கடப்பாரைகளும் சில கனவான்களும்
மை லார்ட்!!!
ஆர்டர்! ஆர்டர்!! ஆர்டர்!!!
இடித்த கடப்பாரைகள்
அமைதியாய் சொல்கின்றன
“சுத்தியலிருக்க இனி நமக்கு வேலை இல்லை”
குரல்வளையை அறுத்த
கட்டாரிகள் சொல்கின்றன
“வேந்தே! உமது பேனாக்கள்
எம்மை விட கூரானவை”
கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது
இனி கரசேவை தேவை இல்லை
யாத்திரைகள் தேவையே இல்லை
அத்துவானியும் மோடியும் தேவை இல்லை
கருப்புச்சட்டை கனவான்கள் போதும்
கச்சிதமாய் காரியம் முடிக்க
திண்ணியம்
மேலவளவு
அரியானா
மகாராட்டிரக்கொடுமைகள் எல்லாம்
இனி பைசல் செய்யப்படும்
கவனத்தில் கொள்ளுங்கள்
கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது