எந்த வழியா தன்னை வெளிப்படுத்துறீங்க என்பதுதான் முக்கியம்.நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்கன்னா யாரும் உங்களை கேலிப்பொருளா பார்க்க மாட்டாங்க ஒருவேளை போலீசு அடிகூட கிடைக்கலாம் நீங்க் தயாரா.ஆனா இங்க எப்படி?  ஓடி பார்த்தா பணம் கிடையாது, நைட் ஷிப்ட்ல food கிடையாது தினமும் ஓ.டி ஓ.டி ன்னு நம்மள ஓடவச்சுட்டானே அதுக்கு ஆடறீங்களா அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?ஸ்கூல்,காலேஜ்ல ஆடறதுக்கும் ஆபீஸ் ல ஆடறதுக்கும் வித்யாசம் இருக்கு நீ நேரடியா பாதிக்கப்படுறயா இல்லையா? இதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லி தான் ஆடறீங்களா. அப்படித்தான் மத்தவங்களுக்காக என்னை எல்லோரும் ரசிக்கணும்கறதுக்காக ஆடுவேன்னு சொல்லுங்க அதை விட்டுட்ட்டு  நடனத்திறமை அது இதுன்னு கதை அளக்காதீங்க.ஆனா ஒண்ணு இங்க நீங்க ஆடறது மூலமா தொழிலாளியான நீங்க கேள்வி கேட்குற உரிமையைஇழந்து அடிமையா மாறுவீங்க என்பது மட்டும் நிச்சயம்.”

ஒரு வாரம் கழிந்தது  function க்கு நாளும் இடமும் குறித்துவிட்டார்கள்,ஆரம்பத்தில் போககூடாது என நினைத்த நான் கோமாளிகள்
என்னதான் செய்கிறார்கள் என்பதற்காகவே சென்றேன். நான் போவதற்கு பல  நேரம் முன்னே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள், நான்  போகும் போது  சுரேஷ் ஆடிக்கொண்டு இருந்தார்.அடுத்து அந்தபெண் கும்பலாக ஆடியது.ஜோக் என்று சொன்ன படி எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் உம்மனாமூஞ்சியாகவே இருந்தேன்.இறுதியாக பேசிய பிரசிடெண்ட்”அடுத்த வருசம் நிறய ஜாப் வரும் எல்லோரும் அதிகமா ஓடி பார்க்கவேண்டிவரும் இந்த function  ஒரு புத்துணர்வு தான் இந்த வருசம் வேலை செஞ்ச மாதிரி அடுத்த வருசம் 10 மடங்கு வேலை செய்யனும் சரியா லெட்ஸ் என்ஜாயென்றார்”  வுடனே விசில் பறக்க அடுத்த  பாட்டு ஆரம்பித்துவிட்டது.அவன் வெளிப்படையாகத்தான் சொல்கிறான்.இவர்கள் தான் தொழிலாளி என்பதை மறந்து அடிமைகளாய் வரிசையில் நிற்கிறார்கள்.அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அவசராவசரமாய் வெளியேறினேன்.ய்யரு என்னை கவனிக்கவில்லை.அடிமைப்போதையில் ஆடிக்கொண்டிருப்போரால் எதையும் கவனிக்க முடியாது ஆண்டானின் கட்டளையை தவிர.

I.T-ன் ஆணாதிக்கம்

திசெம்பர் 24, 2008

it1I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்

 நம் சமுதாயத்தில்  பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை  அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து  உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்””வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.

“ஹவுஸ்  நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள்  தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ  ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான்  நாங்க இருக்கோம்” என்று.

உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது,அந்த ஒலியில் பெண்களின் மெல்லிய  விசும்பல் சத்தம் மறைந்து போகின்றது.

ஐடி,பிபீஓ-ல் சங்கம் கட்ட உரிமை யில்லாத காரணத்தால் இங்கு மற்ற தொழிலகங்களை போலன்றி தொழிலாளர்கள் உரிமைகளை பேசாது பெருமைகளையே பேச வேண்டும்.எதையும் பழகிக்கொள்,பழக்கிக்கொள் இது தான் ஐடி,பிபீஓக்களின் தார்மீகக்கட்டளை.எப்படி பள்ளி கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் குறைவாயிருக்கின்றார்களோ அதைப்போலவே ஐடி,பிபீஓ லும் இருக்கின்றது.எப்படி ஒரு ஆண்பள்ளி,கல்லூரிகளில் பெண்ணை நுகரத்துணிந்தானோ அதையே இங்கேயும் தொடர்கின்றான்.
ஐடி,பிபீஓ-ல் பெண்ணுக்கு உரிமையெல்லாம் கிடையாது. இருக்கும் முக்கிய கடமை “மற்றவர்கள் நுகர்வதற்கு தன்னை தயார் செய்வதே. இனி கதைக்குள் சென்று மீண்டும் கட்டுரையை தொடருவோம்.
—————————————————————————————————————————————————————————–

நல்லதூக்கம் ஹாஸ்டல் ரூம் மேட் எழுப்பினாள்”ஏய் எந்திரிடீ மணி 7.30 ஆயிடுச்சு”. .பஸ் 8.30 க்கு ஒண்ணு இருக்கு அதை விட்டா 9 மணிக்கு தான் பேரு வைச்சிருக்கானுங்க ஐடி ஹைவே என்று என முனகியபடியே எழுந்தேன்.கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் .அப்பா அம்மவிடம் போனில் இரவு 2 வரை சண்டை”என்னா எப்ப பார்த்தாலும் ரொம்ப அடம் புடிக்கற மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து திங்க கிழமை வராங்க  நீ லீவு போட்டுட்டு ஊருக்கு வா,ஏண்டி நீ கல்யானம் பன்னிக்குவியா மாட்டியா”இப்படி வசைகள் வாரத்துக்கு இருமுறையாவது நடக்கும்.அடுத்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பேசுவார்கள். நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு வருச மாகுது காலேஜ் முடிந்தவுடனே வந்தேன்.அண்ணன்  இங்கே தான் எச் சி ல்-ல வேலை செய்யறான்.கடந்த ஆறு மாசமா அப்பாவும் அண்ணனும் மாறி மாறி “சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணு” நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஒரு வேளை  அண்னனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ என்னவோ என்ன கல்யாணம் பண்னச் சொல்லறான்.வாரத்தில் ஆறு நாள் வேலை ஞயிறு மட்டும் தான் விடுமுறை காலையிலேயே அண்ணன் போன் செய்வான் இன்னைக்கு எங்கேயெல்லாம் போற சொல்லு சினிமாவுக்கா நான் கூட்டிடு போறேன் ,கடைக்கா நான் கூட்டிட்டு போறேன்,இன்னைக்கு நீ போகாதே நான் வெளிய போறேன்.சொல்லாமல் எங்கேயாவது சென்று விட்டு வந்தால் எங்கே போனேன் என்று லிஸ்ட் ஒப்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் பாசம் என நினைத்தேன் பின்னாளில் தான் தெரிந்தது அவன் தான் இலவச போலீசு என்று.

குளித்து விட்டு சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு தெருவில் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்போட்டேன்.வழக்கமாய் தெரிந்த முகங்கள் தெருவில் பட்டன. நின்று கொண்டிருந்த பஸ்-ல் ஏறினேன்.மகளிர் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர். நடத்துனர் எதுவும் பேசாது டிக்கெட்  கொடுத்துக்கொண்டிருந்தார்.யாராவது கேட்பார்கள் என்று பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.யாரும் கேட்கவில்லை பேருந்து நகரத்தொடங்கியது  அப்படியே என் நினைவுகளும்.இந்த கம்பெனியில் சேர்ந்து 1 வருடம் இருக்கும் அடிக்கடி மிஸ்டு கால் வருகின்றது.கால் வந்தவுடன் எடுத்து ஹலோ என்றதுமே கட்செய்கிறார்கள்
போன மாதம் ஒரு கால் அவன் என்னோடு வேலை செய்யும் சீனியர் அவனிடம் தான் சந்தேகங்களை கேட்பேன் .”ஹலோ “என்றேன்.
நான்தான் முகில்   என்றபடி பேசிக்கொண்டிருந்தான் தேவையில்லாமல். இறுதியில் பயந்த படியே ” நான்………….” என்றான் . நான் “இப்படியெல்லாம் பேசறமாதிரியி ¢£ருந்தா என்கிட்ட பேசாதீங்க ” அவனோ தொடர்ந்து கொண்டே இருந்தான் டக்கென போனை ஆப்  செய்தேன் .எனக்கு பயமாய் இருந்தது நாளைக்கு ஆபீசில் என்ன பேசிக்கிட்டு இருப்பானோ?.அடுத்த நாள் முதல் அவன் என்னிட நேராய் பேசாது  அவனின் நண்பர்களிடம் பேசுவது போல ஜாடையாக பேசி வந்தான்…..
யாரோ நெருக்குவது போலிருந்தது ஒரு எருமை என்மேல் உரசிக்கொண்டிருந்தான். நான் முறைத்தபடியே  நகர்ந்து சென்றேன்.அந்த எருமையோ வெற்றி பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தது.அதற்குமேல் அவனின் முகத்தை பார்க்கவில்லை.பஸ் ஸ்டாப் வர பொறுமையாக  இறங்கினேன்.பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டு படிக்கட்டை நோக்கி வரும் போதே  சிரிப்புக்களும் கேலிகளும் அதிகமாகிவிடும். நாங்கள் எதையும் கேளாமல் செவிடர்களாய்தானிருக்க வேண்டும்.சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.

அலுவலகத்துக்குள் வந்தேன் ஹாய் சொல்லிவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.  சரியாக ஒரு மணி நேரம் ஆன உடன் சிலர் ஒவ்வொரு வராய் வந்து அருகிலுள்ளவரிடம் பேசுவது போல ஆபாசக்கதைகளையும்,அந்தப்பொண்ணை பார்த்தேன் என்று கதைஅளந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவுக்கு பெண் ஊழியர்களோடு உணவருந்தினேன்.சினிமா முதல் எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம்.மறந்து மருந்துக்குகூட எங்களின் பாதிப்புக்களை பேசியதில்லை.மீண்டும் வேலை தொடர்ந்தது.சுமார் ஆறு மணிவாக்கில் பக்கத்து டீம் சூப்பர் வைசர் வந்தார் அருகில் உட்கார்ந்துக் கேட்காமலேயே சாப்வேர் டவுட்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்  பிறகு தேவையில்லாமல் மொன்னை ஜோக்குகளை அல்ளிவிட்டு சிரித்து கொண்டு இருந்தார்.மணியோ 7.30 ஆனது “என்னங்க நீங்க கிளம்புலயா?” என்ற படி அவர் கிளம்பினார். இது வாரத்துக்கு 3 முறையாவது நடக்கும்.அலுவலகத்தில் இப்படி பல பெண்களிடத்தில் தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு திரிபவர்கள் ஆண்களிடத்தில் பெருமைக்குரியவர்களாகின்றனர். நாங்கள் இப்படி சூப்பர் வைசர் போல மேலதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் பஸ்ஸில் செய்ததை போல் விலகிக்கூட செல்லமுடியாது சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பஸ்ஸில் இருந்த பொறுக்கிகளால்  எங்களை சிரிக்க வைக்க முடியாது எத்தனை ஜோக்குகளை சொன்னாலும்.மேலதிகாரிகளிடம் சிரிப்பே இல்லை யென்றாலும் கூட சிரித்துதான் ஆக வேண்டும்.இவர்களின் தூண்டிலில் மாட்டிய, தானாய் மாட்டிக்கொள்கிறவர்கள் யாரும் எப்பொதும் பெண்களாகிய எங்களுக்குள் இதைப்பற்றீ  பேசியதே இல்லை.பேசவும் முடியாது.அதை பேசினால் கூட இந்த சமூகம் எங்களை குற்றவாளியாக்கிவிடும்.பிரச்சினையை எதிகொள்ளும் நாங்கள் அமைதியாக பொறுமையாக  ஊமையாகத்தான் இருக்கின்றோம்.எங்களை கேலி செய்யும் போது நாங்கள் வாய்மூடி இருப்பது போலவே நன்றாக பழகு ஆண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.எங்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது ஆண்களின் உரிமை ஆதிக்கம் செய்வது,பெண்களின் உரிமை அமைதியாய் இருப்பது.
————————————————————————————————————————————————————————
 

ஆணாதிக்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது  குறிப்பாக ஐடி பிபீஓவில் பெண்கள் மூன்று நிலையாக  வகைப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆணாதிகத்தை எதிர்கொள்ளாமல் விலகிச்செல்லல்,ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொல்லல்,அதை எதிர்த்து போராடுவது-இது மிகசொற்பமே.முதல்வகை பெண்கள் தான் இங்கு ஆகப்பெரும்பாலும்,சக ஊழியன் அனாகரீகமாக நடந்துகொண்டான் என்பதை வெளிப்படுத்துவதில்லை,இதனால் தங்கள் மானம் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.அதற்காக அவர்களை  குற்றம் சொல்ல முடியாது.கற்பு என்பதற்கான வரையரையை ஆணாதிக்கம் விரிவு படுதிக்கொண்டே போகின்றது.

பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது  கோபம்  வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளல்-

இவ்வகைப்பெண்களிடம் பெண்ணுரிமை பூத்தா குலுங்குகிறது? இது பென்ணடிமைத்தனத்தின், ஆணாதிக்கத்தின் மறு முகம்.ஒரு ஆண் எப்படி மற்றவரை கவர்வத்ற்காக திரிகின்றானோ அதைப் போலவே இப்பெண்ணும் திரிகின்றார்.தொடர்ச்சியான ஆணாதிக்கத்தின் தாக்குதல்கள் படிபடியாக இனிக்க ஆரம்பித்து விடுகின்றது.அதற்கு ஏற்ற படி த்ப்பாமல்  தாளம் போடுகின்றனர்..இங்கும் ஆண்களின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக்கொள்வதால் விசும்பல்கள் எழாது பெருமையே கொள்கின்றனர்.இதையே சாக்காக வைத்து ஆணாதிக்க வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்”இவளுங்க கையில பனம் வந்த வுடனே எப்படி ஆடறாங்க ,இதுக்குதான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கணும்.”
ஐடி,பிபீஓ -ன் இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட  நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது. 

இப்படிப்பட்டவர்களின் பெண்ணுரிமை என் முன்னால் பலமுறை அரங்கேறியிருக்கின்றது.

அதில் ஒன்று
HR ஆக பணிபுரியும் அவர்  ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டவர், ஏதாவது ஒரு function எனில் தன் பதவியையும் மறந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.சனிக்கிழமையெனில் free dress codeஅலுவலகம் அனுமதித்திலேலே முடிந்த அளவுக்கு ஆபாசமான ஆடையை அணிந்திருந்தார்.சீனியர் அக்கவுண்டன்ட் சொன்னான்”இங்க பாரு……… இது மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தா ரெண்டு புள்ள பெத்த எனக்கே ஒரு மாதிரி இருக்கு”.இதைக்கேட்ட எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது.அப்பெண்ணோ தனக்கு அங்கீகாரம் கிடத்தமாதிரி  சிரித்தார்.

 

இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்

காங்கிரஸ் என்றொரு கட்சி

திசெம்பர் 22, 2008

congகாங்கிரஸ் என்றொரு கட்சி
கருமாதி இழவுக்கு காலம் தான் வருமா?

1991,மே மாதம் 22-ம் தேதி காலை 6 மணி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓட்டினேன் கையில் பாத்திரத்தோடு. பாலை ஊற்றிய படியே  பால் காரர் பக்கத்துவீட்டுக்கார அம்மாவிடம்  சொன்னார் “ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்”.எனக்கு ஒரே சந்தோசம் ராஜீவ் செத்ததை எங்கள் வீட்டில் யாரும்  பொருட் படுத்தவே இல்லை.எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது காலையிலிருந்து மாலை வரை அப்படி ஒரு ஆட்டம் எனக்கு தேவையெல்லாம் ஒரு நாள் விடுமறை. அப்போது நான் சிறுவன்.டிடியில் பாத்திமா பாபு கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் யாரும் அழுததாய் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் தான் தெரிந்தது “ராஜீவிற்காக இந்தியாவே அழுதது” என்று. அப்படி அழுததாய் எங்களுக்கும் ஞாபகம் இல்லை.

கடந்த வாரம் சீமான்,கொளத்தூர் மணி,மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு,காங்கிரசோ வரவேற்பு “திருமாவளவனையும் கைது செய்”என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து விடுதலை சிறுத்தைகளிடம் செருப்படி வாங்கி  பிளிறிக்கொண்டிருக்கின்றார்கள்.பார்ப்பன ,சூத்திர பத்திரிக்கைகளோ “சத்திய மூர்த்தி பவன் போலீசார் கண்முன்னே தாக்கப்பட்டது” “காங்கிரசார் தாக்கப்பட்டனர்”.”தங்க்க”பாலுவோ புனிதமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை எந்த காங்கிரஸ் காரனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்” பேரரசர் சொல்லுவதற்கு முன்னேயே ம்ற்ற அரசர்கள் சீமான்,திருமாவின் பொம்மைகளை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்க இல்லேன்னா திமுக ஆட்சியே இல்லை தெரியுமா? என தமிழக சாலைகளில் சீன் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.சாலைகளில் மறியல் செய்த  வெள்ளை வேட்டிகள் தனது பின்புறத்தில் அழுக்கு படிய வைத்து விட்டர்களே  என்ற கோபத்தில் உளறுகின்றன.இளங்கோவன் பாலுவும்  சொல்வதை போல சத்திய மூர்த்தி பவன் புனிதமான இடமா,அங்கே நடந்த தாக்குதல் வரலாற்றுப்பிழையா?

சத்தியமூர்த்தி பவன் என்பது துரோகத்தின் கலங்கரை விளக்கம். மகாத்மாகாந்தி முதல் செத்துப்போன ராஜீவ் காந்தி வரை ஏன் தற்போது குட்டிகுட்டி தலைவர்களாக பரிணமிக்கும் எல்லோரும்  துரோக கம்பெனியின் பங்கு தாரர்கள்.இந்த துரோக கம்பெனியின் தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்திபவனுக்கு விழுந்த செருப்படிகளும் அர்ச்சனைகளும் கணக்கிலடங்காது.இந்திய நாட்டை எப்படி தொடர்ந்து தம் காட்டுப்பாட்டில் வைப்பது என்ற பிரிட்டிசாரின் கவலைக்கு மருந்தாய் வந்தவர் தான் மஹாத்மா. நீங்கள் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கல் எப்போதும் உங்கள் அடிமைதான் என  உறுமியவர்தான்மஹாத்மா.மாவீரன் பகத்சிங்கை தூக்கில் எப்போது போடுவது என வெள்ளையர்கள் கேட்டபோது,லாகூர் மானாட்டுக்கு முன்னே போடுங்க என்று தன் தேச பக்தியை உலகறியச்செய்தார்.ஒவ்வொரு முறையும்  போராட்டத்தை ஆரம்பித்து விட்டு அது மக்களின் கைக்கு சென்ற வுடனே உடனே வாபஸ் வாங்கி ” ,வெள்ளையன் அடித்தால் வாங்க வேண்டும் திருப்பி அடித்த மக்களை (சவுரி சவுரா) காட்டுமிராண்டிகளென்று கண்டித்தார் இந்தப் “பீ”தா.அந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மஹாத்மா செய்த மாபெரும் துரோகம் தான் அவர் கண்டு பிடித்த அரிசன்.உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை தே…….மகன்களாக்கியது தான் தேசத்தந்தையின் செயல்.ராமராஜ்யமும் பசுகொல்லாமையும் இரு கண்கள் என்ற மஹாத்மா மாபெரும் பித்தலாட்ட பேர்வழி. எதற்கெடுத்தாலும் ராம ராஜ்யம் தான் என் கனவு சொல்லிக்கொண்டிருந்தார்.உடனே மாபெரும் பகுத்தறிவாளர் குத்தூசியார் அவர்கள் ராமனின் லீலைகளை அவிழ்த்து விட அந்த ராமன் வேற நான் மனசிலே  நினைச்ச ராமன் வேற என்றார்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் மஹாத்மாவும் அவரது சத்தியசோதனையும் உணமையென்று ஏனென்றால் அவர் தேசப்பிதா.

மகாஆத்மாவுக்கு பிறகு ரெண்டு காந்திகள் மக்களின் உயிரை எடுத்தார்கள் அம்மாளும் பையனும் சோடியாக.அம்மாளுக்கு பஞ்சாப்,பையனுக்கோ ஈழம்.இருவரின் கையிலும் பஞ்சாபும் ஈழமும் பிழியப்பட்டன.1983-ல் பொற்கோயிலுக்குள் புகுந்த ராணுவம்சாமி கும்பிடவந்த சீக்கியர்களையெல்லாம்  சொர்க்கம் அனுப்பியது.பஞ்சாபின் இனப்போராட்டம் துப்பாக்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்காண சீக்கியர்கள்  வரன் முறையின்றி கொல்லப்பட்டனர்.எல்லாவற்றுக்கும் இப்போது போலவே இந்திரா பதில் சொன்னார் கச்சிதமாய் “அவர்கள் தீவிரவாதிகள்”இந்திரா காந்தி கொலைக்கு பின்னோ  ராஜீவ் சீக்கியர்களின்மேல் அளவற்ற தாக்குதல் தொடுத்தார்.அரச கலவரங்களை ஏற்படுத்தி சீக்கியர்களை கொன்று விட்டு மவுனமாய் பதில் சொன்னார்”ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும்”.ஒரு இந்திரா  ஆலமரம் செத்துப்போன மக்கள் எல்லாம் அதிர்வுகளா?

தன் கட்டுக்குள்  கொண்டுவர போராளிக்குழுக்களை முறைகேடாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்திய ராஜீவ்.இலங்கை மண்டியிட்ட வுடனே IPKF என்ற அமைதிப்படை இலங்கை அனுப்பினார்.ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு எதிராக லட்சக்கணக்காண இந்திய ராணுவம் தனது முப்படைகளோடு முகாமிட்டது.சிங்கள மற்றும் தமிழ்மக்களை கொன்று குவித்தது.தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.அதற்குதான் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.அதுவே ரா குல் காந்தி வரை பிரதமர் அதிகாரத்திற்கு வருவதற்கான தகுதியாகிவிட்டது.

இப்போது அலறுகிறார்களே அய்யோ எங்கள் தலைவன்  எங்கள் தலைவன், சத்திய மூர்த்திபவனை தாக்கிய தேசத்துரோகிகள் என்று என்று.செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டை  அரிவாளோடு  மண்டையை பிளந்தார்களே,மூப்பனார் தமாகா ஆரம்பித்த போது அம்மணமாக்கி துரத்திவிட்டார்களே அப்போதெல்லாம் எங்கே போனது இந்த முழக்கம்.கர்னாடகா,கேரளா,ஆந்திராவில் காங்கிரசு அரசுகள் இருக்கும் போது ஏன் தன்ணீர்பிரச்சினையின் போது சொன்னார்கள்”3 மாநிலம் மட்டும் போதாது இந்த தமிழகமும் எப்போது காங் வசம் வருகிறதோ அப்போது தான் காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சினை தீரும்”
.இப்படி எந்த ஒரு தமிழகப்பிரச்சினைக்கும்  “அவர் நல்ல முடிவைஎடுப்பார் என நம்பிக்கை இருக்கின்றது” எனும் பெருச்சாளிகள்.இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் எனில் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவு தரவேண்டுமெனில் அது கண்டிப்பாய் அமைதிப்படையை அனுப்பியது சரியா தவறா என்ற விவாதத்தில் தான் முடியும் .அந்த முடிவில் ராஜீவ் கொல்லப்பட்டது சாதாரணமாகிப்போகும்.பிறகு யார் பேரை சொல்லி ஆட்சியைப்பிடிப்பது.மீண்டும் யாராவது செத்தால் தான் ஆட்சியை பிடிக்கக் முடியும். .அது தான் ஒரு முத்திரை அதன் மேலேயே கைவைத்த்தால் நோகாமலா இருக்கும்.
தங்க பாலு சொல்கிறார்” பாஜக கூட இப்படி செய்ததில்லை”எப்படி செய்வார்கள் காங் காட் ஒப்பந்தம் அமுல் படுத்திய போடு தான் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.ஏன் தற்போது நாட்டை அடிமையாக்கும் அணு சக்தி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது ராமர் பால பிரச்சினையை கையிலெடுத்தார்கள்.இரண்டு பெயரும் தான் வேறே தவிர உள்ளே இருப்பது அதே பார்ப்பன பாசிசமும் அமெரிக்க அடிமைப்புத்தியும் தான்.
ராஜீவ் என்ற அந்த முத்திரை சிதைக்கப்படவேண்டும்  துரோகத்தின் வரலாறான காங்கிரஸ்  விரட்டப்படவேண்டும்.காங்கிரஸ் குட்டிதலைவர்களுக்கு விழுந்த செருப்படி  காங்கிரசுக்கும் விழவேண்டும்.செத்துப்போனவன் என்பதால் ஹிட்லர் யோக்கியனாகிவிடுவானா?ஒரு பாசிஸ்ட் செத்தப்பின்னும்  உயிர்த்தெழுகிறான் அவனை அம்பலப்படுத்தாத வரை.அதனால் தான் காந்தி தேசப்பிதாவாகவும் பஜாரி அம்மாவாகவும்  நீட்டிக்க முடிகிறது.அதற்கான முயற்சியை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகஇக வின் பாடல்”காங்கிரஸ் என்றொரு கட்சி அதன் கருமாதி இழவுக்கு காலம் வந்தாச்சு” அமைதியாய் இருந்தால் மக்களுக்கு அவர்கள் கருமாதி வைத்து விடுவார்கள்.

சீமான் – மணி கைது

திசெம்பர் 20, 2008

seeman-copyசீமான் –  மணி  கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும்  வீடணர்கள்

நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி  ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட  விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும்  உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும்  இந்தியா தமிழகத்தில்  தன்னை அம்பலப்படுத்தும்  நபர்களை  தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே  உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம்  சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.

யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே  தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில்  நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக  கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.

இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை  தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும்  சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.

 

பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு  இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்  யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.

 

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி  காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து  காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம்  வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.

வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம்  சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின்  அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக  சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு   அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ்  ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை  பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா  காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.

இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை  நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.

செருப்பின் புனிதம்

திசெம்பர் 15, 2008

punithamசெருப்பின் புனிதம்

நேற்று வரை
நினைத்திருந்தேன்
புனிதங்கள் புதைக்கப்பட
வேண்டியவை என்று…..

எனக்கு
சொல்லப்பட்ட
புனிதமெல்லாம்
பறையனை ஒடுக்கும்
நால்வர்ணம்
சங்கரனின்
மலங்கழித்த இலை
பஞ்சைக்கு கிடைக்காத
அதிகாரம்
கேள்விகளுக்கு
பதில் சொல்லும்
துப்பாக்கியின் ரவைகள்
வறுமையின் வயிற்றை
பார்த்து எக்காளச்
சிரிப்புகள்
மூடிய ஆலையின்
முன்னால்
உண்ணாவிரதத்தில்
அமர்ந்திருந்த
தொழிலாளிகள்
“ஐந்து விரல்களும்
ஒன்றாய்
இருக்கமுடியாது”
 எப்போதும்
புனிதங்களுக்காக
வக்கீல்கள்
வாதாடிக்கொண்டே
இருந்தனர்….

அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
அழிக்கப்படவேண்டியவை என்று….

பாசிசத்தை புனிதத்தால்
பாயாசமாக்கி
தந்தன பத்திரிக்கைகள்
அதிகாரத்தை
ஆப்பம் என்றனர்
செய்தியாளர்கள்
ஒவ்வொரு முறையிலும்
என் கோபத்துக்கு
பதிலளித்தார்கள்
அது தான் விதி
அது புனிதம் என்று…..

அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
மட்டுமல்ல புனிதர்களும்
ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்று….
ஈராக்கிய
எண்ணை வயல்கள்
பற்றி எரிய
அம்மண்ணெங்கும்
ரத்தத்தால்
சிவந்திருக்க
அமெரிக்க நாய்களால்
அம்மணமாய்
வைக்கப்பட்ட
கைதிகள்
சிதைக்கப்பட்ட
தாய்மார்கள்
அவன்
பெருமையாய்
சொன்னான்
” அப்படி செய்திருக்க
மாட்டார்கள்
நான் அறிந்த அமெரிக்கர்கள்
புனிதமானவர்கள்”….
ஒரு
புனிதர்
புனிதத்தால்
அந்த
புனிதக்காட்சியை
செய்தார்….

இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
 இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…

பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.

செங்கொடி

திசெம்பர் 13, 2008

வேர்ட் பிரஸ்-ல் புதிய வலையை தொடங்கியுள்ள

தோழர்

செங்கொடியை கலகம்  வாழ்த்திவரவேற்கின்றது

http://senkodi.wordpress.com/

கிடைப்பதனைத்தையும்
ஆயுதமாக்குவோம்
பட்டொளிவீசி பறக்கட்டும்
செங்கொடி
பார்ப்பனீயத்தை
வேரறுக்க
மறுகாலனியை
உடைக்க
வர்க்கப்போரில்
களம் புகுவோம்.

டிசம்பர் 6-தொடரும் பார்ப்பன பாசிசம்

திசெம்பர் 6, 2008

dec6_copy

மசூதி இடிக்கப்பட்டது
முசுலீம்களின் மண்டைகளோடு…

அம்பேத்கர் நினைவு நாள்
புதைக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோரின்
உரிமைகளோடு சேர்த்து……

பூத்து குலுங்கும் மாபெரும்
சனநாயகம் வாழ்க இந்தியா
ஜெய் ஹிந்த்.

மும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?

திசெம்பர் 3, 2008

mumbai-copyமும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?

மும்பாயில் கடந்த 26-ம் தேதி நடந்த இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம் தேசம் முழுவதும் கிளறி விடப்பட்டு இருக்கின்றது.”பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக போட் மூலம் தீவிரவாதிகள் வந்தனர்.அங்கிருந்து சென்று ஓபராய்,தாஜ், நாரிமன் போன்ற கலாச்சார பெருமை மிக்க வெளினாட்டினருக்காகவே சேவை செய்து கொண்டிருந்த பாரம்பரிய சின்னங்களை  குறி வைத்து தாக்கி,9 அமெரிக்கர்கள் உட்பட சுமார் 150 பேர்  கொல்லப்பட்டனர்.NSG படை வீரர்கள் தான் இந் நாட்டின் பாரம்பரியமிக்க வீரத்தை காட்டி மானத்தை கட்டிக்காத்தனர்.” இவை தான் ஊடகங்களில் வந்த செய்தி.

தாக்குதல் நடந்து 4 நாட்களாகியும் பத்திரிக்கைகள்,t.vக்கள்” நாடு இப்படி அவமானப்பட்டு விட்டதே ,அதுக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாய் இருக்கின்றன.இத்தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்,மகாராட்டிர முதல்வர் ,துணை முதல் வர் ஆகியோர் பதவி விலகி யுல்ளனர்.ஆனால் ஊடகங்களோ “இது பத்தாது இன்னும் வேணும்” என ஒப்பாரி வைக்கின்றன நம்மையும் ஒப்பாரி வைக்க சொல்கின்றன.பார்ப்பன ஊடகங்கள் வழக்கம் போல தொடர்ந்து தலையங்கங்களை தீட்டி வருகின்றன.இத்தாக்குதலுக்கு காரணங்களையும் தீர்வுகளையும் வைக்கின்றன.அதன் படி செயலிழந்த  நிர்வாகம்,பொறுப்பற்ற தலைமை போன்றவையே இதற்கு காரணம்,தீர்வுகளாக தனி புலனாய்வு அமைப்பு, நாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு,தயவு தாட்சண்யமின்றி விசாரணைக்கு உட்படுத்துதல் ஆகியன வைக்கப்படுகின்றன.மேலும் பங்கு சந்தை சரிவு முதல் சுற்றுலா ஹோட்ட்ல் வளர்ச்சி பாதிப்பு வரை “எல்லவற்றுக்கும் பயங்கரவாதமே காரணம் , நாட்டை முன்னேற்ற பயங்கரவாத்தை  வேரறுக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே வழி பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் அல்லது அங்கே உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.அமெரிக்கா எப்படி தனது “இறையாண்மையை காக்க ஆப்கன் மீது போரிட்டதோ அது போல இந்தியாவும் போரில் இறங்க வேண்டும்” என்ற பார்ப்பன கோட்பாட்டினை பொது கருத்தாக்கும் பணியில் பத்திரிக்கைகளும்,பண்டாரங்களும் ஈடுபட்டிருக்கின்றன.

பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும் என்பதில் நமக்கும் வேறு கருத்துஇல்லை.ஆனால்  எது பயங்கரவாதம்? . நாட்டையே அச்சுறுத்திவரும் மாபெரும் பயங்கரவாதம் பார்ப்பன மதவெறி பயங்கரவாதமே .நாட்டில் மதவெறி பயங்கரவாதம்,மறு காலனிபயங்கரவாதம்,அரசு பயங்கரவாதம் போன்றவைகள் நிகழ்த்தபடாத  ஒரு நாளை கூட காண முடியாது.
மும்பையில் நடத்தப்பட்ட  தாக்குதல் எதிர்க்கப்படவேண்டியதே.இதற்கு மூலக்காரணத்தை தோண்டியெடுக்காமல் தீர்வை தேடுவதி பலனில்லை.

1947க்குமுன் இருந்ததை விட 1947 aug 15க்குப்பின் சிறுபான்மைமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை பல தாக்குதல்கள், நடந்து கொண்டிருக்கின்றன.இதற்கு  பலியான அம்முசுலீம் மக்களே சிறையிலடைக்கப்பட்டனர்.தொடர்ச்சியான பகல்பூர்,அயோத்தி,கோவை போன்ற சிறுபான்மைமக்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு
சில இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் தோன்றின.வினைக்கு எதிர் வினை என்ற வகையில் சில செயல்களில் ஈடுபட்டனர்.இதுவே இசுலாமிய மக்கள் மீதான வரைமுரயற்ற தாக்குதலுக்கு சாக்கு காட்டி இந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.கோவை,மும்பை குண்டு வெடிப்புக்களில் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.பலருக்கும் கைது செஇது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் தான் ” தான் தீவிரவாதி” என தெரிந்தது.1948 காந்தியை பார்பான கோட்சே கொன்றிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் , பார்ப்பன வெறியர்கள் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தினர் அன்று முதல் தற்போது நடந்து வரும் பாசிச வெறியாட்டங்கள் வரை அரசின் பாதுகாப்போடு இவை திட்டமிட்டு நடக்கின்றன. கோவை வழ க்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்சாரி உள்ளிட்ட பலரும் ஆயுள் தண்டனைகளில் இருக்க,பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளியான அத்வானி துணை பிரதமராகவும், உமா பாரதி ம.பி.முத்ல்வராகவும் ஆகிவிட்டனர்.இப்படி சிறுபான்மைமக்களின் மீது தாகுதல் தொடுக்கும் அமைப்புகள் அரசை கைப்பற்றிவிட்டன,மீண்டும் கைபற்றவும் முயல்கின்றன.

—————————————————————————————————————————————————————————

டாடா இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்தது.டாடா மட்டுமல்லபிற பார்ப்பன ஊடகங்களுக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் வந்திருக்கின்றது.இந்திய உழைக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பின்மையை நாள்தோறும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.டாடாவின் ஹோட்டல் குழுமத்தின் 50% லாபத்தை தாஜ் தந்தது.அதை 5 நாட்கள் மூட வேண்டி வந்தவுடன் இந்தியாவின் பாதுகாப்பு  குறித்து சிந்திக்கும் அளவுக்கு கொண்டுசென்றதை நாம் உணரலாம்.
“ஒரு முதலாளி தன் மூலதனத்தின் பாதிப்பை தேசத்தின் பாதிப்பாகவும்,தன் இழப்பை தேசத்தின் இழப்பாகவும் மாற்றுகின்றான்.”டட நந்திகிராமில் கார் ஆலையைதொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கொல்லப்பட்டார்களே அதை விட அந்த ஆலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுதான் தேசிய அவமானமாக கருதப்பட்டது.அப்போது ஊடகங்கள் கீழ் கண்டவாறு எழுதின”ஒரு நாட்டின் முன்னேற்றம் தடை படுகின்றது”. ஒரு முதலாளியின் வளர்ச்சி தடை படுமெனில் அது நாட்டின் வளர்ச்சியை தடை செய்ய்யப்படுவதற்கு சமம்”.மிட்டல் ஆர்சிலரை வளைத்தபோது “இந்தியா கண்டிப்பாய் வல்லரசு ஆயிடும் என் பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடைந்தன.மூலதன நலனுக்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நலனும் தேசிய நலனுக்கானதே. ஹோட்டல் பற்றி எறிந்தவுடன் நாடே பற்றி எறிவது போல்  கனவு கண்ட டாடா நாட்டுக்கே தீப்பற்ற வைக்கச்சொல்கிறார்.உடனே தேசிய பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளறியிருக்கின்றன. .இந்த ஊடகங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியதில்லை.

நந்திகிராமில் நடந்த கார் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது முடிவாகவில்லை,தோண்டுவது மீண்டும் தொடங்கினால் எண்ணிக்கை அதிகமாகும்.மார்க்சிஸ்டு  குண்டர்கள் செய்த கொலையும்,
பாலியல் வன்முறைகளும்  மக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை உண்டு பண்ண வில்லை.ஆனால் கோத்ரா சம்பவம் தேசிய அளவிலான இந்துக்களின் பாதுகாப்பை புதியதாய் கோரியது.கோத்ராவை வெற்றிகரமாக நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பல் குஜராத்தில்  3000 முசுலீம் மக்களை கொன்று குவித்தது.அப்போது மருந்துக்குகூட முசுலீம் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழவேயில்லை.
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருப்பதால் இதுவரை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டிருக்கின்றார்கள்.விதர்பாவில் கோடை காலம்,மழை காலம் போல “போஸ்ட்மார்டம் சீசன் ” என்று ஒன்று இருக்கின்றது.அது பருத்தி பூ பறிப்பு காலம்.அக்காலத்தில் விவசாயிகளின் பிணங்கள் போஸ்ட்மாடர்த்திற்காக மருத்துவமனையில் இறைந்து கிடக்கும்.இது என்றாவது பத்திரிக்கைகளில் விவாத பொருளாகியிருக்குமா?வாரந்தோறும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிடுங்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றார்களே அது தான் தேசிய விவாதமாகியிருக்குமா?இல்லை செத்து போன மாட்டின் தோலை உரி¢த்ததற்காக 5 தலித்துகள் கொல்லப்பட்டார்களே அப்போது ஒருவன் சொன்னான்”கோமாதாவை விட 5 தலித்துகள்  உயிர் பெரிதல்ல”என்றானே அப்போதும் கயர்லாஞ்சி,மேலவளவு,உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீதான் வன்முறைகள் எப்போது தான் தேசிய அளவிலான பாதுகாப்பு குறித்த விவாதமாகியிருக்குமா?மாலேகானி  குண்டு வைத சாமியாரை விடுதலை செய்ய சொல்லும் பிஜேபி-ன் மீது குறைப்த பட்சம் நம்பிக்கயை குறித்த சந்தேகமாவது எற்பட்டிருக்குமா என்ன?

இப்படி எத்தனை பேர் செத்தாலும் அது தேசிய  விவாதமாகியிறாது.அவைஅதற்கான தகுதியை பெறாது.அதன் தகுதியை நிர்ணயிப்பது பார்ப்பன பணியாக்களே.

—————————————————————————————————————————————————————————–

மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன.   இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,மாறாக தலையை  நிமிர்த்தி வெற்றிக்களிப்பில் மிதந்தன.பத்திரிக்கைகளோ வாயே திறக்கவில்லை.ஆம் ஆளும் வர்ர்கங்களின் எச்சில் எலும்புகளுக்கு அலையும்
இவர்களால்  எப்போதும் பாசிசத்தை எப்படி நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும்  என்று ஆலோசனைதானே கூறமுடியும்.

————————————————————————————————————————————————————————-

26/11 என்ற புது code அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எப்படி 9/11 என்ற முத்திரை உருவாக்கப்பட்டு ஆப்கன்,ஈரக் மீது போரின ஏவப்பட்டதோ அதே நோக்கத்தோடு இந்த புது முத்திரை  உருவாக்கப்பட்டுள்ளது.எப்படியும் பாகிஸ்தான் மீது போர் வெறியூட்டி
மீண்டும் ஆட்சியை பிடிக்க பார்ப்பன கும்பல்கள் பரபரப்பாய் செயல் படுகின்றன.செத்துபோன உழைக்கும் மக்களை விட அயல் நாட்டினர் இழப்பு,கலாச்சார சின்னங்களின் மீதான் பாதிப்பே பேரழிவாக முன்னிருத்தப்படுகின்றது.புது ஆண்டான் ஒபாமாவோ பச்சை கொடி காட்டி விட்டார்”தனது பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு”.பார்ப்பன பாசிஸ்டுகளோ நாக்கை தொங்கபோட்டபடி காத்திருக்கின்றார்கள்.

மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல மறுகாலனியும்,பார்ப்பனபாசிசமும் வாசிப்பை தொடர்கின்றன.மறுகாலனிக்கும்,பார்ப்பனபாசிசத்திற்கு தடையை இருப்பது கூட  பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன.மதவெறியை மறுப்பவர்களும் எதிர்த்து எழுதுபவர்களும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.போதாகுறைக்கு வலைத்தளங்களில் சைபர் கிரைமிற்கு  புகார் தரச் சொல்லி சிபாசிசு வேறு. நம்புங்கள் இது தான் உலகின் மாபெரும் சன நாயகம்.

என்ன பண்றது?-கவிதைகள்

நவம்பர் 30, 2008

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….

தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

ஜெயமோகன் என்ற தரகன்

நவம்பர் 30, 2008

ஜெயமோகன்  என்ற தரகன்
படைப்பாளிகளின் பெயரில் உலாவும் மாமாப்பயல்கள்

மாண்பு மிகு இலக்கிய மேதை,சுந்தர ராமசாமிக்கு ப்றகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே நபர் என வர்ணிக்கப்பட்டும்,அவாளோட புத்தகத்து சைஸ்-ஐ வைச்சே அறிவ தெரிஞ்சுக்கலாம் என பார்ப்பன அம்பிகள் புளங்காகிதமடையும் நபர் திருவாளர் ஜெயமோகன் அவர்கள்.
ஜெயமோகன் உயிர்மை நவம்பர் 2008 இதழில் ஊமை செந்நாய் எனும் கிளுகிளுப் பூட்டும் ஏ சர்டிபிகேட்டுக்கு தகுத்யான நெடுங்கதையை எழுதியிருக்கின்றார்.ஆபாசப்படம் எடுக்கத்திட்டமிடும் தயாரிப்பளர்கள் நேரே அண்ணாரிடம் சென்றால் போதும் ஷகிலா என்ன அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலக்கியத்தோடு பாலீஷ் போட்டுத்தருவார்.அதை யூ சர்டிபிகேட் என்று வெளியிட்டு காசு சம்பாதிக்கலாம்.அழகியலின் ரசனைக்குள் புகுந்து ரசிக்கும் ரசிக சிகாமணிகள்  இதை ரசித்து  ரசித்து மெய்மறந்து கிடப்பார்கள்.

இது வரை பல தரகுவேலை கதைகள் வெளிவந்திருக்கின்றன. “நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு “என ஜெயமோகன்  அறிவித்துஇருக்கின்றார்.பிரம்ம சிறீ ஆபாசானந்தா ஜெயமோகன்  அவர்களின் லேட்டஸ்ட் ரிலீஸ் “ஊமை செந் நாய்”(இலக்கிய முலாம் பூசப்பட்டு இருப்பதால் குடும்பத்தோடு படிக்கலாம்).ஒரு வெள்ளைக்கார துரைக்கு வேலை செய்யும் வேட்டைதுணைவனின் கதை இது.அறிமுக வரியை படித்தவுடனே ஆகா ஒரு சேவகனின் வாழ்க்கையை அவனின் அவமானங்கள்,வேலைப்பளு,இளக்கார பார்வைகளை இலக்கிய வாசத்தோடு ஜெயமோகன் எப்படி எடுத்துரைக்கப் போகின்றார் என்று நினைத்தால்  ஒரு வேட்டைத்துணைவனின் வாழ்வை ஒரு மாமாப்பயலின் கடைவிழிப்பார்வையில் கணகச்சிதமாக  எடுத்துக்காட்டி படிப்போரை விரசத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றார்.

 வில்சன் துரையை பற்றி  “அவன் வாயில் சுருட்டை பற்ற வைத்தான் அது கரிய ஆண் குறி போலிருந்தது”ஆரம்பிக்கிறார்.ஒரு விபச்சார புரோக்கர் பேருந்து நிலையத்திலும்,பொது இடங்களிலும்  கிராக்கியை மசியவைக்க  எப்படி  பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பானோ அதை விட சற்று தூக்கலாக ஒவ்வொரு சந்திலும்  அள்ளித் தெளிக்கின்றார். துரையின் தேவைக்கு பெண்களை கூட்டி வருவது முதல்  அவரின் வர்ணிப்பு இருக்கின்றதே  அதை படிக்கும் இலக்கிய மணிகள் “ஆகா இதை கூட எப்படி ரசிச்சு எழுதியிருக்கா பார்த்தேளா இங்கதான் நம்மாளு நிக்கிறா,ஒரு படைப்பாளி எதை கொடுத்தாலும்  இலக்கியப்படுத்தவேண்டும் இலக்கிய உலகம் நமக்கு சொல்லித்தருகின்றது.இதை விமர்சிப்போர் அறிவிலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

ஒரு படைப்பாளி எந்த விசயத்தை வேண்டுமானாலும் எழுதலாம்,எப்படியும் எழுதலாம்,அதிலும் பெண்களை பற்றி எழுழ்தும் போது அவரின் உறுப்புக்களை  வர்ணிக்கலம்.ஒரு படத்தின் வசூலுக்கு ஏற்ப படுக்கயறை காட்சிகள் நீளுவது போல,ஒரு படைப்பாளி நீட்டிக்கலாம் எங்கேயும் புகுந்து கொண்டு.பதில் இப்படியும் வரும்”ஒரு படைப்பாளிக்கு ஆபாசம் விரசம் எதுவும் கிடையாது,எல்லாமே உங்கள் பார்வையில் தான் இருக்கின்றது.படைப்பாளியின் நோக்கம் எடுத்துக்கொண்டவிசயத்தை எப்படி உருவகம்,உவமையோடு எழுதுகின்றான் என்பதை பாருங்கள்,இலக்கியப்பார்வை இல்லாதவர்கள்  என்ன சொன்னாலும்  அதை பற்றி விவாதிக்க தேவையில்லை.

முதலில் படைப்பாளி என்பவன் யார்? தன்னுடைய கதை,கவிதை,ஓவியதிறமைகளை படைப்பவன்.அவன் மக்களிடமிருந்து கற்றவன், மக்களிடமிருந்து சென்றவன்.தன்னுடைய படைப்புக்களை மக்களுக்காக படைப்பவன்.ஒரு படைப்பாளியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?அது அவன் மக்களுக்காக எப்படிப்பட்ட படைப்புக்களை என்பதை பொறுத்தது.புரட்சிகவி முதல் பல புரட்சிகர கவிஞர்கள் படைத்தார்கள் தங்கள் படைப்புக்களை மக்களுக்காக  ,அவர்களுக்கு தன் மான,தேச விடுதலை உணர்வூட்டினார்கள்.குறிப்பாக பாரதிதாசன் தன் படைப்புகள் மூலம் பார்ப்பன ஆதிக்கத்துக்கெதிராக போராடினார்.இறந்த பின்னும் 
அவரின் படைப்புகள் அப்பணியயை செய்து வருகின்றன. நமக்கு தெரிந்த இன்னொருவரும் இருக்கின்றார் அவன் பெயர் வாலி தன் பாடல்கள் மூலம் “ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி” வேறு வகையான உணர்வூட்டும் வேலையில் இருக்கின்றார்.பாரதிதாசனையும் வாலியையும் படைப்பாளி என்ற ஒரே தராசில் வைக்கமுடியுமா?

படைப்பாளியின் வெற்றி பார்க்கும் படிக்கும் கேட்பவரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது தான்.அத்தாக்கம் மக்களின் வாழ்க்கை த்தரதை உயர்த்துவதாய் இருத்தல் வேண்டும்.மக்களுக்கெதிராக,அவர்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் எதுவும் படைப்பாகாதுதைனியும் சிலர் கேட்கலாம்.” ஒரு படைப்பாளியை இதைத்தான் இப்படித்தான் சிந்திக்கவேண்டுமென கூற முடியாதே”.கண்டிப்பாய் கூறமுடியாது.ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் “இப்படி,இவர்களுக்காகத்தான்னென சிந்திக்கின்றார்கள்.ஜெயமாகனைப் போல பலரும் தனது சொறிபிடித்த கருத்தை பொது கருத்தாக்க முனைகின்றனர்.அதில் வெற்றியும் பெற்று தனக்கு ஒரு கூட்டத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

நாம் மீண்டும் அந்த மாமாபயலின் கதைக்குள் செல்லத்தேவையில்லை,அதனுள் சென்றால் அவரின் “கீழ்த்த்ரமான உவமைகளை ” நாமும் பதிய வேண்டி இருக்கும்.
————————————————————————————————————-

அடிக்கடி எழும்பூரில்  ஓவியக் கண் காட்சி நடை பெறுவதுண்டு, அங்கு பல பெண்களின் அரை,முழு நிர்வாண ஓவியங்களை பார்க்கலாம்.அழகியலை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதல்ல,எதற்காக இதனால் எப்படிப்பட்ட தாக்கம் எற்படப்போகின்றது
என்பதுதான் தேவை.இந்த ஆபாச ஒவியங்களை பார்க்க ரசிக்க இளைஞர் பட்டாளங்கள் வருவதும் உண்டு.ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம்  உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.

 
mok_copy

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

நவம்பர் 23, 2008

திரு  நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

கிராமப்புரங்கள் முதல் கல்லூரி வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ  பயன் படுத்த்ப்படும் முக்கியச் சொல் “பொட்டை,  அலி , ஒம்போது” பலருக்கு இந்த கருத்து உண்டு.” இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான”. ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. முசுலீம் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம்  பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது.

உண்மையில் திரு நங்கைகள் யார் ?  மனித செல்லில் உள்ள 23 குரோமோசோம் இணையில் கடைசி 23 23-வது இணையே ஆணா பெண்ணா என தீர்மானிகின்றது. XX என்ற குரோமோசோம் ஆணாகவும், YY
என்ற குரோமோசோம்  பென்னாகவும் பிறக்கின்றது. ஒரு X(or)Y  குரோமோசோம்  அதிகமாகிவிட்டால்
அவர் திரு நங்கையாகிறார். ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள்  சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர்.அவவயதில் தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.

மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக  கூறப்படுகிறது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்
திரு நங்கை நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி யென அழைக்கப்படுகிறனர்..மேற்படியுள்ள அரவாணி யென்ற பெயரே தவறானது.அப்பெயர் திரு நங்கைகள் உருவாக்கப்பட்டதே பாலியல் தேவையின் கடைசி முயற்சி எனக் கூறுகின்றது.பாஞ்சாலியை 5 மணக்க ஐவரும் தலா ஒரு வருடம் என பாஞ்சாலியை பங்கு போட்டுக்கொள்கின்றனர்.மீதி 4 பேரும் பாஞ்சாலியை மீதி 4 பேரும் பார்க்கக்கூடாது.மீறி பார்த்த அர்ச்சுணன் யாத்திரைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒரு பெண் (தாழ்த்தப்பட்டவர்)மூலமாக குழந்தை பிறக்கின்றது அது தான் அரவாண்.

பாரத யுத்தத்தில்  கிருஷ்ணன் ஒருவரை பலி கேட்க அது அரவாண் என முடிவு செய்யப்படுகின்றது.அப்போது அரவாண் தான் இல்லற சுகத்தை அனுபவிக்க வில்லை   அனுபவிக்க  வேண்டும் எனக்கூற கிருஷ்ணன் பெண் உருவில் வந்து  அனுபவிக்க வைத்தார்.இது பார்ப்பன புரூடா கதை.

ஆணாதிக்க இந்து மதத்தில் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல  திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவரை பொட்டை ஒம்போது அலி போன்ற வார்த்தைகள் எதற்காக சுட்டப்படுகிறது.இவன் ஆண்மையில்லாதாவன்.ஒரு பெண்ணுடன் (அ) ஆணுடன் இல்லறத்தில் ஈடு பட லாயக்கற்றவர்.இந்த சமுதாயத்தில் ஆண்,பெண்,விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை  திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை..

ஆங்கிலத்தில் he she it, தமிழில் அவன் அவள் அது  திரு நங்கைக்கு இங்கு இடம் இல்லை.அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது வேண்டுமானால் நாயோடு சேர்ந்துகொள்.கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில்  பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது ஆணாதிக்கம்.

———————————————————————————————————————————————

பலரும் சொல்கின்றார்கள் “அவங்களை யார் பாலியல் தொழில் செய்யச்சொன்னாங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு உழச்சு முன்னேற வேண்டியது தானே”   இது “சும்மா கத விடாதீங்க அவன் வாயில மூத்திரம் இருக்கின்ற வர இவன் என்னா பண்ணிணான்” என்ற சாதிவெறியனுக்கு ஒப்பானது.யாரையும் கட்டி போட்டு இழுத்து வந்து பாலியல் தொழில் செய்ய சொல்ல வில்லை. இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள்,பெண்களின்  கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாது  இருக்க முடிகிறதா.

இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் ரீதியிலான கடு  நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு  பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும்செய்கின்றனர் .பாலியல் தொழிலாளியை  ஆணாதிக்கம் உருவாக்கியதோ அப்படித்தான் திரு நங்கைகளை பாலியல் தொழிலாளி ஆக்கியது.தாழ்த்த்ப்பட்ட ஒருவரை எங்கணம் அடையாலம் காட்ட முடியும்.அவரின் சுற்றுபுறத்தை தவிர  .  ஆனால் திருநங்கைகளுக்கு ?

———————————————————————————————————————————————

திருநங்கைகள் பலரும் சொல்லும் வார்த்தை இது.” நாங்கள் கடவுளிலிருந்து வந்தவர்கள்.வட நாட்டில் எல்லா விழாவுக்கும் எங்களுக்குத்தான் மரியாதை” திருநங்கைகள்  தங்களை கடவுளின் வாரிசாக்கி அதன் மூலம் கேலிப்பொருளுமாக்கிவிட்ட பார்ப்பனீய இந்து மதத்தை முதலில் எதிர்க்காது தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும்.நியமன உறுப்பினர் போன்ற கோரிகைகள் எல்லாம்  இனி பயனற்றதாகி போய் விட்டது.இந்த மறுகாலனியாக்க,பார்பபன மதவெறி சூழலில்  தனியாய் போராடினால் கிடைக்கது வெற்றி.உழைக்கும் மக்களுக்காக அவர்களுக்காக களத்திலிறங்குவோம்.இழந்த,வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை பெறுவோம்.இனியும்தாலியறுத்து ஒப்பாரி வைத்து கொண்டிருந்தால்  ஒப்பாரி வைக்க வைத்தவனை
எப்போது தான்  ஒப்பாரி வைக்கப் போகின்றோம்.

———————————————————————————————————————————————

மாபெரும் சோசலிச புரட்சி நடந்த சில நாட்களில்  நிகழ்ந்த சம்பவம் இது.ரசியாவில் ஒரு பாலியல் தொழிலாளி பனிப்பொழிவில் நனைந்து கொண்டிருந்தார்.அங்கு வந்த செம்படை வீரர் சொன்னார்.”தோழர் உள்ளே போங்க” முதன் முதலாய் ”தோழர் “வார்த்தை அவரின் கண்ணில் நீரை கொண்டு வந்தது,ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிசமே பெற்றுத்தரும்.
போலி சன நாயகப் பாதை அல்ல.

aravaanipsd2

B.P.0.அடிமை.C0M- பகுதி2அடிமைத்தனமே சுவாசமாய்

நவம்பர் 23, 2008

B.P.0.அடிமை.C0M- பகுதி 2
அடிமைத்தனமே சுவாசமாய்

வழக்கம் போல  அலுவலகத்துக்கு ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார்.”நீங்க எங்க வேலை செய்யறிங்க”.நான் விளக்கினேன்.அவர்” இப்படி தினமும் இத்தன பேர வேலயவிட்டு தூக்கறாஙளே என ஆரம்பித்தவர்.அமெரிக்க சந்தை சரிவு ,ஒரு சங்கம் அமைத்தால்….. என இழுத்துக்கொண்டே போக நானிறங வேண்டிய இடம் வந்தது.அலுவகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.மனதில் பல யோசனைகள்.போன மாதம் தான் நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள்.இனி யாருக்கும் வாகன வசதி கிடையாது(கேப்) .நை ஷிப்ட் உட்பட பணிபுரியும்  யாரும் தங்கள் சொந்த பாதுகாப்பிலேயே வரவேண்டும்.

B.P.0 மற்றும் ஐ.டிக்கு நிறைய வித்யாசமிருக்கின்றது.இங்கு ஒரு நாளில் ஏத்தனை ஜாப் செய்கின்றோம் என்பதுதான் கணக்கு..என் மானேஜர் சொன்னர்” நீங்க 20 மணி நேரம் கூட வேல செய்யுங்க அதப்பத்தி யாரும் கவலைப்படமாட்டங்க.குறைந்த நேரத்தில் அதிக ஜாப் செய்ய பழகிகோங்க.”

நிறைய ஜாப் வந்துவிட்டதெனில் எல்லவற்றையும் முத்துவிட்டு தான் செல்ல வேன்டும்.6 மணிக்கு வேல முடியும் நேரதில் 3 மணிநேரத்துக்கு ஜாப் போட்டுவிட்டு டீம் லீடர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மாதம் ஒரு முறை மீட்டிங் ,கடந்த மாத மேடிங்-ல் மானேஜெர்கள் சொன்னர்கள் ” அப்புடித்தான் தினமும் 2 (அ) 3 மணிநேரம் அதிக நேரம் வேலை செஞுதான் ஆகணு. தேவையின்னா இங்க இரு இல்லேன்னா போய்க்கிட்டே இரு .உனக்கு  தர்ற 10000 சம்பளத்துக்கு 5000 க்கு ரெண்டுபேர் தயாரா இருப்பாங்க.இன்னொரு ஊழியர் சொன்னர்” சார் தினமும் இங்கயிருந்து கிளம்பவே 9 மணி ஆகுது  வாரத்துக்கு ஒரு மறைதான் குழந்தைகளை பார்க்கமுடியுது.எம் பையன் என்கிட்ட சரியாக்கூட பேச மாட்டென்கிறான்.” அதுக்கு என்ன பண்றது சேகர் வேலைன்னா அப்படித்தான் இருக்கும்.” சொல்லிவிட்டு போனார்கள்.

அலுவலகத்துக்குள் சென்றேன்.எல்லோரும் எதோ ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.கம்பூட்டரை போட்டு விட்டு என்னவென்று விசாரித்தேன்.நேற்று நைட் ஷிப்ட் வந்தவ்ர்களிடம் ஓவர் டைம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றார்கள்.காலையில் 6 மணிக்கு எல்லோரும் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.எங்கள் கம்பனி வரலாறிலேயே முதல் ஸ்ட்ரைக்

மதிய உணவு இடைவேலைக்கு முன் அறிவிக்கப்பட்டது.இன்று மாலை அவசர மீட்டிங் என்று.இடைவேளை போது பலரும் பேசினார்கள்”என்ன கேக்கட்டும்.நான் பேசுற பேச்சுல  நீ யாருன்னு என்னை தெரிஞ்சுக்குவீங்க” மீட்டிங் அறையில் வழக்கம் போல சவால் விட்டவர்கள் பேசவில்லை.மீண்டும் தலைமையிடமிருந்து மிரட்டல்.காலையில் தூக்கியிருந்த காலர் அதற்குள் தொங்கிவிட்டது.

அந்த வாரம் முடிந்து அடுத வாரம் நைட் ஷிப்ட்-ல் நான்.ஒருவர் சொன்னார் இன்னைக்கு கண்டிப்பா ஓ.டி.பார்க்க சொன்னா கிளம்பிவிடலாம்.எனக்கு மணி 5 ஆகும் போதே சந்தோசம்.மணி முள் மீது திட்டு விழுந்து கொண்டிருந்தது. மணி 6 ஆனது வேலையோ இன்னும் 2 மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டது.யாரும் கிளம்பவேயில்லை,கரெக்ட்டா 6 மணிக்கு கிளம்பிடுவாங்களா என்ன ,மணியோ ஆறரை தாண்டியது.

சொன்னவரிடம் கேட்டேன் ” என்ன கிளம்பலீயா”எவனும் வரமாட்டான்”.என்றார்.
அவ்வா முழுக்க இடைவேளையில் நாயகனானவர்கள்.ஓ.டி போது மவுனமானார்கள்.

அடுத்த வாரமும் வந்தது H.R. வந்தார் ” உங்களுக்கு work load  கொஞ்சம் அதிகம் தான் அதனால தான்……” புதுசா ஆள் எடுக்கப்போறாங்களா” இது நான். அவர் தொடர்ந்தார்.அதனால  எல்லாரும் இந்த வாரம்  எக்ஸ்கர்சன் போகப்போறோம்.வெஜ் ஆர் நான் வெஜ் food code உங்க டி.எல்.கிட்ட சொல்லுங்க

நான் எனது டீம்-ல் உள்ளவர்களிடமும் ,பக்கத்து டீம்- உள்ளவ்ர்களிடமு இப்படி சொன்னேன்.” எதுக்கு டூர் ஓ.டிக்கு பணம் இல்லையே அதுக்கா,கேப் கட்பணிணானே  அதுக்கா,மனுசன்னா சொரணை வேன்டும் நாய்க்கு பொறை நமக்கு டூரா?.தனிதனியாய் பேசினேன்.சுமார் 20 பேர் போகமாட்டேன் என்றார்கள் .அடுத்த நாள்  லீடர் கேட்டார் என்னப்பா பேர் சொல்லவேயில்லை” நான் வரலை சார். பரிட்சை இருக்கு” பொய் சொன்னேன். அருகிலிருந்த்வன் கேட்டான் சார் தண்ணீ இருக்கா? நாட் அலவுட் என்ற படியே கண்ணடித்தார்.

இல்லை நான் போக மாட்டேன் என்றார்கள் பேரை கொடுத்துவிட்டு.சண்டே வந்து விட்டு போனது.எல்லோருக்கும் மெயில் வந்தது.னேத்து நடந்த டூர் போட்டோ,வீடியோ மெயின் சர்வரில் உள்ளது என்றார்கள்.கண்டிப்பாய் 10 பேராவது போயிருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீடியோவை பார்த்தேன்.அதில் ஆண்,பெண் பேதமில்லாமில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப சாதுவாய் ஒரு பெண் இருக்கும்.அதுகூட குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மப்பில் பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ஸ்டிரைக்-ஐ நடத்தினேன் என்றாரே அவர் உட்பட..எனக்கு உடம்பெல்லாம் வெப்பாம் ஏறியது.அந்த சாதுப்பெண் என்னிடம் கேட்டார்”நீங்க வரலை?” நான் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தேன்.

எனக்கு மாபெரும் உண்மை விளங்கியது.இங்கு பலரும் தன்னை நுகர் பொருளாக்கிகொள்ளவே விரும்புகிறார்கள்.இடுப்புக்கு கீழே பேண்ட்,தலையை சிரைத்துகொள்வது என தன்னால் முயன்றதனைத்தையும் செய்கிறார்கள்..அதன் மூலமே தன் இருப்பை உயர்த்திகொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறதே.2000,1000 என பி.பீ.ஓ-ல் வேலையை விட்டு தூக்கப்படுவதாக.ஏன் அவர்கள் இணைவதில்லை.இணையவேண்டுமெனில் ஐக்கியம் தேவை ,நாளை நீ தூக்கப்படுவாய் என சொல்லிப்பாருங்கள் ,எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.
ஒற்றுமை இப்படி எச்சில் இலைக்கு அலைந்து கோண்டிருந்தால் கிடைக்காது.உரிமைகளை மீட்டெடுக்க
சங்கம் தேவை.அது கண்டிப்பாய் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருப்பவனால் முடியாது.
நாங்கள் நுகர் பொருளாய் இருக்கும் வரை எங்கள் வாழ்வு சவக்குழிக்கானதாகவேயிருக்கும்.