Posts Tagged ‘பெ வி மு’
ஏப்ரல் 28, 2011
மாற்றங்களும் சில கற்களும்

பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்
முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன
வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி
நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ
மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்
டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்
சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்
வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன
இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.
குறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 17, 2011
தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
எம் வாயில்
பீயைத் திணிக்கவும்
ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்
ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்
உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்
ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்
என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை
ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி
பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !
அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி நக்சல்பாரியே உன் வழி
குறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 9, 2011
இது பதினாலாவது தேர்தல்
காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..
இது பதினாலாவது
தேர்தல்
எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி
பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன
நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்
உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன
ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்
முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்
சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்
உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?
படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்
உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?
சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?
இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு
உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்
குறிச்சொற்கள்:அதிமுக, ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கருத்துப்படங்கள், கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, புஜதொமு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 3, 2011
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன் 
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்
எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்
சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு
இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா
போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா
அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு
ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு
ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க
மாஞ்சோலையில மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி
கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா
திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா
இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை
தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி
அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி
டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு
இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!
ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு
புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்
குறிச்சொற்கள்:அதிமுக, எம், ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக, CPI, CPM
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஓகஸ்ட் 30, 2010
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட் 12, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5
தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4
பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்
மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 3, 2010
போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3
சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 30, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2
தாயே !
உன் குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 26, 2010
போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1
ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம் அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 10, 2009
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், சிதம்பரம், செருப்படி செருப்புகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஏப்ரல் 10, 2009
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்
உயிர் வாழ
ஒரே தீர்வு தான் உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 19, 2009
“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?
” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,
வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”
“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது
“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”
“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”
“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”
“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”
“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!
இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”
“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்
வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்
http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/
குறிச்சொற்கள்:இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஜனவரி 28, 2009
ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.
பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன.
கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான இந்தியாவை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில இங்கே ,கண்டிப்பாக பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.
முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான் தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம் தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட தேசியத்தை அச்சம்பவத்தை நேரில் கண்டவர் என்ற முறையில் பெருமையோடு பதிக்கிறோம்.
சனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும் ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில் வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.
ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும் தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்
அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில் வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.
“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.
கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள் இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”
ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.
அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”
இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,
அம்முழக்கங்களால் எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள் உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர் செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.
போராட்டவீடியோ காட்சிகள்
நன்றி : வினவு
http://vinavu.wordpress.com/2009/01/29/eelam12/
குறிச்சொற்கள்:ஈழம், குடியரசு தினம், தோழர், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, பெரியார்திக, ம க இ க, CPI, CPM, NDLF, PALA, RSYF
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »