Posts Tagged ‘தந்தை பெரியார்’

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

மே 11, 2010
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதாவது 2009ம் ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் திராவிடர் கழகம் நான்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கிறது. அதில் அதிமுக்கியமான புத்தகம் ஒன்று இருக்கிறது. அதுதான் ரசியாவின் வெற்றி.

அப்புத்தகத்தில் குடி அரசு ஏட்டில் 23.07.1933 அன்று பெரியார் ரசிய பொருளாதார வளர்ச்சி பற்றி எழுதிய ஒரு கட்டுரையும், ரசியாவின் கூட்டுறவு அமைப்புக்கள் குறித்து அவர் ஈரோட்டில் ஆற்றிய உரையும், ,இராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் மாவட்ட ஜமீன்தாரல்லாதார் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும், திருமணத்தைப்பற்றி பெரியார் எழுதிய கட்டுரையும் இடம் பெற்று இருக்கின்றன.
அதில் ருசியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன் என்ற கட்டுரையை மட்டும் வெளியிடுகிறோம். 77 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் களில் ஒருவரான தோழர்.ஸ்டாலின் மீதான அவதூறுகள் இன்றல்ல,
அப்போதே தொடங்கி விட்டது முதலாளித்துவம்.
பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை  தனக்கேயுரிய பாணியில் வளக்குகிறார் தந்தை பெரியார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையற்றது,  ஸ்டாலின் காலம் என்பது சிதைவுற்ற சோசலிமென்று கூறும் புரட்டல்வாதிகளின் செவிட்டில் அறையும் பெரியாரின் எழுத்துக்கள் இதோ………………….
—————————————————————————
ருசியாவின் வெற்றி
ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருசியாவில் 1917Šல் நிகழ்ந்த புரட்சிக்குப்பின்னர் அந்நாடு உலகமக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பமும் ஏழைமக்களும் ரசிய சமதர்ம திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப்புகுத்தி மிகுந்த தீவிரமாய் பிரச்சாரஞ் செய்துவர,  ஊரார் உழைப்பில் உடல் நோவாது உண்டு வரும் சோம்பேறி செல்வான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும்,  அவர்தம் பத்திரிக்கைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்க பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருசியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலகமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ்சொல்லி அங்கு பட்டினியும்,  பஞ்சமும் நிறைந்திருக்கின்றனவென்று கூறியும்வேறு பல தீய முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
ருசியாவின் சமதர்மக் கொள்கை ஒரு போதும் நடைமுறையில் சாத்தியமாகனாது என்று புகன்ற ராஜதந்திரிகளும், ருசியாவில் தனியுடமையயாழிந்து பொதுவுடமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்கரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்று தவறென்று தானே ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரசியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரசிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலகமெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங்காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பாழுது ரசியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதென்றே கூற வேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாட்சண்யமாக தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும்  தவறென்று கூறத்துணியார். ரசியாவில் மனிதனுக்கு சுதந்திரம் அதிகமில்லையயன்று கூறப்படுகின்றது.
தனிமனிதனுடைய சுதந்திரத்திற்கு போதிய இடமிருப்பதாக கூறப்படும் நாட்டிலுள்ள மக்களை விட ரசிய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையுமிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும் உடுக்க உடையும், ஒண்ட நிழலும் , படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய் இல்லை லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ருசியா நாட்டிலே  பட்டினியயன்றால் இன்னதென்று எவரும் அறியாதபடி, நோய்என்றால் , இன்தென்பதை எவரும் உணராதபடியும் நாளைக்கு உணவிற்கு என் செய்வது, வியாதியால் இரண்டுநாள் படுத்துக்கொண்டால் நமது நிலையயன்ன? நமது குடும்பத்தின் கதியயன்ன ? என்ற கவலையே அறியாத மக்களாய் வாழும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிட செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
ஐந்து ஆண்டுத் திட்டம்

பஞ்சத்தாலும் பொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிமைமையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரசியா உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத் திட்டமொன்றைத் தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்து விட வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தனர். வேலையற்று , தொழில்முறைக்கொள்ளையும் விபச்சாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில்முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக்கோரி உழைக்க ஆரம்பித்து விட்டனர். பொருள் உற்பத்தி 5 வருட திட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றுவிட்டது.
தங்கள் ஆட்சி முறையைப்பற்றி பெருமை பேசிக்கொண்ட ஐரேப்பாவும் , அமெரிக்காவும் உலக வர்த்தகத்தில் ரசியாவை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கெட்டிலெல்லாம் ரசியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி தானங்களையயல்லாம் திடுகிடுக்கும் படி செய்து விட்டது.
“பசி வந்திடப் பத்தும் பரந்து போம் ”   என்னும் பழமொழியைப்பொல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப்பற்றி கதை கூறுவதில் பயனென்ன ?  பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் வயிறு நிரம்பும்படியான கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துடமையை ஒழித்து பொதுஉடைமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிறதேசங்கள்  உயவுப்பொருளை கொடுத்து ஒரு போதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத்திற்குள் உணவுப்பொருள்களை பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர்.
5 வருடத்திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள் , இவ்வளவு ஆடுமாடுகள் ,
இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும்,
இத்தனை மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவேண்டுமென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத்திட்டத்திற்கண்ட பெரும்பாலானவைகள் பூர்த்தியாகிவிட்டதால்திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர்.
இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலைசெய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தியான பொருட்கள் விலையாகாமல் பலவிதத் தொல்கைள் ஏற்படுவது நிச்சயம். இதையே ரசியாவும் எதிர்பார்க்கின்றது.
தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரணமென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ  அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியால் தியங்கும் படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையயனத்துலங்கும்.
ருசிய சமுதாய அமைப்பு

உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன ? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணி நேரம், 10 மணிநேரம் வேலை செய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச்செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது.  தன்னிடம் ஏராளமான பணம் இருக்கிறதென்ற திமிரினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டியோடும் படியான வண்டியைச்செய்து  அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில்  வேலையாளாக வைத்துக்கொள்கிறான். உண்மையான உணவுப்பொருளை உண்டாக்க வேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கெள்கிறான். இவன் தன் அவசியத்திற்குமேற்பட்ட குதிரைகளை உபயோகித்துக்கொள்வதால் குதிரை விலை அதிகமாகி விடுகிறது.
இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்துறங்கும் தொழிலாளி குதிரை வண்டியைத் தானே இழூக்க வேண்டியதிருக்கின்றது.
பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கதிகமான குதிரை ஒன்றை இந்தத் தொழிலாளிக்குப் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண்பொருளை ஆய்ந்து தான் ரசிய சமதர்மம் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவுடமைத்தத்துவம்

உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும்  வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரசிய பொதுஉடைமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையான நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பதெற்கென்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலககில் தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழ முடியும்.
பொதுவுடமை என்றால் என்ன ?

“எல்லாப்பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனுசீகத்தன்மையை விருத்தி செய்து கொள்ள முடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவேயாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாக பங்கிட்டுக் கொள்வதென்பதே இதன் பொருள்.  வயிற்றுப் பசிக்கு உணவு தேடுங்காலமும் தூங்கும் காலமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாக வாழுங்காலம்.  அது மக்கள் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்துவம். ” என்று பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய்துள்ளார்.
இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொதுவுடமைக் கொள்கையை ஒப்புக் கொண்டு நடந்தால் தான் முடியும். இந்த நோக்கத்துடன் தான் இன்றைய ரசிய ஆட்சி நடந்து வருகிறது. இந்நோக்கம்  வெற்றிபெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சதிகாரமுள்ள பிரதிநிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரசியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளனர்.
முதலாளிகளென்போர் யார்?
ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம்,  அறிவுவிருத்தி முதலான பெருக்க பெரிதும் திட்டங்ள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருட்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிறநாடுகளில் விற்பனை செய்தனர். சில தொழிலில் இலாபமும் சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும்  சர்க்காரே முதலாளியாக இருப்பதால் நட்டத்தை லாபம் வரக்கூடிய பொருட்களிலிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது.
உற்பத்தி செலவுகளை யயல்லாம் காத்து 100க்கு 10 அல்லது 100க்கு 20 பாகம் தொழிலாளிகளின் அபிவிருத்திக்காக செலவழித்து வருகிறார்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிகளிலும் . தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம்,  வாசகசாலை, குழந்தைகளுக்கு பால்கொடுக்கவும் , தாலாட்ட அறைகளும், தொட்டிலும் இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு ஆகாயவசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப்பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவுவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
சோவியத் அட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் முடிக்கவேண்டுமேன்ளு திட்டம் போட்டுக்கொள்கின்றனர். உடனே அமலுக்கு கொண்டு வருகின்றனர்.  உற்பத்தி நோக்கத்தை அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை விளக்கிக்கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.
விவசாயம்

ரசியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது  தவறு.  விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சிலபாகம் சர்க்கார் பண்ணைகள்,  சிலபாகம் குடியானவர்கள் கூட்டுறவாக பயிரிடும் பண்ணைகள்,  மற்றொரு பாகம் தனிவிவசாயிகள் தனியாக பயிரிடும் நிலம் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இயந்திர கலப்பைகளை உபயோகித்தால்தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக்கலப்பையால் உழ முடியாது.
எனவே தான் சர்க்கார் பொருளாதாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனங்களும் பொதுவாக இருக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவேதான் ஐந்தாண்டு திட்டம் ஏற்படுத்தி 1928-1933  அதற்குள் நிலத்தில் 100Šல் 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிற சிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த  வரப்புகளையயல்லாம் வெட்டி ஒரு சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டார்கள்.
4 ஆண்டுகளுக்குள் 100Šல் 60 பாகம் கூட்டுறவு விவசாயத்திற்கு முன் வந்து விட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும் விருத்தியாக வேண்டும் என்ற வீண் வெற்றுரைகளை அங்கு காண முடியாது. இன்ன 4ல்லாவில்  இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டுமென்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்திற்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை அவர்கள் உடனே நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக 100க்கு 80 பாகம் விவசாயம் சர்க்கார் பண்ணையாக இயந்திரங்களின்  முலம் நடைபெற்று வருகின்றது. 40,000 இயந்திர விவசாயக்கலப்பைகள் வேலை செய்து வருகின்றன.
ரசியா, விவசாயத்தைப்போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலை செய்து விருத்தி செய்து வருகின்றது. அதன் கைத்தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கு அறியலாம்.
தண்டவாளத்தில் ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931 க்குள்ளாக 20,000 தயாராகிவிட்டன. 1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913ம் வருடத்தில் 170லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931 ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931 ல்1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.
முன்னேற்றம்

உலகத்திலுள்ள பெரிய இரும்புத்தொழிற்சாலைகளில் ஒன்று ரசியாவிலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடம்மாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடமாயிற்று. ஆனால் ரசியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தையடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியைச் செய்யத்திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தது,  வெற்றியும் கண்டுவிட்டது. ரசியாவில் 1930 ம் ஆண்டு புகைரதங்கள் 9 மோட்டார்கள் 0  செய்யப்பட வில்லை. 8,550 கார்களுக்கு தனி பாகங்கள் பொருத்தி வண்டியாக செயல் பட்டன.
இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரசியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத்தவிர தனி மனிதர்கள் கடன் கொடுத்து வாங்கினாலும் , வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரசியாவில் கருதப்படுகிறது.
எண்ணை உற்பத்தி செய்யும் தேசங்களில் ரசியா இரண்டாவது ஸ்தானத்தையும் , இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும்,  விவசாய எந்திரக் கருவிகளில் முதல் இடத்தையும் பெற்று விளங்குகின்றது.
தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாக கிடைத்து விட்டது.
கல்வி

1914-ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர். 1928Šல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933Šல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்றும் திட்டம் போட்டு வேலை செய்து வெற்றி பெற்று விட்டனர்.
ரசியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டு போகும் லைபரெரிகள் 40,000 ஆக்கி விட்டார்கள். ரேடியோவின் மூலம் பல இடங்களில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் 3,50,000 ரேடியோக்கள் இருந்தன. 8,250  சினிமா நிலையங்களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்
ரசியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப்போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக்கொண்டு அதில் தொழீலாளர்களுக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நேரத்தைக்கூறி அவர்களை உற்சாகமாக விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்டம் நஷ்டம் இருந்த போதிலும்  வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்திய நாடு

பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும் பொழுது இந்தியா வாளா விருக்குமேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடியயன்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடும் மென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரசியா தோழர் ஒருவர் கவி. ரவிந்திநாத் தாகூருக்கு நிருபம் ஒன்ற எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடைய காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள் ? என்று வினாவியிருந்தார்.
அதற்கு கவிŠதாகூர் ” தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லா பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பது தான் உங்கள் ரசிய நாட்டின் வெற்றிக்கு காரணம்,  சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திகு முட்டுக்கட்டையாய் இருகிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
தந்தை பெரியார்
குடி அரசு 23.07.1933
ŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠ
சோவியத் ரசியா குறித்த பெரியாரின் பார்வை மிகச்சிறப்பானது.  இப்புத்தகத்தின் ஏனைய கட்டுரையும், பேச்சுக்களும் பெரியார் மாபெரும் சிந்தனையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கின்றது. முக்கியமாக கூட்டுறவு குறித்த பெரியாரின் பேச்சு நமக்கு கிடைத்த ஆவணம் என்றே சொல்லலாம்.
பாமரருக்கும் புரியும் மொழியில் இருக்கும் பெரியாரின் இந்த எழுத்துக்களை பல்லாண்டுகள் கழித்து புத்தகமாய் கொண்டு வந்திருக்கும் (அதுவும் மிகக் குறைவான விலையில்) பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
———————————————————————
நன்கொடை ரு10/
வெளியீடு
பெரியர் திராவிர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர் – திருவான்மியூர்
சென்னை – 600 041
———————————————————————-
நூல் கிடைக்குமிடம்
பெரியார் படிப்பகம், பேருந்து நிலையம் அருகில், மேட்டூர் அணை. 9786316155
பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகில்பெரியார் படிப்பம், காந்திபுரம்பெரியார் படிப்பம், கோவை. 9843323153

நாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும்

ஓகஸ்ட் 3, 2009

நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும்veeramani_a copy

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார். அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.

தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.

தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி  ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில்  பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.

பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு  குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.

பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி  கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.

இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற  அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு  வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.

தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி  கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?

செயாவை விட்டு வந்து கருணாநிதியிடம் வீரமணி ஒட்டிக்கொண்ட சம்பவம் குறித்து திகவின் ஒரு நிர்வாகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் அவர் சொன்னார் “இப்போதுதான் சேர்ந்துவிட்டார்களே” அப்படிஎன்றால் இது வரை கருணாநிதியை  நீங்கள் விமர்சித்தது எல்லாம் மறந்து விடவேண்டுமா? அல்லது பாப்பாத்திக்கு சோப்பு போட்டதையெல்லாம் மனதிலிருந்து அழித்து விடவேண்டுமா?
கண்டிப்பாய் எல்லாம் அழியாது இது தந்தை பெரியாரின் மண் சுயமரியாதை பூமி உங்களை போன்ற பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம்? உங்கள் வாய்கள் சொன்னதை உங்களின் காதுகள் மறந்து போகலாம். மறப்பதற்கு மக்கள் ஒன்றும் முன்னாள் போயஸ்கார்டன், இன்னாள் கோபாலபுரத்து  நாய்கள்  இல்லையே?

சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை  சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?

அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே.  நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள்  பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.

உரிமை அது எல்லோருக்கும் பொது என சொன்னவ்ரின் எழுத்துக்கள் தனியார்மயம்.பகுத்தறிவு தேய்ந்து தேய்ந்து பணம் சம்பதிக்க வந்த கதையும் இதுதான். பணம் சம்பாதிக்க அய்யா வீரமணி அவர்களே பேசாமல் கோயிலைதிறந்து விடுங்கள் சீக்கிரம் கல்லா நிரம்பிவிடும்.அதைவிட்டு விட்டு…….
தந்தை பெரியாருக்கு, அவரின் எழுத்துக்களுக்கு தாங்கள் மட்டும் தானென உரிமை கொண்டாடுங்கள்.அதற்கு பகுத்தறிவு சாயம் மட்டும் பூசாதீர்கள். அது பெரியாருக்குத்தான் மாபெரும் அவமானம். அதைப்பற்றி உங்களுக்கென்ன அக்கறை காசு வந்தால் சரிதானோ.
தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க
http://www.periyar.org/html/ap_agallery.asp

 

http://www.youtube.com/watch?v=QaVmEiQ1jTU

 

http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches