Posts Tagged ‘நந்திகிராம்’

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

ஜூன் 22, 2009

நக்சல்பரியில் துரோகியாய் உருமாறி நந்திகிராமில் பாசிஸ்டாய் பல்லளித்து
அதையும் தாண்டிய பரிணாம வளர்ச்சிக்கு படையெடுத்து மக்களையே இரையாய் தின்னும் போலிகளை  பற்றிய சில கருத்து படங்கள்…

வீரஞ்செறிந்த  லால்கார் மக்களுக்கு செவ்வணக்கம் !

போலிகம்யூனிஸ்டுகளை தனிமைப்படுத்துவோம்!!

வெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

இனியும் போலிகளில் களையெடுக்கப்போவதாய் சொல்லிக்கொண்டிருக்கும்  போலிகளின் புரட்சிகர அணிகளே பதில் சொல்லுங்கள்.புரட்சியை எப்படி செய்வது? இப்படி விவசாயிகளை, உழைக்கும் மக்களை கொன்றபடி புரட்சி செய்யும்  போலிகளிலிருந்து வெளியேறாதவரை நீங்கள் எப்படி தோழராய் இருப்பீர்கள்.

துரோகிக்கு , பாசிஸ்டுக்கு தோழனெனில்
எப்படி உழைக்கும் மக்களுக்கும் தோழன் ?.

வழி இரண்டு தான் ஒன்று நியாயமாய் பதில் சொல்லுங்கள், இல்லையேல் நீங்களும் பாசிஸ்டாய் பரிணமிப்பதை தவிர வேறு வழி இல்லவே இல்லை. இனியும் நீங்கள் காக்கும்  அமைதி உழைக்கும் மக்களின்  சுடுகாட்டுக்கானதே.

இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

ஏப்ரல் 7, 2009

sl_q-copyஇங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

யார் சொன்னது போலிகள்

புரட்சி பண்ணவில்லையென்று

“பன்னினார்கள்” எத்தனையோ

சொல்ல சொல்ல வாய் வலிக்கும்

வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….

சிபிஎம் சிபிஐ பேரை

கேட்டதால் தான் என்னவோ

புடலங்காய்க்கும் புரட்சி வந்து

முறுக்கிகொண்டதுவோ…..

ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து

கூடவே துரோகத்தனத்துக்கும்

தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து

நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி

இன்னமும் அடங்க மறுக்கிறது

குறுதியின் வெப்பம்……

கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி

உழைக்கும் மக்களுக்கு நீசனாகி

மாமா வேலை செய்து செய்து

பாசிஸ்டாக பல்லிளித்து

செயாவின் காலுக்கு பாத பூசை

ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை

தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….

ஆயிரம் தரகு வேலை

ஆயிரம் பூசைகள் செய்து

களைத்து போயிருக்கும்

நல்லோரே வல்லோரே உங்களுக்கு

மொத்தமாய் பூசை செய்கிறோம்

கூடவே நிரந்தர ஓய்வையும்

இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்

ஓட்டுப்பெட்டியும் உங்களின்

புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….