இந்திரா-பாசிசத்தாய்

நவம்பர் 20, 2008

indirapsd2இந்திரா-பாசிசத்தாய்

நேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம்  முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின் புகழினைப்பாட  கொல்லப்பட்ட சீக்கியர்களின் கதறல்களும், வித்வையாக்கப்பட்ட மகனை இழந்த தாய்களின் ஒப்பரிகளும் கேட்டுக்கொண்டிருக்கும்.  நாம் காதுகளில் பஞ்சினை வைத்து அடைத்துக்கொள்வோம்.பிறகு மீண்டு புகழினை பாடுவோம்” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. ”

நவம்பர் 17 1917-ல்  இந்திரா ப்ரியதர்சினி காந்தி மாபெரும் மாப்பிள்ளை நேரு மாமாவுக்கு பெண்ணாகப் பிறந்தார். பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென்ற பார்ப்பன குடும்பத்தில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் படித்தார். அப்பன் இந்திய விடுத்லைக்கு போராடினார்.மகளை
தன் நாட்டை அடிமையாக்கிய லண்டனில்  படிக்க வைத்தாரெனில் அந்த தாய் நாட்டுப்பற்றை நாம் பாராட்டித்தானாக வேண்டும்.1941-ல் படித்து கிழித்து விட்டு இந்திய விடுதலையை கொண்டு செல்வதில் நேரு காந்திக்கும் லடாய் இருந்த சமயத்தில் நேருவுக்கு தோள் கொடுக்க வந்தார்.இந்திய மேலாதிக்க கனவில் சீனாவை பிடிக்கும் கனவில் சீன செம்படை மண்னை அள்ளிப்போட்டது.அந்த கவலையில் மண்டையை போட்டார்.பிறகு காமராசர் லால் பகதூர்-ஐ பிரதமராக்கினார்.அவரும்  செத்துப்போக. காமராசர் இந்திராவை பிரதமராக்கினார்.அவருக்கு சாகும் தரு வாயில் தான் உணர்ந்திருப்பார். தாம் தேர்தெடுத்துஇ¢ருப்பது பெண் சாதாரண பெண் இல்லை .இநாட்டிற்கே தாய் அதுவும் பாசிசத்தை திறம் பட பேணி வளர்த்த தாய் என்று.

1966-ல் முதல் பெண் பிரதமர் என பேரெடுத்த இந்திரா சில ஆண்டுகளிலேயே தன் பாசிச முகத்தை காட்ட ஆரம்பித்தார்.அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ரூபாயின் ,மதிப்பு சரிந்தது.1980-ல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 சதம்சரிந்தது. சர்வாதிகாரமென்றால் என்னவென்று மக்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார்.அரசு உறுப்புக்கள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு கீழ் படியாத அரசுகள் உடனே கலைக்கப்பட்டது.எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவின் மாபெரும் சர்வாதிகாரியாக மாறினார்.செத்து போன அப்பனின் ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றினார்..பாகிஸ்தானோடு போர் புரிந்து தேச வெறியை கிளப்பி தன் சர்வாதிகாரத்தை திசை திருப்பினார்.இந்திய மேலாதிக்க போக்கினை வளர்தெடுத்து பங்களாதேசினை  உருவாக்கி தான் தான் ரவுடியென நிரூபித்தார்.ஆட்சியை இழந்து மன்றாடினார்.மீண்டும் தான் செய்த தவறுக்காக மெரீனா கடற்கரையில் மன்னிப்பு கேட்டு  அழுதார். முன்பு தன் ஆட்சியை கலைத்த இந்திராவை கருணாநிதி பேய் என்றவர் தற்போது இந்திராவின் மகளே வா நிலையான ஆட்சியை தாவென முழங்கினார் . மீண்டும் அரியசானை கீழ் வர முன்னை காட்டிலும் பல அரசுகள் தீவிரமாய் கலைக்கப்பட்டன.தேசிய இனபோராட்டத்தை   அழித்தொழித்தார்.

அதில் முக்கியமானது “புளு ஸ்டார்” தேசிய இன போராட்டம் பஞ்சாபில் அதிகமாய் பீறிட்டு கிளம்பியது.அதனை அடக்க வந்ததாய் கூறிகொண்டு ராணுவம் போலீசு ஆகியவை மக்களின் அடிப்படை உரிமயை கூட பறித்தன.பலர் சீக்கியர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டனர்.இன்னும் அதிகமாய் இனப்போராட்ட்ம் தீயாய் பற்றியது.பல சீக்கியர்கள் சீக்கியன் என்ற ஒரு காரணத்தாலே கொல்லப்பட்டனர், இதன் விளைவாக பாகிஸ்தானுக்குக்கெதிராக இந்திரா உருவாக்கிய பிந்த்ரன் வாலே தற்போது இந்தியாவுக்கு எதிராக திரும்பினார். தன்னுடைய மேலாதிக்க கனவுக்காக ஈழத்தில் விடுதலைபுலிகள்,வங்கத்தில், பாகிஸ்தான் பஞ்சாப்-ல் பிந்த்ரன்  வாலெ என பலரையும் உருவாக்கி  அந்நாடுகளை  தனக்கு அடிபணிய நிர்பந்தம் கொடுத்தார். இறுதியில் அது அவருக்கே வினையாய் முடிந்தது . பிந்த்ரன் வாலே  இனப்பிரச்சனையை பயன் படுத்தி முன்னுக்குக்கு வந்தார்.பார்ப்பன,இந்துக்களுக்கு இக்கலவரம் பெரும் அச்சுறுத்த்லை தந்ததுதனது.பார்ப்பனீயத்துக்கு ஆபத்து என்றவுடன் இறுதிகட்ட தாக்குதலை தொடுக்க முனைந்து “புளு ஸ்டார்” -ல்  இறங்கினார். அக் 3 – அக் 6 1983 வரை பொற்கோயில் முற்றுகையிடப்பட்டது.அப்போது சென்ற ராணுவம் 1990-ல் தான் விலக்கி கொள்ளப்பட்டது. கணக்கிலடங்காதோர் சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரும் இதில் அடக்கம். 3 நாட்கள் கழித்து கோயிலின் கதவை திறந்த போது  உள்ளேயிருந்தவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபட்ட விசயம் தெரிய வந்தது துப்பாக்கி ரவைகள் வழியே.

1984 -ல் சீக்கிய மெய்காப்பாளரால் இந்திராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.கண்ணில் பட்டவருக்கெல்லாம் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்த சஞ்சய் “இறந்த” பிறகு இனாட்டை காக்கும் பொறுப்பு இளந்தலைவர் ராஜீவுக்கு வந்தது.ராஜீவின் தலைமையில்  இந்தியா முழுவதிலும் மாபெரும் சீக்கியர்களு,கெதிரான கலவரம் பரப்பப்பட்டது.ராஜீவின் அல்லக்கைகள் ஜகதீஸ் டைட்லர் உள்ளிட்டவர்கள் அதை செய்து முடித்தார்கள்.தலை நகர் டெல்லியில் அப்பாவி சீக்கியர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள்.அதற்கு ராஜீவ் மவுனமாய் பதில் தந்தார்” ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் வரத்தானே செய்யும்”

நாமும் இந்திராவின் பிறந்த நாள் , இறந்த நாள்களை நினைவு கூர்வோம் ராஜீவ் எம்ஜிஆர் செயா போன்ற பாசிச படிமானங்களை பெற்ற பாசிச தாயை புகழ்வதற்காக அல்ல.

பஞ்சாபில் கொல்லப்பட்ட மகனுக்காக கதறிக்கொண்டு இருக்கின்றாரே அந்தத்தாய்க்காக!

——————————————————————————————————————————————————————————————————

.

B.P.O. அடிமை. co.in

நவம்பர் 19, 2008

B.P.O. அடிமை. co.in

வெளியே போய் விட்டு வந்த களைப்பில்  சாப்பிடக்கூட முடியவில்லை.உடம்பெல்லாம் ஒரே அடித்து போட்ட மாதிரி இருந்தது..பஸ் ஸ்டாப் லிருந்து  ரூமிற்கு தத்தி தத்தி நடை போட்டேன்.கதவை திறந்து ஷ¤ வை கழட்டிவிட்டு முகம் கூட கழுவவில்லை அப்படியே ஒரு வாரமாக பெருக்காமலிருந்த அறையில் குப்பையோடு குப்பையாய் படுத்தேன். நல்ல தூக்கம். செல் போன் சத்தம் தூக்கத்தை கலைத்தது.ஆன் செய்வதற்குள் ரிங்  நின்று விட்டது.மொத்தம் 5 மிஸ்டு கால்கள்.ஒன்று வீட்டிலிருந்து
மற்ற   நான்கும் சரவணனனிடமிருந்து .சரவணன்  ஏர் டெல்லில்      FM  ஆக இருக்கிறார்.அதற்கு என்னவோ அவர் விளக்கம் சொன்னாலும்  நாங்கள் fraud manager என்று தான் சொல்லுவோம்.   நானும் சரவணனும் அண்ணாமலையில் பி.எஸ்.சி படித்து கொண்டிருக்கின்றோம். தினமும் இரவு அடிக்கடி போன் பேசுவோம்.கடந்த சில வாரமாக  அவரும் போன் செய்யவில்லை.வேலைப்பளு காரணமாக நானும் போன் செய்யவில்லை.அப்படியெ வீட்டிற்கு பேசினாலும் பஸ்-ல் போகும் போது தான் பேச வேண்டும். அலுவலகத்தில் போன் பேச அனுமதியில்லை.யோசித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டு சரவணன் போன் ஆன் செஇதேன்.வணக்கங்க நல்லாயிருகீங்களா என ஆரம்பித்து  சுமார் 20 நிமிடங்கள் பேசியிருப்போம். நாளை காலை கிண்டி ரயில்வே ஸ்டேசனில்  8.30-8.45 க்குள் சந்திப்பதென முடிவானது.மீண்டும் தூங்க முயற்சித்தேன் பசி வயிற்றை கிள்ளியது.லுங்கியை மாற்றி விட்டு ஹோட்டலுக்கு போனேன்.எப்போதும் சாப்பிடும் கையேந்தி பவனில் பாத்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தார்கள்.இந்த ஏரியாவில் எல்லா இடத்திலும் விலை ரொம்ப அதிகம்.இங்கு தான் விலை குறைவு. பாக்கெட்டை தடவினேன் 90 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 3-ம் தேதி 7-ம் தேதி தான் சம்பளம்.தெரிந்த எல்லார்கிட்டேயும் கையை நீட்டியாச்சு.யோசித்தேன் ரெண்டு வாழைப்பழங்களை  தின்று விட்டு படுத்தேன்.பசி அடங்கவில்லை.தண்ணீர் கேனும் தீர்ந்து விட்டது.அதற்கு வேற முப்பது ரூபா தரவேண்டும். கவிழ்ந்து படுத்தேன்.

செல்லில்  அலாரம் அடித்து மணி 6 என்றது.கண்ணெல்லாம் தகதக வென எரிந்தது. பத்து நிமிசம் என்றவாறே மீண்டு படுத்தேன். ஏதோ திடீரென எழுந்தேன். மணியோ 7.30 தலையிலடித்துக்கொண்டே எழுந்து ஓடினேன்.குளித்தால் கண்டிப்பாய் நேரமாகும்.மகத்தை கழுவிக்கொண்டு முந்தா  நாள் போட்ட டிரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பினேன் அவசராவசரமாக. நான் படுத்துகிடந்தனிடத்தில் பாயும்,போர்வையும் சுருண்டு கிடந்தன.ரெண்டு வாரமாக இப்படித்தான் சுருண்டு கிடக்கிம்றன.அவைகள் என்ன செய்யும் B.P.O -ல் வேலை செய்யும் என்னை போன்ற பிச்சைகாரனுக்கு வாழ்க்கை  பட்டதால்   குப்பையோடு குப்பையாக இருக்கின்றன்.
பஸ் ஸ்டாப்-ல் நின்றேன்.மணி இங்கேயே 8.00 மேலும் 15 நிமிடங்கள் நின்றேன்.இன்னேரத்தில் 4 ஷேர் ஆட்டோக்களும்,2 வெள்ளை பரதேசியும்(அதாங்க DELUXE)  மேலும் 5 நிமிடம் போனது.இனியும் காத்திருந்தால் கட்டாது.ஒரு வெள்ளையில்  ஏறினேன்.டிக்கெட் வாங்காம இருக்கலாமா? யோசிப்பதற்குள் நடத்துனர் வந்தார்.50 ரூபாயை நீட்டினேன்.எல்லாரும் 50,100ன்னு கொடுத்தா எஙக போறது என கத்த பதிலுக்கு நானும் கத்தினேன்.என்ன் செய்வது.அவர் அரசிடம் பணிபுரியும் அடிமை. நான் வெள்ளைக்காரனுக்கு சேவகம் புரியும் அடிமை. நேற்று ஒரு நடத்துனரிடம் பேசியது ஞாபகம் வந்தது.” எங்களுக்கெல்லாம் 8 மணி நேர டியூட்டி இல்லை.இதனை தடவை ஒட்டணும்.தினமும் 2 மணி 1மணிக்குதான் வீட்டுக்கு போறாம்”.மீண்டும்  நடத்துனர்  ஒரு பயணியை திட்டிக்கொண்டு வந்தார்.என்ன  செய்வது நாங்கள் அடிமைகள் எங்களின் வேலை பளுவை ஏமாந்தவனிடம் தானே காட்ட முடியும். நல்ல டிராபிக் என் காதில் சங்கூதுவது போல இருந்தது.சூளை மேட்டில் இறங்கி ஒடினேன் தாம்பரம் ரயிலில் செம கூட்டம் கூட்டத்தோடு நானும் ஐக்கியமானேன்.மணி 8.40 சரவணன் வேற காத்திருப்பார்.
நானும் சரவணனும் சுமார் டிப்ளமோ படித்து 7 வருடம் கழித்து தான் பி.எஸ்.சி. சேர்ந்திருந்தோம். ரெண்டு பேருக்கும் அலுவலகத்தில் டிகிரி மேல் பதவி உயர்வுக்கு தேவைபட்டது,சரவணன்  குரோம் பேட்டையிலிருக்கிறார்..அங்கிருந்து டிரெயின் பின் பஸ்-ல் சாந்தோம் போக வேண்டும்.சரவணனிடமிருந்து போன் 5 நிமிடத்தில வரங்க பொய் சொல்லிவிட்டு .15 நிமிடத்தில் கிண்டியிலிறங்கினேன்.அதிகம் தேடவில்லை  டிக்கெட் கவுண்டர் அருகில்  நின்றிருந்தார். நான் கேட்டேன் “என்னங்க உடம்பு இளைச்சுடுச்சு, வேலையிலெ பெண்டு நிமித்தறாங்க.ஆமா பைனல் இயர்க்கு இன்னும் கிளாஸ் ஆரம்பிக்கவேயில்லை.போன் பண்ணி கேட்டாலும் அடுத்த வாரம் வாரம் கத வுடறானுங்க.போன வருசமே பரிட்சாஇக்கும் பத்து நாள் முந்தி தானே பரதேசி நாய்ங்க கொடுத்தாங்க” ” பணம் கட்டலைன்னா” முடிப்பதற்குள் ரயிலின் சத்தம் கேட்டது . அவ்ர் பஸ்க்காக  பறந்தார்.ரயில் வந்தது.. நான் ஏறிய கேபினில் 10 பேர் தான் இருந்தார்கள் . பக்கதில் பேபரை கடன் வாங்கி அதி பார்வயை செலுத்தினேன். மனமோ பணத்துக்காக ஏங்கியது.மீதி 70 ரூ இருக்கு .அப்பட சீசன் டிக்கெட் 7-தேதி வரை இருக்கு..கணக்கு முடியவில்லை .அதற்குள் நானிறங்க வேண்ட்ய இடம் வந்தது.மணி 9.54.  10 மணிக்கு  அலுவலகம் ஓடினேன் யாரு என்னை பார்க்கவில்லை.அவர்களும் ஓடிகொண்டுதானிருக்கிறார்கள் .
செக்யூரிடியிடம் செல்லை சைலண்ட்-ல் வைத்து விட்டு ஒப்படைத்தேன். டோக்கனை மிக கவனமாக உள்ளே வைத்தேன்.ஏற்கனவே டோக்கனை தொலைத்ததற்காக எத்தனை நாய்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருந்தது. என்ன்மோ இழக்ககூடாததை இழந்தது போல கேள்வி  கேட்டார்கள்.கழுத்தில் சங்கிலியை மாட்டிகொண்டு ( ID CARD) ஸ்வைப்பிங் மிசினில் காட்டினேன் . சிவப்பு விளக்கையே  காட்டியது.. இந்த சனியன் இப்படித்தான் பத்து முறை காட்டினாதான் பச்சை விளக்கை காட்டும்.இப்படி இருந்தே மாசத்தில் 7 நாள் வரவில்லை என்று கணக்கு காட்டும்..
போரடி கிரீன் வாங்கி உள்ளே போனேன்.எங்கள் அலுவலகத்தில் என் டீம் மிகச் சிறியது  மொத்த்ம் 5 பேர் தான்.நான் சேரும் போது 500 பேர் இருந்தார்கள் . இப்போது மொத்தம் 100 தான்.போன 3 மாசதில் அமெரிக்கா புண்ணியத்தில் 400 பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இன்றும் நான் தான் முதல் ஆள்.பக்கத்து டீம் லீடர் முறைத்தார்.பெருமிதமாக சேரில் உட்கார்ந்தேன்.சக டீம் ஊழியர்கள்  வரிசையை வழக்கம் போல பஸ் கிடைக்க லேட். என்றார்கள்..எங்கள் டீம் லீடர் 1 என்ன 3 மணி நேரம் கூட லேட்டாய் வருவார்.யாரும் கேட்க முடியாது. காரணத்தை விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.இரவு ஷிப்ட் முடிந்து  பகல் ஷிப்ட் வரும் போது இயல்பாக பகலில் வேலை செஇது இரவில் தூங்குவதால் ரொம்ப  பகல் ஷிப்டை எதிர்பார்போம்.அவர்கள் தேவைக்கு எற்ற படி நாங்கள் இரவு ஷிப்ட்-ல் இருக்கவைக்கப்படு வோம். நாங்கள் இன்னாட்டுக்காகவா உழைக்கிறோம்.
அமெரிக்கனுக்கு உழைக்கும் போது  அவன் முழிக்கும் போது  நாங்களும் முழிக்க வேண்டியிருந்தது, உண்மையை சொன்னால் அமெரிக்க வணிகர்கள் எங்களை மனிதராக கூட மதிப்பதில்லை.ஒரு ஜாப் செய்யச்சொல்வார்கள் சிலர் சரியான தகவல்கள் தரமாட்டார்கள்.கேட்டால் இது கூடவா புரியாது என்பார்கள். நாங்களாவது பரவாயில்லை கால் செண்டரில் வேலை செஇவோருக்கு இங்கிலீசில் “ஆயா,அம்மா” என எத்து விழாத குறை தான்.

காலையில் வேலை ஒன்றும் இல்லை இங்கு மாலை 6 மணி தான் அமெரிக்காவில்  காலை 9 மணி .சனிக்கிழ்மை செய்யாமல் விட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தோம். A\Cமிக அதிகமாக இருந்தது. மெக்கானிக்  அளவு குறைக்ககூடாது இது  HR  ஆர்டர் என்றார்.  என் டீம் நபருக்கு காயிச்சல் அதிகமாகிக்கொண்டே போனதுHR இடம் சொன்னோம்.அவர் “மெக்கானிக்க வர்ச்சொல்லுங்க  ” A\C ரூம் டெம்ப்க்கு ஈக்வலா வையுங்க ” அப்படி தான் மேடம் இருக்கு”.எங்களிடம் திரும்பி  சொன்னார்”ரூம் டெம்ப்க்கு கீழ குறைக்கமுடியாது கம்ப்யூட்டர் ஹேங் ஆயிடும்”.

 கம்ப்யூட்டரை பற்றி ஒரு வெங்காயமும் தெரியாத  HR கேட்டு நான் கடுப்பாகிபோனேன்.வேகமாக வேலை செய்ய A\Cயை விட பிராசசர் தான் முக்கியம். வெப்பத்தில் தான் கம்ப்யூட்டர் வேலை செய்யும் எனில் எங்களை அடுப்பில் கூட  உட்கார வைப்பார்கள் நாய்கள். வேலை செய்யாதவனுக்கு அதிக சம்பளமும், வேலை செஇகிறவனுக்கு குறைவான சம்பளமும் தருவார்கள் . இது தான் B.P.O.-n  நியதி மணி 6.30 பிரேக்கிற்கு போன டீம் லீடர் வரவில்லை.எங்களுக்கு தலா 15  நிமிடம்  டீம் லீடர் அப்படி யில்லை  போனால் 2 மணி நேரம்.எங்களுடைய work ஐ பார்த்து அவர் தான்  ok செய்ய வேண்டும்.clients corrections என உயிரை எடுக்க அதற்கு சரியான விளக்கம் தராது டீம் லீடர்  உயிரை எடுப்பார்.கடைசியாஇ 8 மணிக்குவந்தார்.சொல்லிவிட்டு கிளம்பினேன் செல்லை வாங்கி பார்த்தால் 4 மிஸ்டு கால்.ரயில்வே ஸ்டேசனுக்கு ஓட்டமும் நடயுமாஇ அல்ல சோர்ந்து போய்  மெதுவாய் நடந்தேன்.ரயில் வந்தவுடன் அதில் உட்கார்ந்தவுடன் அப்பா போன் செய்தார். “ஏண்ட போன் பண்ணினா திருப்பி செய்ய மாட்டியா ?”” இல்லப்ப இப்பத்தான் வெலையை விட்டு வந்தேன் என்ற பொய்யை சொன்னேன்.காசில்லை என சொல்லவில்லை.

ரொம்ப அவமானமாக இருந்தது போன் செய்ய இருந்தது.மதியம் சாப்பாட்டுக்கு 25, டீக்கு 10 என மொத்தம் 35 ரூ காலியாகியிருக்க மீதி 25 இருந்தது.முதலாய் வேலைக்கு சேரும் போது பல பேர் போல நானும் கனவில் மிதந்தேன்” நல்ல பெரிய கம்பெனி,எவ்வளவு செலவு செய்தாலும் 5000 மாவது சேமிக்கலாம்.கம்ப்யூட்ட்ர், பைக்  என. நம்மை கனவு காண சொன்ன அப்துல் கலாம்கள் தான் ஏகாதிபத்திய கைகூலிகள் என்று.ஒரு வழியில் பணத்தை கொடுத்து பலவழிகளில் பிடுஙி கொள்கிறார்கள்.தினம் உணவுக்கு,போக்குவரத்து,வீட்டு வாடகை என எங்கள் பணம் ப்றிக்கப்பட்டு கொண்டே வருகிறது..மீண்டும் அதே வெள்ளை பரதேசியில் ஏறினேன்.”யார் கேட்டாங்க இவனுங்களை இந்த பஸ்.சாதா பஸ் ஐ எல்லாம் தூக்கிட்டு
டீலக்ஸ் ஆக்கிட்டாங்க ” அறைக்கு வரும் போதே ரெண்டு பரோட்டாவைவாங்கி கொண்டு வந்தேன். வாட்சை கழட்டிவைத்தேன் மணி 9.30.வீட்டுக்காரம்மா வந்தார் “அடுத்த மாசத்தில இருந்து 1000 ரூபா அதிகமாமா” பிறகு அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. புரோட்டாவை பிரிக்காமல்  முறைத்து பார்த்தேன்.இப்பவே ஆளுக்கு 1800ரூபா.வேற இடத்துல போனா 10 மாசம் அட்வான்ஸ் கேப்பானுங்களே”
 நினைக்கும் போதே தலை சுற்றியது.ஒரு உண்மை மட்டும் புலப்பட்டது இந்த IT BPO-ன் நோக்கம் இந்தியாவை வல்லரசாக்கி எங்களை பிச்சைக்காரராக்குவதற்கானதென்று.

வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை

நவம்பர் 18, 2008

வாடா வாடா வாடா  தோழா-ஒரு    காம்ரேடு  ரசிகன் ஆன கதை

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் வருங்கால சூப்பர் ஸ்டாருமான (பத்திரிக்கை சொன்னபிறகு ) ஏற்கனவே அறிவித்தபடி அவர்  சென்னையிலும் அவரது ரசிகர்கள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி  முடித்து இருக்கின்றார்.அவ்விழா  மேடையில் மற்ற  நடிகர்களும்,இயக்குனர்களும், புகழ்ந்து பேசி தள்ளினர்.
 அம்மா அப்பா மனைவி யோடு சோகமே உருவெக்க மேடையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் விஜய்.(ஒரு வேளை வில்லு படம் குருவி  மாதிரி ஊத்திக்கும் என நினைச்சாரோ என்னவோ ).
மற்ற நடிகர்கள் ஏற்கனவே ஒரு சுற்று  முடிதிருக்க இவரி ந்த போராட்டமும் ஈழத்தமிழர்களுக்காகத்தான் நம்புங்கள்.அதுவும் புலம் பெயர்  ஈழத்தமிழர்களுக்காகத்தான் .ஏனெனில் அவர்கள் தான் திரையுலகின் கழிசடை படங்களை அமெரிக்காவிலும்,ஜெர்மனியிலும்  100 நாட்கள் ஓட்டினார்கள்.உள் நாட்டில் படம் ஓடினால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இன்னும் அதிகமாக வெளி நாட்டில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளருக்கும் கடல் க.டந்த ரசிகர் கூட்டம் நடிகனுக்கும் கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் “வெளி” வந்த சர்வே ஒன்று ரஜினியை விட விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவரும் தனது ரசிகர்களை மற்ற எவரையும் விட மிக வேகமாக முறை படுத்தியும் வருகிறார்.வருங்கால முதல்வருக்கான ரேசில் விஜயும் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவனை பழிவாங்க வேண்டுமா  இறங்குடா களத்தில் என தேர்தலுக்கு வருகிறார்கள்.இந்த கோமாளி   சனநாயகத்தை வெளிக்காட்;டுகின்றனர்.உதாரணத்திற்கு சமீபத்த்¢ வடிவேலு-விஜய்காந்த் மோதலின் போது வடிவேலு சொன்னார்” நீ எங்க நின்னாலும் எதிரா நான் நிப்பேன்”. இப்படி வருபவன் போறவனெல்லாம் தேர்தல்,அரசியல் முறைக்கு வர யார் காரணம்? அதன் துரோக வரலாறு நெடியது. போலி கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது.திமுக விலிருந்து பிரிந்த MGR புது கட்சி ஆரம்பித்தார்.அந்த MGR இப்படி கழிசடைகளுக்கெல்லாம்
ஒரு  symbol ஆக மாறினார் எனப்பார்த்தால் அதற்கு இந்த இரு போலிகளுமே காரணம்.கல்யாணசுந்தரம் என்ற “மாமா”
தான் திறம்பட செஇது  முடித்துவிட்டார்.தனது நூலில் இதனை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.கம்யூனிஸ்டு எனில் புரட்சி செய்யவேண்டும்(அ)திட்டமாவது வேண்டும்.கட்சி திட்டத்தையே தரகுக்காக இரு போலிகளுமே வைத்திருக்கின்றார்கள்.¦அண்ணா, கலைஞர்  பேச்சுக்காவது கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்தனர்.MGRக்கு இது எதுவும் கிடையாது.கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்ததே பார்பனீயத்துக்கும் அவர் தம் பத்திரிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணின.திமுக விலிருந்து   பிரிந்தவுடனே ஒரு மாற்று சக்தியாக MGR ஐ முன்னிருத்தின.அதற்கு திறம் பட அரசியல் முலாம் பூசி  வெளியே கொணர்ந்தவர்கள் தான் இந்.த போலிகள். அதன் விளைவாகத்தான் MGR  ஐ தொடங்கி  செயா வரை தமிழகத்தில் பொற்காலம் ஏற்பட்டது. அதற்காக தமிழ் கூறும் நல்லுலகு போலிகளுக்கு கடமைபட்டிருக்கும்.மீண்டும்  MGRக்காக தேடி கடைசியாய் ரஜினியை பிடித்து கொள்கையாவது புடலங்காயாவது   ரஜினி  நல்ல மனிதர் என சர்டிபிகேட்கொடுத்தார்கள்.அவரோ வரலாமா வேண்டாமா என  ஜோசியம் 15 ஆண்டாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு காலம் தான் காத்திருப்பது என தான் தொங்குவதற்கு புது முதுகினை CPM விஜய்காந்த் மூலம் தேடிக்கொண்டிருக்க CPI விஜய்க்கு ரிசர்வ் செய்திருக்கின்றது.

இனி  உண்னாவிரத பந்தலுக்கு வருவோம்.

நடிகர்  விஜய்  மேடையில்  யார் கூப்பிட்டாலும்” போகும்” நெடு மாறனோடு அமர்ந்திருக்க ஒரிஜி¢னல் காம்ரேடுகளான C.P.I -ன் தா.பாண்டியன் தன் சகபாடிகளுடன் வந்தார்.நடிகர் விஜய்க்கு பாண்டியன் பாராட்டு தெரிவித்ததும் இங்கு இரு வகையான மன மாற்றங்கள் நடந்தன.1.நடிகன் காம்ரேடாக மாறியது.2.”காம்ரேடு” ரசிகனாக மாறியது.தங்களால் எந்த நாயையும் முதல்வராக்க முடியுமென நிருபித்தவர்கள் போலிகள்.
அப்படி பாரட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கவில்லை யெனில் என்ன நடந்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சி  புரட்சியை செய்யத் தவறிய பாரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.இனி  தா. பாண்டியனை பாண்டி என்றே அழைப்போம்.அப்புடி கூப்பிட்டாத்தான் மச்சிகளுக்கு (ரசிகர்களுக்கு)  பிடிக்கும்..தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 10  அடி பாயும் என்பது போல  பாண்டியை விட சக “காம்ஸ்கள்” போட்டோவுக்கு போஸ் கொடுத்தன. நிகழ்ச்சியை முடித்து வைத்து வாழ்த்திப்பேசிய பாண்டி புரட்சியின் தலைவர் விஜய் தான் என்று ரகசியமாய் கோடிட்டு காட்டினார்.ஆதி டைப்பில் எச்சரிக்கையும் விடுத்தார்” ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் இந்த அரசு தேவைதானா என்ற முடிவுக்கு  வரவேண்டியிருக்கும்.இது வரை வாய் திறக்காத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் மாபெரும் போராட்டத்தை நாளை அறிவிப்போம்.” அய்யா ரொம்ப சிரமப்படாதீங்க  புரட்சி  தலைவர்  விஜய்யின்  ஜிகு ஜிகு ஜிகு பாட்டை போட்டாய் வாய் மட்டுமல்ல அனைத்தையும் திறந்து போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் உங்கள் “காம்ரேடுகள்” உட்பட.
தியாகு தனது பத்திரிக்கையில் பின் வரும் தொனியிலெழுதினார்”இப்பிரச்சினையில்  CPI  காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது”.  ஆர்வம் முத்தி போய் விஜயோடு டேன்ஸ் ஆடி பிறகு “ஒன் இஞ்ச்  டூ இஞ்ச்  கேப் காட்டிடவா” நடிகையின் இடைகளை அளந்து கொண்டு இருந்தாலும் வியப்பேதும் இல்லை. புரட்சிக்கான வேலைகளை செய்து விட்டு காத்திருக்கும் CPI க்கு இன்னும் நிறைய ஆனந்த தகவல்கள் காத்திருக்கின்றன.அவர்கள்   கட்சியில் சிறு
சிறு மாற்றங்கள் செய்தாலே போதும், விஜய் கட்சியின் தேசிய த்லைவராக மாறி ஒரே நாளில் புரட்சியை சாதித்து விடுவார்.காம்ரேடுகள் கண்களில் அனந்தகண்ணீர் தான் வரும்.மாற்றங்கள் அதிகமில்லை கொஞ்சம் தான்.காரல் மாக்ஸ்,எங்கெல்ஸ்,லெனின் போட்டோவை எடுத்து விட்டு பாண்டி,விஜய் போட்டோவை வைப்பது,செங்கொடியை தூக்கிவிட்டு  புதிய மன்ற கொடியை தன் கம்பங்களில்  பறக்கவிடுவது,ஏதோ ஒண்ணு இடிக்குதே  AIYF  போர்டுகளில் உள்ள பகத் சிங்  படத்தை நீக்கிட்டு புது புது மாடல் விஜய்
படத்தை வைக்கலாம்.”வாடி வாடி கை படாத” சிடிபோன்ற புரட்சிகர வசனங்களை மேலே வாசகம்   எழுதலாம்.அறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி பாண்டிக்கு விஜயயை
இதய ஆத்மாவாக்கலாம்.பேரு மட்டும் எதுக்கு VIJAYIST PARTY OF INDIA மாற்றி விட்டா போதும்.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்சி  தானே மலர்ந்திடும்.
மன்மோகனை புடிச்சு தொங்குன தொங்குல டர்பன் எல்லாம் அவ்ந்து போச்சு.கேரளாவில் மம்மூட்டி,ஆந்திராவில் சிரன்சீவி, தமிழகத்தில் விஜயகாந்த்,CPM முன்னேறிய பின்னும் தாய் கட்சி  லேட்டாக இப்பத்தான் விஜயை பிடித்திருக்கின்றார்கள்.இனி மேல் இன்குலாப் தேவை இல்லை .கொடியை ஏற்றி “தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து ‘. என்றால் போதும் புரட்சி அப்படியே பொங்கி  வழியும் பீர் வழிவது போல.

நமக்கு முன் உள்ள ஒரே கேள்வி  இனியும்  போலி  கம்யூனிச கட்சியில் இருக்கும் “புரட்சிகர “அணிகளை எவ்வாறு அழைப்பது  ? ரசிகர்களே என்றா தோழர்களே என்றா?

சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

நவம்பர் 14, 2008

சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

நேற்று  முன்தினம் நடந்த சென்னை சட்டகல்லுரி மாணவர்கள் “மோதல்” தான் இரு ணாட்களாக  பரபரப்பாக  பேசப்படுகின்றது.தமிழகமெங்கும் சட்டகல்லுரி  தேர்வுகள் ரத்து, காலவரையின்றி  மூடல் .அக்கல்லூரியின் முதல்வர் இட நீக்கம்,போலீசார் சிலர் இடை மற்றும் பணி மாற்றம் என தமிழக அரசு அறிவிதாலும் ஓட்டு பொறுக்கிகள் வழக்கம் போல ஆதிக்க சாதி  வெறிக்கு  துதி பாடுகின்றன.சிலர் நினைக்கலாம்  நடந்து
முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறர்கள் என்று.ஆனால் நேற்று தமிழகம் முழுவதும் தேவர்  சாதி வெறியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.மேலும்
தக்க பதிலடி கொடுக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றார்கள்.வழக்கம் போல வைகோ,விஜயகாந்த்,சரத்,போன்றோர் அரசை பதவி விலக சொல்கின்றனர்.எதிரிகள் ஆரம்பிப்பதாலேயே நாமும் தொடங்கியிருக்கிறோம்.

மோதலின் வேர்கள்
இம்மோதலுக்கு காரணத்தை நாம் தோண்டியெடுக்க சில ஆண்டுகள் பின்னோக்கி
பார்க்க வேண்டும்.தென்,வடமாவட்டங்களில் நடந்த சாதி கலவரமே இதன் வேர்.கொடியங்குளம்,ஊஞ்சனை,மேவளவு,போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட
மக்களி¢ன் பயமாய், கோபமாய், இன்னும் ஆறாமல் இருக்கின்றது.மீண்டுமொரு தாக்குதலுக்கு தருணம் பார்த்து ஆதிக்க சாதி  வெறியர்களும் காத்து கொண்டிருக்கின்றார்கள்.பலரும் சொல்வதை போல் என்ன தான் “இருந்தாலும் அந்த
பையனை விட்டிருக்கலாம்”இவர்கள் விடாததற்கு காரணம் இருக்கின்றது.தன் ரத்த
சொந்தங்கள் எல்லாம் தூங்கும் போது  கழுத்தறுப்பட்டும்,இதை விட இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாக கெஞ்சி   கதறிய போதும்  கொலை செய்யப்பட்டார்களே அது தான்
அந்த காரணம்.தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளிரண்டாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன.1.தாழ்த்தப்பட்ட மானவர் விதி  2.மற்ற  சாதி  மாணவர்களின் விடுதி. தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலும் மிக ஏழை பிரிவை சேர்ந்தவர்கள்.
எப்படி மூத்திர மற்றும் சாக்கடை நாற்றத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலை துளியும்
மாறாது தாழ்த்தப்பட்ட மாணவர் விதிகளில் வாழ்கின்றனர்.இது முற்றிலும் உண்மை
ஒருமுறை தாழ்த்தப்பட்ட மாணவர் விதிக்கு சென்றிருந்தேன். அறைக்கு வெளியில்
சோறு இறைந்து கிடந்தது.ஒரு மாணவனிடம் இது குறித்து கேட்டேன்.அவர் பதிலேதும்
பேசாது ஒரு தட்டில் சோற்றை போட்டு தந்தார்.அப்போது தான் தெரிந்தது  தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு சோறு  தாழ்ந்த நிலையில் தான் படுகின்றது இந்த சமத்துவ அரசால் என்று.

தமிழகத்தில் எந்த கல்லூரியில் தான் சாதி பார்ப்பதில்லை ? ஒரு விடுதியில் (அ) கல்லூரியில்
சேர்ந்தவுடனே பேரை கேட்ட சில நிமிடத்திலேயே  சாதிகேட்கபடுகிறதா இல்லையா?
இதற்கு இப்போ யாரு சாதி  பார்க்குறா என்பவர்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்.
நாங்க எல்லாம் பங்காளிங்க என்று கும்பலாக சுற்றுவது நடக்கிறதா இல்லையா? அரசு கல்லூரிகளில் தான் ஆதிக்கசாதி மானவர்களுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மாணவர் களும் படிக்கின்றனர்.எல்லா  கல்லூரிகளிலும் சாதி ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது.சென்னை மட்டுமல்ல் கோவை,  நெல்லை,மதுரை,சேலம்,உள்ளிட்ட இடங்களில்
சட்ட கல்லூரியில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மோதல் தொடரதான் செய்கின்றது.மற்ற கல்லூரிகளில் அரசியல் பேச வாய்ப்பு இல்லலை என்றாலும் இவர்களுக்கு அரசியல் தான்
பாடமாக  உள்ளது.சட்ட கல்லூரியில் படிக்கும்  சுமார்  20% தவிர மீதி  பலரும் அரசியல் அங்கீகாரத்துக்கோ, பிற் கால சாதி அரசியல் கட்சியில் சட்ட ஆலோசகர்  பதவிக்காக
தான் சேர்கின்றனர்.வேறு எங்கேயும் விட இங்கு தான் சாதி பிரச்சனை உள்ளிட்ட எதுவும்
வெடிக்கும்.இது தான் நியதி.ஆதிக்க சாதியின் வாரிசுகளும் அடக்கப்பட்ட சாதியின்வாரிசுகளும் கல்லூரியில் சந்திக்கின்ற்¡ர்கள். தன் வீட்டு எடுப்ப்பு வேலை செய்த பசங்க என்ற எண்ணத்தில் சாதி வெறியர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களின் வாரிசுசுகளோதன் பாட்டன் பூட்டன் அப்பன் வரை அடிமையாய் இருந்தது போதும் தானிருக்கவேண்டியதில்லை என எதிர்த்து போராடுகின்றான். ஆதிக்க சாதி வெறி யர்களடிக்கும்போது திருப்பி அடிக்கின்றனர்.இவர்களை சாதி வெறியர்களாக பார்க்கமுடியுமா?¢கண்டிப்பாய்  முடியாது.ஒரு எடுத்துகாட்டு.ஒரு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வேகமாய் ஒரு லாரி சர்ரென்று வருகின்றது.ஓட்டுனரின் அறிவால் அனைவரும் தப்பிக்கின்றனர்.பயணி ஒருவர் அந்த லாரி ஓட்டுனரை அடிக்கிறார்.இதை தவறு என சொல்லமுடியுமா ? ஏன் விபத்து நடந்த இடத்தில் உள்ள மக்கள் ஓட்டுனரை அடிப்பது வழக்கமானது தான்.-னியாமான கோபத்தை எப்படி வெளிபடுத்துவது?இங்கே முக்கிய விசயம் என்னவெனில் பத்திரிக்கைகள் சொல்வது போல தாக்கவந்தவர்கள் கட்டைகளோடும்,தாக்கபட்டவன் கையில் கத்தியோடும் வந்திருக்கின்றான்.அவனை அடித்ததற்கு பதில் எதுவெனில் மேற்கூறிய எடுத்துகாட்டு தான்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு  சட்ட கல்லூரியில் நடந்தசம்பவம் இது .ஸ்காலர்ஷிப் வாங்க சென்ற தலித்  மாணவர்களை பார்த்து ஒரு சாதிவெறியன் சொன்னான்”  ஸ்காலர்ஷிப்  வேண்டும்னா
வந்து…………………………………….. “. தலித்  மாணவர்கள் இது குறித்து தந்த எந்த புகாருக்கும் இது நடவடிக்கை எடுக்கவில்லை.  வன்முறை  தான் தீர்வா என கூத்தாடும் பார்ப்பன கோட்சில்லாவே(அடிக்கடி வினவிலும்,ஒரெ ஒருமுறை கலகத்திலும் கெள்வி கேட்ட) பதில் சொல்.அந்த வெறியனை தலித்  மாணவர்கள் மண்டையை பிளந்திருந்தால்   கண்டிப்பாய்  அதுவும் தலைப்பு செய்தியாய் மிளிந்திருக்கும்.

————————————————————————————————————————————————————-

சட்டகல்லுரி குறித்து வினவு எழுதியிந்தமைக்கு  சிலர் இப்படிதான் மறு மொழிந்திருக்கின்றார்கள்.
“பாவபட்ட தேவர்கள் ஒன்று படுவோம்.””இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன்”.இங்கு பாவப்பட்ட என்பதற்கு அர்த்தம் ” நம்ம ஊருல தொடுப்பு வேல செய்யரவனுங்க  நாம அடிச்ச திருப்பி அடிக்கற அளவுக்கு ஆயிட்டாங்களா?.அவர்கள் இப்போது மாறவில்லை,எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கின்றார்கள்.
—————————————————————————————————————————————————————

எரிகின்ற தீயில் எண்ணை

எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுகின்ற வே¨ யைத்தான் இந்த அரசியல் கட்சிகளும் சாதிவெறியர்களும்
செஇகின்றன.¢ செயா எப்போதும் அறிக்கை விடும் ஜெயக்குமாரை விட்டு   விட்டு பன்னீர் செல்வத்தை விட்டு சாதி வெறியை கக்குகின்றார்.சன் டிவியோ மனம் பகீனமானவர்கள் வீடியோவை பார்க்கவேண்டாம் என இரு நாட்களாக ஒளிபரப்பியது.இந்த ஊடகங்கள் தாழ்த்தபட்ட மக்கள்
மீதான வன்முறையை மறந்தும் கூட சொன்னது இல்லை.ஒரு நாளாவது வாயில் மலம் திணிக்கபட்ட
ராமசாமியின் பேட்டியை ஒளிபரப்பியிருக்குமா?.இந்த ஊடகங்கள் முதல் ஓட்டு பொறுக்கி  அரசியல்வாதி,சாதிவெறியர்ளின் தேவையெல்லாம் ரத்தம்.ஒடுக்கப்பட்ட,உழைக்கின்ற மக்களின்
ரத்தம். ஆம் அதை குடித்தால் தான் அதிகாரம் கிட்டுமென்று  பார்ப்பனீயமும் பாசிசமும் சொல்லிதந்திருக்கின்றது.
————————————————————————————————————————————————————-
” சாதி கேக்கறது பாவம்  என உதார் விடும் R.S.S,இந்து முன்னணி காலிகள்
பதில் சொல்லட்டும்.இப்படி ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்கும் போது என்னசெய்ய வேண்டும் என்று.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் இது போல சம்பவங்கள் நடைபெறாது இருக்க
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.
ஆதிக்கசாதி வெறி கிளை வேர் எனில் பார்ப்பனீயம் தான் ஆணி வேர் அதை பிடுங்கி எறியாது
இது பெரியார் பிறந்த மண் எனச் சொல்லி கொள்வதில் பலன் இல்லை.

கட்டுரை தேவை : சாதிக்கெதிராய் கலகம்

நவம்பர் 13, 2008

தேவை : சாதிக்கெதிராய் கலகம்
“காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்ல
நடந்துக்கிறானுங்க”,பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள
அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு” இதெல்லாம்
  நேற்று  சென்னை சட்டக்கல்லூரியில்  நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள்
பேசிக்கொண்டு ஏன் எதற்காக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது  என்பதை அறியவோ
தீர்வை சொல்லவோ அவசியமின்றி திரிகிறர்கள்.

இன்று காலை தினமலர் தவிர ஏறக்குறைய அனைத்து தினசரிகளிலும் தொலைக்காட்சி
களிலும் சட்டக்கல்லூரி தான் முதல் தலைப்பு செய்தி.ஒரு திரைப்படத்தை எப்படி
வர்ணிப்பார்களோ அதை விட சற்று தூக்கலாக வர்ணித்திருந்தர்கள்.ஏதாவது ஒரு
சம்பவம் நடந்தால் தனது நாய் மூக்கினால் மோப்பம் பிடித்து “உண்மையை” வெளி கொணரும்
எந்த ஒரு செயலையும்  செய்யாது யார் கதா நாயகன் யார் வில்லன் என்று மட்டும் சரியாய்
அடையளம் காட்டின.அதாவது தற்போது அடித்த தலித்துகள் வில்லன்ளாகவும்
செய்த வினைக்கு எதிர் வினை வாங்கிய ஆதிக்க சாதி வெறியன்கள் தான்
 காதாநாயகன்களாகவும் காட்டப்படுகிறனர்.

சென்னைக்கு வெளியெ இருக்கும் பலருக்கும் ஒரு வகையன சிந்தனை இருக்கிறது
“சென்னையில தலித்துங்க அதிகம் நம்மாளு வாய் திறந்து பேசவே பயப்படுவாங்க ”
சென்னையில் தலித் ரவுடிகள் இருக்கிறர்கள் என்பது உண்மை தான். ஆனால் ஆதிக்க சாதி  வெறிஅர்கள்
போல சாதிக்கு வாழ்ந்து சாவதில்லை.சேத்து பட்டு ரவுடி தங்கையா போல பலம்,பணதிற்காக
யாராயிருந்தாலும்  அவர்களிடம் தன் வேலையை  காட்டுகின்றர்கள்.(பாதிக்கப்படுபவர்
தலித்தாக இருப்பினும்).ஆதிக்க சாதி வெறியர்கள் செய்வது
போல் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களின் பெண்களை மட்டும் பாலியல் ரீதியிலானகொடுமைகள்
நடப்பதில்லை. இ£ங்கு சாதி என்பதை விடபணமே முக்கியம்.தனது அதிகாரமே முக்கியம்.அதை நிரூபிக்க தலித்தாக இருப்பினும் எந்த சாதியாக இருந்தாலும் தாக்கப்படுகின்றனர்.

சென்னை சட்ட கல்லுரி சம்பவம் என்பது வினைக்கு எதிர் வினை.இதனை நாம் ஆதரிக்கவில்லை என்றாலும்ஊடகங்களின் பார்பனிய தன்மையை அம்பலப்படுதியே தீரவேண்டும் என்பது தான் நோக்கம். சட்டக்கல்லூரியில்தேவர் சாதி வெறியர்கள் ஏதாவது விழாவெனில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்பதற்கு பதில்வெறும் சென்னை சட்டக்கல்லுரி  என்று  போடுவது,தொடர்ச்சியாக தீண்டாமையை  மேற்கொள்வது  போன்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு மாதமாகவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்க  தலித் மாணவர்கள் காயம்பட்டிருக்கின்ரார்கள்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் விதமாக பரிட்சை முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சிலர் எதிர் தாக்குதல் தொடுக்க முடிவெடுத்திருக்கின்றார்கள்
இது தெரிந்தும் அந்த தேவர் சாதி வெறியர்களும் கையில் கத்தியோடு வந்திருக்கின்றனர்.முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டிய விசயம் .நாம்  ஊடகங்களில் பார்த்ததது போல் கத்தியோடு வந்தவன் தாழ்த்தப்பட்ட மாணவர் தரப்பினை
குத்தியவுடன் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரையும்  வெறி கொண்டு தாக்கினார்கள்.

என் நண்பர் சொன்னர் ” என்னால்  அதை பார்க்கமுடியவில்லை,அவன் சாதி வெறியனாகவே
இருக்கட்டுங்க அவன் எப்படி கதறுனான் பார்க்கவே சகிக்க முடியலிங்க”

ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.
ஆனால் சாதி வறிக்கெதிராக போராடும் மக்களின் ஒரு முக மற்றும் நேர் படுத்த படாத அரசியல் செயல் பாடுகள் சாதி வெறியர்களின் வளர்ச்சிக்கு துணை போகின்றன.
அதற்காக நாம் கண்டிப்பக வருந்தத்தான் வேண்டும்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.நான் கல்லூரில் படித்து கொண்டிருக்கும் போது தான் எஸ்.பி.பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் சென்னை சட்ட கல்லுரியினுள் புகுந்து தாக்கினர்.அது குறித்து நான் பேசிக்கொண்டு இருந்த்தேன்.அப்போது
பேருந்து நண்பர் (வயது 40) சொன்னர்.அவனுங்க எல்லாம் பறைப்பசங்க  தப்பு செய்யாம போலிஸ் அடிப்பானா ? எனக் கேட்டார்.

இப்போது வரை அதைப் போன்ற வன்மம் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரப்பப்படுகின்றது.எந்த இடத்தில் எல்லாம் ஒடுக்க்ப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினாலும் அவர்களுக்கெதிராக ஊடகங்கள் தான் முதல் கொள்ளியை வைக்கின்றன.
ஏன் திண்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த போது கூட ராமசாமி  பறை  அடிச்சு பனத்த் கேக்காம இருந்திருந்தா
அவன் எதற்கு அப்ப்புடி பண்ணப்போறான் என்ற ரீதியில் தான் ஊடகங்கள் எழுதின. உத்த புரத்துல கூட செவுரு இருந்தா என்ன இப்போ?
என்ற சாதி வெறியன் நேரடியாய் சொன்னால் அதையே  ஊடகங்கள் மறைமுகமாய் சொல்கின்றன.

ஒரு கிராமத்தில் சாதிபிரச்சனை  என்ற உடன் “ஊர்க்காரர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும்” என்று தான்கொட்டை
எழுத்தில் போட்டு தன் பார்ப்பனீய அடிவருடி த்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.இந்த கல்லூரி பிரச்சனையை கண்டித்து தேவர் சாதி வெறியர்கள் சென்னையில் மீட்டிங்  போட்டு கண்டனம் தெரிவிக்கின்றன.ஓட்டு பொறுக்கிகளோ
சாக்கு கிடத்தால் போது மென சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கின்றன.

இவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே நடைபெற வில்லை நடத்தப்படுகின்றன.உண்மையில்  இப்போது நடந்தது
சம்பவம் சாதிக்கு எதிராக வினை.இவ்வினை  ஏற்புடையது அல்ல .
சண்டைகள் மட்டும் தீர்வு தராது.அது எதிரிகள் வளரவே உதவும்.
மக்களை திரட்டி சாதிக்கு எதிராக கலகம் புரிவோம்.அதில் கண்டிப்பாய் பார்ப்பனீயம் உயித் தெழாது.

கவிதைகள்

நவம்பர் 12, 2008

பத்து மாதம் மூச்சு
முட்டபால் குடித்து
பின்அம்மார்பகத்தையே
பேனாவில்வடிக்கிறான் –
நம்புங்கள் இவன் கவிஞன்………

தட்சனைக்கு
அதிகமாய்மணியடிப்பவனை
விடபோதையூட்டி
தருகின்றான்அது தமிழ்ப்போதை………

தாயிடம் , தமக்கையிடம்வாங்கிய
முத்தங்கள்சாயம்பூசி
விற்கின்றான்கள்ளக்காதலிகளின்
லிப்டிக்குகளோடு…..

கவியரசு,கவிபேரரசு,
வித்தகக்கவி,என
பட்டங்கள்தேடி வரும் –
விபச்சார பேனாவுக்கு
சரக்குஎங்கிருந்து
தன் வீட்டைத் தவிர…….

கழுத்திலே கத்தியைவைத்தாலும்கூட
மக்களுக்காகஎழுதாது-
உழைக்காதபேனா
உழைப்போரின்விதியை
எழுதிடுமாயென்ன?

தினம் விடி காலை
எழுந்துஉழைத்து ஓடாய்
தேய்ந்துஎங்கள் விவசாயியின்
வாழ்க்கை தான் – கவிதை…….

சவுக்கடியும்,
சாணிப்பாலையும்மறக்காத ,
பாடாதபாடல் தான்
எப்படத்திலும்வராத சோகப்பாடல்….

எப்போதும்
எங்கள்கவிதை
வறுமையாகவும்,பாடல்
சோகமாய்மட்டுமிருக்கப்போவதில்லை…

களத்தில் நிற்கும்எங்கள்
போராளிக்குஎதுகை
மோனை தெரியாது,
செந்தமிழில் பாடல் புனையத்தெரியாது……

ஆனால் வறுமையின்
வலிதெரியும்,ரத்ததின்
வெப்பம்புரியும்.,அவர்கள்
மக்களை படித்தவர்கள்
மக்களோடு வழ்ந்து
மக்களுக்காக இறப்பவர்கள்-ஆம்
அவர்கள் தான் மக்களின் கவிஞர்கள்.

கவிதைகள் – ,சிரியுங்கள்

நவம்பர் 12, 2008

சிரிப்பதெற்கென்றெ நாள்

ஒருநாள் கற்றுக்கொடுக்கிறது

உலகம்.,இளிக்கிறான் உலக

வங்கி -மின்னுகிறது தங்கப்பல்….

 

 

சிரிப்பு தினம்

பெண்கள் தினம்

தாய் தினம்

தந்தையர் தினம்

சடங்குகள் தொடர்கின்றன….

 

கடற்கரையோரம் சிறு கூட்டம்

சிரிக்கிறது – சிரித்தால்

ஆயுள் அதிகரிக்குமாம்

 

அன்னிய செலாவணி

போல வீங்கிய உடல்கள்

வாய்கள் இளித்துக் கொண்டே

இருக்கிறது-எங்கள்

கண்ணீரின் முதலீட்டில்….

 

உழைத்து உழைத்து

வெடித்து போன எங்கள்

உதடுகளை

உங்களால்சிரிக்க வைக்க முடியாது….

 

விவசாயி,தொழிலாளி

வணிகர்கள் என அனைவரும்

அழுதுகொண்டிருக்க

சிரியுங்கள்,சிரியுங்கள்

சிரித்து கொண்டேயிருங்கள்…

 

அழுது அழுது வற்றிபோன

எங்கள் கண்களில் கண்ணீர் இல்லை

கலகம் ஒன்றே யெங்களை

சிரிக்க வைக்கும் உங்களை

கதறவும் வைக்கும்.

 

கவிதைகள்-அழகு

நவம்பர் 12, 2008

அழகென்றால்
எதுவென்று விடை
தேடி புறப்பட்டேன்…..

உச்சி முதல் உள்ளங்கால்
வரைஒவ்வொன்றும்
வரிசையாய் வந்தன,
நீ நான் என போட்டி
போட்டுக்கொண்டு……

சிறும் பல், பெரும் பல்
தெத்து பல் பலவும்
பல்லளித்து பறைசாற்றின
பற்களெல்லாம் அழகெனில்
ஊத்தைவாயன் சங்கரனின்
பல்லும் அழகா ? …

ஒல்லி குச்சிகால்கள்
கேட்வாக்கில்
ஒய்யாரமாய்
நடை போட்டு நடந்தன
நடப்பதோ சுடுகாட்டை
நோக்கி இதில் நாய்
நடையே நடந்தாலும்
கேட்க ஆளில்லை…..

உடைகள் மேலே
ஏற ஏற
அழகுகள்
கூடிக்கொண்டே போகின்றன……
 

இது தான் அழகா
யில்லை யில்லை
அழகென்றால் எது
வென்று செப்புகின்றேன்
கேளிர்
பண்பட்ட நிலமழகு
கூரொடிந்த ஏரழகு
உழைப்பாளியின்
வியர்வையழகு தொழிலாளியின்
அசதியழகு,அழகு அழகு
ஆயிரமழகு புரட்சி
அதனினும் அழகு
மக்கட்படை…

அன்று புரியவைப்போம்
நீங்கள் அழகுகள் அல்ல
இன்னாட்டின் அசிங்கங்கள் என்று.

Hello world!

நவம்பர் 12, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!