Posts Tagged ‘ம க இ க’
ஏப்ரல் 28, 2011
மாற்றங்களும் சில கற்களும்

பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்
முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன
வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி
நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ
மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்
டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்
சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்
வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன
இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.
குறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 17, 2011
தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
எம் வாயில்
பீயைத் திணிக்கவும்
ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்
ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்
உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்
ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்
என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை
ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி
பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !
அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி நக்சல்பாரியே உன் வழி
குறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 9, 2011
இது பதினாலாவது தேர்தல்
காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..
இது பதினாலாவது
தேர்தல்
எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி
பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன
நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்
உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன
ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்
முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்
சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்
உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?
படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்
உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?
சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?
இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு
உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்
குறிச்சொற்கள்:அதிமுக, ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கருத்துப்படங்கள், கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, புஜதொமு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 3, 2011
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன் 
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்
எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்
சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு
இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா
போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா
அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு
ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு
ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க
மாஞ்சோலையில மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி
கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா
திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா
இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை
தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி
அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி
டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு
இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!
ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு
புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்
குறிச்சொற்கள்:அதிமுக, எம், ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக, CPI, CPM
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஓகஸ்ட் 30, 2010
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட் 12, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5
தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4
பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்
மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 3, 2010
போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3
சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 30, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2
தாயே !
உன் குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 26, 2010
போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1
ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம் அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?
குறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 4, 2010
கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்
இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன். காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.
கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும் எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும். இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.
சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.
நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.
பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.
நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.
பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”
மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?” “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.
மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.
தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.
தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு அதிகாரி, மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)
நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.
போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும். இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை வேறு தோழர்களிடமிருந்தது.
அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.
உன் விரல்களில் இன்னும்
உரமேற்று தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி
காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.
மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில் பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”
உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது. பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா, “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.









1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!
2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!
குறிச்சொற்கள்:கடற்கரை, கலகம், தோழர், பு மா இ மு, புஜதொமு, புதுவை, ம க இ க, மறியல், மே1, வி வி மு, வினவு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
பிப்ரவரி 14, 2010
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.

பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.
நக்சல் பாரி பாதையில் அணிவகுப்போம் !
மக்களைக்கொல்லும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!
. நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
. பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
. போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
. மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!
. மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்:நக்சல் ஒழிப்பு போர், ம க இ க, மக்கள் கலை இலக்கியக் கழகம், மாவோயிஸ்டுகள், வேதாந்தா, Operation Green Hunt
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 9, 2010
முத்துக்குமார்
ஷோக்குகளும் ஷேக்குகளும்
ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர். அவர்கள் முக்கியமாக ஒன்றை செய்தார்கள் அதுதான் அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும்
ஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில் முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.
பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.
இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.
“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.
தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள் வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //
// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.
கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை.
முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில் கொள்கைகளோடு அவனும் எரிக்கப்பட்டான்.
கருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன. செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.
கோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது. ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.
வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா?
ஷோக்குகளும் ஷேக்குகளும்
முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//
புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும் ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள். போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//
முத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்?
திருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள்? உங்களை பேச விடாமல் ம க இ க தான் தடுத்ததா? தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்?
நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான் “என்உடலை ஆயுதமாக்குங்கள்” அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.
எங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான் அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.
…………………………………………………………………………………………………………………………………………………………………………..
வினவில் வந்த
கட்டுரையை அடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது
நோக்கமே “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //
அவரின் கேள்விகள்
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.
//
புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.
செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?
// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?
போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத “கடவுள்” தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின் நல்ல மண்டையில் உதித்தது.
எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.
முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.
ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு? நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.
ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.
( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால்
பொறுக்கிகள் என விளிக்கப்படும் போது, எங்களது
கம்யூனிச பூதத்தின் எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )
//
//
குறிச்சொற்கள்:இனவாதிகள், ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், நக்சல்பாரி, பி.ஜே, பேக்குகள், ம க இ க, முத்துக்குமார், விடுதைப்புலிகள், ஷேக்குகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
மே 20, 2009
ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்
கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும், தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று , தின்று எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும் ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்” என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும் முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும் என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.
காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே. இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும் செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது, அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும் மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய் அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின் இந்தப்பிரச்சாரம் எதற்காக? கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும் அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.
பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-
தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில் ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும் தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம் பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார். ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?
நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த உங்களை என்னவென்று
சொல்வது?
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார் வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும் எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும் மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டு, ஓட்டுப்பொறுக்கிகள், சீமான், பு ஜ தொ மு, பு ம இ மு, பெ.தி.க, ம க இ க, மகிந்த, ராஜபக்ஷே, வி வி மு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஏப்ரல் 28, 2009

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
…………………………………………………………………………………….
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்……………
http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/
சரணடை … சரணடைந்து விடு
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்……
உயிர் வாழ
ஒரே தீர்வு தான்
உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டு பொறுக்கிகள், தமிழர், தேர்தல் 2009, பு ஜ தொ மு, பு ம இ மு, பெவிமு, ம க இ க, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஏப்ரல் 23, 2009
தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்
ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும் அதில்பெரியார் தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும் முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.
அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.
எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.
இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.
மக இ கவின் தோழர் பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது. மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம் பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.
யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?
ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.
ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.
ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி தற்போதுதான் ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.
எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார். அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.
நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன் எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார், நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால் 2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.
இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.
அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.
ஆனால் பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு சேவை செய்யும் பெதிகவினை என்ன வென அழைப்பது?
தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.
தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ” இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.
குறிச்சொற்கள்:அதிமுக, செயா, திமுக, துரோகிகள், தேர்தல் 2009, நெடுமாறன், பாமக, பெ.தி.க, பெரியார், ம க இ க, மதிமாறன், மதிமுக, மருதையன், விசி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஏப்ரல் 10, 2009
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், சிதம்பரம், செருப்படி செருப்புகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஏப்ரல் 10, 2009
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்
உயிர் வாழ
ஒரே தீர்வு தான் உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 19, 2009
“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?
” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,
வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”
“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது
“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”
“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”
“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”
“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”
“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!
இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”
“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்
வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்
http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/
குறிச்சொற்கள்:இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
பிப்ரவரி 3, 2009
பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் .
பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால் தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ வயிறெரிந்து சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ வெற்றிநடைப்போட்டு கோயிலுக்கு வருகிறார்.
கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால் தீட்சிதர்களோ வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும் அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு 2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,
முதலில் மனித உரிமை பாதுகாப்புமையம் உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள் தான் இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,
பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக வழக்கு நடைப்பெற்றது,அதற்கு திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள் எத்தனை துரோகிகள் துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது, அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது .
அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”
இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்
ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,
சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.
பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?
இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..
http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/
குறிச்சொற்கள்:ஆறுமுக சாமி, சிதம்பரம், தில்லை, தீட்சிதர், பார்ப்பனர், பு மா இ மு, புஜா தொ மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்பு மையம், வி வி மு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 16 Comments »