Posts Tagged ‘நக்சல்பாரி’

மாற்றங்களும் சில கற்களும்

ஏப்ரல் 28, 2011

மாற்றங்களும் சில கற்களும்


பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

ஏப்ரல் 17, 2011

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்

பிப்ரவரி 9, 2010

முத்துக்குமார்
ஷோக்குகளும் ஷேக்குகளும்

ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு  வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர். அவர்கள் முக்கியமாக ஒன்றை  செய்தார்கள் அதுதான்  அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு  மற்ற எல்லாவற்றையும்
 
 ஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில்  முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.

பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.
இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.

“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.

தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு  உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள்  வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //

 
 

 

// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.
கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை. 

 முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில்  கொள்கைகளோடு  அவனும் எரிக்கப்பட்டான்.

கருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன. செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.
 
கோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது.  ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.

வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா?
ஷோக்குகளும் ஷேக்குகளும்

முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//
புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும்  ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை,  அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள்.  போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//

முத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்? 
 
திருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள்? உங்களை பேச விடாமல் ம க  இ க தான் தடுத்ததா? தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்?

நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான்  “என்உடலை ஆயுதமாக்குங்கள்”  அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.

எங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான்  அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.
 
…………………………………………………………………………………………………………………………………………………………………………..
 
 
வினவில் வந்த கட்டுரையை அடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது
நோக்கமே  “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //
 
 
அவரின் கேள்விகள்
 
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.

//
புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.

செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?

 
 

 

// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?

போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத  “கடவுள்”  தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின்  நல்ல மண்டையில் உதித்தது. 

எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.

முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.
 
ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு?  நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.
 
ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு  நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்  புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி  சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி  மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.

( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால் பொறுக்கிகள் என  விளிக்கப்படும் போது, எங்களது கம்யூனிச பூதத்தின் எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )

//

 
 
 
 
 
 
 
 
 
 
 

//

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

நவம்பர் 3, 2009

தீவிரவாதத்தை வேரறுப்போம்
இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.  இப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை  நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற
முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.

நாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான்,   மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.

“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.

தொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.

கடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.

அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.

மாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.

சல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

மேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர்,  மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அடிமையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்

தயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம்,  அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.

கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன? அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது?  நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.

கேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன? பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ? ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யாருக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்  தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.

சீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா? முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.

இந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன?  நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி?

இந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா?

நீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.

தன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.

மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது  மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.

நாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.


இணைப்புக்கள்

1.விடுதலையின்  அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயுதங்கள்

2மார்க்சிஸ்டுகளின் பரிணாம வள்ர்ச்சி

3.சாயம் வெளுத்துப்போன போலிகள்

4.வாடா வாடா வாடா  தோழா – ஒரு காம்ரேடு  ரசிகன் ஆன கதை

5.மாவோயிஸ்டுகள் மீதான தடை
டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை