Posts Tagged ‘சிதம்பரம்’

செருப்புகள் காத்திருக்கின்றன……

ஏப்ரல் 10, 2009
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……

ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……

செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……

பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..

யார் காலை  யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க

 
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..

 
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..

 

செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக  போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.

தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

பிப்ரவரி 17, 2009

தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

thillai-new

இது ஏற்கனவே கேட்டது ,படித்தது போலத்தெரியலாம்,பழைய விசயங்களை புதிய விசயமாக்குவது காலமே தீர்மானிக்கிறது.அப்படித்தான் தில்லைக்கோயிலில் தமிழை நுழைக்கவும் அதை அரசின் கட்டுக்குள் கொண்டுவரவும் போராடிய புரட்சிகர அமைப்புக்களின் பணி இன்னும் பலமடங்கு கூடியுள்ளது.வெற்றி என்பது ஒரு காரியம் நிகழ்த்தப்பட்டதால் மட்டுமல்ல தொடர்ந்து அதை தக்க வைப்பதிலேயே இருக்கிறது.மீண்டும் பல நிகழ்வுகளை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தில் எதிரிகளும் துரோகிகளும் நம்மை தள்ளியிருக்கிறார்கள்.

கடந்த 2000-ம் ஆண்டு திருச்சிற்றம்பலத்தில்  தமிழில் பாட முனைந்த சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சித ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்டார்.அதற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மக இக,புஜதொமு,புமாஇமு,விவிமு மற்றும் உள்ளூர் சனனாயக சக்திகளுடன் இணைந்து போராடியது
தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிராக உண்மையில் கடந்த  நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களால் தில்லையே பரபரப்புக்குள்ளாகியது.
உள்ளூர் சனனாய சக்திகள்  முக்கியமாக முன்னாள் அமைச்சர் விவி சாமிநாதன் மற்றும்  வி.எம்.எஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.தீட்சிதர்களின்  சில்லுவண்டித்தனமெல்லாம் சிதம்பரம் முழுக்க நாறிக்கிடந்தது.
அவ்வூர் வழியாக பயணம் செய்ய நேர்ந்தது.அப்போது சிதம்பரத்தில் ஏறிய பயணியிடம் தீட்சிதர்களின் அட்டூழியத்தினை சொன்னேன்.அவர் பொறுமையாய் சொன்னார்” எங்களுக்கு அது நடக்குறது எப்பவோ தெரியுமே”.மக இ க வின் பிரச்சாரத்துக்கு முன் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் தீட்சித ரவுடிகளை யாராலும் அடக்க முடியாது.
கோயிலில் அசைவ உணவுகளை தின்பது,கோயிலில் நகைகளை கொள்ளையடிப்பது ,கோயிலிலே விபச்சாரத்தனத்தில் ஈடுபடுவது எல்லாம் பட்டவர்த்தனமாகியிருந்தது,யாரும்  முன்  வரவில்லை காரணம்  எல்லாம் கடவுளின் பெயரால் நடைபெற்றதும் முக்கிய காரணம்.
இப்போது வரும் சனியன்று நடக்கப்போகின்றதே  அந்த பெரியார் சிலை அருகில் தான் முதல் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் பேசிய திரு.வி எம்.எஸ்.தனக்கு சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார்,அதில் தீட்சிதர்களி அயோக்கியத்தனம் குறித்து எழுதப்பட்டிருந்தது.அக்கூட்டத்தில் பேசிய   CPM மாவட்ட செயலாளர் சொன்னார்” உரிமைக்காக “இந்தியா முழுவதும் மார்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடும் அதில் வெற்றியும் பெறும் என வீராப்பாய் பேசினார்.
அடுத்த வாரமே பார்ப்பனர்  என்ற சொல்லால் பிராமணர் உரிமை அவமதிக்கப்படுவதாக கூறி  வெளியேறினர்.பிறகு தனியாய் போராடுவதாய் கூறி பார்ப்னீயத்திற்கெதிரான போராட்டத்தை தங்கள் தலைமி போலவே சிதைக்க முயற்சி செய்தனர்.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியும் அதன்  வெக்கங்கெட்டராமனும் வெளிப்படையாகவே தீட்சித்ர்க்கு ஆதரவாய் திரிந்தனர். சேக்கிழார் விழாவில் தீட்சிதரை  அருளாசி வழங்க அழைத்தனர்.அவ்விழாவில்  ம.க.இ.க  இந்த புரட்டல் வாதிகளை அம்பலப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டது.பின்னர் அரசியல் விபச்சாரி நெடுமாறனை  கூட்டிவந்து கூட்டம் போடார்கள் .அதில் ஒப்புக்குகூட  பார்ப்பனர்  எனும் வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை.ஆனால் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த புரட்சிகர அமைப்புக்களை கிண்டலடித்தார்கள் . ஆனால் இந்த நாய்களின் ஊளையை சற்றும் மதிக்காது மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தொடர்ந்து போராடியது.
தில்லையில் அதன் தோழர்கள் குருதி சிந்தி தமிழை கொண்டு சென்றார்கள்.தமிழை நீச பாசை எனகூறி ஒதுக்கிய தீட்சிதக்கும்பலால்   ம க இ க தோழர்கள் நுழைந்த போது வாய் மூடி மவுனம் சாதிக்கவே முடிந்தது. அப்போது நடந்த சம்பவங்களோ கொடுமையிலும் கொடுமை பல ஊடகங்கள் மக இ க -இன் பெயரை திட்டமிட்டே மறைத்தன.
அரசியல் மாமா கட்சியான சீபீஎம் தனது போராட்டத்தாலே தமிழ் நுழைந்தாக போஸ்ட்டர் ஒட்டியது.அப்போராட்டத்தையே சிதைக்க முயன்ற நாய்கள் வாய் கூசாது பல்லைகாட்டின,சொந்தம் கொண்டாடின.
சென்னையில் பல இடங்களில் போஸ்ட்டர் ஒட்டிய த மு எ ச தமிழக அரசுக்கு நன்றி சொன்னது.
அக்கோயிலை அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கோரி அரசு நடத்தாமல் கிடந்த வழக்கினை  ஆறுமுகசாமி பெயரில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனுத்தாக்கல் செய்தது.இத்தனை ஆண்டுகளாக தூங்க வைக்கப்பட்ட  வழக்கினை தட்டி எழுப்பி அரசின்  வழக்கு மன்றத்தின் மூலம் கோயிலை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வரும்  உத்த்ரவு பெறப்பட்டது,வழக்கம் போல திகவோ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறது,மற்ற கட்சிகளோ பத்திரிக்கை மற்றும் ஊடகங்களோ திட்டமிட்டு  மக இ க புஜதொமு பு.ம.இ.மு,விவிமு ஆகிய அமைப்புக்களின் பெரும் பங்கினை மறைத்தன.
சென்ற ஆண்டு நடந்த வெற்றி விழ பொதுக்கூடத்தில் பேசிய வேல் முருகன் கூட ம க இ க தான் இவ்வெற்றிக்கு காரணம் என தெளிவாக கூறினார்,ஆனால் திக ஏன் பல அமைப்புக்கள்  புரட்சிகர அமைப்புக்களின் பெயரை திட்ட மிட்டு மறைக்கின்றன.
ஆனால் தில்லை மக்கள் தெரிந்து கொண்டார்கள் ம க இ க வும் அதன் தோழமை அமைப்புகளாலேயே  இவ்வெற்றி ஈட்டப்பட்டதென்பதை ஆம் அன்று முதல் வரும் சனி வரை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான நிதியை மக்கள் தான் வழங்குகின்றனர்.நெருப்பை பொட்டலம் கட்டி வைக்க முடியாது அப்படித்தான் போராட்டத்தையோ அதன் வெற்றியையோ அதிக நாள் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

பார்ப்பன பாசிஸ்டுகள் ஓரணி

கோயிலோ கையை விட்டு போய்விட்டது அதை மீட்டே தீருவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்,பார்ப்பன மீடியாக்களோ அதற்கு ஒத்து ஊதி அதன் ஊது குழலாய் செயல் படுகின்றன. கடந்த வாரம் “ஈஸ்வர ரக்சது” எனும் பெயரில் தலையங்கம் தீட்டிய  பார்ப்பன மணி கோயிலை அரசு எடுத்துக்கொண்டது இது வரை இருந்த கோயில் புனஸ்காரங்களும் தடையாகும் என்பதாக சித்தரிக்கிறது,இது வரை யோக்கியமாக இருந்ததாகவும் தற்போது அரசியல் வாதிகள் கெடுத்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கிறது,அதற்கு கருத்து சொல்லுகிறார் பார்ப்பன கொழுந்து”அண்ணாவோட போட்டோவை மாட்டுறாங்க ஆனா அரங்கனுடைய போட்டோவ மாட்டுறான்க இதுக்கு என்ன காரணம் திருச்சி ரெங்க நாதன் அரசுவசமிருப்பதே,ஆனாலும் நாம் பொறுமையாயிருப்போம்” என்னவோ தமிழக கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தன் சொந் உழைப்பால் கட்டியதைப்போலவும் அது பார்ப்பனர்களி பரம்பரை சொத்து அது அரசு தட்டி பறிக்க முயல்வதாக பார்ப்பன மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.
என்னுடைய உழைக்கும் மக்கள் ரத்தத்தில் நிமிர்ந்த கோயில்கள் அம்மக்களுக்கு திறப்பதில்லை,அன்று பார்ப்பன ஆதிக்கத்தில்  கேள்வி கேட்ட உழைக்கும் மக்கள் எரிக்கப்பட்டு நாயன்மாராக்கப்பட்டனர்.என் மக்களால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு நீ என்ன காவலிருப்பது என் சாமியை வழிபட என் மொழியில்  அழைக்க கூடாது அப்படி செய்தால் தீட்டு படுமெனில் அதற்கு அந்த சிவ்னும் உடந்தையெனில் அவனும் தண்டனையை பெறவேண்டும்.ஆனால் ஊடகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பற்றியோ,சிதம்பரம் போலீசு தீட்சிதன்களுக்கு வாலாட்டுவதை பற்றியோ,பங்கு பிரிக்கும் போது கொல்லப்பட்ட மூர்த்தி தீட்சிதனைப்பற்றியோ வாய்திறப்பதில்லை,பாவம் அவர்கள் எங்கெ  போவார்கள் ? என கேள்வி எழுப்புகிறது ?

காடுகள் அழிகிறது என்ற பொய்யாக குற்றச்சாட்டு கூறி ஆடு மேய்ச்சல் தடைசெய்யப்பட்டிருக்கிறதே  அதை நம்பி வாழ்ந்த மக்களைபற்றியோ,தினசரி செத்துக்கொண்டிருக்கும் விவசாயி பற்றியோ,கங்கை கொண்டான் நீர் மக்களுக்கின்றி கோலா கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, சீனப்பட்டால் தூக்கில் தொங்கும் கைத்தறி பற்றியோ வாய்திறவாத திறந்தாலும் என்ன செய்யறது எனக்கூறிய பத்திரிக்கைகள் தற்போது தீர்ப்பே கூறுகின்றன”அரசு ஏற்றது தவறு  என்று”

அவர்களுக்கு தேவை எல்லாம் சொர்ண மால்யாக்கள் அவிழ்த்துப்போட்டு ஆட வேண்டும் .அதுவும் தில்லையில் புனிதமாக கருதப்பவேண்டும் கோயிலில் பார்ப்பனன் வாய்வைத்தவுடன் பீரும் பான்பராக்கும் புனிதமாகிவிடுகின்றன.

கள்ளக்காதலை பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் பார்ப்பன மீடியாக்கள்  தில்லை தீட்சிதன்கள் படுத்து எந்திரிக்கும் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான்  கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் . இனியும் பார்ப்பனனின் காலைக்கழுவி குடிப்பதற்கு  வரிசையில் நிற்கப்போகிறோமா அடிமை பக்தர்களாக இல்லை, என் கடவுளை வழிபட நீயார் அந்த உரிமையை தடுக்க நீ யார் என கேள்வி கேட்கப்போகிறோமா?
திரள்வோம்

தில்லையில் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்.
ஆர்.எஸ்.எஸ் ,பிஜேபி பார்ப்பன கும்பலை  களத்தில் முறியடிப்போம்.
பிப்ரவரி 21.மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ,
பேரணி துவங்கும் இடம் அயோக்கியன் காந்திசிலை
பொதுக்கூட்ட இடம் : பகுத்தறிவு சூரியன் பெரியார் சிலை அருகில்

பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்

பிப்ரவரி 3, 2009
பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்thillai-copy
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே  தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை  மருத்துவமனையில் சேர்த்தனர் .

பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால்  தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி  ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ  வயிறெரிந்து  சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ  வெற்றிநடைப்போட்டு  கோயிலுக்கு  வருகிறார்.

கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால்  தீட்சிதர்களோ  வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும்  அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு  2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,

முதலில்  மனித உரிமை பாதுகாப்புமையம்  உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள்  தான்  இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,

பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக  வழக்கு நடைப்பெற்றது,அதற்கு  திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால்  கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள்  எத்தனை துரோகிகள்  துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே  வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது,  அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது .

அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”

 

 

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்

 

 

ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன்  விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,

சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின்  குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன்  நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு  செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.

பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல்  கோயிலை விட்டு   முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ  அதுதான்   “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம்  வெற்றிபெற்றதாய்  அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை  நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..

http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/