Posts Tagged ‘பெ.தி.க’

நாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும்

ஓகஸ்ட் 3, 2009

நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும்veeramani_a copy

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார். அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.

தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.

தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி  ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில்  பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.

பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு  குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.

பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி  கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.

இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற  அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு  வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.

தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி  கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?

செயாவை விட்டு வந்து கருணாநிதியிடம் வீரமணி ஒட்டிக்கொண்ட சம்பவம் குறித்து திகவின் ஒரு நிர்வாகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் அவர் சொன்னார் “இப்போதுதான் சேர்ந்துவிட்டார்களே” அப்படிஎன்றால் இது வரை கருணாநிதியை  நீங்கள் விமர்சித்தது எல்லாம் மறந்து விடவேண்டுமா? அல்லது பாப்பாத்திக்கு சோப்பு போட்டதையெல்லாம் மனதிலிருந்து அழித்து விடவேண்டுமா?
கண்டிப்பாய் எல்லாம் அழியாது இது தந்தை பெரியாரின் மண் சுயமரியாதை பூமி உங்களை போன்ற பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம்? உங்கள் வாய்கள் சொன்னதை உங்களின் காதுகள் மறந்து போகலாம். மறப்பதற்கு மக்கள் ஒன்றும் முன்னாள் போயஸ்கார்டன், இன்னாள் கோபாலபுரத்து  நாய்கள்  இல்லையே?

சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை  சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?

அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே.  நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள்  பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.

உரிமை அது எல்லோருக்கும் பொது என சொன்னவ்ரின் எழுத்துக்கள் தனியார்மயம்.பகுத்தறிவு தேய்ந்து தேய்ந்து பணம் சம்பதிக்க வந்த கதையும் இதுதான். பணம் சம்பாதிக்க அய்யா வீரமணி அவர்களே பேசாமல் கோயிலைதிறந்து விடுங்கள் சீக்கிரம் கல்லா நிரம்பிவிடும்.அதைவிட்டு விட்டு…….
தந்தை பெரியாருக்கு, அவரின் எழுத்துக்களுக்கு தாங்கள் மட்டும் தானென உரிமை கொண்டாடுங்கள்.அதற்கு பகுத்தறிவு சாயம் மட்டும் பூசாதீர்கள். அது பெரியாருக்குத்தான் மாபெரும் அவமானம். அதைப்பற்றி உங்களுக்கென்ன அக்கறை காசு வந்தால் சரிதானோ.
தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க
http://www.periyar.org/html/ap_agallery.asp

 

http://www.youtube.com/watch?v=QaVmEiQ1jTU

 

http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches

ஈழப்பிணங்கள்

மே 20, 2009

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

raja _b copy

 

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில்  இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது  நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும்,  தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல  செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று  , தின்று  எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என  தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும்  ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்”  என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு  நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும்  முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு  அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும்  என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது  இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.

காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே.  இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும்  செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை  நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது,  அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த  மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும்  மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக  பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய்  அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
 
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து  விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது  தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின்  இந்தப்பிரச்சாரம் எதற்காக?  கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும்  அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது  வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது.  குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-

தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில்  ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும்  தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம்  பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார்.  ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி  தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
 
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?

 நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த  உங்களை என்னவென்று
சொல்வது?
 
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது  இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார்  வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
 கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும்  எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும்  மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

ஏப்ரல் 23, 2009

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்


ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும்  அதில்பெரியார்  தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும்  முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.

அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.

எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை  சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.

இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை  பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.

மக இ கவின் தோழர்  பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே  அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது.  மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம்  பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.

யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?

ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.

ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.

ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி  தற்போதுதான்  ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.

எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார்.  அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.

நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே  அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி  பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன்  எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு  மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார்,  நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை  கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட  அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால்   2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.

இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு  பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.

ஆனால்  பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு  சேவை செய்யும் பெதிகவினை  என்ன வென அழைப்பது?

தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க  கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ”  இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.