போபால் விசவாயுப் படுகொலை
- போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6
போராடு போரைத்தவிர வேறு வழி இல்லை
தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
அடிவருடிகளின் ஒயிலாட்டம்
பல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று . ஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.
காலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.
சிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள் என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர். தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.
செல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .
“இவன் என் கோயில்னு எப்பவும்
போல ஒட்டிருக்காணுங்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம் ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.
மேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.
கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்” என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.
தேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான் நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க? ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.
எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?
ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?
எப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்
தானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது? மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.
மக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும் போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன?
தன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.
———————————————————————————————————————————
கடந்த வியாழன் அன்று மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை உண்டியல் திறப்பின் போது உண்டியலில் அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
——————————————————————————–
சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு
சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.
இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.
அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.
அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில்,
நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)
——————————————————————–
ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்
ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்
கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும், தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று , தின்று எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும் ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்” என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும் முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும் என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.
காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே. இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும் செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது, அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும் மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய் அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின் இந்தப்பிரச்சாரம் எதற்காக? கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும் அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.
பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-
தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில் ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும் தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம் பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார். ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?
நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த உங்களை என்னவென்று
சொல்வது?
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார் வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும் எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும் மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.
சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
…………………………………………………………………………………….
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்……………
http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/
சரணடை … சரணடைந்து விடு
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்……
உயிர் வாழ
ஒரே தீர்வு தான்
உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது