Posts Tagged ‘விசி’

தேர்தல் புராணம் – 2009

மே 5, 2009
தேர்தல் புராணம்  – 2009
பிடுங்கப்பட்ட மின்சாரம்
பியூஸ் போன தெருவிளக்கு
போடப்படாத சாலை
உடைந்துபோன பள்ளிக்கனவுகள்……

புதைக்குழிக்குள் விவசாயம்
பாலிடாலுக்கு தலையை
அடகு வைத்த விவசாயி
நெய்வதற்கு நூலில்லை
சொல்லுவதற்கு நெசவாளி
யென்ற பேரும் சொந்தம் இல்லை

இந்தியா முன்னேருகிறது
வசனங்கள் காதை கிழிக்க
இத்தாலி மருமவளும்
பஞ்சாப் வைப்பாட்டியும்
ஓட்டு கேக்க வருவார்கள் கைக்கு…….
சாதாரண கையா இது
நன்றாக பார்த்தால் தானே
தெரிகிறது காந்தியின்
பொக்’கை’

 
கண்ணன் வாயைதிறந்தால்
உலகமே தெரிந்ததாம்
அடேங்கப்பா
காந்தி வாய் திறந்தாலோ
அந்தக்கவலை காந்திக்கு வந்ததில்லை
எல்லாவற்றிக்கும் சிரிப்பு
அழகான புன்னகை

எப்படிப்பட்ட புன்னகை தெரியுமா
தாழ்த்தப்பட்டோரின் தோலினை
உரிக்க  உரிக்க -முசுலீம்களை
எரிக்க எரிக்க வந்த சிரிப்பல்லவா இது…..

காந்திக்கு பிறக்காவிட்டாலும்
தப்பாமல் காந்தியின் வாரிசாய்
மிளிர்ந்த அன்னை இந்திராவைத்தெரியுமா
என்ன செயலலிதா அவளின் ஆத்தாளே
இந்திராவுக்கு மல்லு கட்ட முடியுமா
மல்லு என்ன லுங்கியை தூக்கி
கட்டியவனுக்கெல்லாம் 3 கிலோ
அரிசி தந்து அறுத்து விட்ட கதை
சொன்னால்தான் தங்கபாலுவுக்கு தெரியுமா…

சீக்கியர் பிணத்தை தின்று
போராளிக்குழுக்களை ‘கை’யில்
வளைத்து சீன் காட்டி  சல்லடையாய்
நாயைப்போல குப்புறக்கிடந்த போது
ஆத்தா போலவே மகனும்
எது முன்
எது பின்
எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
கண்ட கண்ட நாயெல்லாம்
என் மேல் விழுந்து சாவுறாங்களே
என்று….

‘கை’கதை தெரியாதென
வருகிறார்களோ இல்லை
தெரிந்தால் தான் என்னவென
வருகிறார்களோ
மறவாதீர் வாக்காளரே
கைக்கு ஓட்டு போட்ட
உங்கள் கையை பத்திரமாய்
வைத்துக்கொள்ளுங்கள்
ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……

 
ஒருபக்கம் கை என்றால்
மறுபக்கம் தாமரை
மலரினும் மெல்லிய
ஆனால் தாமரை எவ்வளவு மெல்லியது
தெரியுமா குஜராத்தில் கர்ப்பிணியின்
வயிற்றை கிழித்து சிசுவை அறுத்த
அதன் இதழ்களின் மென்மையை
பண்டாரப்பரதேசியெல்லாம்
வாய்மணக்க பாடுதே

சேற்றில் முளைத்த செந்தாமரை தெரியும்
அது என்ன பாரத மாதாவின் தாமரை
இது முளைக்க ரத்தசேறுதான் வேண்டும்
அதுவும் முசுலீம் ரத்தமென்றால் அலாதிபிரியம்
மாதாவின் ஒருகையில்
தாமரை மறுகையிலோ சூலம்
சாதா சூலமல்ல
ஸ்பெஷல் திரிசூலம்
முசுலீம் கிருத்துவன் கடைசியாய்
உழைக்கும் இந்துவென எல்லோருக்கும் வரிசையாய்
இருக்கிறது ஆப்பு…..

 

இலவசம்
இலவசம்  இலவசம்  எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்
சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..
நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா – ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
யாரிடமும் சொல்லாதீர்கள்
பிரசவத்திற்கு இலவசமென
ஓசியாய் ரிக்சாவில்
கூட்டிவந்த பெரியார் தி க
வாரிசுகளோ ஓரமாய் உட்கார்ந்து
விம்மி விம்மி அழ – மணியரசன் நெடுமாறனெல்லாம்
மருமகன் பொறந்ததுக்கு
குத்தாட்டம் போட
கதை கேட்டவர் என்னை திருப்பி கேட்டார்
ஏப்பா மொட்டத்தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுற?

எது மொட்டை? எது முழங்கால்?
காந்தி மொட்டை ராஜபக்ஷே முழங்காலா?

தெளிவாய் விளக்கினேன்
” காங்கிரசு, பிஜேபி,பாமக,
வி.சி,திமுக,ம்திமுக,அதிமுக,
சிபிஎம்,சிபிஐ,ஆயிரம் பேர் வந்தாலும்
எல்லாவற்றிற்கும் ஆன்மாவும் ஒன்றுதான்
உயிரும் ஒன்றுதான்
அதுதான் அகிம்சை
அதுதான் காந்தி

 
காந்திகள் சிரித்துக்கொண்டிருக்கும் வரை
மக்களின் பிணங்கள்
எரிந்து கொண்டே இருக்கும்
தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்

 

“என்ன இருந்தாலும் ஓட்டு போடாம
இருக்க முடியுமா” கோபம் கொப்பளித்தார்

 
நான் பொறுமையாய் சொன்னேன்
பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

ஏப்ரல் 23, 2009

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்


ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும்  அதில்பெரியார்  தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும்  முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.

அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.

எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை  சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.

இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை  பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.

மக இ கவின் தோழர்  பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே  அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது.  மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம்  பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.

யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?

ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.

ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.

ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி  தற்போதுதான்  ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.

எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார்.  அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.

நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே  அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி  பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன்  எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு  மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார்,  நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை  கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட  அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால்   2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.

இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு  பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.

ஆனால்  பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு  சேவை செய்யும் பெதிகவினை  என்ன வென அழைப்பது?

தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க  கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ”  இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.