Posts Tagged ‘நக்சல் ஒழிப்பு போர்’

நாகரீகக்கோமான்கள் தொடுக்கும் போர்

ஏப்ரல் 22, 2010
கண் சிவந்திருந்தார்கள்
ரிஷிகள், மாமுனிகள்
டாட்டாக்கள், பிர்லாக்கள்
அம்பானிக்கள்
வே(தா)தாங்கள் ஓதப்பட்டன

ஆயிரக்கணக்கில்
புஷ்பக விமானங்கள்
லக்ஷத்தில் தேவ குமாரர்கள்
அசுரர்களின் கோடித்துணிக்கோ
ஏழாயிரத்து முன்னூறு கோடி ஒதுக்கீடு

கல்வியை, மருத்துவத்தை,
போக்குவரத்தை – எதையுமே
தராதவர்கள் நாகரீகத்தை
கற்றுக்கொடுக்கப் போகிறார்களாம்

ஆம் இது நாகரீகமற்றவர்களின் மீது
நாகரீகக்கோமான்கள் தொடுக்கும்
போர்

வேண்டாமென்றால் விடுவதாயில்லை
உன் உயிரைக்கொடுத்தேனும்
நாகரீகம்
வாங்கித்தானாகவேன்டும்
முதல் பலி நியாம்கிரியின்
அரக்கத்தலைவன்

நியாம்கிரி அரக்கன்
கொல்லப்படபோகிறானாம்
அசுர வாரிசுகள்
கலங்கினார்கள் ஆனால்
ஒதுங்கவில்லை
தவித்தார்கள் ஆனால்
தவிக்கவிடவில்லை
போரிட்டு செத்தார்கள்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் சாகவிடவில்லை………….

பாசிச பேய்கள்
கர்ப்பிணியின் வயிற்றை
குறிவைக்கின்றன

அட முட்டாள்களே!
உங்களுக்குத்தெரியுமா
இதோ இந்த
இந்தக் கருக்குழிதான்
உங்களுக்கு சவக்குழியென்று

பாட்டன்,முட்டான்
அப்பன், மாமன், ஆத்தாள்,
பாட்டி, பூட்டி, அத்தை
எல்லாம் எதற்கு ஏந்தினார்களோ
அதற்காக
அதை
ஏந்த காத்திருக்கிறது
கருப்பையில்
சிசு

நாளைய வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்
அவர்கள் கொண்டு செல்வார்கள்
அரக்கத்தலைவனை யாரும் நெருங்க
முடியாத இடத்திற்கு

அப்போது
அவர்கள்
உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்
எது நாகரீகமென்று

தொடர்புடைய பதிவுகள்

அழுகின்ற குழந்தையே!

மார்ச் 30, 2010
அழுகின்ற
குழந்தையே!
அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே

உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்

மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்

அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்

உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்

தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்

தொடர்புடைய பதிவுகள்

நாட்டின் பெருமை

பிப்ரவரி 28, 2010

நாட்டின் பெருமை

பந்துகள் விளாசப்பட்டன
இரட்டை சதங்களோ
நாட்டுக்கு அர்ப்பணம்
பாரதரத்னாக்கள் வரிசையில்
நிற்கின்றன – பாராட்டுக்கள்
பாராட்டிக்கொண்டே போகின்றன

எங்கும்
அல்ல அல்ல
எங்கெங்கும் இதே
பேச்சு
பேசித்தான் ஆக வேண்டுமாம்
இது நாட்டின் பெருமையாம்…..

ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
இல்லை இல்லையில்லை
எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னொரு
பெருமையைப்பார்த்தீர்களா
இங்கேயும் ஏழு சதங்கள்

இதுவும் இந்திய தேசியத்திற்கு
தானே அர்ப்பணம்

இங்கும்
மட்டைகள் விளாசப்படுகின்றன
ஓடுகின்றன பந்துகள்
அவைகள் இடைஞ்சலாய்
இருக்கின்றனவாம்

அடிவாங்கிய பந்துகளால்
அமைதியாயிருக்க முடியவில்லை
அடிமையாய் இருக்க முடியவில்லை
திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
உடைந்து போன பந்துகள்

கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
இப்போது சொல்லுங்கள்
யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?
தொடர்புடைய பதிவுகள்

மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

பிப்ரவரி 14, 2010

  சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

பிப்பிரவரி 20,  எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.

பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.

நக்சல் பாரி பாதையில் அணிவகுப்போம் !
மக்களைக்கொல்லும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !

. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!
. நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  
. பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
  
.  போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
  
. மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!
  
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு  தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!
  
. மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!
 
 

தொடர்புடைய பதிவுகள்