Posts Tagged ‘கலைஞர்’

அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்

ஒக்ரோபர் 20, 2010

அம்மணம், டாஸ்மாக்  மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்

மாலை வேலை
ஒரு வேளையாய் நான்
தெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்
போட்டி யார் வேகமாய் செல்வதென ?

போட்டி ஒன்று தான்
போட்டியாளர்கள் பெருகி விட்டார்கள்
தெருவில் இருக்கும் அனைவருக்கும்
நான் போட்டியாளன்
ஆடு மாடு குதிரை
எருமை பன்றியென அனைத்தும்
என்னோடு தெருவில்

நடப்பதும் ஓடுவதுமாய்
ஒன்றை நான் முந்த மற்றொன்று
என்னை முந்த  என்னிதழ்
விரித்த புன்னகை
காணாமல் போனது
”டேய் வாடி, ஏண்டி நீ வாடா”

பாலினம் மாறுபடுகிறதே
என்று நான் திரும்ப
அது பாலினம் மறந்து
நின்றது  ஒன்று
பிறந்த நாட்டில் பிறந்த ஊரில்
பிறந்த மேனியாய் நிற்பது தவறா?
அவனுக்குள் கேள்விகள் முளைத்திருக்கலாம்

போதையில் ஒரு குத்தாட்டத்தோடு
மல்லார்ந்து வீழ்ந்தான்
சூரியனுக்கு குத்திய குத்து
தெருவே இனி டாஸ்மாக் சொத்து

மாதம் மும்மாரி பொழிந்ததாம்
ஒருகாலத்தில்
பாலாறும் தேனாறும் ஓடியதாம்
ஒரு காலத்தில்

அந்த ஒரு காலத்தைக் கொண்டு வர
காங்கிரசு முதல் போலிகள்
வரை போட்டியோ போட்டி
போட்ட போட்டியில்
கிழிந்தது விட்டது தமிழனின் வேட்டி
வந்து விட்டது டாஸ்மாக் புட்டி

சாக்கடை நீர்  ஒதுங்கியோடுகிறது
இவன் எச்சில் படாதவாறு

பன்றிகளின் இடம் இப்போது
பச்சைத்தமிழனுக்கு

என் போட்டியை விடுங்கள்
தமிழனுக்கு போட்டியில்லை
கலைஞர் புண்ணியத்தில்
அவனுக்கு போட்டியும் இல்லை


அம்மணமாய் நிற்கிறான் ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க
ராஜகுல திலக்க்க்க்க்க்க்க………

அவண்தாண்டா

தமிழன்

செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

ஜூன் 29, 2010

செம்மொழி மாநாடும்   நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக  தாமதமாகிவிட்டது.  பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு  நின்றிருந்தன.  நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று   மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன?

நடத்துனர் வந்தார் ” கோவை மட்டும் உட்காரு, கோவை மட்டும் உட்காரு”” ஒரு பயணி   கேட்டார் ” மாநாட்டுக்கு போவுங்களா ?, எத்தனை மணிக்கு போவும்?”  ” எனக்கு எதுவும் தெரியாது, வண்டியை எடுக்க சொன்னா எடுப்பேன் ,  அவ்வளவு தான், உன்ன மாதிரிதான் நானும்”  பிறகு யாரும் அவரிடம் கேட்க வில்லை. என்னருகில் அமர்ந்திருந்த பயணி முணுமுணுத்தார் “திமிர்பிடிச்சவன்”.

பேருந்து கிளம்பியது,  பயணச்சீட்டுக்காக ரூ 28 வசூலிக்கப்பட்டது. நடத்துனரிடம் கேட்ட போது  ” எனக்குத் தெரியாது” அதே பழைய பல்லவியை பாடினார் . ஒருவர்ர் சொன்னார்  “நான் மட்டும் தான் இளிச்சவாயன்னு நெனச்சேன், எல்லாரும் துணைக்கு இருக்காங்க நெம்ப சந்தோசம் “ நாங்கள் சேர்ந்து இளித்தோம், இளிச்சவாயர்களல்லவா.
கடைசி நாளில் எல்லா பேருந்திலும் அதே அளவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களிடம் பேருந்துக்கட்டணம் குறைவு என்று சொல்லி கூட்டம் கூட்டுவது , பின்னர் வண்டி புறப்பட்டபின் விலையைச் சொல்வதென  திட்டமிட்ட பிராடு வேலை நடந்திருக்கிறது. இன்னொருவர் சொன்னார் “அங்க எல்லா பஸ்ஸூக்கும்  1 ரூபாயாம் ”

பேருந்து அநியாயத்திற்கு ஊர்ந்து சென்றது, சரி 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய நாம் அரை மணி நேரம் அதிகமாகுமென நினைத்தேன்.  அவினாசியிலிருந்து ஒவ்வொரு 1/4 கி.மீட்டருக்கும் போலீசு படையாக  இருந்தது.  செல்லும் வழியயல்லாம் திமுகவினர் தங்கள் சொந்த விழாவினை சிறப்பித்து டிஜிட்டல் தட்டிகளால் நிரப்பியிருந்தார்கள். இப்பகுதியில் அழகிரிக்கு இடமில்லை போலும். காலையில் 9.20க்கு எடுக்கப்பட்ட பேருந்து எப்படியோ தட்டு தடுமாறி 11.30 க்கு கருமத்தம்பட்டியை அடைந்தது. எனக்கு ஒரு சந்தோசம் ” இன்னும் அரை மணி நேரம் தானே, நாம கணக்கு போட்ட மாதிரியே அரை மணிநேரம் தாமதம்”. ஆனால் நாம் ஒரு கணக்கைப்போட்டால் ஆண்டுகொண்டிருப்பவன் வேறொரு கணக்கைப் போட்டு விட்டார்.

திடீரென பேருந்துகள் கருமத்தம்பட்டிக்குள் திருப்பிவிடப்பட்டன, அன்னூர் சாலையில் பயணித்த பேருந்து  சிறிது தூரம் சென் பின் வாகராயம்பாளைம் வழியாக புகுந்தது. அது சரியாக 10 அடி ரோடு, எதிரில் வண்டி வந்தார் சாலையை விட்டு இறக்கிதான் வைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை இல்லை கடைசி வரை எந்த நான்கு சக்கர மற்றும் பேருந்துகளோ அவ்வழியே வரவில்லை.  நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் வழியே தெரியவில்லை. அப்பகுதியிலிருந்த மக்கள் போய் சேரும் வரை வழியைச் சொன்னார்கள். அருகிலிருந்த பயணி சொன்னார் “கண்டக்டர் அப்பலேர்ந்து சரித்தானுங் சொன்னாரு, எனக்குத்தெரியாது , எனக்குத்தெரியாதுன்னு , நமக்குத்தானுங் புத்தி சுவமில்ல” எல்லாரும் சிரித்தோம்.

பேருந்து செல்லும் வழியியல்லாலம் மக்கள் இந்த நேரத்தில் பேருந்துகள் இவ்வழியே செல்வதை ஆச்சரியமாகப்பார்த்தார்கள் .  குழந்தைகள் ஆர்வமாய் கைகாட்டின.  வழியெங்கும் வறண்டு போன பூமி பரிதாபமாய் காட்சியளித்தது.  காடுகள் பிளந்து வறண்டு கிடந்தன. கோவை மாநகரம் வெள்ளையடிக்கப்பட்டு இருப்பதாய் பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள், ஒரு எட்டு இப்பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.

வாகராயம்பாளையத்தில் பொதுமக்கள்  குறிப்பாக பெண்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்றிருந்தார்கள்.  பேருந்து செல்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். செல்லும் வழியெல்லாம்  செப்பனிடப்படாத சாலைகளும், வறண்டு போன பூமியுமாய் இருந்தது. ஒரு மணி நேரம் சுற்றிய பின் சத்தியமங்கலம் சாலைக்கு பேருந்து வந்தது. கோவைக்கு 15 கி.மீ எனப்பல்லைக் காட்டியது பலகை. சிவானந்தா, கணபதி வழியாக பேருந்து செல்ல,  வழியெங்கும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருக்க, கோவை மாநகரமே மானமிழந்து அசிங்கமாக
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது
. நான்கு நாட்களாய் முடக்கப்பட்டிருக்கின்றது கோவை மாவட்டத்தின் தொழில்கள் அனைத்தும், இருந்தாலும் பொய்யாய் மினுக்கியது, வறுமை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பு பார்த்த கிராமங்களோ போலியாக அல்லாது வறுமையின் அழகை அழகாய் எடுத்தியம்பின.

முழுதாய் 3.30 மணிநேரம் தின்ற பின்னர் ஒரு வழியாக காந்திபுரத்தில் இறங்கினேன்.  அங்கிருந்து கொடீசியா செல்லும் பேருந்தொன்றை தேடிப்பிடித்தேன். அது ஒரு டீலக்ஸ் பேருந்து பயணச்சீட்டு 7.00 ரூபாய்(பத்திரிக்கைளில் 1 ரூபாய் தானென படித்ததாக  ஒரு நபர் கூறினார்).கொடீசியாவில் இறக்காமல் 2 கி.மீ தள்ளி பாலத்திற்கருகில் இறக்கி விட்டார்கள்.  ஆயிரக்கணக்காணோருடன் நானும் பயணித்தேன். காவல்துறை “அங்க போங்க, இங்க போங்க” என்று கத்திக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு போகிறோம் என்று  தெரியவில்லை . ஒரு போலீசுக்காரர் மக்களைப்பார்த்து ” போங்கடா போங்கடா”  பாத்துப்போங்கடா”” என்றார். இன்னொரு போலீசுக்காரர் ஒருவரை அடிக்க லத்தியைத் தூக்கிகொண்டு ஓடி வந்தார்.

நான் நினைத்தேன் “ ஒருத்தன் வாங்கடா வாங்கடாங்குறான் இவன் போங்கடா போங்கடாங்குறான்”. சில போலீசெல்லாம் பல்லைக்கடித்தபடியே  “சார் போங்க ” என்றார்கள். ஓ இதுதான் இன்முகத்துடன் வரவேற்கிறதா!!!!!!. சுற்றி சுற்றி சென்றோம், ஆங்காங்கு போலீசார் வழி காண்பித்தார்கள(சுற்றி சுற்றி அலையவிட்டார்கள் 20 நிமிடம் நடக்க வேண்டிய தூரமெனில் 40 நிமிடம் பாதுகாப்பு கருதி அலையவிட்டார்கள் ). மாநாட்டுக்கு வரவேற்பு பந்தல் வரவேற்றது. அதில் “செம்மொழியாரே வருக” என்றிருந்தது.  உள்ளே கும்பலோடு சென்றவுடன் அது தனியாக முக்கால் கி.மீட்டர்  இருக்கும். உணவகம், பொருட்காட்சி  எங்கும் கூட்டமாக இருந்தது. மக்களுக்கு சுற்றிப்பார்க்க ஒரு இடம் கிடைத்தது போல சாரைசாரையாக வந்திருந்தார்கள்.

மாநாட்டுப்பந்தலை நெருங்கினேன். ஆடுமாடுகளை பட்டியில் அடைத்தது போல தடுத்து வைத்திருந்தார்கள். ஒரு நுழைவாயிலில் கூட்டமாக நானும் நிற்கஆரம்பித்ததேன்.  சுமார் 15 நிமிடங்களுக்குப்பிறகு பட்டியை திறந்தார்கள். ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள். உள்ளே நுழைந்தேன். திருச்சி செல்வேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நடிகர் சிவக்குமார் விழாவினை முடித்து வைத்துக்கிளம்பினார். முன்மேடையை நோக்கி பலரோடு நானும் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். காவல்துறையினர் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று வழிகாட்டிக்கொண்டு இருந்தனர். வளைந்து வளைந்து சென்றோம். கடைசியாய் மாநாட்டிற்கு வெளியில் வந்து விட்டேன்.

மறுபடியும் உள்ளே செல்லவேண்டுமென்றால் அரை கி.மீ நடக்க வேண்டுமே!. சரி நாய் வேசம் போட்டால் குரைச்ச்தான ஆக வேண்டும்.  வேறு ஏதோ வரிசை ஒன்றிருக்க அது எங்கே ஆரம்பிக்கிறதென்று சென்றால் அது ஒரு கி.மீ ஆனது, போகும் வழியில் இஸ்கான் கோயில் இருந்தது. அவர்களுக்கு கூட்டம் ஒரு வாய்ப்பாகி விட்டது. வரிசையில் நின்றவர்களிடம் பகவத்கீதையை பண்டாரங்கள் விற்றுக்கொண்டிருந்தன, அவர்களில் 99% மலையாளப்பார்ப்பனர்கள்.   நானே நால் வர்ணத்தையும் உருவாக்கினேன் என்ற  பார்ப்பன கொடுங்கோன்மையின் மொத்த குத்தகையான பகவத்கீதை விற்க அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தோழர்கள் போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்படுகிறார்கள்.

பார்ப்பன வெறியை நிலைநிறுத்துவோருக்கு இடமுண்டு சாதியை எதிர்ப்போருக்கு இடமில்லை அல்லவா. இதல்லவா பகுத்தறிவு.  வாழும் வள்ளுவராம், நல்ல வேளை வள்ளுவர் உயிரோடு இல்லை. மணி 2.30 ஆகி விட்டது. உணவு எங்கே வாங்கலாமென்று திரிந்து கொண்டிருந்தேன். அங்கும் பகவத்கீதை கடை போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். விற்பவர் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புனிதம்” என்றார், உடனே திமுக குலக்கொழுந்துகள் பவ்யமாய் வாங்கின. குடிநீருக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டியில் அருகில் அரசு மானியத்துடனான மிகக்குறைவான உணவு என்று போட்டிருக்க,
“ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.

அடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு,  ஒரு சிறிய டப்பாவில்  எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம். கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம்?  அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு  சாட்சி இந்த உணவே போதும்.

கலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம்  ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி

னரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள்  அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன. வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை.

மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு  நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது.  உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது.  மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே வந்தேன் , பல்லாயிரக்கணக்கானேரோடு நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். கொடீசியாவிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்து இல்லை.

விஐபிக்களுக்காக முடக்கப்பட்டிருந்தது சாலை  நடந்து செல்ல மக்களுக்கு மிகக்குறைவான இடம் ஒதுக்கியது காவல்துறை  மக்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்களோடு நானும் நடந்தேன்.  நடக்க ஆரம்பித்தபோது காந்திபுரம் 7 கி.மீ என்றிருந்த பலகை இப்போது 1.கி.மீ என்றாகிவிட்டது. நான் மட்டுமே நடந்து கொண்டிருந்தேன், அப்படியே பேருந்து நிலையம் சென்று கிளம்பினேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 பேருந்துகள் மட்டுமே என்னைக்கடந்தன அதுவும் கடுங்கூட்டத்தோடு ,காலையிலிருந்த அளவுக்கு மாலை வெளியூர்களுக்கோ உள்ளுரூக்கோ பேருந்து வசதி இல்லை. மக்கள் பிதுங்கிக்கொண்டு பயணித்தார்கள், விழாவிற்கு வந்த பின்னர் அம்போவென விட்டுவிட்டார் கருணாநிதி. இந்நிலையில் கருணாவை கடலில் கட்டுமரமாக பயன்படுத்தினால் அவ்வளவுதான். செம்மொழி மாநாட்டிற்கு வந்ததற்கு என் கால்கள் வெம்பிப்போனதுதான் மிச்சம்.

வறண்டு போன கவிதை

தமிழகத்தின் கிராமங்களின் அதே நிலை, மறைக்கமுடியாத வறுமை, செம்மொழித்தமிழனுக்கு வாழவே வழியில்லை, மாநாட்டுக்கு 500 கோடி

ஈழத்தின் பிணநாற்றம் போவதற்குள் மக்களின் பணத்தில் கச்சேரி, சாவு வீட்டில் ரகுமானின் பாப் மியூசிக்

வெளியே பார்ப்பன பாகவதம் , உள்ளே பணக்கார பாகவதம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் யார் அந்த ஒருவன் ? சிறீமன்மத பாகவதத்தை பக்தியோடு மொய்த்த கழககண்மணிகள்

மலிவு விலையில் மானிய சோறு கொள்ளைஅடிக்க புது டெக்னிக்

30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்

பன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்


அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா………..

மே 31, 2010
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா………..

நேற்று நடந்த திமுகவின் உயர்நிலைசெயற்குழு கூடி 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாமக வுக்கு ஒரு மாநிலங்களவை பதவி அளிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த நாடாளுமன்றதேர்தலின் போது ஈழமக்களை வைத்து வியாபாரம் செய்யும் போட்டியில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ராமதாசு, தன் மகன் அன்பு மணிக்கு பதவி வாங்கும் நோக்கில் நாக்கை தொங்க விட்டுக்கொண்டு காத்திருந்ததில் உடனடி ஏமாற்றமும் பிற்காலத்தில் சில எலும்புத்துண்டுகளும் கிடைப்பது தெளிவாகி விட்டது.
கருணாவும் ராமதாசும் மானங்கெட்டவர்கள் என்பதற்கு கருணாவின் இந்த பதிலே சிறந்த எடுத்துக்காட்டு
“கேள்வி:  பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

பதில்:  உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.”

அரசியல் கொள்கை கொண்ட கொள்கைக்கு நேர்மை இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு ராமதாசு கருணா மட்டுமல்ல அவர்களின் சேவையாளர்களும்(தொண்டர்களும்) மாறிப்போயிருக்கிறார்கள். இது வியக்கத்தக்க முன்னேற்றம், மக்கள் தன்னுடைய எதிரியான ஆளும் வர்க்கதின் புரோக்கர்கள் யார் என்பதை அறியாமல் கிடக்கும் சூழலில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் வந்து “நான் தான் நான் தான் ” என்று போட்டி போடுகின்றன.
அணி மாறுவது என்பது சாதாரணவிசயம் என்று ராமதாஸ் கூறுவதும் அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு திரிவதும் அரசியலுக்கு தேவையான ஒன்றாகி விட்டது. கவுண்டமணி சொல்வது போல “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ஏன் உங்க தலைவர் அணி மாறுகிறார் என்ற கேள்விக்கு அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் ஒரே பதிலை சொல்லுகின்றன முக்கியமாக பாமக கட்சி சேவையாளிகளை சொல்கிறர்கள்”ஏன் எங்க அய்யா மட்டும் தான் மா

று

னாரா? ஏன் அவன் மாறல? இவ மாறுல? “

யாரும் யோக்கியமில்லை என்ன கேள்வி கேட்கக்கூடாது என்பதுதான் இவர்கள் வாதம். இவர்கள் கடந்த சில மாதங்களில் அவர்கள் மறந்தாலும் நம்மால் மறக்க முடியவில்லை. இந்த இரண்டு மானங்கெட்டவர்களின் கடந்த சில அறிக்கையின் முக்கிய சாரம்சங்கள். கடைசியாக திமுகவிற்கு ராமதாஸ் எழுதிய கெஞ்சல் 

கடிதமும் உள்ளது.

——————————————————————————————————————————

காலம் நெருங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், 14.8.2007 ல் காலம் நெருங்குகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால் அதற்கு கருணாநிதி காரணம் கூறியிருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன்.

வியாழன், 16 ஆகஸ்ட் 2007
———————————————————————————————————————————-
சென்னை ஆக-07.(டிஎன்எஸ்)
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும்,  அது சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வதுமாக பொழுதைக் கழிக்கிறார்., இதனால் கோட்டையில் ஒரு லட்சத்துக்கும் மேல் கோப்புகள் தேங்கியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அதே சமயம் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் 3 மாதத்துக்குள் அறிக்கை பெறப்பட்டு வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதியும், அவரது அரசும் ஆடம்பர விழாக்களை நடத்து வதில் காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி விழாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக புகார் எழுந்து உள்ளது.

மூன்று நாட்கள் கோட்டையை விட்டு 12 அமைச்சர்களும் விழாவுக்கு சென்று உள்ளனர். இந்த விழாவை சென்னையி லிருந்தே துவக்கியிருக் கலாம். மற்றொரு விழா மதுரையில் நடந்துள்ளது. இதில் 10 அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  மக்கள் முகம் சுழிக்கும் வகையில்  போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி  தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.

முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும்,  சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார். (எந்தெந்த நாளில் எந்தெந்த விழாக்களில் கலந்துகொண்டார் என பட்டியலை வெளியிட்டார்).

சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்பதே எனது கருத்தாகும். இதுவரை 29 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்கள். இதுபற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

———————————————————————————————————————————
Dinamlar 2009-04-11

காட்பாடி : “”அடிமையாக வாழ்வதை விட, சன்னியாசம் வாங்கிக் கொண்டு சாமியாராகப் போகலாம்,” என முதல்வர் கருணாநிதி பற்றி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வேலுவை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. வேட்பாளர் வேலு தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:கடந்த சட்டசபை, உள்ளாட்சி….
——————————————————————————————————

பெரும் பொய்யை நம்புபவர் கருணாநிதி – ராமதாஸ் காட்டம்!

சனி, 27 மார்ச் 2010 21:33 சின்னமுத்து Politics
E-mailஅச்செடுக்க

“சிறு பொய்யை விட பெரும் பொய்களை நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். “தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில், பாமகவுக்கு 2வது இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதைக்கூட முதல்வர் கருணாநிதியால் ஏன் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்காக வருத்தப்படுவதாகவும், கவலைப்படுவதாகவும் பேசிய முதல்வர் கருணாநிதி, அக்கட்சிக்காக பென்னாகரத்தில் வாக்கு சேகரித்து பாமக மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?

கடந்த 4 ஆண்டுகளில் பாமக எத்தகைய வன்முறையில் ஈடுபட்டது என்பதை முதல்வரால் கூறமுடியுமா? 1977-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது, திமுகவினர் கலவரத்தை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஒரு மூத்த அமைச்சரே முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சாட்சியம் அளித்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தை கடுமையாக விமர்சித்த திமுக, பின்னர் அக்கட்சியுடன் தேர்தல் உறவு கொண்டது. மூதறிஞர் ராஜாஜியைப் பற்றி இழிவாக பேசிவிட்டு, பின்னர் அவர் வீடு தேடிச்சென்று கூட்டணி வைத்தது திமுக. சிறு பொய்யைக் காட்டிலும், பெரும் பொய்யையே நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

———————————————————————————————————————————–

தன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 03:45.49 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர் ஒவ்வொருவரின் காதிலும் பூ சுற்றிவிட்டது திமுகவின் செயற்குழு முடிவு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வேலூரில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-தமிழக அரசை நடத்தி வரும் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதியாக விளங்குவதால், அவருடைய கட்சி இலங்கைத் தமிழர் பிரச்னையில் எடுக்கும் முடிவால் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் நிறைவு செய்யும் வகையில் திமுக செயற்குழுவின் முடிவு இல்லை.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம், இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம்.
இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்கு …………………………………………………………………

போர்நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தி 3 முறை சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது அந்த கோரிக்கையை திமுக கைகழுவிவிட்டது. போர்நிறுத்தம் குறித்து செயற்குழுவில் ஒரு வார்த்தை கூட வலியுறுத்தவில்லை……………ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.


————————————————————————

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009,——————————————————————————————–

மதுக்கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்
கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ். திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது: “மதுவை ஒழிப்பது……………….————————————————————————————-

எனக்கு வெறி பிடிச்சிருக்கு…’ : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Post by janani on Mon Mar 22, 2010 7:08 am

…………………………………………………………………………..

தேர்தல் பொறுப்பாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது. இந்ததேர்தலில் அதிக ஓட்டுக்களை பெற்று தரும் பொறுப்பாளர்களுக்கு ராமதாஸ் மூலம் தங்கச் சங்கிலி, மோதிரம் வழங்கப்படும்.இந்த தேர்தலில் ஜெயித்தே வேண்டும். எனக்கு வெறி பிடிச்சிருக்கு, நம்மை வமானப்படுத்திய தி.மு.க.,வை
தோற்கடிக்க வேண்டும். எனக்கு பிடித்த வெறி உங்களிடமும் இருக்க வேண்டும்.தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. பா.ம.க., தொண்டர்களால் வெற்றிஎனும் பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.அது நல்லமுறையில் வீடு வந்து சேர வேண்டும்.

பா.ம.க.,வுக்கு மூன்றாவது இடம் என
கூறுகின்றனர். 1991, 1996, 2001ல் என மூன்று சட்டசபை தேர்தல்களிலும் தி.மு.க.,வுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. 2006ல் கூட்டணியில் இருந்ததால்
நாம் விட்டுக் கொடுத்தோம். அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில்பா.ம.க., வெற்றி உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,வினரே,
‘நாங்கள் பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுகிறோம். தி.மு.க., எப்படியாவது தோற்கவேண்டும்’ என, கூறுகின்றனர்.கருணாநிதி பிரச்சாரத்துக்கு ஏன் வருகிறார்?
உளவுத்துறை அறிக்கை படி பென்னாகரத்தில் பா.ம.க., வெற்றி பெறும் என தகவல்
கிடைத்துள்ளது. அதற்கு பயந்தே பிரச்சாரத்துக்கு வருகிறார். எல்லா சமுதாயமக்களையும் சந்தித்து பா.ம.க.,வினர் ஓட்டு கேட்க வேண்டும்.

செக்போஸ்ட்டுகளில் நிறுவனர் ராமதாஸ் காரை மட்டும் சோதனை நடத்தி, வேண்டுமென்றே அவமானப்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க., அமைச்சர்களுக்கு சல்யூட் அடிக்கின்றனர். யலலிதா, கருணாநிதிபிரச்சாரத்துக்கு வரும்போது, அவர்களது காரை சோதனையிடுவரா? திருச்செந்தூர்
இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். இங்கு படிக்காத
ஜனங்களாக இருப்பதால், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றுகின்றனர். லோக்சபா தேர்தலில் எந்த சமுதாய பெயரைச் சொல்லி தோற்கடிக்க செய்தனரோ, அவர்களுக்கு
இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘ராமசாமி, முனுசாமி’ பா.ம.க.,வில் சூசகம் :
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளவர்களை
ராமசாமி என்றும், உள்ளூர் நபர்களை முனுசாமி என்றும் ராமதாஸ்
குறிப்பிடுகிறார். ”ராமசாமிகள் தேர்தல் விதிப்படி 25ம் தேதி வரை மட்டுமே
இருப்பர். உள்ளூர் முனுசாமிகள் தான் வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லும் முயற்சியை எடுக்க வேண்டும். 25ம் தேதிக்கு மேல் தி.மு.க.,வைச் சேர்ந்த எந்த ராமசாமி இருந்தாலும் அவனை மரத்தில் கட்டிவைத்து அடியுங்கள், போலீஸில் ஒப்படையுங்கள். அவர்கள் ‘ஏசி’யில் படுத்து உறங்கியவர்கள். நாம் கலப்பை பிடித்தவர்கள். நமது வெற்றி நிச்சயமான ஒன்று.வெறியுடன் தேர்தல் பணியாற்றுங்கள்,” என, அன்புமணி ராமதாஸ் வீராவேசமாகபேசினார்.

————————————————————-

பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்கிறது பாமக – ராமதாஸ்

புதன், 31 மார்ச் 2010 12:57 வெற்றி Politics
E-mailஅச்செடுக்க

பாமக தமிழக அரசியலில்  அசைக்க முடியாத ஒரு சக்தி  என்பது பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது என பாமக  நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பென்னாகரம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த அறிக்கையில் பென்னாகரம் தொகுதியில்  ஜனநாயகம் தோற்கடிக்கப் பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது .பென்னாகரம் இடைத்  தேர்தலில் வலுவான கூட்டணியுடனும் , அனைத்து அதிகார  வசதி வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி தேர்தலை சந்தித்தது. முக்கிய எதிர்க்கட்சியும் நான்கு கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தேர்தலை சந்தித்தது.

ஆளும் கட்சி போன்று பணபலம் இல்லாத நிலையில்  மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களமிறங்கிய பாமகவின் நம்பிக்கை  வீண்போகவில்லை. பணபலத்தையும் ஆளும் கட்சியும் அதிகாரப் போக்கையும் எதிர்த்து தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளோம் . இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல,  தார்மீக ரீதியில் இது பாமகவுக்கு மகத்தான வெற்றியாகும்.

செல்வாக்கு இல்லாத பாமக என்ற சிலரின்  கணிப்பை, பென்னாகரம் வாக்காளப் பெருமக்கள்  பொய்யாக்கி  தமிழக அரசியலில் பாமக  அசைக்க முடியாத சக்தி என தீர்ப்பு வழங்கியுள்ளனர் . பீனிக்ஸ் பறவை போல பாமக  எழுச்சியுடனும், உயிர்த் துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்க பாமகவுக்கு ஓட்டளித்த  பென்னாகரம் வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால் ஒழிய, ஜனநாயகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது.இதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என்றும்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

———————————————————————————————————

———————————————————————————————————————————–

ராமதாஸ் எழுதிய கெஞ்சல்

கடிதம்

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.


தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.
இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.
முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.
2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.
2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்

————————————————————————————————————————————

கடைசியாக ஒரு சந்தேகம்

இப்போது ராமதாசு கருணாவை பிடித்துப்போனதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?

1. ராஜபக்ஷேவும் கருணாவும் ஒன்று என்று இருந்தது போய் கருணா ஈழத்தின் மீட்பாளராகி விட்டாரா?

2. வன்னியர்களின் துரோகி இப்போது வன்னியத்தந்தை ஆகிவிட்டாரா?

3. டாஸ்மாக் இழுத்து மூடப்பட்டுவிட்டதா?

4.சட்டம் ஒழுங்கு மோசமாகி இருந்தது இப்போது பரிசுத்தமாகி விட்டதா?

5…………………………………………………………………………………………….

அட போங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…………


பச்சோந்தி எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா????




படிக்க வேண்டிய பதிவுகள்

1.

படிக்க வேண்டிய பதிவுகள்

1.

2.

3.